Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. 8 hours ago, Kavi arunasalam said:

    எங்கள் வரலாற்றிலேயே அகிம்சைப் போராட்டத்தின் முதல் அடையாளம் என்றால் அது  திலீபன்தான். திலீபனின் தியாகம் பற்றி உலகமே அறிந்தது. 

    திலீபனின் தியாகத்தை நாங்கள் மதிப்பதாக இருந்தால், முதற் கட்டமாக நாங்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஒரு பொது இடத்தில் அமைதியாக தியாகி திலீபனுக்கு  அஞ்சலி செலுத்துவதே அவருக்கு நாங்கள் செலுத்தும் மதிப்பாகும். நாங்கள் தான் கொள்கைப் பிடிப்பாளர்கள் என தனித்தனியாக அதுவும் கட்சிகள் ரீதியாக தியாகி திலீபனுக்கு செய்யப்படும் அஞ்சலிகள் அநாவசியமானவை. அது ஒருவகையில் சுயநலம் என்று கூடச் சொல்லலாம்.

    தனி ஒருவர் மீதானாலும் சரி அல்லது ஒரு குழு மீதானாலும் சரி   தாக்குதல் நிகழுமானால் அது கண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எதிர் கருத்து கிடையாது. ஆனால் நாங்களே அதற்கான காரணியாக இருப்போமானால் அந்த நிகழ்வு நடை பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்களே எடுத்திருக்க வேண்டும்.    

    கஜேந்திரன், தாங்கள்  திலீபனின் தியாகத்தை பெரும்பான்மை மக்களுக்கு தெளிவு படுத்த விரும்பியதாகவும் அதன் மூலம் அவர்கள் ஆட்சியாளர்களைப் புரிந்து கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இதுவரை தாங்கள் பயணிக்காத பாதையில் ஊர்தியை செலுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார். இது ஒரு வில்லங்கம் பிடித்த வேலை.  இது அரசியலில் இப்பொழுதுதான் ஆனா, ஆவன்னா படித்தவர்களுக்கும் விளங்கும்.  நேற்று நடந்த நிகழ்வு, தன்னை வருத்தி ஈழத் தமிழருக்காக அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டு எங்கள் கண் முன்னே மெது மெதுவாக உயிர் துறந்த ஒரு புனிதனை  வீதியில் வைத்து அசிங்கப் படுத்தி தங்கள் கட்சியை வளர்க்கும் ஒரு நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. 

    இன்னுமொன்று. நாலு ஐந்து பேர் மட்டும்  பங்கு கொள்ளும் ஊர்தி பவனியைக்  கண்டு, எப்படி பெரும்பான்மை எங்கள் நிலையைப் புரிந்து கொள்ளும்? பவனியை ஏற்பாடு செய்தவருக்கே  பாதுகாப்பில்லாத போது இவர்களை நம்பி  எப்படி பொது மக்கள் போவார்கள்? ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ நடந்த பேரணியை ஒருதரம் நினைத்துப் பார்க்கிறேன். கடந்த வருடம் ஒக்ரோபரில் நாட்டுக்குப் போய் இருந்தேன். தெகிவல சிவன் கோவில் தேர்த்திருவிழா, தேர்ப் பவனிக்காக காலி வீதியை சில மணிநேரம் ஒருபக்கம் மூடி இருந்தார்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த கலைஞர்களின் குதிரை ஆட்டங்கள், நடனங்கள் என பல நடந்தன. பிரச்சனைகள் எதுவும் நடைபெறவில்லை.

    தானே தடியைக் கொடுத்து  அடிவாங்கிய கதையாகத்தான் கஜேந்திரனை நான் பார்க்கிறேன். இவருக்கு நடந்ததற்காக பதாதை பிடித்து வீதியில் நின்று கண்டனம் செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்து நேரத்தை வீணாக்காமல் , தியாகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தவே நான் விரும்புவேன்.

     

    விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து மக்கள் ஆதரவு பெறுவது புதிய விடயம் இல்லை. இங்கு கஜேந்திரன் புதினமாக ஒன்றும் செய்யவில்லை. 

    தமிழர் செரிந்து வாழும் பகுதியில் ஜெனரல் கொப்பேகடுவ படத்தை தாங்கிய நினைவு ஊர்தி ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளுடன் சென்றால் கல்லெறி விழுமா/விழாதா?

    மற்ற இனத்தவரின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்/மனமுதிர்ச்சி சாதாரண மக்களிடம் காணப்படுமா? இல்லை என்றால் இப்படி போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

    • Like 2
  2. 16 hours ago, புலவர் said:

    இது தமிழர் தலைநகரம் தமிழர் பூமி.இற்கே குடியேற்றப்பட்ட காடையர்களுக்கு இராணுவப்புலாய்வாளர்களின் மறைமுகத் தூண்டல் இருந்திருக்கிறது. என்ன தைரியம் இருந்தால் பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பொலிசாரும் இதற்கு உடந்தை. பிக்குமார் தாக்கியிருந்தால் அவர்களின் வழக்கப்படி பிக்குமாருக்கு எதராக எதுவும் செய்யமாட்டார்கள் என்று எண்ணலாம். ஆனால் சாதாரண காடையர்கள் தாக்கதல் நடத்தும் போது கைகட்டி வாய்பார்க்கிறார்கள். ஒரு பாரளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான குற்றம். இதற்குத்தான் பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கிறோம்.

     

    இது சோசல் மீடியா யுகம். தமது சாகசங்களை அனைத்து தரப்பினரும் படம், வீடியோ பிடித்து தமக்கு பெருமை சேர்க்கின்றார்கள். 

    மேற்கண்ட அசம்பாவிதம் நடைபெறும் வீடியோவில் எத்தனைபேர் கையில் போனுடன் வீடியோ எடுக்கின்றார்கள் என்று பாருங்கள். இவற்றை பேஸ்புக்கில் போட்டால் லைக்ஸ் அள்ளிக்கொண்டு வராதா என்ன! ஆனால், பாதிக்கப்படும் நபர்/நபர்களுக்கு உதவிட எத்தனைபேர் முன்வருவார்கள்?

    கஜேந்திரனை தாக்கியவர்/கள் நாளை மக்கள் பிரதிநிதி ஆகலாம். 

  3. தமிழ்வின் இணயத்தளத்தில் மேற்கண்ட சம்பவம் பற்றிய செய்தி, வீடியோ பார்த்தேன். 

    அவரவர் தமது தனிப்பட்ட பாதுகாப்பில் அக்கறை எடுக்கவேண்டியது அவரவர் பொறுப்பு. 

    போதிய தற்காப்பு இல்லாமல் அசட்டு தைரியத்தில் கஜேந்திரகுமார் சிங்கள பகுதி ஊடாக நினைவேந்தல் ஊர்தியில் சென்றுள்ளார் போல் தெரிகின்றது. 

    உயிர் தப்பியது என நினைத்து ஆறுதல் அடையவேண்டியதுதான். 

    • Like 1
    • Confused 1
  4. On 31/8/2023 at 13:07, தமிழ் சிறி said:

    "இந்த அங்கீகாரம், எங்கள் குழு உறுப்பினர்களின் நூற்றுக்கணக்கான மணிநேர கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது, அவர்கள் CPMC ஐ சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் முதியோர் பராமரிப்புக்கான முதன்மை இடமாக மாற்றியுள்ளனர்" என்று வயது முதிர்ந்த முதியோர் சிகிச்சை தீவிர சிகிச்சை செவிலியர் பயிற்சியாளர் அனு கிருபானந்தன் கூறுகிறார். கிருபானந்தன் சிபிஎம்சியின் மருத்துவமனை முதியோர் வாழ்க்கைத் திட்டத்திற்கும் தலைமை தாங்குகிறார். "எங்கள் திட்டத்தைத் தொடர்ந்து உருவாக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம், இதன் மூலம் சிபிஎம்சி எப்பொழுதும் அறியப்பட்ட இரக்கமுள்ள மற்றும் சிறந்த கவனிப்பிலிருந்து தலைமுறை நோயாளிகள் பயனடையலாம்."

     

    வாழ்த்துக்கள் அனு கிருபானந்தன்! 

    • Thanks 1
  5. 2 hours ago, ஏராளன் said:

    இந்தியாவை வெற்றிகொள்ளுமா பாகிஸ்தான்? வெற்றி இலக்கு 267 ஓட்டங்கள்

    02 SEP, 2023 | 08:11 PM
    image
     

    (பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (02) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் ஏ குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

    இதன் பிரகாரம்  267 ஓட்டங்களை பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

    பவர் ப்ளே ஓவர்கள் நிறைவடைவதற்குள் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு, இஷான் கிஷான், ஹார்த்திக் பாண்டியா ஆகியோரின் நிதானத்துடனான 5ஆவது விக்கெட் இணைப்பாட்டம் கைகொடுத்தது.

    நேபாளத்துடனான போட்டியில் முதல் 30 ஓவர்களில் எவ்வாறு பாகிஸ்தான் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதோ அதே நிலையைத் தான் இன்றைய போட்டியில் இந்தியா எதிர்கொண்டது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாரான மழை பெய்தபோதிலும் பல்லேகலையில் இதமான காலநிலைக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த நேரத்திற்கு (பிற்பகல் 3.00 மணி) ஆரம்பமானது.

    பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா ஆகியோரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் சிரமம் அடைந்தனர்.

    நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய இந்தியா 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது சிறு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

    33 நிமிட தடையின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்த போது இந்தியா இரண்டு பிரதான விக்கெட்களை இழந்தது.

    ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது ஷஹீன் ஷா வீசிய பந்து ரோஹிஷ் ஷர்மாவின் துடுப்பில் உராய்ந்தவாறு விக்கெட்டைப் பதம் பார்த்தது. ரோஹித் ஷர்மா 11 ஓட்டங்களைப் பெற்றார். (15 - 1 விக்.)

    9 பந்துகள் கழித்து விராத் கோஹ்லியின் விக்கெட்டையும் ஷஹீன் ஷா அப்றிடி பதம்பார்த்தார். விராத் கோஹ்லி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்து அவரது துடுப்பின் விளிம்பில் பட்டு விக்கெட்டுக்கு சென்றது. (27 - 2 விக்.)

    அடுத்து களம் நுழைந்த ஷ்ரேயாஸ் ஐயர் சற்று ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் 14 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பக்கார் ஸமானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். (48 - 3 விக்.)

    இந்தியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழைத்தூறல் மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டாவது தடவையாக பிற்பகல் 4.35 மணிக்கு தடைப்பட்டது.

    இருபது நிமிட தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சில நிமிடங்களில் சூரியன் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியதுடன் மைதானம் காலை 10.00 மணி போல் காட்சி அளித்தது.

    எவ்வாறாயினும் ஆட்டம் இந்தியாவுக்கு இலகுவாக அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் போன்று மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷுப்மான் கில் 32 பந்துகளில் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். (66 - 4 விக்.)

    பவர் ப்ளே ஓவர்கள் நிறைவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

    இந் நிலையில் இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 138 ஓட்டங்கள் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவியது.

    இஷான் கிஷான் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தில் பாபர் அஸாமிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (204 - 5 விக்.)

    மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஹார்திக் பாண்டியா 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அவர்  7 பவுண்டறிகளையும் 1 சிக்ஸையும் அடித்திருந்தார். (239 - 6 விக்.)

    மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷஹீன் ஷா அப்றிடி மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இம்முறை ரவீந்த்ர ஜடேஜா விக்கெட் காப்பாளர் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். (242 - 7 விக்.)

    மொத்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாத நிலையில் நசீம் ஷாவின் பந்தை அரைகுறை மனதுடன் அடித்த ஷர்துல் தாகூர் (3), ஷதாப் கானிடம் பிடிகொடுத்து களம் விட்டு வெளியேறினார். (242 - 8 விக்.)

    பின்வரிசை வீரர்களின் குல்தீப் யாதவ் 4 ஓட்டங்களுடன் நசீம் ஷாவின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (261 - 9 விக்.)

    ஜஸ்ப்ரிட் பும்ரா 16 ஓட்டங்களைப் பெற்று நசீம் ஷாவின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.

    பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

    https://www.virakesari.lk/article/163725

    இந்த தடவை உலக கோப்பையை பாகிஸ்தான் தூக்கும் என்று ஒரு இந்தியர் எனக்கு கூறினார். 🤔

  6. On 30/8/2023 at 02:18, ஏராளன் said:

    அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

     

    இந்த வரைபடத்தை சீனாவுக்கு வரைந்து கொடுத்ததே இலங்கை தொல் பொருள் திணைக்களம் என்றால் பாருங்களேன். 

    On 30/8/2023 at 03:47, goshan_che said:

    பிரிக்ஸ் மாநாட்டில் போய்…இந்தியா ஹே…சந்திராயன் ஹே…என மோடி மார்தட்டி வந்த மை கூட காயவில்லை🤣.

    சீனா தமிழ் நாட்டை “தமிழ் சின்” என பெயரிட்டு தம்மோடு இணைத்தால் மிக்க மகிழ்சிச்சியாய் இருக்கும் 🤣.

     

    சந்திரன், சூரியன் என்று இந்தியா கையை தூக்கி காட்ட சீனா கீழால் கோமணத்தை உருவ.. எல்லாம் நல்ல சகுனம். 

    • Haha 2
  7. நீதிபதிக்கு தலை சுகம் இல்லை என்று ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் சொன்னதாக செய்தி வாசிச்ச ஞாபகம். இப்ப பார்த்தால் முழு நீதிமன்றத்துக்குமே தலை சுகம் இல்லையா?

    தொல்பொருள் திணைக்களம் இலங்கையில் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்டது தானே.

  8. 14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

    ஜரோப்பாவில் இருந்த இருக்கும் நமக்கு மட்டுமே தெரியும் இவ்வளவு தகவல்களையும் இந்தியாவில் இருந்தபடியே திரட்டியது ஆச்சரியம்தான்..

     

     

    சுபாஸ்கரனை மட்டம் தட்ட தொடங்கி கடைசியில் சீமானில் முடித்து உள்ளார். இவர் தனக்கு இன்னும் ஒரு பெட்டியும் கிடைக்கவில்லை என்று அங்கலாய்க்கின்றாரோ?

  9. இவர் வேறு யாரோ.. ஆனால் மகிந்தா ராஜபக்‌ஷ சைவக்கோயில் பூசாரிக்கு முன்னால் அடங்கி பணிவாய் நின்றால் சிங்களம் தமிழரிடம் அடங்கிவிட்டது என்று பொருளா?

    எங்கள் ஆட்கள் விமர்சனங்களை காதில் போடாமையே அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வெற்றியின் ரகசியம் போல. 

    • Like 2
  10. 11 hours ago, உடையார் said:

    பிக்குகளின் காலில் விழுந்து கூம்பிட்டால் , இதுதான் முதல் தொடக்கம்😁

    நரம்பிருந்தால் இலங்கை தமிழ் மக்களின் வரலாற்றை எடுப்பாரா???

     

    மதிசுதா டொலருக்கு ஒரு படம் என்று எடுத்ததையே அவரை துரோகி என்று சொல்லி படத்தை ஓடவிடவில்லை. உங்களை நம்பி லைக்காரன் எப்படி வரலாற்று படம் எடுப்பான். அவங்கள் பிழைக்க தெரிஞ்சவங்கள். 

  11. இறுதிக்காலம் வரை மற்றவர்களில் தங்காமல் இறப்புவரை எமது சொந்தக்காலில் நாம் நிற்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு பேறு. 

    காசை குறிவைத்து இயங்கும் உலகில் அந்திம காலத்தில் தகுந்த சேவை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

    6 hours ago, Kavi arunasalam said:

    இத்தாலியில்  இருந்த  முதியோர் இல்லம் ஒன்று 29 யூலையில் பரபரப்பாக இருந்தது.

    இத்தாலியில் மோரி என்ற நகரத்தில் இருந்த  முதியோர் இல்லத்துக்கு வைகாசியில்,புதிதாக வந்த முதியவர் பெப்பின் Bepìn(92) அமைதி இல்லாமல் இருந்தார். அவரது பார்வையிலேயே அவர் அந்த இல்லத்தில் இருக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்த்துப் பேசவோ தனது எண்ணத்தைச் சொல்லவோ அவர் விரும்பவில்லை.

    அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் அவர் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. தனியாக இருந்து பழையதை அசை போட்டுக் கொண்டிருந்தார். அவரது நடையைப் போலவே நாட்களும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன.

    ஆடி 29ந் திகதி முதியோர் இல்லம் அமைதியாக இருந்தது. போர்வையால் முழுமையாகத் தன்னை மூடியபடி பெப்பின் கட்டிலில் படுத்திருந்தார். பராமரிப்பாளர்கள் அவரின் அறைக்குள் வந்து பார்த்து, ஆழ்ந்து உறங்கும் பெப்பினை தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியாகி விட்டது. அன்றாடம் மாலையில் அவருக்குக் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் இன்னமும் தரப்படவில்லை. இனியும் பொறுப்பதில் பயனில்லை அவரை எழுப்பி விடலாம் என பராமரிப்பாளர் ஒருவர் அவரை கையால் தட்டிய போது அவரது உடல் மெதுமையாக இருப்பதைப் பார்த்து பயந்து போய் போர்வையை விலக்கிப் பார்த்தால் பெப்பின் படுக்கையில் இல்லை. ஒரு உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தலையணைகள்தான் அந்தக் கட்டிலில் அடுக்கப்பட்டிருந்தன.

    பெப்பின் அந்த முதியோர் இல்லத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர் அந்த முதியோர் இல்லத்தில் இருந்து காணாமல் போன முதியவர் ஒருவர் இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு ஓடையின் கரையில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டிருந்தார். பெப்பினைக் காணவில்லை அதுவும் இரவு நேரத்தில் என எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் உடனடியாகவே தகவல் அனுப்பப்பட்டன.

    பெப்பினைத் தேடத் தொடங்கினார்கள். அதில் ஒரு பொலிஸ் குழு அவர் முன்னர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது, தனது வீட்டில் அமைதியாக இருந்தார் பெப்பின்.

    “இந்த வீட்டை நான்தான் கட்டினேன். என் கைகளால் கட்டப்பட்ட இந்த வீட்டை விட்டு நான் வேறு எங்கும் போகப் போவதில்லைஎன பொலிஸாருக்கு உறுதியாகச் சொன்னார் பெப்பின்.

    முதியோர் இல்லத்தில் இருந்து தனது வீட்டிற்கான 10கிலோ மீற்றர் தூரத்தை எப்படி பெப்பின் கடந்து வந்தார் என்பதைப் பற்றி அவர் யாருக்குமே சொல்லவில்லை.

     

     

     

     

    பகிர்வுக்கு நன்றி!

  12. 2 hours ago, nunavilan said:

    மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலையில் போடுகிறார்கள்.(bulletin board)

    பாடசாலையின் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கமும் காண்பிக்கப்படுமா?

  13. 12 hours ago, nedukkalapoovan said:

    கிளிநொச்சியில் விபத்து.. யாழில் விபத்து... விபத்தாலேயே தமிழரின் மிச்ச சனத்தொகையும் அழிஞ்சிடும் போல இருக்கே. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கினமா.. அல்லது தொடர நடவடிக்கை எடுக்கினமா..?????!

     

    ரயில் விபத்து, பஸ் விபத்து, மோட்டார் சைக்கிள் விபத்து, தற்கொலை, கொலை.. ஒவ்வொரு நாளும் இதே செய்திகள். 

    விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. 

    புகையிரத கடவையில் கடவை மூடப்பட்ட பின்னரும் தடையை சுத்தி மோட்டார் சைக்கிள்கள் புகையிரதம் வரும்போது கடந்து செல்வதை அவதானித்துள்ளேன். 

    வீதிகளில் கண் மூடித்தனமாக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றார்கள். 

    இனி இதற்கும் சிங்களம், இன வாதமே காரணம் என முறைப்பாடு வைக்க வேண்டாம்.  

    எனது சகபாடி ஒருவன் இலங்கை சென்றபோது தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதை வட்ஸப் வீடியோவில் காண்பித்தான். அவன் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவதை தெளிவாக அவதானிக்க முடிந்தது. 

    தங்கள் தங்கள் உயிரை, உடமையை பாதுகாக்க வேண்டும், தங்கள் பாதுகாப்பில் தாங்கள் அக்கறை எடுக்கவேண்டும் என்று நாங்களா அறிவுரை கூறமுடியும்?

  14. 4 hours ago, நிழலி said:

    வீரகேசரி ஊடக தர்மம் ஏதும் இல்லாமல் இறந்து கிடப்பவரதும், காயம் அடைந்தவரதும் படங்களை பிரசுரித்து உள்ளது.

     

     

    சோசல் மீடியா: பேஸ்புக், யூரியூப் இத்தியாதிகளுடன் போட்டி போடுவதற்காக இப்படியான வகையில் செய்திகளை பிரசுரம் செய்கின்றார்கள் போலும். 

    இன்று பார்த்தேன் தமிழ்வின் தளத்தில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து இறந்த மாணவனின்  உயர்தர பரீட்சை பெறுபேற்றை சுட்டிலக்கம், முழுப்பெயர், தேசிய அடையாள இலக்கம் என்பனவற்றுடன் பரீட்சை திணைக்களத்தின் நேரடி தகவலை பிரசுரம் செய்துள்ளார்கள். 

    ஒருவரின் முழுப்பெயர், சுட்டிலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் எவ்வளவு அந்தரங்கமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லையா. 

    ஒருவர் இறந்துவிட்டாலும் இப்படியாக தனிநபர் தகவலை நாற்சந்தியில் வைத்து காண்பிப்பது எவ்வளவு தவறு!

    • Like 1
  15. 19 வயது பெண்ணை காதல் செய்த 54 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இங்கே 22 வயது முதன்மை மாணவன் தற்கொலை செய்கின்றார். இரண்டும் வேறுபட்ட இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள். ஆனால், எம்மவர்கள் இவை மூலம் எதையாவது கற்றுக்கொள்வார்களா?

    அவன் பிரச்சனை என்னவோ.. ஆனால், முதன்மை மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு அவன் மனம் பலவீனமாக உள்ளது. எங்கள் கல்வித்திட்டம் முறையானது என்றால் முதன்மை மாணவன் தற்கொலைக்கு செல்ல மாட்டான்? அல்லது முதன்மை மாணவனாக வந்திருக்க மாட்டான்?

     

    • Like 1
  16. இரண்டு விடயங்களை குறிப்பிட வேண்டும். 

    1- இப்போது விபத்து, கொலை ஆகிய அவலங்களை நேரடியாக படங்களாக, வீடியோவாக பிரசுரம் செய்கின்றார்கள். இது சரியா/தவறா? முன்பு எல்லாம் இப்படி ஊடகங்களில் பிரசுரம் செய்வதை தவிர்ப்பார்கள்.  காலம் மாறிவிட்டதோ?

    2-வவுனியாவில் வன்முறை அதிகரித்து செல்கின்றது. துணைவேந்தருக்கே அடிக்கின்றார்கள் என்றால்.. ஒரு பிரச்சனை வரும்போது சாதாரண பொதுமகனின் பாதுகாப்பு வவுனியாவில் கேள்விக்குறி ஆகின்றது.  

    சம்மந்தப்பட்டவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் வவுனியாவில் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு உழைப்பார்களா?

  17. இலங்கையில் கொலை குற்றங்களுக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது இல்லை. 

    இலங்கையில் ஒருவரை கொலை செய்வதால் வரக்கூடிய ஆபத்து பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது போல. 

    கொலை குற்றத்திற்கு நீதி மன்றினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது ஒருவேளை இப்படியான கொலைகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை குறைக்குமோ?

    சிங்கப்பூர், மலேசியா வழியை இந்த விடயத்தில் இலங்கை பின்பற்றலாமா?

    • Like 1
  18. 3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    அதே போல உண்மையும் வெளியே வரப்போவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவரை இனி கதைக்கவிடமாட்டார்கள்.

     

    சமூக அக்கறை உள்ளவர்கள், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். 

    கிடைக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்தால் மிகவும் பின் தங்கிய இடம்/குடும்பம் போல் தோன்றுகின்றது.

    இந்த பிள்ளைக்கு இனி தாய், தகப்பன், சகோதரங்களுடன் வாழ்வது சாத்தியப்படாது. ஊருக்குள் வாழ்வது பெரும் வேதனையாகும், போராட்டமாகும். 

    அக்கறை உள்ள பொது நல அமைப்புக்கள் ஏதாவது பிள்ளையை நாடி தேவையான உடனடி உதவிகள், வசதிகள் செய்து கொடுத்தால் பெரும் புண்ணியம். 

    சுவிஸ்/பிரான்ஸ்/கனடா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் இருந்தே விண்ணப்பித்து அகதி விண்ணப்பம் மூலம் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதாவது தொண்டு நிறுவனம் பிள்ளையின் நிலமை, விருப்பம் அறிந்து பொறுப்பெடுக்க வேண்டும். 

    • Thanks 2
  19. 58 minutes ago, விசுகு said:

    குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்

    எனது நண்பர் ஒருவர் இப்படி செய்திருந்தால் இதைவிட கொடூரமாக அவர் முடிவு இருந்திருக்கும். ஆனால் உங்களுக்கு செய்தி கிடைத்திருக்காது.

    குற்றங்களை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகம் அல்லது முதுகில் குத்துதலை???

     

    நாம் கேள்விப்படுபவை எல்லாம் யாரோ யாரோ கூறியவை. உண்மை, பொய் தெரியாது. 

    கொல்லப்பட்டவர் வசதி படைத்தவர்,  இந்த பிள்ளை வீட்டுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம் என்றும் ஒரு கதை. 

    தகப்பனின் நண்பர் என்றால் எப்படி நண்பர் என தெரியாது. யாராவது காசு உதவி செய்தாலே நண்பர் என்று தானே சொல்வார்கள். 

    நீங்கள் அரிதான ஒரு சம்பவத்தை வைத்து அதை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து ஒட்டி கற்பனை பண்ணி பார்த்து ஏன் டென்சன் ஆகின்றீர்கள். 

  20. முஸ்லீம் பெண் ஒருவர் தான் சரி என நினைக்கும் சட்டரீதியான அதே சமயம் அவர்கள் கலாச்சாரத்துக்கு முரணான ஒரு காரியத்தில் ஈடுபடும்பட்சத்தில் இஸ்லாமிய கடும்போக்காளர் அல்லது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகினால் நாங்கள் கொதித்து எழுகின்றோம். மனிதாபிமானம் அற்றவர்கள் என திட்டுகின்றோம். 

    மேலுள்ள செய்தியில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு உரிமை உள்ளது அவருடன் வாழ்வதற்கு என வாக்கு மூலத்தில் கூறியதாக உள்ளது. அப்படி என்றால்..

    எமது பிள்ளையும் சட்டரீதியான முறையில் தனது தெரிவை செய்துள்ளது. எங்கள் கலாச்சாரத்துக்கு இது சரி வராது என   அந்த பிள்ளையின் உறவை கொலை செய்தால் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் கொலை செய்பவர்களுக்கும் (தமிழ் கொலையாளிகள்) வேறுபாடு அதிக அளவில் இல்லை போல. 

     

    • Like 2
  21. 3 hours ago, goshan_che said:

    உங்கள் நண்பரிடம் பின்வரும் வழக்குகளில் குற்றவாளி என சந்தேகிக்கபட்டோருக்கு என்ன ஆனது என கேட்டு சொல்ல முடியுமா?

    1. மன்னம்பேரி

    2. கிரிசாந்தி குமாரசாமி

    3. முருகேசுபிள்ளை கோணேஸ்வரி

    4. கணபதிபிள்ளை சொர்ணம்மா

    5. புங்டுதீவு வித்யா

    6. டினேஷ் ஷாப்டர்

    லிஸ்ட் சாம்பிள்தான் ….இதற்கு விடை தெரிந்தது இன்னும் இப்படி இருக்கும் ஆயிரகணக்கான வழக்குகளை பற்றி பேசுவோம்.

     

    இலங்கையில் அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண சிவிலியன் வழக்குகளில் முடிவு கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடங்கள் குறையாமல் அதிக சாத்தியம். 

    இதுவரை உள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு First Degree Murder. 

    தண்டனை இல்லாமல் அல்லது குறைவான தண்டனையுடன் குற்றவாளிகள் தப்பினால் அதிசயமே. பார்போம். 

    1 hour ago, நிழலி said:

    இதில் வித்யாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். மிகுதியில் டினேஷ் ஷாப்டர் தவிர்ந்த மற்றவை போர்க்குற்றங்கள். இவற்றுக்கு எக்காலத்திலும் தீர்ப்பு வராது.

    ஆனால் நியாயத்தைக் கதைப்போம் கூறியதைப் போன்று, இலங்கையில் ஏராளமான கொலை வழக்குகள் பொலிசாரால் விசாரிக்கப்பட்டு, ஈடுபட்டவர்கள் கைதாகி, பொலிசிலும் சிறைச்சாலைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி போவர். கொலை வழக்கில் சந்தேகத்தில் கைதானாலேயே அலுப்பு தொடங்கி விடும். நல்ல வசதி இருந்தால் மாத்திரமே பிணை கிடைக்கும். வழக்குகள் நீதமன்றம் வருவதற்கே சில வருடங்கள் எடுக்கும். அது வரைக்கும் சிறை தான். 

    என் சிங்கள நண்பர் ஒருவரது உற்ற நண்பன், வீதியில் என் நண்பருடன் போகும் போது, செருப்பு தடக்கி, பிரடி அடிபட கீழே விழுந்து காயம்பட்டு, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த பின் இறந்து போனான்.  பொலிசார் என் சிங்கள நண்பர் தான் தள்ளி வீழ்த்தினார் என்று பிடித்துக் கொண்டு போய், பின் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் விடுதலை ஆனார். ஆனால் இடைப்பட்ட 3 வருடம் சிறைச்சாலையில் கழித்து, தொழில் இழந்து, மனைவி பிரிந்து, சின்னாபின்னமாகி போனார். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக் கிழமை அவருக்காக சாப்பாடு வாங்கிக் கொண்டு வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று நான் அவரை பார்த்து வருவதுண்டு. மிக மோசமான அனுபவம் அது.
     

     

    ஒரு கிழமை வீட்டுக்காரர், நண்பர்கள், உறவினர், அயலவர் தொடர்பு இல்லாமல் பொலிஸ் காவலில் நின்றாலே வாழ்க்கை வெறுக்கும். வெட்டி விட்டு சிறை செல்வேன் என சண்டித்தனம் கதைப்பவர்களில் பலருக்கு சிறை அனுபவமே இல்லை. 

  22. On 9/8/2023 at 16:32, புலவர் said:

     எங்கள் கலாச்சாரத்தின்படி தவறு.

    உங்கள் கலாச்சாரம் எது? கொஞ்சம் விபரியுங்கள் பார்க்கலாம். 

    • Like 2
    • Thanks 1
  23. 7 hours ago, Elugnajiru said:

    கொலை செய்யப்பட்டவர் பெண்ணின் தந்தையின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனவிடத்தில் காதல் மலர்ந்திருக்கிறது. கொலைசெய்யப்பட்டவருக்கு முன்னமேயே குடும்பம் இருக்கு பேரப்பிள்ளைகளும் இருப்பதாகக் கேள்வி இருவரும் வீட்டை விட்டு போனபின்பு பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு வருப்படியும் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என உத்தரவாதமும் கொடுக்கப்பட்டதை நம்பி அவர்கள் பெண்ணின் வீட்டை நோக்கி ஆட்டோவில் வந்திருக்கிறார்கள் சுண்ணாகத்திலேயே ஆட்டோவை மறித்து இருவரையும் கைப்பற்றி கொலையுண்டவரைப் பிறிதாக வேறுபடுத்தி வேறி இடத்துக்குக் கொண்டு போய் அவரது மர்ம உறுப்பில் அடித்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள் அதன்பின்பு பெண்ணின் உறவுமுறையான பெண் ஒருவர் அவரது மர்ம உறுப்பில் கொதிக்கும் சுடுதண்ணியை ஊத்தியிருக்கிறார், அப்போது கொலையுண்டவர் என்னை கொல்லுங்கோ ஆனால் இப்படிச் சித்திரவதை செய்யவேண்டாம் என அலறிய சத்தம் அந்தப் பிரதேசம் எங்கும் கேட்டிருக்கு இது நடக்கும்போது அதை வேடிக்கை பார்க்க எராளமானவர்கள் கூடிவிட்டனர் ஒருசிலர் கைத்தொலைபேசியில் வீடியோவும் எடுத்திருக்கிறார்கள் ஆனால் எவரும் தடுக்க முயலவில்லை.

    அடுத்த பக்கத்தில் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் இழுத்துக்கொண்டுபோ அவரது மர்ம ஸ்தானத்திலும் மிகக் கொடுமையான சித்திரவை செய்திருக்கிறார்கள் இதின் முதன்மையாக அவரது தாயாரே இருந்திருக்கிறார். தவிர அவரது மார்பகங்கள் சிதைகின்ற அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கு அதைப்பார்த்த அயலவர்கள்தான் பொலீசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

    பெண்ணின் வாக்குமூலத்தின்படி "நான் அவருடன் விரும்பியே வீட்டைவிட்டு வெளியேறினேன் எனக்கு பத்தொன்பது வயதாகி விட்டது எனது வாழ்க்கைய தீர்மானிக்கும் உரிமை எனக்கு இருக்குது எனச் சொல்லியிருக்கிறார்.

     

    கொலை செய்யப்பட்டவர் தனியாக பிரிந்து வாழ்ந்தார், முன்னைய மனைவிக்கு மற்றைய உறவு பற்றி தெரியும், அத்துடன் கொலை செய்யப்பட்டவரிடம் காசை உருவிவிட்டே இப்படியான நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் என கேள்விப்பட்டேன். உண்மை, பொய் தெரியாது. 

    நீங்கள் விபரித்துள்ள விபரங்களும் உண்மை, பொய் தெரியாது. 

    பொலிஸ் விசாரணைகளில் அவர்களுக்கு சகல தகவல்களும் கிடைக்கும். ஆனால், அந்த விபரங்கள் வெளியில் வருமோ தெரியாது. 

    4 hours ago, விளங்க நினைப்பவன் said:

    விபரமான தகவல்களுக்கு நன்றி அண்ணா.
    யாழ்பாணத்தில் இந்தியாவை மிஞ்சிவிட்ட மோசமான  கொடுரமானவர்கள் ஆண் பெண்கள் இருக்கின்றனர் என்பதை விளங்கி கொண்டேன்☹️

     

    குடி, போதை, பொய், ஏமாற்று, வாள்வெட்டு, கொலை நிறைந்த சமூகம் நம்முடையது.

    ஆனால் என்னஅவர் மேலே கூறியவை உண்மை என்றால் சித்திரவதையில் இராணுவத்தை மிஞ்சி விட்டார்கள் போலும்.  

    யாரோ வீடியோ எடுத்தார்களாம். அதை சனல்4 இற்கு அனுப்பி வைத்தால் நமது மரியாதை பெருகும். 

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.