Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. உங்கள் யாருக்காவது இந்த பகுதிகளுக்கு சென்று பார்த்த நேரடி அனுபவம் உள்ளதோ?
  2. இதை நீங்கள் நம்புகின்றீர்களா? சவேந்திர சில்வா விடுதலைப்புலிகள் தலைவரை தலையில் வாளால் வெட்டி கொன்றார் என முன்பு இலங்கை ஊடகம் ஒன்று எழுதியது. அதை நம்புவீர்களா?
  3. இங்கே சம்மந்தப்பட்டு உள்ளது உங்கள் பிள்ளை இல்லை தானே. எனவே நல்லாய் பொழிந்து கட்டுவீர்கள். நாங்கள் படிக்கும்போது காலத்தில் நடக்காத சம்பவங்களா தற்போது நடைபெறுகின்றது? இது சமநிலை உள்ளதா அல்லது ஒருசாரார் வழங்கிய தகவலா என்று செய்தியை பார்க்கும்போதே தெரிகின்றது. உங்கள் பிள்ளையை வேண்டுமென்றால் ஊர் பாடசாலை ஒன்றில் சேர்ப்பித்து அங்குள்ள நிலவரங்களை கண்டுபிடியுங்கள்.
  4. ஜேவிபி:பிரேமதாசா காலத்தில் முன்பு ஆறுகளில் முண்டங்கள் மிதந்து வரும். மிதந்து வரும் முண்டத்துக்கு சிலது தலை இருக்காது, சிலது கை, கால்கள் இருக்காது. முண்டம் இன்னாறென அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்து காணப்படும். ஆற்றில் மிதந்து வரும் முண்டத்தை வைத்து ஆட்களை அடையாளம் காண்பது போன்றதுதான் இப்போதைய ஊடகங்களின் செய்திகள். பவர் உள்ளவர்கள் தம் சார்பாக, தமக்கு சார்பாக செய்திகளை வேகமாக பரப்பிவிடுகின்றார்கள். நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்பது போன்று அவலங்களை வைத்து வியாபாரம் ஆக்கியுள்ள ஊடகங்கள் பாய்ந்தடித்து தலவலை பரப்புகின்றன. இங்கு மேற்கண்ட செய்தியில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பின் தகவல் ஏதும் இல்லை. அடிவாங்கிய ஆசிரியர் ஆணா பெண்ணா? திருமணம் ஆகியவரா/இல்லையா? மாணவி எத்தனையாம் வகுப்பில் கல்வி கற்கின்றார்? அடி மாணவி மீது ஏதும் சொறிச்சேட்டை விட்டதால் ஆத்திரமுற்றதால் வந்து இருக்கலாம். மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரவில்லையென்றால் அதற்கான காரணம் அறியப்பட்டதா? முதலாவது பாடசாலையில் இருந்து மாணவி பிரிதோர் பாடசாலைக்கு மாற்றலாகியதற்கான காரணம் உண்மையில் என்ன என்பது எமக்கு தெரியாது. இங்கு வீரகேசரி ஒரு தரப்பு தகவலை பரப்பியுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் எல்லோரும் யோக்கியவான்களும் அல்லர்.
  5. நேரடியாக கூறுவது என்றால் ஒரு எழுத்தாளர், சமூகத்தில் அறியப்பட்டவர் எனும் வகையில் உங்களை நோக்கும்போது நீங்கள் இனிமேல் இப்படி காப்பிலி என எழுதுவதை, பேசுவதை தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே எழுதியது, பேசியதற்கு ஒன்றும் செய்யமுடியாது.
  6. ஏதிலிகள்: ஏதும் இல்லாதவர்கள் காப்பிலிகள்: காப்பு (பாதுகாப்பு இல்லாதவர்கள்) நாங்கள் காப்பிலிகள். ஞாபக மறதி உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் போடலாமா? 😇
  7. வாகனத்தை அளங்கரிப்பது தவறாக தெரிய இல்லை. இது வியாபார தந்திரம் எனவும் கொள்ளலாம். ஆனால், மற்றைய வாகன சாரதிகள் பாதுகாப்பாக தமது வாகனங்களை ஓடுவதற்கு அளங்கார பவனியின் மின் விளக்குகள் இடையூறு விளைவிக்ககூடாது. இப்போது வரும் புதியவகை வாகனங்களின், மற்றும் தனிப்பட்டவர்களால் உருமாற்றம் செய்யப்படும் சில பழைய வாகனங்களின் தலை மின் விளக்குகள் அதியுச்ச பிரகாசத்தை பாய்ச்சுகின்றன. இப்படியான வாகனங்கள் எம் பின்னால் வரும்போது அவை எமது கண்களுக்கு தீமையை ஏற்படுத்தும் என்பதோடு நாம் பாதுகாப்பாக வாகனம் ஓடுவதற்கும் இடையூறு விளைவிக்கின்றன.
  8. உங்களுக்கு ஒரு விடயம் தெரியாது போலும். யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியென இலங்கை இராணுவ சிவில் வேலையில் ஏராளம் தமிழ்பெண்கள், ஆண்கள் பணி புரிகின்றார்கள். பல தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம்.
  9. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சரித்திரம். நிச்சயமாக எனக்கும் நானாகவே வாழபிடிக்கின்றது.
  10. பிழைக்கத்தெரிந்த நீதிபதி. இந்த லூசுக்கூட்டங்களுடன் நின்று மாறடிப்பதை விட நாலு கன்று வைத்து தண்ணி ஊற்றலாம் என நினைத்து நாட்டை விட்டே வெளியேறிப்போனார் போல. இலங்கை நீதிபதிகளுக்கு பிஜி போன்ற நாடுகளில் அதிக மதிப்பு உண்டு. நீதிபதிகளாகவே வேலை எடுக்கலாம். இனியென்ன.. ஊடகங்களில் வெளிவந்த ஆதாரங்களே போதும் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு. ஒரு நீதிபதிக்கு ஒரு பிரச்சனை என்றால் நாட்டில் உள்ள மற்ற நீதிபதிகள் குரல் கொடுக்கவோ அல்லது உதவிக்கரம் நீட்டவோ மாட்டார்களா? இவர்களுக்கு என ஏதாவது சபை ஏதும் இல்லையோ? கடைசி பாதிக்கப்பட்ட நீதிபதி சார்பாக ஒரு கண்டன அறிக்கையாவது விடமாட்டார்களோ? ஐயா விக்கினேஸ்வரனும் முன்னாள் நீதியரசரே. அவராச்சும் தனது சகபாடி சார்பாக குரல் கொடுக்கலாமே? இந்த பதவி விலகல் இலங்கை அரசாங்கத்திற்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
  11. சரியான போட்டி. இனி சாந்தி அக்கா இதற்கு பதில் வீடியோ தயாரிக்க வேண்டும்.
  12. எல்லா விடுதலை போராட்ட அமைப்புக்களும் தமிழ் மக்கள் வாழ்வினை வளப்படுத்தும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டன. தமிழீழ என்ற சொல்லை அவை தமது பெயரில் இணைத்தன. கடைசில் தமிழ் மக்களை, தமது சொந்த இனத்தையே தமது வசதிக்கு கொலை செய்தும், அவலத்துக்கு உள்ளாக்கியும் சீரழித்தன. கொலை செய்வது என்பது அது ஒரு குற்றச்செயலே அல்ல எனும்படியான மனநிலை ஏற்பட்டு சொந்த இனத்தின் குருதியை உருசி பார்க்கப்பட்டது. மக்கள் கொலை செய்யப்பட்டபோது சில சமயங்களில் வெளிப்படையாக யார் செய்தார்கள் என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் ஆளையாள் இவன் செய்தான் அவன் செய்தான் என்று கூறி ஒருவர்மேல் ஒருவர் பழி சொல்லப்பட்டது. சில சமயங்களில் பெரும் மெளனம் காக்கப்பட்டது. யார் கொன்றார்கள் என விசயம் தெரிந்தவர்களும் பயத்தில் அமைதி ஆகிவிட்டார்கள். பலர் ஊகம் செய்ய தொடங்கினார்கள். அண்மையில் திண்ணை பகுதியில் ஒரு யூரியூப் தொடுப்பு பார்த்தேன். அதில் ஒருத்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் சாதாரணமாக வாளை உருவி அங்கு வேலை செய்யும் ஒருவரை வெட்டுகின்றான். இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால்... ஆளாளுக்கு நீதிபதியாகி, நீதி மன்றமாகி அடுத்தவரின் உயிரை எடுக்கும் அளவுக்கு தமது சொந்த இனத்தில் உரிமை எடுத்துக்கொண்டார்கள். அது இப்போதும் தொடர்கின்றது. சொந்த இனத்தில் செய்யப்படும் கொலைகளை நியாயப்படுத்தவும் பெரியதொரு ரசிகர்கூட்டம் எமது சமூகத்தில் உள்ளது. கொலை செய்வது தவறு எனும் பயம் இல்லாதுபோனால் அந்த சமூகம் உருப்படுமா? கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூறப்படும் இவ்வாறான சமயங்களில் இப்படியான தவறை நான் செய்யக்கூடாது, ஊக்குவிக்ககூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் அதுவே எமது உரையாடலுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி.
  13. இந்த சிதம்பர ரகசியம் ஆண் விரிவுரையாளர்கள் ஒரு சிலரின் மாணவிகளுடனான பாலியல் சேட்டைகள்/சில்மிசங்கள் என நினைக்கின்றேன். இந்த பிரச்சனை எல்லா காலத்திலும் உள்ளது. எந்தவித பீடமும் விதிவிலக்கில்லை. புகழ்பூத்த பேராசிரியர்களே மாணவிகளின் கைகளை பற்றி அன்பாக உரையாடல் செய்வது யாழ் பல்கலைக்கழகம் உட்பட எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு விடயம். இந்த விடயத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் விளங்கிய காலத்திலும் பல பிரச்சனைகள் நடந்தன. இது பலருக்கும் தெரியும்.
  14. இங்கு அற்புதனை கொண்டுவந்தது நீங்கள்தான். அற்புதனின் எழுத்துக்கள நம்பகரமானவை இல்லை என தெரிந்துகொண்டு உங்களுக்கு வசதிப்படும் ஒன்றை நிரூபிப்பதற்காக அற்புதனை இறக்கினீர்கள். அற்புதன் எல்லாவற்றையும் தான் நேரே நின்று பார்த்தமாதிரி அற்புதமாக எழுதுவார். விக்கி ஆங்கிலத்தில் அற்புதனின் மேற்கோள் தொடுப்பு இல்லை. விக்கி தமிழில் யாரோ ஒரு அறிவாளி அற்புதனின் மேற்கோளை கொடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான கொலைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இந்தக்கொலை அவ்வளவு சீக்கிரமாக மறக்கப்படக்கூடியது அல்ல. அடுத்த வருடமும், இன்னும் தொடர்ந்தும் கட்டுரைகள், நினைவுபகிர்வுகள் வரத்தான் போகின்றன. தேவை ஏற்பட்டால் நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படலாம். அதை தடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை.
  15. தாய் விட்டு சென்ற பணியின் சிறுபகுதியை பிள்ளைகள் தொடர்கின்றார்கள், மற்றும் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து உள்ளார்கள் எனும் அளவில் மகிழ்ச்சி. குற்றவாளிகளை இனம் காணக்கூடிய பொறிமுறை இங்கு இல்லை. இந்தவிடயத்தில் பிள்ளைகளின் அபிப்பிராயத்தை ஆதரிப்பதே எனது நிலைப்பாடு. இந்த கொலை பற்றி அற்புதன் கூறியதை ஏற்றுகொள்பவர்கள் அவர் தமிழீழ விடுதலை புலிகள் சம்மந்தமாக எழுதிதள்ளிய மிகுதி விடயங்களை எல்லாம் உண்மை என ஏற்றுகொள்வார்களா?
  16. அற்புதன் எழுதியவை எல்லாம் உண்மையா? அற்புதனின் எழுத்தை ஒரு நீதிமன்றத்தில் சான்றாக காண்பிக்கமுடியுமா? கொலையை செய்த தோமஸ் என்பவர் வெளிநாட்டில் உள்ளாராம். அப்படியாயின் தோமஸை ஏன் விசாரிக்க முடியாது? /// http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf
  17. தாய் கொலை செய்யப்பட்டபோது ஒருவருக்கு 11 வயது, மற்றவருக்கு 09 வயது. இதில் இளையவர் Stanford பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அவர் பதிவு ஒன்றை விளங்கிக்கொண்ட அளவில் புலிகளின் தளபதி கிட்டு அவர்களின் காதலி/மனைவி இதில் ஒரு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது மடியில் இருத்தி அவர்கள் தாய் கொலைசெய்யப்பட்ட பின்னர் வீட்டில் நின்று உளவு பார்த்ததாக கூறுகின்றார். கூகிழ் தேடலில் எல்லாம் வருமே. நேரம் உள்ளபோது பாருங்கள். விக்கியில் அதற்குரிய இணைப்பு உள்ளது. சாவு பகுதியில் உள்ள மேற்கோள் இணைப்பில் குறிப்பிட்ட சம்பாசணையின் டுவிட்டர் தொடுப்பு உள்ளது.
  18. அவரது இரண்டு புதல்விகள் தமது தாயாரை கொலை செய்தது யார், அவை சம்மந்தமான தகவல்களை Twitter/X இல் விரிவாக பகிர்ந்து உள்ளார்கள். வாசித்து பாருங்கள்.
  19. இலங்கை சென்ற சமயம் எனக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. இரவு நேரம் ஜீப்பில் ஓடிக்கொண்டு சென்றேன். கூகிழ் காட்டிய பாதையால் சென்றபோது காட்டு பகுதியில் பாதை முடிந்து குளம் ஒன்று தோன்றியது. கொஞ்சம் பயந்துவிட்டேன். ஆனால் சற்று நிதானமாக பார்த்தபோது பாதை குளத்தின் மறுமுனையில் மீண்டும் தொடர்ந்தது. ஒரு அடி தண்ணீர்/வெள்ளம் என்றால் தொடர்ந்து பயணிக்கலாம் என நினைத்துக்கொண்டு சிறிதளவு உள்ளே வாகனத்தை விட்டேன். பின்னர் மெது மெதுவாக நீரை வெட்டிக்கொண்டு குளத்தை கடந்து மறுமுனை ஏறி தொடர்ந்து பயணித்தோம். மேற்கண்ட செய்தியில் தவறு குறிப்பிட்ட பிரதேசத்து மாநகர/கிராமசபை பொறுப்பு. கூகிழ் பாவம் என்ன செய்யும். வாகனம் ஓடுபவர்களும் கொஞ்சம் நிதானமாக தெருவை பார்த்து ஓடவேண்டும். பொதுவாக பாதையின் தன்மையை பார்க்கும்போது அதற்குள் கூகிழை நம்பி இறக்கலாமா என முடிவு செய்யலாம். கூகிழ் குறுகிய பாதையை/நேரம் குறைவான பாதையை காட்டுகின்றது. அந்த பாதை நல்ல பாதையா/குன்று குழி இல்லாததா/கல்லு/மண் பாதையா என நாங்கள்தான் அவதானித்து தெரிவு செய்யவேண்டும். நீண்ட சுற்று பாதை என்றாலும் பெரிய/நல்ல தெரு என்றால் நம்பி செல்லலாம்.
  20. நல்லதொரு சுவாரசியமான பதிவு. பூனை ஏறிவிட்டு இறங்க தெரியாமல் மீயா மீயா என்று கத்துவதை நாங்கள் பலரும் அவதானித்துள்ளோம். நல்லாய் கத்திப்பார்த்துவிட்டு கடைசியில் ஏதோ ஒரு வழியாக தனக்குள் வீரத்தை வரவழைத்துக்கொண்டு பூனை கீழே வந்துவிடும். ஆனால் இங்கே எஜமான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்.
  21. இவர் கைவைத்தியம் செய்கின்றார். இப்படி முன்பு வந்த ஒரு வீடியோவை எனது மருத்துவர் நண்பர் ஒருவரிடம் காட்டி விளக்கம் கேட்டேன். பல கோணங்களில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டினார். நாங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பத்தை பின்பற்றியே பயணிக்கின்றோம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் துல்லியமானது. அல்லது துல்லியத்தை நோக்கியது. இப்படியான வீடியோக்கள் வருவது நல்லது. இல்லாவிட்டால் ஊரில் என்ன நடைபெறுகின்றது, மக்கள் நிலமைகள் ஒன்றும் எமக்கு தெரியாமல் போய்விடும். அதேசமயம், மருத்துவதுறை சார்ந்தோரே இப்படியான வீடியோக்களுக்கு விளக்கம் தரவேண்டும். கழுத்தில் எழுபதாயிரம் நரம்புகள் செல்கின்றன என கூறுகின்றார். மின்விளக்கு போன்ற ஒன்றினால் முதுகு பக்கமாக சூடு பிடிக்கின்றார். அவரவர் தமது ஓன் ரிஸ்கில் இவரிடம் செல்கின்றார்கள். யூரியூப் வீடியோக்களை பார்த்து உணர்ச்சி அடைகின்றோம். அறிவுதான் உணர்ச்சி அளவுக்கு வேலை செய்யவில்லை.
  22. அவை ஏற்கனவே உள்ளன. உங்கள் பார்வையில்தான் இன்னும்படவில்லை.
  23. தியாகி திலீபன் இந்தியாவுக்கு எதிராக போராடினார். புலிகள் இந்தியாவுக்கு எதிராக போராடினார்கள். இப்போது இவர்கள் இல்லாத நிலையில் நமது மேதாவிகள் இந்தியா தனித்தமிழ்நாடு நமக்கு பெற்றுத்தரும் என கனவு காண தொடங்கி உள்ளார்கள். இங்கு யாழ் கருத்துக்களத்திலேயே எழுந்து நின்று இந்திய தேசியகீதம் இசைக்கக்கூடிய நிலையில் உணர்ச்சிப்பிரவாகத்துடன் பலர் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) உள்ளார்கள். சிறிது காலத்தில் யாழ் இணையத்தில் இந்திய தேசிய கொடி பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறான நிலையில் தியாகி திலீபனை நினைவுகூறுவது காலத்தின் தேவை ஆகின்றது. அதை செய்வது யார் என்பது ஒரு பிரச்சனையா?
  24. இனத்தின் ஒரு சாரார்/கடும் போக்கானவர்கள்/இன்னும் நாகரிகம் அடையாதவர்கள் அப்படி செய்யக்கூடும். இது நமது இனத்திலும் உண்டு.
  25. நாங்கள் பலவிதமான ஊகங்கள் செய்யலாம். குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலிசார் கடமை. நாட்டு நிலமை மோசம் என்று மட்டும் தெரிகின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.