Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  414
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்த ஒருவருக்கு 56வயதில் மாரடைப்பால் இறப்பு ஏற்படுகின்றது என்றால் அது எந்த பிராண்ட் என்று அறியத்தானே வேணும். இதயத்துக்கு நல்லது என்று சொல்லித்தானே நல்லெண்ணை விற்கின்றார்கள். இது ஒரு முரண்நகையாக தென்படவில்லையா? 🤔

  • Like 2
 2. நினைவு வரவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  நல்லெண்ணை விளம்பரத்துக்கு நடித்தவர் 56 வயதில் மாரடைப்பில் மரணமா? எந்த பிராண்ட் என்று சொன்னால் அந்த பிராண்ட் நல்லெண்னைய் வாங்குவதை நிப்பாட்டலாம்.

  இவர் நடித்த காட்சிகள், வீடியோ இணையுங்கள் பார்ப்போம்.

  • Haha 1
 3. விலை நிர்ணயம் ஒரு புறம் கிடக்கட்டும். பாண், பிளேன் ரீ, பருப்பு கறி எல்லாம் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு, கலப்படம் ஒன்றும் இல்லாமல், பயம் இல்லாமல் வயிற்றுக்குள் இறக்கக்கூடியனதானே?

 4. கப்ருகா இணையதளம் இலங்கையில் இணையத்தளமூடு பொருட்கள் வாணிபம் செய்வதில் முன்னோடி. இது ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வரும் என நினைக்கின்றேன். நான் ஆரம்ப காலம் தொட்டு வாடிக்கையாளன். ஆனால் இப்போது பல வருடங்களாக பயன்படுத்துவது இல்லை. காரணம் விலை நியாயவிலையை விட மிக அதிகம். இதைவிட உறவுகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்பி தேவையானதை வாங்குவிக்கலாம். ஆனால், அவசர தேவைகளுக்கு நம்பிக்கையான சேவை. இப்போது பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. கொரனா பேரிடர் காலத்தில் பொருட்களை மிக அதிக அளவில் விற்றதாக முறைப்பாடுகள் சொல்லப்பட்டு இவை சம்மந்தமான வீடியோக்களும் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் வந்தன.

  https://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery002049

 5. 2 hours ago, Nathamuni said:

  யாரு, அந்த கழுத்து வெட்டு கோஸ்டியா?

  புதல்வி இதயத்தை கொள்ளை அடிக்கும் கோஸ்டி போல் உள்ளது. 🧡🧡

  1 hour ago, goshan_che said:

  நண்பர்களின் பிள்ளைகளை விளம்பரபடுத்துவது வழமைதானே.

  யாழ் இணையத்துக்கான விளம்பர கட்டணத்தை நாதமுனியிடம் வசூல் செய்யுங்கள். 😆😆

  • Like 1
  • Haha 1
 6. On 15/8/2021 at 15:15, பாலபத்ர ஓணாண்டி said:

  யாயினி 25 ரூபாய் எல்லாம் இலங்கையில் ஒரு காசே இல்ல இப்ப.. ஒண்டும் வாங்கேலா.. ஆபிரிக்க நாடுகள் போல பானுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொண்டுபோகும் நிலை வெகுவிரைவில் வரும்போல இருக்கு..

  இருபத்து ஐந்து ரூபா ஒரு காசு இல்லை சரி, ஆனால் அந்த இருபத்து ஐந்து ரூபா எல்லாருக்கும் செலவளிக்கக்கூடிய மாதிரி கிடைக்கின்றதா? கைவசம் உள்ளதா?

 7. 14 hours ago, கிருபன் said:

  0F02FCC3-1572-40E9-A082-E105667BD6E5.jpe

  ஒருவர் மட்டும் எதை பற்றியும் கவலைகொள்ளாது, சட்டை செய்யாது உரிமையுடன் ஓய்வு எடுக்கின்றார்.

 8. அங்கீகாரம் பெற்ற முககவசம் ஒன்று விலை ரூபா இருபத்து ஐந்து என கேள்விப்பட்டேன். அனைவருக்கும் முககவசம் இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை.

  • Like 1
 9. உப்படி யாரும் செய்யலாம். சினேகபூர்வமாக பழகுவது வேறு, ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது வேறு. டேட்டிங் எனும் பதம் இங்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றது. 🤔🤔

 10. நிலமை மோசமாய் செல்கின்றது. இன்றும் வேலை முடிந்து வாகனத்தில் வந்தபோது சிந்தித்தேன். ஏ.சி இல்லாவிட்டால் நம்ம கதியை நினைக்க முடியவில்லை. வெப்பத்தின் அகோரம் அதிகரித்து செல்கின்றது.

  எல்லாரும் ஒதுங்கக்கூடிய மாதிரி ஆகாயத்தில் ஒரு பெரிய குடையாய் யாராவது விரித்து விட மாட்டார்களோ?

   

 11. 22 hours ago, Farzan said:

  ஒரு பூர்வீக இனத்தினது வரலாற்றின் மிஞ்சியிருக்கும் பகுதியை முன்வைப்பதற்கு கூட தமிழ் பெருந் தேசியவாதம் இடம் கொடுக்காது என்பதற்கு இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சான்றாகின்றன.

  இன்றைய இலங்கை முஸ்லீம்களின் பேச்சு மொழி தமிழ் சார்ந்த முந்து தமிழ் என்பதை அவர்களுடன் சாதாரணமாக உரையாடுவோர் நன்கறிவர்.

  ஆதமின் பரம்பரையில் இருந்து எத்தனையோ மனித இனத்தொகுதி பிரிந்த போது ஏக இறைவனை ஏற்றிருந்த ஒரு பழங்குடி/ ஆதிக்குடியே இந்த சோனகர் எனும் இனமாகும்.

  அவர்கள் தென் தமிழகத்திலும் கேரளாவிலும் பரவியும் இருக்கின்றனர் என்பதற்கு ராமேஸ்வரத்திலுள்ள காக்கா முனிவர் சமாதி ஒரு பெரும் சான்று. குமரிக்கண்ட நகர்விற்கு முன்னரான அதாவது மூஸா நபியின் கால கடற்கோளிற்கு முன்னரான உலகின் நிலத் தொடர்பில் இதனை அவதானிக்கலாம்.

  நீங்கள் தவறான இடத்தில் கருத்து வைக்கின்றீர்கள். 

 12. AI இன் ஆபத்துக்கள் பற்றி Elon Musk விபரிக்கும் யூரியூப் வீடியோ ஒன்று அண்மையில் பார்த்தேன். அணுகுண்டு ஆபத்தை விட AIஇன் ஆபத்துக்கள் பாரதூரமானவை என அவர் விபரித்தார். வியாபாரத்தை மையப்படுத்தி கட்டி அமைக்கப்படும் தொழில்நுட்பங்கள் எல்லாம் மனித குலத்தின் சீரழிவுக்கு பாதை அமைத்து கொடுக்கும். 

 13. 2024இல் இலங்கை ஒலிம்பிக் அணி பதக்கம் பெற வாழ்த்துக்கள்!

  சுசந்திகா அம்மையார் வெள்ளி பெற்றது போல் நிச்சயம் இலங்கை வீர, வீராங்கனைகளால் பிரகாசிக்க முடியும் முடியும்.

 14. ஒரு நாட்டில் பிறந்துவிட்டு இன்னோர் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பங்குபற்றுவது வழமையாகிவிட்டது. பதக்கங்களை பெறுவதற்காக நாடுகள் வேற்று நாட்டு வீர, வீராங்கணைகளை இனம் கண்டு கைவசப்படுத்துவதும் நடக்கின்றது. ஆக மொத்தத்தில் எந்த நாடும் எதிலும் வெற்றி பெறலாம் எனும் நிலை உருவாகி வருகின்றது. ஒரு விதத்தில் இது ஒரு நல்ல மாற்றமே.

 15. சைனோபாம் தடுப்பூசி கொடுக்கப்படுகின்றது என்று உறவுகள் மூலம் அறிந்தேன். சில இடங்களில் பைஸரும் வழங்கப்படுகின்றதாம். கொழும்பில் உள்ளவர்கள் விருப்பமான வகை ஊசியை தாம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்கள்.

  நாம் எமது உறவுகள் தடுப்பூசி பெறுவதையும், சமூக இடைவெளியை பேணுதல், கை சவர்க்காரம் போட்டு கழுவுதல், முக கவசம் அணிதல் போன்ற விடயங்களையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

 16. 2024 பாரிஸ் ஒலிம்பிக். சீனா அடுத்த தடவை எப்படி செய்யுமோ? அமெரிக்கா கடைசி நேரம் தங்கங்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்திவிட்டது.

 17. 10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

  உங்கை ஒருத்தரும் சும்மா வந்து தங்கத்தை தூக்கிக்கொண்டு போகவில்லை. கடுமையான பயிற்சி, சரியான நெறிப்படுத்தல், என பல விசயங்கள் உள்ளடக்கம்.

  சோமாலியா, கென்யா இதர ஆபிரிக்க நாடுகள் எல்லாம் என்ன தொழில்நுட்பத்தை பாவித்து இவ்வளவு காலமும் பதக்கங்களை அள்ளுகின்றார்கள்?

  இலங்கை வீராங்கணை சிட்னியில் வெள்ளிப்பதக்கம் எடுத்தார். என்ன நவீன தொழிநுட்பம் பாவிக்கப்பட்டது?

  இந்தியாவுக்கு பதக்கங்கள் போதியளவு கிடைக்கவில்லை என்றால் இது வெறும் தொழில்நுட்பத்துடன் சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. 

   

  திருத்தம்; எத்தியோப்பியாவை சோமாலியா என்று கூறி உள்ளேன்.

 18. உங்கை ஒருத்தரும் சும்மா வந்து தங்கத்தை தூக்கிக்கொண்டு போகவில்லை. கடுமையான பயிற்சி, சரியான நெறிப்படுத்தல், என பல விசயங்கள் உள்ளடக்கம்.

  சோமாலியா, கென்யா இதர ஆபிரிக்க நாடுகள் எல்லாம் என்ன தொழில்நுட்பத்தை பாவித்து இவ்வளவு காலமும் பதக்கங்களை அள்ளுகின்றார்கள்?

  இலங்கை வீராங்கணை சிட்னியில் வெள்ளிப்பதக்கம் எடுத்தார். என்ன நவீன தொழிநுட்பம் பாவிக்கப்பட்டது?

  இந்தியாவுக்கு பதக்கங்கள் போதியளவு கிடைக்கவில்லை என்றால் இது வெறும் தொழில்நுட்பத்துடன் சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. 

   

 19. 23 வயது பையன், இந்திய இராணுவ வீரர். சிறப்பான எதிர்காலம் உள்ளது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! 👏

 20. சிறைவாசம் சென்று பொது வாழ்வில் இணையும் எங்கள் உறவுகள் வாழ்வில் அமைதி, சந்தோசம் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும். 🙏

  ஆயுதங்கள் மெளனிக்கபட்டு, போரும் ஓய்ந்து 12 வருடங்கள் கடந்து விட்டன. சிறையில் வாடும் அனைத்து அரசியல்/போர் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்போம். 

  • Like 1
 21. அகோரமான விபத்து, மிகவும் துயரமான சம்பவம். யார் பெற்ற பிள்ளையோ. ஆழ்ந்த அனுதாபங்கள். 

  அதிகாலை ஒன்று நாற்பதுக்கு சிவப்பு சமிக்சையில் சென்றுள்ளார். யாரை இங்கு குற்றம் சொல்வது? அவரை அழைத்து பார்ட்டி கொடுத்த ஆளையா? இந்த அகால நேரத்தில் வாகனம் ஓடுவதற்கு அனுமதி கொடுத்த குடும்பத்தினரையா? அல்லது இந்த இளைஞரையா? அருமந்த ஒரு அழகிய வாழ்வு அநியாயமாக இழக்கப்பட்டுள்ளது.

  • Sad 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.