Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1350
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. தெண்டூல்கர் மகனும் முன்பு விளையாடுவதாய் செய்தி போனது. இப்போது ஓய்வு பெற்றுவிட்டாரா? அரசியலைப்போல் விளையாட்டிலும் சந்ததி சாம்ராச்சியம் தொடருமோ?

  2. 1 hour ago, குமாரசாமி said:

    குளிருக்கு ஏற்றவாறு எமது பொன்னுடல் இசைவாக்கம் பெற்று விட்டது.இனி நுளம்பு குத்தினாலும் பூவுடல் தாங்காது. :cool:

    கவனம் இல்லாமல் வெளியில் நின்றால் நுளம்பு உடம்பில் டிசைன் போட்டுவிடும்.  பிறகு கடிபட்ட இடத்தை சொறிவது ஒரு தனி சுகம். 

    இப்போது நல்ல நுளம்புவலைகள் உள்ளன. நிம்மதியாக தூங்கலாம். பயம் வேண்டாம். 

    • Haha 2
  3. 4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

    நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது.. 

    நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும். 

    • Like 4
    • Haha 2
  4. 8 hours ago, விசுகு said:

     

    நீங்கள்  இங்கே  இதை  எழுதுவது  சிலரை வருத்தப்பட  வைக்கக்கூடும்?

    ஆனால் இங்கே இதனை  எழுதுவது சாலச்சிறந்தது

    ஏனெனில் ஒருவரின்  வாழ்க்கை அல்லது பயணம்

    எமக்கு பாடம்.

    இவ்வாறு  தான் போன  வருடம்  57 வயதில்  என்  தம்பியை பறி  கொடுத்தேன்

    எந்த  வருத்தமும்  இல்லாதபோதும் (வைத்தியரைப்பார்த்து  பலவருடங்கள்)

    நித்திரை இல்லை

    ஓயாத  உழைப்பு

    எப்பொழுதும்  நிறைவெறி 

    இதுவே மயில்சாமியையும் கொண்டு போயிருக்கிறது

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    சமூகமாக ஆரோக்கியமற்ற வாழ்வை வாழ்கின்றோம். இருக்கும்வரை அனுபவிப்போம்.  

  5. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 ஏதாவது நகைச்சுவை செய்தி எழுதி இணைப்பார். பல நகைச்சுவை பதிவுகளை பகிர்ந்து உள்ளார். 

    யாழ் அரிச்சுவடியில் பலரை வரவேற்று உள்ளார். யாழ் கருத்துக்களத்தில் அதிக நேரம் செலவளித்து உள்ளார். 

    ஆரோக்கியமாக, சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் தமிழ்சிறி!

    • Like 1
    • Thanks 1
  6. 7 hours ago, Nathamuni said:

    இந்த விமானங்களை லீசுக்கு கொடுத்த கொம்பனி, காசு வராததால், ஒப்பந்தப்படி இவை ஒரு வெளிநாட்டு  விமானநிலையத்தில் இறங்கினால், அப்படியே சீஸ் பண்ணி விடும் என்று தான், பறக்காமல் நிறுத்தி வைத்துக்கொண்டு, பழுது என்று கதை விடுகிறார்கள்.

    இப்போது பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் வேறு நிறுவனத்தில் லீஸ் எடுத்தது. பறக்கும் வருமானத்தில், லீசுக்கு உரிய காசை கொடுத்து, பறக்கிறார்கள்.

    எத்தனை நாளுக்கு? 🤦‍♂️

     

    உங்கள் இந்த கருத்தை உறுதிப்படுத்தம் செய்தி/கட்டுரை இணைப்புக்களை வழங்குங்கள் நானும் வாசித்து அறிவை பெருக்க விரும்புகின்றேன். 

    • Like 1
    • Haha 1
  7. முறிக்கிற அளவுக்கு எல்லாம் ஏன் நீங்கள் அதை அவ்வளவு அகோரமாக பாவிக்கின்றீர்கள்?

    இந்த ஆணுறுப்பு முறிவுக்கு ஈடான ஆங்கில பதம் என்ன என்று யாராவது கூறுங்கள் பார்க்கலாம். 

  8. கதையில் கூறப்படும் கொழும்பு நண்பருக்கு குடிபழக்கம் காணப்படக்கூடும்? 

    போதைப்பொருள் பயன்பாடு, அதிக குடி பிதற்றலுக்கு காரணம் ஆகலாம். 

     

  9. தமிழ் புத்தகத்தில் இந்த பழமொழி படித்தது போன்ற நினைவு எனக்கு. இது மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழியும் ஆகும். 

    இந்த பழமொழி அநாகரியமானதா? எப்போது தொடக்கம்??

    • Like 1
  10. 5 hours ago, கிருபன் said:

    இந்தத் திரியில் வந்த செய்திகளையும், கருத்துக்களையும் பார்த்துக் குழம்பி எதுக்கும்  ChatGPT இடம் கேட்போம் என்று கேட்டேன். பதில் இப்படி இருந்தது!

    large.2D82888A-B017-483D-8C73-E62D0706416D.jpeg.1b22b10ae2ce985a6d9d9eeaa1d1e106.jpeg

    ChatGPT பற்றி யாழ் கருத்துக்களத்தின் நிலைப்பாடு என்ன?

    CharGPT ஐ பயன்படுத்தி ஆக்கத்தை உருவாக்கிவிட்டு அதில் சிறிய மாற்றத்தை செய்து இங்கு இணைத்தால் கண்டிபிடிக்க முடியாது அல்லது கடினம். 

    நாம் தொடர்பாடல் செய்யும் முறையில் பாரிய மாற்றங்கள் காத்து உள்ளன. 

  11. 3 hours ago, ஏராளன் said:

    இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை குழாத்தில் இணைவதற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது வாழ்ந்துவரும் தர்ஜினி சிவலிங்கம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளன ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

    தர்ஜினி சிவலிங்கம் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவருவதன்மூலம் அவரது ஆற்றல்களை வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவரது வருகை அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் எனவும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாச தெரிவித்தார்.

     

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தர்சினி சிவலிங்கம்! 

  12. 46 minutes ago, nedukkalapoovan said:

     

    ஒரு பிரபாகரன் போனால்.. ஆயிரம் பிரபாகரன்கள் உருவாவார்கள் என்று முழங்கின இனத்தில் இருந்து இன்று வரை இன்னொரு பிரபாகரனை அடையாளம் காணவே முடியவில்லை..

     

     

    நீங்கள் யாழ் கருத்துக்களத்தை இன்னும் முழுமையாக பார்க்க தொடங்கவில்லை போல. 

    அதுசரி, பிரபாகரன் ஏன் பழ. நெடுமாறனுடன் மட்டும் தொடர்பில் உள்ளார்?

  13. On 5/2/2023 at 16:56, தமிழ் சிறி said:

    ஈழப்பிரியன்… அந்தப் பெடியனும், பெட்டையும் அங்கை ஸ்கூட்டர் 🛵 எல்லாம் வாடகைக்கு எடுத்து ஒடி இருக்கினம். இவ்வளவிற்கும் அதற்குரிய லைசன்ஸ் இல்லை. ஸ்கூட்டர் வாடகைக்கு கொடுப்பவர்…. வெள்ளைக்காரரை பொலிஸ் சோதிக்க மாட்டுது என்று சொல்லித்தானாம் கொடுத்தவர். 😂

    ஆனால் ஒரு நாள் இரண்டு பேரையும் பொலிஸ் மறிக்க, இவையளுக்கு பயங்கர உதறல் எடுத்திருக்கு. இங்கத்தை பொலிஸ் மாதிரி கடுமையான தண்டனை கிடைக்கப் போகுது என்று பயந்து கொண்டிருக்க… பொலிஸ்காரன்  சும்மா கதைத்து விட்டு அனுப்பி விட்டானாம். 😁

    பொலிஸ்காரனுக்கு… வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசையாக இருந்திருக்குமாம்‼️, அதுதான் தங்களை மறித்து கதைத்தவனாம் என்று பெடியன் சொல்லுறான். 🤣

     

    பொலிஸ்காரனுக்கு வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசை என்பது உண்மைதான். வாகனத்தை மறித்துவிட்டு தாங்கள் வெளிநாடு வருவது எப்படி என ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. தவிர கைவிசேடம் கேட்பவர்களும் உண்டு. 

    • Haha 1
  14. On 11/2/2023 at 02:54, தமிழ் சிறி said:

    கட்டாக்காலி  நாயினால், ஒரு உயிர் பறி போய் விட்டது. 
    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    யாழ். மாரகரசபை இனி, கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் வேகத்தை 
    இரு மடங்காக்க வேண்டும்.

     

    கடைசியாக எப்போது இலங்கை சென்று வந்தீர்கள்? 

    நாய் என்ன ஆடு மாடு எல்லாம் A9 வீதியிலேயே குடும்பம் நடத்துகின்றது. வீதியை பயன்படுத்துபவர்கள் தான் அவதானத்துடன் செல்லவேண்டும். 

  15. யாருக்கு எண் கணித சாத்திரத்தில் நம்பிக்கை  உண்டு? மேலைநாடுகளில் 13தவிர்க்கப்படும் ஒரு எண். சில வேளைகளில் 13ல் கூறப்படும் மேற்கண்ட சட்ட சரத்துக்கள் வேறோர் இலக்கத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டால் ஏதும் விமோசனம் கிடைக்குமோ? 13என எழுதாமல் மேற்கண்ட செய்தியை வேறு எப்படி தலைப்பிட முடியும்?

    சும்மா ஒரு மாற்று யோசனை தான் யாழ் கருத்துக்களத்தின் விஞ்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் கோபிக்க வேண்டாம் 😝

  16. காணொளி என்று முன்பு எழுதினேன். காணொளி தவறு காணொலி சரி என கூறப்பட்டது. காணொலி எனக்கு சரியாக தென்படுகின்றது. ஒளி + ஒலி = காணொலி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.