Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  171
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. இலவச கல்வியை உதாசீனம் செய்து மற்றைய மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு விளைவிப்பவர்களுக்கு துணைவேந்தர் தனது கையால் அவர்கள் செவிட்டை பொத்தி இரண்டு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.

 2. கட்டுரையாளர் சமகால சமூகவெளியை முழுமையாக இன்னும் மேயவில்லை போல் தெரிகின்றது.

  பெண்கள் செய்யும் அட்டகாசத்தில் எத்தனை ஆண்கள் தற்கொலை செய்கின்றார்கள், மன உளைச்சலில் தவிக்கின்றார்கள், வாழ்க்க்கையை தொலைத்துவிட்டு மெண்டலாக சுத்தி திரிகின்றார்கள் என்று சோசல் மீடியாவுக்கு சற்று வெளியில் வந்து எட்டிப்பார்த்தால் தெரியும்.

 3. இலவச கல்வி என்பதால் மாணவர்களுக்கு சிலவற்றின் பெறுமதி உணரமுடியாது போகலாம். பகிடிவதை செய்யும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு செலவளிக்கும் காசை பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போன waiting list மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு செலவளிக்கலாம்.

  • Like 1
 4. மித வாத கொள்கையை பின்பற்றும் சுமந்திரன் அவர்கள் புதிய கட்சி ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்கலாம். மற்றும்படி அவர் சேவைகள் அங்குள்ள மக்களுக்கு தேவை.

 5. மிகவும் துயரமான செய்தி. எம்மை அதிகம் சிரிக்கவைப்பவர். அது இது எது தொடரில் சிரிச்சா போச்சு பகுதி இவருக்காகவே பார்க்கலாம். மிக சிறந்த நகைச்சுவை கலைஞர். ஆழ்ந்த அனுதாபங்கள்!

 6. இவருக்கு வாக்கு அளித்து வெற்றியீட்ட வைத்த இரத்தினபுரி பிரதேசத்து மக்கள் இவரைவிட வேறு ஒரு யோக்கியனை இனம்காணவில்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றால் ஒரு சாதனைதான்.

 7. மரண தண்டனை கைதி தேர்தலில் போட்டியிடலாம் என்றால் பிறகு ஏன் பாராளுமன்றம் செல்லமுடியாது என்று தடை தேவை?

  குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று எதுவித விதிமுறைகளும் தேவை இல்லை போல 🤔

 8. நல்ல விடயம். இந்தியா வீடு கட்டி கொடுக்கின்றது என்று காலத்துக்கு காலம் சொல்லி ஆசை காட்டினார்கள்.

  வெளிநாட்டு உதவி இல்லாமல் அல்லது நல்ல வரும்படி இல்லாமல் சாதாரண நிலை குடும்பங்கள் வீடு கட்டுவது பெரும்பாடு. அனைத்தையும் அடகு வைத்தும், கடன்வாங்கியும் வீடு கட்ட தொடங்கி கடைசியில் வட்டியும் கட்டமுடியாமல் நாளாந்த வாழ்க்கையையும் ஓட்ட முடியாமல் அல்லலுறும் குடும்பங்கள் பல.

  அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட பெரிய திட்டங்களை அரசு பாகுபாடின்றி செயல்படுத்துமா பார்ப்போம்.

 9. எமது இழப்புக்குரிய உறவின் விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து அதன் பிரகாரம் நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் நிறுத்தி இறுதி நிகழ்வை செய்வது சிறப்பானது.

  முன்கூட்டிய விருப்பம் அறிதல் சாத்தியம் இல்லை என்றால் மிகவும் நெருங்கிய உறவு அல்லது உறவுகளின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுத்து (எதிர்காலத்தில் சட்டசிக்கல்களும் வராத வகையில்) இறுதி நிகழ்வை செய்யலாம்.

  சாத்திரம், சம்பிரதாயம், இதர ஒழுங்குகள் எல்லாம் இதன் பின்னால் வரட்டும். மற்றும்படி எப்படி செய்யலாம் என்று கேட்டால் ஆளாளுக்கு தங்கள் நம்பிக்கைகள், சுய விருப்பங்கள், தேவைகள், திருப்தியின் அடிப்படையில் ஆயிரத்து எட்டு வழிவகைகள் கூறுவார்கள். 

 10. On 3/9/2020 at 14:45, கிருபன் said:

  ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்

  ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்
   

  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

  தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

  அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும் சற்குணநாதன், குறிப்பிட்ட காட்சிப்படுத்தல் ஆபாசமானதாகவும், பெண் வெறுப்பு சார்ந்ததாகவும், அதனால் தமது உரிமைகளை மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

   IBC தமிழின் செயற்பாடுகள் ஊடக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5,000,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுன்ட்டுகளையும், மன்னிப்பினையும் சற்குணநாதன் அவர்கள் கோரியுள்ளார். ‘
   

  http://www.samakalam.com/செய்திகள்/ஐபிசிக்கு-எதிராக-அம்பிக/

  நல்ல விடயம். எங்கோ உள்ள கமலா ஹரிஸ் அக்கா என்று சொந்தம் கொண்டாடி அருகில் உள்ள எமது உறவை கேவலப்படுத்தும் ஊடக வியாபாரிகள் திருந்துவார்களா?

  • Thanks 1
 11. எல்லாருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் வரை அனுப்பப்பட்டவர் என்றவகையில் விரைவில் விடுதலையாவார்?

 12. இரவு பதினோரு மணிக்கு கட்டட வேலையில் ஈடுபடலாமா? உள்ளூர் ஆள் கிடைக்கவில்லை போல வேலைக்கு.

 13. 17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.!

  1599104536_br%20(1)%20-%20Copy%20copy.jp

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.

  இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்) வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  வடமராட்சி காரியாலய திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

  http://aruvi.com/article/tam/2020/09/03/16264/

  மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. இப்போதே நான்கு பக்கமும் கமெராவும் பூட்டிவிட்டால் நல்லது. 

 14. நேற்று சிலை விழுத்தப்படும் காணொலி பார்த்தேன். ரவுடீசம் மூலம் எதை சாதிக்கப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

 15. கலைத்துறை கற்கும் க.பொ.த உயர்தரம் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகம் செல்ல முடியாவிட்டால் தொடர்ந்து எவ்விதமான பயிற்சி நெறிகளை தொடரலாம்? அரசாங்க வேலைவாய்ப்பை இவர்கள் பெறுவதற்கு ஏதும் வழிமுறைகள் உள்ளனவா? யாருக்கும் தெரிந்தால் உங்கள் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது பல்கலைக்கழக பட்டம் இல்லாமல் அரசாங்க வேலைகளில் நியமனம் பெறுவது சாத்தியம் இல்லை என்று கேள்விப்பட்டேன். 

 16. வேஷ்டி உருவப்பட்டது எனும் தலைப்பிலான பரபரப்பு செய்தியை வாசித்து நொந்துபோன மனதுக்கு பிரஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் கற்கைநெறி காயத்துக்கு மருந்து தடவிவிடுவது போல் உள்ளது.

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.