Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. உங்களுக்கு தேவைப்படாது போகலாம். தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு மீன் வேண்டுமா/வேண்டாமா?
  2. இங்கிலாந்து ஆட்டத்திலாவது கோழி நூறு அடிக்க வேண்டும்.
  3. இதன் பின்னால் உள்ள உளவியல் காலப்போக்கில் எல்லோருக்கும் பரீட்சயம் ஆகலாம். பல்வேறு ஊடகங்களின் செய்திகளின் தொடர்பிலான பின்னூட்டல் பகுதியில் தம்ப்ஸ் அப்புடன் டவுணும் உள்ளது. நான் நினைக்கின்றேன் கருத்துக்களத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் வெளியில் நின்று யார் பச்சை, சிகப்பு புள்ளிகள் இடுகின்றார்கள் என்பதை பார்க்கக்கூடியதாக அமைந்தால் நல்லது என்று. கருத்துக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணான கருத்துக்களை முறைப்பாடு செய்ய வழி உள்ளது. இப்போது அப்படியான கருத்துக்களுக்கு சிவப்பு புள்ளி போடலாம். விவாதம் சூடாகும்போது சிவப்பு புள்ளிகள் ஆத்திரத்தில் இடப்படலாம்.
  4. நியூசிலாந்து வெல்லவேண்டும் என விரும்பினேன். இந்தியா வெற்றி பெற்றால் கோழி 100 அடிக்க வேண்டும் என விரும்பினேன். இரண்டும் நடக்கவில்லை. இனி இங்கிலாந்து இந்தியாவை வெற்றி பெறவேண்டும் என எதிர்பார்ப்போம்.
  5. உங்களுக்கு ஒரு இரத்த திலகம் இட்டு உள்ளேன். சிவப்பு புள்ளி வேலை செய்கின்றது.
  6. ஏட்டுக்கு போட்டியாக இரண்டு பக்கமும் தவறுகள் இழைக்கப்பட்டன. ஆனால் ஒற்றுமையாக செல்வதறான முயற்சிகள், சமரசங்கள் தொடர்ச்சியாக நடந்தன. தமிழ்நெட் இணையத்தளம் இப்போதும் பழைய பதிவுகளை காண்பிக்கின்றது. அங்கு பாருங்கள். எத்தனை செய்திகள் என. தமிழ் முஸ்லீம் தரப்பிடையே ஒரு சமரசம் ஒற்றுமை ஏற்படாதது இரண்டு இனங்களுக்குமே மிகப்பெரிய பின்னடைவு.
  7. இப்போது விடுதலை புலிகள் அமைப்பு முன்பு போலவே தலைவர் தலைமையில் இயங்கினால் அவர்களின் நிலைப்பாடு நிச்சயம் இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை ஆதரிக்காது. அதேசமயம் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் ஆதரிக்க மாட்டார்கள்.
  8. மதிப்பு புள்ளிகளை வைத்து என்ன செய்யமுடியும்? இங்கே பல ஆயிரம் மதிப்பு புள்ளிகள் பெற்றவர்கள் கருத்துக்கள உறவு நிலையை இழந்து கருத்துக்கள உறுப்பினர் நிலைக்கு தரம் குறைக்கப்பட்டு உள்ளார்கள்.
  9. பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிணக்கை இலங்கை முஸ்லீம்களுடன் கோர்த்து தமது நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு உங்களைப்போல் சிறீதரன், சுமந்திரன், இதர தமிழ் அரசியல்வாதிகள் அதிமேதாவிகள் இல்லை என நினைக்கின்றேன்.
  10. எனக்கு கிடைத்த ஒரு தகவல் பிரகாரம் இந்த இரட்டை தற்கொலைக்கான காரணம் பரீட்சை/முடிவு இல்லை. தற்கொலை சம்மந்தமாக பாடசாலையில்/பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கல்வி நிச்சயம் அவசியம். மற்றையது, பெற்றோருக்கும் அறிவூட்டல் தேவைப்படுகின்றது. பெற்றோருக்கு பிள்ளைகளுடன் கனதியான விடயங்களை பக்குவமாக கதைக்கும் மனநிலை தேவை. தூக்கி உடைப்பது போல பேசுவது எப்படியான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய எச்சரிக்கை அவசியம்.
  11. இந்த விடயத்தில் சிறீதரன், சுமந்திரன், சம்பந்தர், சாணக்கியன், இதர தமிழ் அரசியல் வாதிகள் நிலைப்பாட்டை யாராவது கூறுங்கள் பார்க்கலாம்.
  12. பலர் அணுகப்பட்டு உள்ளார்கள். ஆட்கள் இந்த வழியில் வந்து பீ ஆர் எடுக்கின்றார்கள் போலும். ஆனால், இங்கு ஸ்பொன்சர் செய்யும் நிறுவனத்துக்கு பல ரிஸ்க் உள்ளன. எனது நண்பர் ஒருவர் இந்தியர் ஒருவருக்கு உதவி கேட்டு இந்த வழியில் உதவினார். ஆனால், அந்த இந்தியர் ஏற்கனவே தொழில் வீசாவில் வந்துவிட்டார். சிறிது காலத்தில் வேலையில் தன்னை டிஸ்கிரிமினேட் செய்துவிட்டார்கள் என ஒரு புது கேசை உருவாக்கி டிப்போடேசன் ஓடரை தள்ளிபோட்டு விட்டார். கடைசியில் உதவி செய்த நண்பருக்கு ஆப்பு. வாழ்வா சாவா என வரும்போது உதவி பெற்றவர்கள் உதவி செய்தவருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு அடிப்பார்கள். ஒரு வக்கீல் இந்த இந்தியருக்கு இப்படி வழக்கு போட்டு எஸ்கேக் ஆகலாம் என அறிவுரை கொடுத்து உள்ளார்.
  13. மாங்குளம் புகையிரத நிலைய நிறுத்தத்தில் நின்று செல்வது எனக்கும் நினைவு உள்ளது. ஒரு சமயம் யாழ்ப்பாணம் சென்றபோது மாங்குளம் புகையிரத நிலையத்தில் இறங்கி பின்னர் பேருந்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தோம். வழியில் வரும் மாங்குளம் இராணுவ முகாமும் நினைவு உள்ளது.
  14. கவன ஈர்ப்பு தேவை. இதை வேறு மாதிரியாக காண்பிக்க ஏதும் வழிவகைகளை பார்க்கலாமே. பாடசாலை பிள்ளைகள் கல்வி ஏலவே மட்டம். நிருவாக இயந்திரம் ஏற்கனவே சோம்பேறித்தனம் பிடித்தது.
  15. நானும் இந்த செய்தி பார்த்தேன். இன்றுவரை இமாம் அவர்களின் இசை மட்டுமே பரீட்சயம். அதுபோலவே சிவகார்த்திகேயனின் நடிப்பு, நகைச்சுவை. அவரவர் வாழ்வில் ஆயிரம் பிரச்சனைகள். அதுவும் பிரபலம் என்றால் சொல்லி வேலை இல்லை. எனவே தொடர்ந்து இசையை, நடிப்பை கேட்டு, பார்த்து ரசிப்போம். அவர்களுக்கு தங்கள் பிரச்சனைகளை பார்க்க வயசு காணும் தானே. நமக்கேன் இந்த ஆராய்ச்சி.
  16. கோழி சாத்தி தள்ளுகின்றார். இந்த உலக கோப்பையுடன் 50 ஒரு நாள் போட்டி சதங்கள் அடிப்பாரோ?
  17. எப்படி மற்றைய போட்டிகளில் வெற்றி பெற்றார்கள்? 50 ஓவர் விளையாட்டு தரப்படுத்தலில் தென்னாபிரிக்கா இப்போது முதலாம் இடம் அல்லவா?
  18. ஆட்கள் தொடர்ந்து செல்வதால் அங்கு உள்ளோருக்கு ஆர்வம் தொடர்ந்து உள்ளது. அங்குள்ளோர் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கே எப்படி ஆட்களை கூப்பிடவேண்டும் என்று அறிவுரையும் கொடுக்கின்றார்கள்.
  19. நீங்கள் அண்மைக்கால செய்திகளை உன்னிப்பாக அவதானித்தால் கிளிநொச்சி மோசமான ஒரு நிலையில் உள்ளதோ என எண்ணத்தோன்றும். பாடசாலை/பல்கலைக்கழக மாணவர் என்றால் தற்கொலை செய்தி வெளியில் தெரியவரும். சாதாரண குடும்பஸ்தர்கள், வயது சற்று கூடினவர்கள் என்றால் அவை வெளியில் வருவது குறைவு. சிறிது காலம் முன் பொறியியல் பிரிவு பல்கலைக்கழக மாணவன் கிளிநொச்சியில் தற்கொலை செய்தான். மேலும், குற்றவாளிகளை பின் தொடர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டார். பேருந்தில் சென்ற தம்பதியை இறக்கி வாளால் வெட்டினார்கள். (வெட்டு வாங்கியவர் தந்தை/மகனின் காதல் பிரச்சனையாம்). அங்கு கொலை/தற்கொலை சாதாரணம் ஆகிவிட்டது. ஒரு சமூகம் அழிந்துகொண்டு உள்ளது.
  20. நீங்கள் முன்பு ஒஸ்மானியா கல்லூரி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் விளையாடும் உதைபந்தாட்ட போட்டி பார்த்தது உண்டா. யாழ் மத்திய கல்லூரி பரியோயாவான் கல்லூரி மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் கற்பூரம், தேங்காய், பூசை மணி, சங்கு என எல்லாம் உள்ளன. இலங்கை வீரர் குருசிங்க துடுப்பாடும்போது கடவுளை வணங்குவது தனி அழகு. இந்திய அணி வெல்ல வேண்டும் என தொலைக்காட்சி முன்னால் கற்பூரம் கொழுத்தி வழிபடுவார்கள். மேற்கண்ட செய்தியில் ரசிகர் கூட்டம் கூ அடிப்பதும், கோசம் இடுவதும் இந்த கலாச்சாரத்தின் பகுதியாகவே பார்க்கப்படலாம். விளையாட்டு வீரர்கள் இவை எல்லாவற்றையும் ஏற்கனவே எதிர்பார்த்து, இதற்கு தயாராகவே போட்டிக்கு வரவேண்டும், வருவார்கள். உலக கோப்பை ஆட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணிக்கும் இதே அனுபவங்கள் கிடைக்கும்.
  21. சில பகுதிகளில் சுனாமியின் பின்னர் ஏற்கனவே கடல் உள்ளே வந்து நிலம் போய்விட்டதோ. சில பகுதிகளின் சிறு வயதில் நாம் ஓடிவிளையாடிய கடற்கரை சிறிதாகிவிட்டது/காணவில்லை. கடல் நிலத்தை ஆக்கிரமித்து நிலம் சுருங்குவதை எண்ணிப்பார்க்க பயங்கரமாய்த்தான் உள்ளது.
  22. இன்றைய ஆட்டத்துடன் பாகிஸ்தான் காலியா அல்லது மீண்டு எழுமா?
  23. இவ்வளவு காலத்தில் ஒரு நாற்பது வருடங்கள் என வைப்போம். இந்தக்காலத்தில் எத்தனை வருடங்கள் தேவானந்தா அவர்கள் கடல் தொழில் அமைச்சாராக விளங்கி உள்ளார்? தேவானந்தா அவர்கள் கடல் தொழில் அமைச்சராக இல்லாத காலத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் இடையேயும், இலங்கை இந்திய அரசுகள் இடையேயும் மீன்பிடி, மற்றும் கடல்சார்/எல்லைசார் பிரச்சனைகள் வரவில்லையா? இந்தபிரச்சனையை தமிழ்நாடு அரசு/தமிழ்நாடு மீனவர்கள் எப்படி பார்க்கின்றார்கள்? அவர்கள் இலங்கை தமிழர்கள் தம்முடன் முரண்படாமல் இருக்க எப்படியான முயற்சிகள், நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள்/எடுக்கின்றார்கள்? அவர்கள் பக்கம் இந்தவிடயத்தில் எவ்வளவு தூரம் அக்கறை உள்ளது? இங்கு சாணக்கியன் ஐயா செண்டிமெண்டலாக கதைத்து உள்ளார். மற்றும்படி காலங்காலமாக உள்ள போட்டிகள், இழுபறிகளுக்கு இப்போதுள்ள கடல்தொழில் அமைச்சரை காரணாமாக சொல்ல முடியாது. இலங்கை மீனவர்களிடம் அவர்கள் அபிப்பிராயங்களை இந்த விடயத்தில் அதிகம் காது கொடுத்து கேட்கவேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.