Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. நான் செய்தியில் எழுதப்பட்டுள்ளதை கேட்கவில்லை. தனிப்பட்ட அனுபவங்கள், அந்த இடம் பற்றிய பரீட்சயம் பற்றி கேட்டேன். நான் நினைக்கின்றேன் இந்த பிரதேசம் அதிகம் சன நடமாட்டம் அற்ற காடு அருகில் உள்ள பகுதி போல. இல்லாவிட்டால் இப்படியான சிலை உடைப்பு/திருட்டு நடைபெறும்போது அயலவர்கள் உசார் அடைந்துவிடுவார்களே.
  2. இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்திக்கின்றது. உலக கோப்பையில் நேரடியாக பங்குபற்றி படு தோல்விகளை சந்திப்பதைவிட இந்த தடவை போட்டியில் பங்குபற்றாமல் விலகுவது கெளரவமானது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு காரணங்கள் எவை என பார்த்தால் ஆளுக்கு ஆள் மற்றவர்களை காட்டுவார்கள் பொறுப்பு வாய்ந்தவர்கள்.
  3. பொம்பிளை பிரச்சனைக்கு உள்ளுக்கு போடுவது என்றால் அமெரிக்காவில் அரைவாசி ஆம்பிளைகள் கம்பி எண்ணவேண்டும்.
  4. சட் ஜிபிடி தமிழில் புலமை பெற காலம் எடுக்கும். அதன் பிறகு வெண்பா தொடக்கம் ஹைக்கூ வரை எல்லாமே அழகு தமிழில் எழுதி ஜமாய்க்கும் என எதிர்பார்க்கலாம். தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் செயற்கை நுண்ணறிவு பொறிக்கு தமிழ் கற்பிக்க வேண்டும். விரைவில் நிச்சயம் தமிழ் ஆர்வலர்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுப்பார்கள்.
  5. நிச்சயம் காசு பார்ப்பதுதானே இவர்கள் நோக்கம். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலவச சேவையை வழங்குவார்கள். உதாரணமாக 2021 வரை உள்ள தகவல்களை மட்டும் வைத்து செயற்கை நுண்ணறிவு செயல்படுவது போல். நடப்பு, நேரடி தகவல்கள் அடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவு பொறி பயன்பாட்டுக்கு தனிநபர்களிடமும், வர்த்தக தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களில் கட்டணங்கள் அறவீடு செய்வார்கள். கைத்தொலைபேசி நிறுவனங்கள் போல இவர்களும் ஒரு காலத்தில் வந்துவிடுவார்கள். இத்தனை நிமிடங்கள் பயன்பாட்டுக்கு, இத்தனை கேள்விகளுக்கு, என காசு நன்றாக பார்க்கும் வகையில் இந்த பொறிமுறையை நிர்வகிப்பார்கள்.
  6. நன்றி @பெருமாள் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிருங்கள். நான் பலவிதமான பரீட்சார்த்த உரையாடல்கள் செய்து உள்ளேன். பல விடயங்களை இங்கு பகிர்வது உசிதமாக தெரியவில்லை. @putthan இது மற்றையவற்றை விட பலபடிகள் நெருக்கமானதும், உக்கிரமானதும். முழு உலகமும் செயற்கை நுண்ணறிவின்பால் சாயும்போது தனிநபர்கள் என்னதான் செய்யமுடியும்? @Nathamuni நல்ல விடயங்களை முடிவில்லாமல் பட்டியலிடலாம். அருந்துவதற்கு எமக்கு நீர் தேவை. அதே நீர் எம்மை மூழ்கடித்து கொல்லவும் கூடியது. எல்லாம் அளவுடன் நின்றால் நல்லது. ஆனால், அளவு அறிந்து பயன்பாட்டை பெறும் பக்குவம் நமக்கு இல்லையே. @ரதி இந்த பொறியை பரீட்சார்த்தமாக பயன்படுத்துங்கள். பல விடயங்கள் தெளிவாகும். அதேசமயம் புதிய சிக்கல்களும் உருவாகலாம். நன்றி @சுவைப்பிரியன் @நிலாமதி @புங்கையூரன் @ஈழப்பிரியன் @suvy @குமாரசாமி @தமிழ் சிறி @உடையார்
  7. இந்தியா என்றால் விவேக் பகிடிகளில் வருவது போலவே உள்ளது போல.. 🥴 நம்பி விமானநிலையத்தில் உள்ள கதிரையிலேயே உட்கார முடியாது என்றால் கிந்தியன் விமானத்தில் எப்படி பயம் இல்லாமல் ஏறுவது? 😦
  8. முதற் பகுதியும் இன்றுதான் பார்த்தேன். இலங்கையில் பிறந்து வளர்ந்த எம்மால் மீண்டும் இலங்கையில் வாழ முடியாது என்று இல்லை. ஆனால், வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இலங்கையில் வாழும்போது பலவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாகலாம். குளிர்காலங்களில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் நிற்கலாம். இப்போது காசை காட்டித்தான் அலுவல் பார்க்கவேண்டி உள்ளது. நேரடியாக கேட்காவிட்டாலும் எல்லாவற்றுக்கும் மறைமுகமாக காசு/கையூட்டு கேட்கும் நிலை அங்கு உண்டு. பலருக்கும் உள்ள பெரியதொரு பிரச்சனை வண்டி. அங்குள்ள உணவுப்பழக்கங்கள் வேகமாக உடல் நிறையை அதிகரிக்கின்றன. போட்டி, பொறாமை, எரிச்சல், ஏமாற்றல் என எல்லாவற்றையும் இலங்கையில் அதிகளவு உணரலாம்.
  9. வயசு போய்விட்டது என கவலைப்படுபவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் செய்தி இது! 💞
  10. அவுஸ்திரேலியா அணி ஆக்கிரோசமாக விளையாடி பட்டையை கிளப்பி உள்ளது போல. முதலாவது தோல்வியில் ஏற்பட்ட ஓர்மம் காரணமாகுமோ? இலங்கை அணி இம்முறை 50 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்குமோ?
  11. நித்தியானந்தா காமெடி பீஸ் போல தெரியவில்லை. அவர் தெளிவாகத்தான் உள்ளார். தொடர்ந்து நடப்பவற்றை அவதானிப்போம்… 👁️
  12. நன்றி நில்மினி. நான் விவசாய பாடம் எடுக்கவில்லை. ஆசிரியரை நினைவு வரவில்லை. மரவேலை கற்பித்த ஆசிரியர் ஒருவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டு அடிவாங்கினார் என நினைக்கின்றேன். அவர் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன் சரியாக தெரியவில்லை. எமது முன்னாள் ஆசிரியர்கள் பலரும் அகவை இருநூறு நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள் என அறிந்தேன். நீங்கள் குறிப்பிடும் பகுதி எனது அம்மம்மாவின் தந்தையின் இடம். அவர் அப்போது பலராலும் அறியப்பட்டவர, கிட்டத்தட்ட 1880 சொச்சம் பிறந்து 1945 சொச்சம் மறைந்தார் என நினைக்கின்றேன். அப்பகுதியில் இப்போதும் ஒரு சில உறவுகள் உள்ளார்கள். ஆனால் பெருன்பான்மையோர் பல்வேறு இடங்களுக்கு சிதறிவிட்டார்கள். அம்மம்மா தந்தை பெயர் குறிப்பிட விரும்பவில்லை. எப்படியும் உங்கள் அடி அந்தப்பகுதி என்றால் ஏதோ ஒரு விதத்தில் எமக்கு தொடர்பு காணப்படும். சுப்பரின் கொல்லைக்குள் தானே எல்லாம் அடங்குகின்றது. முகம் சற்று மாறி உள்ளது. பெளதிகவியல் ஆசிரியர் சோதிராஜ் தானே இவர்? முன்பு மோட்டார் சைக்கிளில் வகுப்புக்கு வருவார். இவரை பார்க்கும்போது ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர் நினைவுக்கு வருவார்.
  13. @nilmini பல தலவல்கள்; நான் அங்கு வசிக்கவில்லையாயினும் அதிகம் சென்று இடம். எனது அம்மாவின் பக்கம் உறவுகள் முன்பு வாழ்ந்தார்கள். ஓய்வுபெற்ற பரியோவான் கல்லூரி விவசாய ஆசிரியர் பெயர் என்ன? சிவன் விக்கிரகம்/புங்கையூரன் கூறிய அர்த்தநாரீசுவரர் சிலை அழகாக உள்ளது. ஆனால் முன்நோக்கி எடுக்கப்பட்ட படத்தில் உடம்பின்/தோள்பட்டை/நெஞ்சு அளவுக்கு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது கழுத்து/தலை சரியாக பொருந்தவில்லை. முழுமையாக செதுக்கப்பட்ட சிலை என்றால் ஏன் இப்படி உருவாக்கப்பட்டது என விளங்கவில்லை. பொருத்து சிலையோ தெரியவில்லை. @Nathamuni யாழ் இந்துவோ/செங்குந்தாவோ அல்லது குருகுலமோ? எழுதுமட்டுவாள் பெயர் இப்படி ஒரு அர்த்தம் இப்போதுதான் அறிகின்றேன். அந்த காலத்தில் அங்கு யாழ் இணையம் போல ஏதும் கருத்துக்களம் இயங்கிய காரணத்தால் ‘மட்டு வெட்டக்கூடும் பார்த்து எழுது!’ எனும் அர்த்தத்தில் பெயர் வைக்கப்பட சாத்தியம் உள்ளதோ? @nunavilan சோதிலிங்கம் ஆசிரியரிடம் நானும் சிறிதுகாலம் பெளதிகவியல் கற்றேன். அவர் காலமாகிய செய்தி முன்பு அறியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்! எவ்வளவு வயது அவருக்கு இப்போது உயிருடன் என்றால்?
  14. பாடசாலை பேருந்து பிரச்சனை காலம் காலமாக உள்ள பிரச்சனை. மாணவர்களுக்கும் சாரதி/நடத்துனர்களுக்குமான இழுபறிகள் முடிவு இல்லாதன. பொதுவாக பேருந்து ஏற்கனவே நிரம்பிவிட்டால் மேலதிகமாக மாணவர்களை ஏற்றமுடியாத நிலையில் இடைவெளி தூரத்துக்கு அப்பாலான தரிப்பிடங்களில் பேருந்து நிற்காமல் செல்வது வழமை. உண்மையில் இது சாரதி/நடத்துனர்களின் தவறு இல்லை. மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவேண்டியது சம்மந்தப்பட்ட பொறுப்புக்களில் உள்ளவர்களின் கடமை. நாங்கள் கற்ற காலத்தில் எமது வழியில் மாணவர்கள் அதிகம் என்பதால் இரண்டு பேருந்துகள் சேவையில் விடப்பட்டன. சிறிதுகாலம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக பேருந்துகள் விடப்பட்டன. குறிப்பிட்ட ஊர்களில் உள்ள பெரியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிய மாணவர்களின் சார்பாக இந்த விடயத்தை சீர் செய்யலாம்.
  15. இ.போ.சபை ஆசன முன்பதிவுக்கான இணையத்தள வசதி/முகவரி பேருந்தில் முன்னமே உள்ளதுதானே. இ.போ.ச பேருந்தில் சென்ற சமயம் கவனித்தேன்.
  16. முகப்பு அழகாக உள்ளது. ஆனால், சுய ஆக்கங்களுக்குரிய தொடுப்பு தொழிற்படவில்லையே.
  17. மூத்த தமிழ் இணையம் 25 வருட காலங்கள் என்பது முக்கியமான மைக்கல் ஆகும் இந்தமுறை ஆகக்குறைந்தது 25 வெவ்வேறு கருத்துக்கள உறவுகள் சுய ஆக்கங்களை பதிப்பித்தால் சிறப்பு. 🤗 நான் ஒவ்வோர் ஆக்கத்திற்கும் எனது பின்னூட்டங்களை வழங்குகின்றேன் என்னால் முடியுமான சிறு ஊக்குவிப்பு. ஜஸ்டின் ஐயா அவர்களின் ஆக்கம் மட்டும் மிக நீண்டதாகவும், கனதியாகவும் உள்ளதால் முழுமையாக வாசித்து விளங்காமல் பதிவிடக்கூடாது என்பதால் தவிர்த்து உள்ளேன். மிகுதி ஒவ்வொன்றாக பார்க்கின்றேன். சுவாரசியமானதும், சிந்தனையை தூண்டுபவையுமான ஆக்கங்கள். நன்றி எல்லோருக்கும்! 🙏 யாழ் முகப்பில் சுய ஆக்கங்களை இன்னும் காணவில்லையே ஏன்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.