Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து மக்கள் ஆதரவு பெறுவது புதிய விடயம் இல்லை. இங்கு கஜேந்திரன் புதினமாக ஒன்றும் செய்யவில்லை. தமிழர் செரிந்து வாழும் பகுதியில் ஜெனரல் கொப்பேகடுவ படத்தை தாங்கிய நினைவு ஊர்தி ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளுடன் சென்றால் கல்லெறி விழுமா/விழாதா? மற்ற இனத்தவரின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்/மனமுதிர்ச்சி சாதாரண மக்களிடம் காணப்படுமா? இல்லை என்றால் இப்படி போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது நல்லது.
  2. இது சோசல் மீடியா யுகம். தமது சாகசங்களை அனைத்து தரப்பினரும் படம், வீடியோ பிடித்து தமக்கு பெருமை சேர்க்கின்றார்கள். மேற்கண்ட அசம்பாவிதம் நடைபெறும் வீடியோவில் எத்தனைபேர் கையில் போனுடன் வீடியோ எடுக்கின்றார்கள் என்று பாருங்கள். இவற்றை பேஸ்புக்கில் போட்டால் லைக்ஸ் அள்ளிக்கொண்டு வராதா என்ன! ஆனால், பாதிக்கப்படும் நபர்/நபர்களுக்கு உதவிட எத்தனைபேர் முன்வருவார்கள்? கஜேந்திரனை தாக்கியவர்/கள் நாளை மக்கள் பிரதிநிதி ஆகலாம்.
  3. தமிழ்வின் இணயத்தளத்தில் மேற்கண்ட சம்பவம் பற்றிய செய்தி, வீடியோ பார்த்தேன். அவரவர் தமது தனிப்பட்ட பாதுகாப்பில் அக்கறை எடுக்கவேண்டியது அவரவர் பொறுப்பு. போதிய தற்காப்பு இல்லாமல் அசட்டு தைரியத்தில் கஜேந்திரகுமார் சிங்கள பகுதி ஊடாக நினைவேந்தல் ஊர்தியில் சென்றுள்ளார் போல் தெரிகின்றது. உயிர் தப்பியது என நினைத்து ஆறுதல் அடையவேண்டியதுதான்.
  4. இந்த தடவை உலக கோப்பையை பாகிஸ்தான் தூக்கும் என்று ஒரு இந்தியர் எனக்கு கூறினார். 🤔
  5. கமலா அக்காவை மானிப்பாய் தமிழச்சி என்று சொந்தம் கொண்டாடினோம். தர்மன் அண்ணா ஊரெழு தமிழனாம்.
  6. இந்த வரைபடத்தை சீனாவுக்கு வரைந்து கொடுத்ததே இலங்கை தொல் பொருள் திணைக்களம் என்றால் பாருங்களேன். சந்திரன், சூரியன் என்று இந்தியா கையை தூக்கி காட்ட சீனா கீழால் கோமணத்தை உருவ.. எல்லாம் நல்ல சகுனம்.
  7. நீதிபதிக்கு தலை சுகம் இல்லை என்று ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் சொன்னதாக செய்தி வாசிச்ச ஞாபகம். இப்ப பார்த்தால் முழு நீதிமன்றத்துக்குமே தலை சுகம் இல்லையா? தொல்பொருள் திணைக்களம் இலங்கையில் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்டது தானே.
  8. சுபாஸ்கரனை மட்டம் தட்ட தொடங்கி கடைசியில் சீமானில் முடித்து உள்ளார். இவர் தனக்கு இன்னும் ஒரு பெட்டியும் கிடைக்கவில்லை என்று அங்கலாய்க்கின்றாரோ?
  9. இவர் வேறு யாரோ.. ஆனால் மகிந்தா ராஜபக்‌ஷ சைவக்கோயில் பூசாரிக்கு முன்னால் அடங்கி பணிவாய் நின்றால் சிங்களம் தமிழரிடம் அடங்கிவிட்டது என்று பொருளா? எங்கள் ஆட்கள் விமர்சனங்களை காதில் போடாமையே அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வெற்றியின் ரகசியம் போல.
  10. மதிசுதா டொலருக்கு ஒரு படம் என்று எடுத்ததையே அவரை துரோகி என்று சொல்லி படத்தை ஓடவிடவில்லை. உங்களை நம்பி லைக்காரன் எப்படி வரலாற்று படம் எடுப்பான். அவங்கள் பிழைக்க தெரிஞ்சவங்கள்.
  11. இறுதிக்காலம் வரை மற்றவர்களில் தங்காமல் இறப்புவரை எமது சொந்தக்காலில் நாம் நிற்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு பேறு. காசை குறிவைத்து இயங்கும் உலகில் அந்திம காலத்தில் தகுந்த சேவை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பகிர்வுக்கு நன்றி!
  12. பாடசாலையின் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கமும் காண்பிக்கப்படுமா?
  13. ரயில் விபத்து, பஸ் விபத்து, மோட்டார் சைக்கிள் விபத்து, தற்கொலை, கொலை.. ஒவ்வொரு நாளும் இதே செய்திகள். விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. புகையிரத கடவையில் கடவை மூடப்பட்ட பின்னரும் தடையை சுத்தி மோட்டார் சைக்கிள்கள் புகையிரதம் வரும்போது கடந்து செல்வதை அவதானித்துள்ளேன். வீதிகளில் கண் மூடித்தனமாக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றார்கள். இனி இதற்கும் சிங்களம், இன வாதமே காரணம் என முறைப்பாடு வைக்க வேண்டாம். எனது சகபாடி ஒருவன் இலங்கை சென்றபோது தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதை வட்ஸப் வீடியோவில் காண்பித்தான். அவன் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவதை தெளிவாக அவதானிக்க முடிந்தது. தங்கள் தங்கள் உயிரை, உடமையை பாதுகாக்க வேண்டும், தங்கள் பாதுகாப்பில் தாங்கள் அக்கறை எடுக்கவேண்டும் என்று நாங்களா அறிவுரை கூறமுடியும்?
  14. சோசல் மீடியா: பேஸ்புக், யூரியூப் இத்தியாதிகளுடன் போட்டி போடுவதற்காக இப்படியான வகையில் செய்திகளை பிரசுரம் செய்கின்றார்கள் போலும். இன்று பார்த்தேன் தமிழ்வின் தளத்தில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து இறந்த மாணவனின் உயர்தர பரீட்சை பெறுபேற்றை சுட்டிலக்கம், முழுப்பெயர், தேசிய அடையாள இலக்கம் என்பனவற்றுடன் பரீட்சை திணைக்களத்தின் நேரடி தகவலை பிரசுரம் செய்துள்ளார்கள். ஒருவரின் முழுப்பெயர், சுட்டிலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் எவ்வளவு அந்தரங்கமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லையா. ஒருவர் இறந்துவிட்டாலும் இப்படியாக தனிநபர் தகவலை நாற்சந்தியில் வைத்து காண்பிப்பது எவ்வளவு தவறு!
  15. 19 வயது பெண்ணை காதல் செய்த 54 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இங்கே 22 வயது முதன்மை மாணவன் தற்கொலை செய்கின்றார். இரண்டும் வேறுபட்ட இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள். ஆனால், எம்மவர்கள் இவை மூலம் எதையாவது கற்றுக்கொள்வார்களா? அவன் பிரச்சனை என்னவோ.. ஆனால், முதன்மை மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு அவன் மனம் பலவீனமாக உள்ளது. எங்கள் கல்வித்திட்டம் முறையானது என்றால் முதன்மை மாணவன் தற்கொலைக்கு செல்ல மாட்டான்? அல்லது முதன்மை மாணவனாக வந்திருக்க மாட்டான்?
  16. இரண்டு விடயங்களை குறிப்பிட வேண்டும். 1- இப்போது விபத்து, கொலை ஆகிய அவலங்களை நேரடியாக படங்களாக, வீடியோவாக பிரசுரம் செய்கின்றார்கள். இது சரியா/தவறா? முன்பு எல்லாம் இப்படி ஊடகங்களில் பிரசுரம் செய்வதை தவிர்ப்பார்கள். காலம் மாறிவிட்டதோ? 2-வவுனியாவில் வன்முறை அதிகரித்து செல்கின்றது. துணைவேந்தருக்கே அடிக்கின்றார்கள் என்றால்.. ஒரு பிரச்சனை வரும்போது சாதாரண பொதுமகனின் பாதுகாப்பு வவுனியாவில் கேள்விக்குறி ஆகின்றது. சம்மந்தப்பட்டவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் வவுனியாவில் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு உழைப்பார்களா?
  17. இலங்கையில் கொலை குற்றங்களுக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது இல்லை. இலங்கையில் ஒருவரை கொலை செய்வதால் வரக்கூடிய ஆபத்து பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது போல. கொலை குற்றத்திற்கு நீதி மன்றினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது ஒருவேளை இப்படியான கொலைகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை குறைக்குமோ? சிங்கப்பூர், மலேசியா வழியை இந்த விடயத்தில் இலங்கை பின்பற்றலாமா?
  18. சமூக அக்கறை உள்ளவர்கள், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். கிடைக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்தால் மிகவும் பின் தங்கிய இடம்/குடும்பம் போல் தோன்றுகின்றது. இந்த பிள்ளைக்கு இனி தாய், தகப்பன், சகோதரங்களுடன் வாழ்வது சாத்தியப்படாது. ஊருக்குள் வாழ்வது பெரும் வேதனையாகும், போராட்டமாகும். அக்கறை உள்ள பொது நல அமைப்புக்கள் ஏதாவது பிள்ளையை நாடி தேவையான உடனடி உதவிகள், வசதிகள் செய்து கொடுத்தால் பெரும் புண்ணியம். சுவிஸ்/பிரான்ஸ்/கனடா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் இருந்தே விண்ணப்பித்து அகதி விண்ணப்பம் மூலம் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதாவது தொண்டு நிறுவனம் பிள்ளையின் நிலமை, விருப்பம் அறிந்து பொறுப்பெடுக்க வேண்டும்.
  19. நாம் கேள்விப்படுபவை எல்லாம் யாரோ யாரோ கூறியவை. உண்மை, பொய் தெரியாது. கொல்லப்பட்டவர் வசதி படைத்தவர், இந்த பிள்ளை வீட்டுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம் என்றும் ஒரு கதை. தகப்பனின் நண்பர் என்றால் எப்படி நண்பர் என தெரியாது. யாராவது காசு உதவி செய்தாலே நண்பர் என்று தானே சொல்வார்கள். நீங்கள் அரிதான ஒரு சம்பவத்தை வைத்து அதை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து ஒட்டி கற்பனை பண்ணி பார்த்து ஏன் டென்சன் ஆகின்றீர்கள்.
  20. முஸ்லீம் பெண் ஒருவர் தான் சரி என நினைக்கும் சட்டரீதியான அதே சமயம் அவர்கள் கலாச்சாரத்துக்கு முரணான ஒரு காரியத்தில் ஈடுபடும்பட்சத்தில் இஸ்லாமிய கடும்போக்காளர் அல்லது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகினால் நாங்கள் கொதித்து எழுகின்றோம். மனிதாபிமானம் அற்றவர்கள் என திட்டுகின்றோம். மேலுள்ள செய்தியில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு உரிமை உள்ளது அவருடன் வாழ்வதற்கு என வாக்கு மூலத்தில் கூறியதாக உள்ளது. அப்படி என்றால்.. எமது பிள்ளையும் சட்டரீதியான முறையில் தனது தெரிவை செய்துள்ளது. எங்கள் கலாச்சாரத்துக்கு இது சரி வராது என அந்த பிள்ளையின் உறவை கொலை செய்தால் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் கொலை செய்பவர்களுக்கும் (தமிழ் கொலையாளிகள்) வேறுபாடு அதிக அளவில் இல்லை போல.
  21. இலங்கையில் அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண சிவிலியன் வழக்குகளில் முடிவு கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடங்கள் குறையாமல் அதிக சாத்தியம். இதுவரை உள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு First Degree Murder. தண்டனை இல்லாமல் அல்லது குறைவான தண்டனையுடன் குற்றவாளிகள் தப்பினால் அதிசயமே. பார்போம். ஒரு கிழமை வீட்டுக்காரர், நண்பர்கள், உறவினர், அயலவர் தொடர்பு இல்லாமல் பொலிஸ் காவலில் நின்றாலே வாழ்க்கை வெறுக்கும். வெட்டி விட்டு சிறை செல்வேன் என சண்டித்தனம் கதைப்பவர்களில் பலருக்கு சிறை அனுபவமே இல்லை.
  22. கொலை செய்யப்பட்டவர் தனியாக பிரிந்து வாழ்ந்தார், முன்னைய மனைவிக்கு மற்றைய உறவு பற்றி தெரியும், அத்துடன் கொலை செய்யப்பட்டவரிடம் காசை உருவிவிட்டே இப்படியான நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் என கேள்விப்பட்டேன். உண்மை, பொய் தெரியாது. நீங்கள் விபரித்துள்ள விபரங்களும் உண்மை, பொய் தெரியாது. பொலிஸ் விசாரணைகளில் அவர்களுக்கு சகல தகவல்களும் கிடைக்கும். ஆனால், அந்த விபரங்கள் வெளியில் வருமோ தெரியாது. குடி, போதை, பொய், ஏமாற்று, வாள்வெட்டு, கொலை நிறைந்த சமூகம் நம்முடையது. ஆனால் என்னஅவர் மேலே கூறியவை உண்மை என்றால் சித்திரவதையில் இராணுவத்தை மிஞ்சி விட்டார்கள் போலும். யாரோ வீடியோ எடுத்தார்களாம். அதை சனல்4 இற்கு அனுப்பி வைத்தால் நமது மரியாதை பெருகும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.