Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  700
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. நல்லது. வடக்கு கிழக்கில் அடாத்தாய் மக்கள் குடியிருப்புக்களில் நிலைகொண்டுள்ள இலங்கை ஆயுத படைகளை மக்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற்றுங்கள் விரைவில்.  

 2. 1 hour ago, குமாரசாமி said:

  உப்பிடியான  நட்டு களண்ட மரமண்டையளிட்டை பிள்ளையளை படிக்க விடக்கூடாது.😡

  ஊடக அவியலில் எப்படியான செய்தியும் வரலாம். ஏன் அவசரப்பட்டு உணர்ச்சிகளை கொட்டுவான்?

  • Like 1
 3. இரண்டு யானைகள், ஒரு குதிரை வண்டி, நான்கு பரமேளம்..  வெளிநாட்டில் நம்மட ஆட்கள் போடும் கூத்துடன் கணக்கு பார்த்த்தால் இது சில சில்லறை காசுகள் செலவு. அவ்வளவுதான்.

  பிள்ளைகளுக்கு உடு துணி, புடவை, அழகு பொருட்கள் எடுக்க என்றே ஒரு குடும்பம் விமானத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா போய் வரும். இந்த விடயம் எல்லாம் யூரியூப்பில் வராது நம்மட ஆட்கள் பொங்கி எழுவதற்கு. 

  தவிர, அவரவர் விருப்பம். ஊருக்குத்தான் அறிவுரை உனக்கில்லைடி கண்மணி. 

  • Like 1
 4. இது இலங்கை விமான படைக்கு பயிற்சி விமானமாக பயன்படும். மற்றும்படி வேறு என்ன உபயோகம் என்று விளங்கவில்லை. 

 5. ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அளவில் கொண்டாட்டம் செய்கின்றார்கள். வாட்சப்பில் பார்த்தேன். என்னத்தை சொல்வது.. 🤔

 6. 20 hours ago, தமிழ் சிறி said:

  image

  புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

  இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

  உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

  பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

  பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

  https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

   

  நல்ல விடயம். தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் மக்கள் குடியிருப்புக்களில் அடாத்தாக நிலைகொண்டுள்ள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். சகல இனங்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நல்லதொரு சுமுகமான சூழலை எற்படுத்தவேண்டும். 

 7. 3 hours ago, குமாரசாமி said:

  நல்ல விடயம். எல்லாவற்றையும் ஒருவனே செய்யக்கூடாது.

  வியாபாரம் என்றால் போட்டி உள்ளதுதானே. இதுபற்றி பலசரக்கு கடை வியாபாரிகளின் கருத்தையும் அறியலாமே. பலசரக்கு கடைகளில் கடனுக்கு பொருட்கள் வாங்குவோரும் உள்ளார்கள்.  சில்லறை வியாபாரிகள் கடனுக்கு மரக்கறி கொடுப்பார்களா?

  நாங்கள் பணக்கஸ்டத்தில் வாழ்ந்த காலத்தில் எமது அப்பா பலசரக்கு கடை ஒன்றில் மரக்கறி உட்பட அனைத்து பொருட்களையும் கடனுக்கு பெற்றுவிட்டு காசுவரத்து உள்ளபோது கடையின்  கடனை அடைப்பார். இலங்கைக்கு சென்றசமயம் குறிப்பிட்ட கடையை தேடி சென்றேன். கடை உரிமையாளர், கடை அங்கு இப்போது இல்லை என்று கூறினார்கள். 

 8. 7 hours ago, nedukkalapoovan said:

  நல்ல முயற்சி. இந்த ஊதியம் வங்கியில் டிஜிற்றல் கரன்சியாக சேமிக்கப்படுவதோடு.. தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பண அட்டை மூலம் மட்டும் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். பணத்தாளாக வழங்குவதாயின் செலவின் அத்தாட்சி உறுதிப்படுத்தும் பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் கடிதம் பெறப்பட வேண்டும். 

  இதன் மூலம் தவறான வழியில் இந்த வருமானம் செலவு செய்யப்படுவதும் தவறான பழக்க வழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதும் குறையும். மாணவர்கள் வருமானம் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் உதவுவதோடு அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தும். 

   

  பதினாறு வயது தொடக்கம் தொழில் அனுபவம் பெறுவது நல்ல விடயம். ஆனால், நீங்கள் சொல்வது போன்ற கட்டுப்பாடுகள் தேவை அற்றது. இங்கு வெளிநாடுகளில் இளையவர்களுக்கு அப்படி கட்டுப்பாடு இல்லையே. தமது உழைப்பை தாம் விரும்பியபடி செலவளிப்பது அவரவர் விருப்பம். நல்லது, கெட்டதை அவர்கள் தாமாக உணர்வார்கள். 

  1 hour ago, satan said:

  வேலை இருக்கிறவன் நாளாந்தம் வேலை இழந்து வாழ வழியில்லாமல் வீதிக்கு வாறான் இதில பாடசாலை மாணவருக்கு வேலை வாய்ப்பாம். புதுசு புதுசாய் 
  பொய், புரட்டு, புழுகு  எதையாவது அவிழ்த்து விட வேண்டியதுதான்!

  எல்லாரும் உடம்பு நோகாமல் வேலை செய்வது என்றால் நாடு எங்கே போகும்?

  • Like 2
 9. வரிசையில் நின்று வாங்கி அதை அதிக விலையில் மீண்டும் விற்பதாகவும் கூறுகின்றார்களே. 

  வரிசையில் எரிபொருளுக்காக காத்து நிற்பதை பல இளைஞர்கள் மிகவும் விரும்புவதாகவும் தெரிகின்றது. தெருவில் பன்பல் அடித்து, தண்ணி அடித்து, ஆடிப்பாடி வரிசை முறையில் எரிபொருள் பெறும் நடைமுறையை அவர்கள் எதிர்கொள்கின்றார்களாம். 

 10. ஏன் அவருக்கு ஏற்கனவே உள்ள வசதி போதாதோ?

  அவரையும், மனிசியையும் சிறீ லங்கன் எயார் லைன்ஸ் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கையில் ஏற்றி உலகம் முழுதும் உல்லாசமாக சுற்றி திரிய வழி ஏற்படுத்தி கொடுங்கள். 

 11. பாட்டியை லவ் பண்ணாமல் அவசரப்பட்டுடானே. இல்லாவிட்டால் ஒரு காலத்தில் ஜனாதிபதி யோகமும் அடிச்சு இருக்கும் பையனுக்கு 😄

  • Haha 1
 12. எல்லாம் இலவச கல்வி செய்யும் வேலை. உழைத்து படித்தால் பகிடிவதையில் எல்லாம் மினகட நேரம் கிடைக்காது.

 13. டக்லஸ் அண்ணாவால் தானே பழைய பேருந்துகளை கடலுக்குள் இறக்க முடியும்.

  ஒரு அடிப்படை செயற்பாட்டு அமைப்பு தேவை. அரசியல் இழுபறிகள் தொடர்ந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகள் வழமைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். 

 14. வீட்டில் கரண்ட் இல்லை, வாகனத்துக்கு எரிபொருள் இல்லை; தேவையான அடிப்படை வசதிகள் இல்லை இல்லை இல்லை. தெருவில் நிற்கின்றார்கள். இவை மீண்டும் தடையின்றி கிடைக்கும்போது கூட்டம் தானாக கலையும்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.