Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. தகவல் தேடலில் பார்த்தால் இந்திய விமானப்படை இந்த ரக விமானங்கள் பலவற்றை விபத்தில் இழந்துள்ளது. இலங்கை ஒன்றை இரத்மலானை விபத்திலும், மற்றொன்றை புலிகள் அமைப்பு சுட்டு வீழ்த்தியதாலும் இழந்துள்ளது. இலங்கை, இந்தியா தவிர பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் சில இந்த ரக விமானத்தை பயன்படுத்துகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்களை வைத்து விபத்துக்கான காரணத்தை கண்டறிவார்களோ.
  2. அது எல்லாம் நடக்குமோ தெரியாது. ஆனால் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் சேர்ந்து றோ விரித்துள்ள குடையின் கீழ் செயற்படலாம்.
  3. நான் இந்த அம்மாவின் ரசிகன். மிகவும் மோசமாக விளையாடுகின்றார். இப்போது 34 வயது. வயது ஒரு காரணமோ தெரியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இந்திய தேசிய அணியில் இவரால் நின்று பிடிக்கமுடியும், அத்துடன் எவ்வளவு காலம் சர்வதேச போட்டிகள் விளையாடமுடியும் என தெரியவில்லை. விரைவில் அணியின் கப்டன் பதவியை/அங்கத்துவத்தை இழப்பாரோ பார்ப்போம். ஐ பில் எல் விளையாடலாம். இவருக்கு என்றும் அதில் மவுசு காணப்படும். விளையாட்டு துறையில் பிரகாசிக்கும் ஆண்கள் பொதுவாழ்வை வாழ்வதுபோல் பெண்கள் வாழ முடியாது. அது சவால்கள் நிறைந்தது. திருமணம், குடும்பம், குழந்தை என வந்தால் அல்லது அந்த அந்த வயதுக்குரிய சமூக அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும்போது தமது திறமையை வெளிப்படுத்த முடியாது போகலாம். இவருக்கு என்ன பிரச்சனையோ!
  4. அடேயப்பா மனுசன் ஒருத்தனுக்கு உள்ள ஆயிரம் விசயங்களில் இதைத்தான் குறிப்பிட்டு சொல்வீர்களோ? மிக இளம் வயதில் பிரதமர் ஆகியுள்ளார். இவரது திறமைகளை, ஆற்றல்களை கூறலாமே.
  5. சாமி, மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை என்றால் நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்ட திருட்டு கூட்டத்தை அடக்கலாம். இதைவிடுத்து இவ்வளவு கடல் மைல் தூரங்களுக்கு படையை அனுப்ப தேவை இல்லை.
  6. கடற்படையினருக்கு தேவையான எரிபொருள், உணவு, ஆயுத வழங்கல், இதர தேவைகள் எல்லாம் யாரோ கொடுக்கப்போகின்றார்கள். இங்கே நங்கூரமிட்டுள்ள கப்பலையும், வெட்டியாக உள்ள கடற்படையினரையும் அங்கு அனுப்புகின்றார்கள் போல. அரசுக்கு பொருட்செலவு ஏற்படுமா என்று தெரியவில்லை. ஆனால், தேவையில்லாத எதிரிகளை உருவாக்குகின்றார்கள். ஐநா படைகளில் பங்குபற்றியது போல இது எடுக்கப்படமுடியாது என நினைக்கின்றேன்.
  7. இது என்ன ஐயா கனேடிய அரசாங்கத்தின் அணுகுமுறை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளதே. அகதி கோரிக்கை கிடைத்தபின் விடுதலை புலிகள் ஆதரவாளராக கனடாவில் வாழலாம். ஆனால் அகதி கோரிக்கைக்கு விண்ணப்பிக்கும்போது ஆதரவாளர் என்று சொன்னால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்? சீக்கியர்கள் விவசாயம்/தொழில் செய்வதற்காக மிக நீண்ட காலம் முன்பே கனடாவுக்கு கொண்டுவரப்பட்டார்களாம். சீக்கியர்களுக்கு நிகராக உரிமை கேட்பதற்கு நீங்கள் இன்னும் ஒரு நூறு வருடங்கள் கனடாவின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் தலை.
  8. நான் இந்த சம்பவம் பற்றிய காணொளி பார்த்தேன். இங்கு தமிழ்வின்னில் குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற முக்கியவிடயம் குறிப்பிடப்படவில்லை. அவர் திடீர் என நீதிபதி மீது பாயும் அளவுக்கு நீதிபதி என்ன சொன்னார் என அறியுங்கள் காரணம் புரியும். இந்த நீதிபதி ஒரு பக்குவப்பட்ட பொறுப்பான நீதிபதி போல் தோன்றவில்லை. அவரது நக்கல் கதை குற்றவாளிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீதிபதிகளின் நிகழ்ச்சிகள் பார்க்கின்றோம். அவை நாடகம் போன்றவை. இங்கே நீதிபதி தனது வார்த்தைகளில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும். எல்லாரும் ஒரு பொறுப்புக்கு வந்தபின்னர் அதிகாரம் கிடைத்தபின் சக மனிதனை எப்படியும் நடத்தலாம் என நினைக்கின்றனர். ஆணவம் தலைக்கேறுகின்றது. தீர்ப்பு கூறும்போது இனிமேல் இந்த நீதிபதி நையாண்டி நக்கல் கதை கதைக்கும்போது (கதைத்தால்) இந்த பாயும் மனிதன் (பாய்ந்து தாக்கியவர்) நினைவில் வருவார்.
  9. காணொளி பார்க்கவில்லை. இது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏதாவது புதிய நடைமுறையா அல்லது ஏற்கனவே உள்ள விடயமா? பிரான்சில் விடுதலை புலிகள் முன்னாள் போராளிகளுக்கு அகதி உரிமை இலகுவாக எடுக்கலாம் என்று கேள்விப்பட்டேன் (ஊரில் உலவும் கதை) உண்மையா?
  10. பிரபல கிரிக்கெட் வீரர் சாகிப் அல் கசன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிள்ளார். இவர் வாக்களிப்புக்கு முன்னர் தனது ரசிகர் ஒருவருக்கு அடித்துபோட்டாராம் என்று ஒரு செய்தி/காணொளி பரபரப்பாக ஓடி திரிகின்றது. கிரிக்கெட் துறையில் பிரகாசித்தது போல் அரசியலிலும் உலக அளவில் பிரகாசிப்பாரோ சாகிப்?
  11. இப்போது காணொளி தோன்றுகின்றது. நன்றி! யூரியூப்பில் இணைப்பு முகவரி எடுக்கும்போது முன்பு நகல் செய்தேன். இப்போது வட்சப் பகிர்வு இணைப்பை சொடுக்கி அதை இங்கு இணைக்கும் போது காணொளி தோன்றுகின்றது. முதலாவது முறையில் முகவரி சுருக்கப்பட்டு உள்ளதோ தெரியாது.
  12. இந்த விளையாட்டு போட்டி எப்படி உள்ளது? எங்கள் ஊர் நாய்களுக்கும் பயிற்சி கொடுக்கலாமா?
  13. அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் எனவும், அதற்கு முன்பும் தற்கொலை முயற்சி செய்யவில்லை அவர் தாக்கப்பட்டார் எனவும் தாம் சந்தேகிப்பதாக அவரது ஒரேயொரு சகோதரர் கூறுகின்ற உரையாடல் கேட்டேன். எது உண்மை எது பொய் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
  14. எனக்கு வைகைப்புயல், கப்டன் இருவரிடையேயான முன்னைய பிரச்சனை சரியாக நினைவில் இப்போது இல்லை. நான் நினைக்கின்றேன் கப்டன் வைகைபுயலுக்கு மிரட்டல் கொடுத்ததன் தொடர்ச்சியாகவே அவர் குழம்பினார் என. வீட்டுக்கு/வீட்டில்/வீடு தாக்கபடும் என்று மிரட்டல் செய்யப்பட்டதாக வாசித்து நினைவு. கப்டனும் கொஞ்சம் முன் கோபக்காரர் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது. ஆட்களுக்கு முன்னேலேயே அவரது தொண்டர்களை அவர் அடிக்கும் காணொளிகள் முன்பு பகிரப்பட்டது.
  15. அதைத்தான் ஐயா நானும் செய்கின்றேன். நீங்கள் இணைத்தால் காணொளி தோன்றுகின்றது. நான் இணைத்தால் வெறும் இணைப்பு மட்டுமே காண்பிக்கின்றது. உங்கள் கை ராசியான கைபோல. அல்லது இணைப்பை கொடுக்கும்போது ஏதாவது மந்திரிக்க வேண்டுமோ? அல்லது நான் கைத்தொலைபேசி ஊடாக கருத்து பதிவதால் காணொளி ஒளிந்து மறைகின்றதோ?
  16. நான் தற்செயலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வடிவேலு ஐயா பாடிய ஓர் பாடல் கேட்டேன். பாடல் சக்கை போடுபோடுகின்றது. தொலைக்காட்சியை பார்த்தால் அவரது புகழ்/பெருமை மங்கியமாதிரி தெரியவில்லை. யூரியூப், இதர சமூக ஊடகங்களில் சிலர் எழுதும் பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு நாம் என்னதான் ஊகிக்கலாம்?
  17. யூரியூப் காணொளிகளை இங்கு நேரடியாக இணைக்க முடியுமா? இணைக்கலாம் என்றால் அந்த மந்திர வித்தையை யாராவது சொல்லி தாருங்கள்.
  18. எனக்கு நியூசிலாந்து பற்றி விரிவாக தெரியாதபடியால் உங்கள் வினாவுக்குரிய பதில் தெரியவில்லை. சில தடவைகள் அங்கு சென்றுள்ளேன். பல விடயங்களை நேரில் பார்க்க அதிசயமாகத்தான் தோன்றின. எனக்கு முன்பு தெரிந்த நியூசிலாந்து பற்றிய விபரங்கள் அதன் தேசிய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த காணொளியையும் ஒருக்கால் பாருங்கள். எனக்கு நியூசிலாந்து பெண்ணின் காணொளி பார்த்தபோது இந்தப்பெண் நினைவில் வந்தார். ஒரு காலத்தில் எல்லார் தலையிலும் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் பின்னர் தூக்கி எறியப்பட்டார் (தற்போதைய பேச்சு வழக்கில் கழுவி கழுவி ஊத்தினார்கள்). https://youtu.be/K9yqU37MhT4?si=1u6izceSgWKVMWn0
  19. ஆமாம், மிகவும் உணர்ச்சிகரமாகத்தான் உள்ளது. பேசும் மொழி புரியாவிட்டாலும் அவரது உணர்ச்சிகள் மயிர் கூச்செரியச்செய்கின்றது.
  20. பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ? இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது. நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?
  21. ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த செய்தி முன்பு தமிழ்வின் தளத்தில் வந்தது. கூகிழ் தேடலில் சாவு அறிவித்தல் கண்டேன். https://www.tamilthakaval.org/obituaries/ragavi-varatharajan/
  22. கேலிச்சித்திரத்திற்கு நன்றி கலைஞர் கவி அருணாசலம். தந்தையார் சுட்டு கொல்லப்பட்ட சமயம் நானும் கொழும்பில் தான் வசித்தேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.