Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  300
 • Joined

 • Last visited

Everything posted by நியாயத்தை கதைப்போம்

 1. சர்வஜன வாக்குரிமை மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிமுறையில் இன்னோர் மைக்கல். மன்னர் ஆட்சியில் வாழ்ந்து பழகிய மக்கள் மக்கள் ஆட்சியின் செளகரியங்களை பெற்றுக்கொள்ள கிடைத்த உன்னதமான ஒரு பொறிமுறை. ஆனால் நிறைவான ஒரு தீர்வு என சொல்வதற்கு இல்லை. ஒரு காலத்தில் இதைவிடவும் சிறப்பான ஒரு பொறிமுறை அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம்.
 2. வணக்கம் நாதமுனி, எழுத்தாணியை டெஸ்க்டொப்பில் நிறுவி நேரடியாக தமிழில் எழுதுவதாலும், இப்போது நேரமும் உள்ளதாலும் சற்று விரிவாக எழுத முடிகின்றது. வழமையாக அவ்வப்போது கைத்தொலைபேசி மூலம் வருவதாலும், மற்றும் இங்கு விவாதங்களில் ஈடுபட ஆர்வம் இல்லாதபடியாலும் அதிகம் எழுதுவதில்லை. வைரமுத்து பற்றி அவர் எழுத்தாற்றல் சம்மந்தமாக எனக்கும் சுய மதிப்பீடுகள் உள்ளன. ஆயினும் எமது விறுப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் வைரமுத்துவின் எழுத்துக்கள் தமிழ்கூறும் நல் உலகம் மீது செலுத்திய பாதிப்புக்களை எவரும் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது. பச்சையாக சொல்வதானால் வைரமுத்து தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறப்பதே
 3. கவிதையா அல்லது பாடலா அல்லது வெறும் வெற்று வரிகளா என மதிப்பீடு செய்வது அவரவர் சுய விறுப்பு, வெறுப்பு. ஆனால் சாதாரண தமிழ் பேசும் மக்கள் காதுகளிற்கு வைரமுத்து பேசும் மொழி மிகவும் பரீட்சயமானது. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு மட்டங்களில் தமிழில் தமது புலமையை வெளிப்படுத்தினார்கள். வைரமுத்து அவர்கள் சினிமா என்கின்ற ஊடக சாதனத்தில் உலகெங்கும் ஒலித்தார். கண்டம் விட்டு கண்டம் நாங்கள் விமானத்தில் பயணம் செய்தது தொடக்கம்... மிக நீண்ட புகைவண்டி, பேருந்து, கார் ஓட்ட பயணங்களில் வைரமுத்து பேசும் மொழியை கேட்டு ரசித்தபடி காலத்தை கடந்தோம். எத்தனைவிதமான கற்பனைகள்... எத்தனைவிதமான விபரணங்கள்.. ஆ
 4. சோசல் மீடியா வந்தபின் உலகம் நன்கு மாறிவிட்டது. தனிநபர்கள் ஆளையாள் பிளக் மெயில் செய்வதற்கும், பழிவாங்குவதற்கும் சோசல் மீடியா நல்ல வசதியாகிவிட்டது. ஒன்லைனில் விரோதங்களை வெளிப்படுத்துவது, பல்வேறு ஒன்லைன் மோசடிகள் நாளாந்த வாழ்வின் பகுதியாகிவிட்டன. சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது ஒரு வகை. திட்டமிட்டு சோசல்மீடியாவில் சாணி அடிப்பது இன்னோர் வகை. எமக்கு வைரமுத்து என்கின்ற பாடல் ஆசிரியர், கவிஞர் அவர் பாடல்கள், கவிதைகள் வாயிலாக பரீட்சயம். ஆனால், வைரமுத்து என்கின்ற தனிமனிதனின் குணாம்சங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடத்தை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. திருக்குறள் உலகப்பொதுமறை என
 5. இலங்கையில் நடைபெற்ற அவலங்கள், சம்பவங்கள் உலக அரசுகளிற்கு மிக நன்றாகவே தெரியும். இலங்கை அரசு உலக அரசியலில் நடுநிலமையையும், இராஜதந்திரமான போக்கினையும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலினையும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கடைப்பிடித்து வருகின்றது. பாலஸ்தீனியர்கள், மற்றும் வேறு சில இனத்தினர், அண்மையில் சுதந்திரம் பெற்ற புதிய உலக நாடுகள் இலங்கை தமிழர்கள் போன்று அதே ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் அவர்கள் ஏன் தமிழர்களுக்கு ஆதரவு தராமல் இலங்கை அரசுக்கு ஆதரவாய் நின்றார்கள், நிற்கின்றார்கள் என்பதற்கான ஒரு காரணம் இது.
 6. அரசியல்வாதிகளின் சுயநலம், ஆணவம், மனமுதிர்ச்சி அற்ற தன்மை, சிறுபிள்ளைத்தனம், பேராசை... இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், சோசல்மீடியா உலகில் இனி பழைய விளையாட்டுக்களையே தொடர்ந்தும் காட்டி மக்களை ஏமாற்றுவது கடினம்.
 7. கோத்தபாய, மகிந்தர் குடும்பம் ஆட்சியை கைப்பற்ற முன்னரும் இராணுவத்தில் தமிழர்கள் பணியாற்றினார்களே. இலங்கை நாட்டு இராணுவத்தின் பணியாற்றுவதற்கு தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நாட்டில் அனைத்து அரசு பணிகளிலும் பணியாற்றும் தமிழர்கள் இராணுவத்தில் இணையாமல் விலகிச்செல்வது இனவாதத்துக்கு இன்னும் வசதியாகிச்செல்லும். இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டும் போர் நிறைவடைந்தும் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இனி நடக்கப்போகின்றவை பற்றி பார்க்கலாமே.
 8. யாரானால் என்ன? தமிழோ, சிங்களமோ.. தனிச்சிங்களத்தில் ஆவணங்கள், சுற்றுநிறுபங்கள் எழுதப்படுகின்றன, அனுப்பப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைக்கும் இந்தக்காலத்தில் பாதுகாப்பு படையினர் தமிழில் உரையாடுகின்றார்கள் என்றாலே ஏதோ ஒரு மகிழ்ச்சிதான். முன்னாள் பெண் போராளிகள்கூட இந்த மோட்டார் சைக்கிள் படையில் பணியாற்றக்கூடும். யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா? கண்ணிவெடியகற்றும் ஆபத்தான பணியில் உழைப்புக்கு வேறு வழிகள் இல்லாதபடியால் முன்னாள் போராளிகளும் ஈடுபடுவதாக அறிந்தேன். எங்களைப்போல் இவர்களுக்கும் வெளிநாட்டு வாழ்க்கை யோகம் அடிக்கும் பட்சத்தில்.. (சுய தணிக்கை*)
 9. அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன். இலங்கை சீனாவின் பொறியினுள் படிபபடியாக செல்வது கண்டு முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா ஆவேசம் அடைந்துள்ளாராம். காலம் எப்போதும் ஒரே மாதிரி அமைவது இல்லை. இன்னும் 50 வருடங்களில் மகிந்த சகோதரர்கள், குடும்பம் பெரும்பான்மை சிங்களவர்களினால் தேசத்துரோகிகளாக சித்திரிக்கப்படலாம். மிக வேகமாக மாற்றம் காணும் சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப உலகில் மக்களின் சங்கிலி கோர்வையாக பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் எவரும் தூக்கி எறியப்படலாம். தனிநபர்கள் நாட்டை கட்டுப்பாட்டில் வைப்பது முடியாமல் போகும். சீனாவிற்கு மற்றைய நாடுகளின் இறையாண்மையை மதிக்கும், பாதுகாக
 10. இலங்கை மக்களின் பூரண சம்மதம் தேவை. இலங்கை ஒரு சில அரசியல்வாதிகளின் குடும்ப சொத்து இல்லை. சீனா விடயத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.
 11. கொரானாவும் வந்தது; கலியாண புரோக்கர் தொழில், வெளிநாட்டு சம்மந்தம், மாப்பிள்ளை பொம்பிளை தேடல், மணமகன், மணமகள் கண்டுபிடிப்பு, கலியாணம், போக்குவரத்து எல்லாம் பாழ்; இரண்டு வருடங்கள் இழப்பு.
 12. ஒருவரும் ஒருவரையும் மதிக்க எல்லாம் தேவை இல்லை; கருத்துக்கள விதிமுறைகளை அனுசரித்தாலே போதும் முடி கொட்டாது. நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினரே, எமது சக கருத்தாளர் குமாரசாமி அவர்கட்கு தலையில் முடி வளர வைக்க (அதாவது...டிரான்ஸ்பிளாண்ட் செய்துவிட) முடியுமா? திண்ணை உரையாடலுக்கு மீண்டும் அனுமதி கொடுக்க இயலுமா?
 13. அம்மணி சமந்தா என்ன சொல்கின்றார்? இது வற்சப்பில் வந்தது: 1178 signatures are still needed, can you add your signature? http://chng.it/JP9ykPxN
 14. இலங்கை மீள முடியாத கடன் சுமையில். ஆடம்பரம் சொகுசு எல்லாம் உண்மையில் தேசப்பற்று உள்ளவர்களுக்கு இப்போது தேவைதானா? ஒரு குட்டி நாட்டுக்குள் போக்குவரத்து செய்வதற்கு தேசப்பற்று உள்ள அரச பணியாளர்களுக்கு பழைய வாகனங்களை/மாற்றீடுகளை பயன்படுத்த முடியாதா? பிராண்ட் நியூவில் குந்தினால்தான் அலுவல் நடக்குமா? ஒவ்வொருவரும் அரசாட்சிக்கு வரும்போது தாய்நாட்டை தங்கள் சொகுசுக்கு சீரழித்து விட்டு செல்லட்டும்; நாடு நல்லாய் உருப்படும்!
 15. பெரிய கட்டணம் இல்லை என்றால் இன்னும் ஒரு வருடம் கூகிளில் ஓட்டலாம். கூகிள் பாதுகாப்பானதும், வசதியானதும் ஏற்கனவே பரீட்சயம் என்றால்..
 16. அப்பா, அப்பம்மா, அப்பப்பாவின் ஆறுதல், ஆதரவு ஒன்றும் கிடைக்கவில்லை? அண்ணாவால் எதிர்கொள்ளக்கூடிய விடயங்களை தம்பியால் எதிர்கொள்ளமுடியவில்லை.
 17. ஐயோ வடை போச்சே. ஹிந்தி பொறிக்கப்படவேண்டிய இடத்தில் சீனமொழி உட்கார்ந்து உள்ளது. இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்ன அயோக்கியத்தனம் செய்யலாம் என்று இப்போது தலையை சொரிகின்றது.
 18. வேற என்ன பெயர் சூட்டுவது? மோடியின் திரிபு என்று அழைக்கலாமா? சாதாரண மக்களின் உரையாடலில் ஏபிசிடி பெயர்கள் எடுபடாது.
 19. புஷ்பலதா மதனலிங்கம் அவர்கட்டு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்; உங்கள் சேவை தொடரட்டும்!
 20. முழு இலங்கையையே சத்தம் இல்லாமல் சீனா மலைப்பாம்பு மெது மெதுவாக விழுங்குகின்றது. மகிந்த குடும்பஅரசு தமது பரம்பரை, தம் சான்றோர் மட்டும் தப்பினால் போதும் என்று நினைத்து வியூகம் அமைத்து செயற்படுகின்றது. இவர் வேற..
 21. புற்று நோயை ஏற்படுத்தும் அது என்ன இரசாயனம் தேங்காய் எண்ணெயில் உள்ளது? எந்த பிராண்ட்/தயாரிப்புகள் என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதா? தென்னை வளம் உள்ள நாட்டில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி நல்ல விடயம்.
 22. இது எப்போது நடைபெற்ற சம்பவம்? கண்டிக்கப்பட வேண்டிய இழி செயல் இது. சட்டவிரோதமாக ஏதும் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். அக வணக்கம் செய்வதை, ஈகை சுடர் ஏற்றுவதை தடுப்பது வெறித்தனம்.
 23. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள், பணியாற்றும் ஊழியர்கள் (விரிவுரையாளர்கள் உட்பட..) சதவீதம் வெகுவாக குறைதுவிட்டது என அறிந்தேன்.
 24. மக்களின் பட்டினி இப்போதும் தொடரவே செய்கின்றது. இயல்பு வாழ்க்கை முடக்கம் அடைந்துள்ள தற்போதைய நிலையில் குடும்பங்கள் சீவிப்பது பெரும் திண்டாட்டம் கண்டுள்ளது. பிள்ளைகளுக்கு ஒரு வேளையாவது போசாக்கு நிறைந்த உணவு வழங்குவதே பெற்றோருக்கு நாளாந்தம் போராட்டம் ஆகியுள்ளது. உடல் உபாதைகள் உள்ளவர்கள் நிலைமை இன்னும் மோசம். பலருக்கு தொழிலும் இல்லை, வரும்படியும் இல்லை. யாரிடமாவது கையேந்த வேண்டிய நிலை. வெளிநாடுகளில் உள்ள உறவுகள் அங்கு இடரில் தவிக்கும் உறவுகளுக்கு இந்த அவலகாலத்தில் ஒருவேளை வயிறு நிறைய உண்பதற்கு உதவி புரிந்தால் பெரும் புண்ணியமாய் போகும். இது எங்கள் கடமையும் கூட.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.