Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  300
 • Joined

 • Last visited

Everything posted by நியாயத்தை கதைப்போம்

 1. வடமராட்சி நகர்வின் ஏக காலத்தில் காங்கேசன்துறை, பலாலியில் தொடங்கி தெல்லிப்பழை பகுதி நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கியது. ஆனால், வடமராட்சி பிரச்சனை பெரிதாகும் முன்னரே காங்கேசன்துறை இலகுவாக இராணுவத்தின் வசமாகிவிட்டது. பொதுமக்கள் இராணுவத்துக்கு தண்ணி காட்டிவிட்டு உள் பாதைகளால் இரகசிமாக தமது வீடுகள் பார்க்க சென்று வந்தார்கள். இராணுவத்திடம் பிடிபட்டவர்கள், தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் உண்டு. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு சென்றார்கள். இந்திய இராணுவம் வெளியேறி போர் தொடங்கியதும் மீண்டும் 1990 பாரிய இடம்பெயர்வு. ஆனால் அது நிரந்தரமானது. முன்பு அவ்வப்ப
 2. ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.
 3. நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும். வாழ்த்துக்கள்!
 4. நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள். வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி. வணக்கம்.
 5. இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம்.
 6. யூனியன் கல்லூரி மாணவர்களை பொல்லாங்கட்டையால் அடிக்கும் அக்கா நீதிமன்றம் வரவில்லையோ.
 7. இந்த வீடியோவை மூன்று தடவைகள் பார்த்தேன். நான்கு கால் ஜீவனின் நடத்தையை காண்பிக்கும் சுவாரசியமான ஒரு கோணத்தை படம் பிடித்துள்ளது. ஆனால், இதற்கு என்ன கருத்து பதிவது என்று தெரியவில்லை.
 8. இலங்கையில் வாழும் உறவுகளும், வெளிநாடுகளில் வாழும் உறவுகளும் மனதால், சிந்தனைகளால் எவ்வளவு தூரம் பிரிந்து உள்ளார்கள், எவ்வளவு விதமான வேற்றுமைகள் உள்ளன என்பதை இங்குள்ள உரையாடல்கள் விபரிக்கின்றன? வெளிநாடுகளில் வாழும் உறவுகளையும், இலங்கையில் வாழும் உறவுகளையும் இணைப்பதற்கு வெறும் சோசல்மீடியா மட்டும் போதாது? ஏதாவது ஒரு வினைத்திறனான வகையில் இவர்களிடையே இணைப்பு பாளம் Bridge ஒன்று ஏற்படுத்தப்படலாம்?
 9. பண்பான, உயரிய சிந்தனைகள் நிறைந்த சிறந்ததொரு உரையாடல். எமக்கு தெரியாத விடயங்களையும், நாம் பார்க்காத கோணங்களையும் சொல்கின்றது. காண்பிக்கின்றது. விவேக் அவர்கள் விட்டுச்சென்ற தன்னலமற்ற சேவையை தொடர்வதில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும். ஒரு ஆள் ஒரு வருடத்துக்கு ஒரு மரம் நடுகை செய்து அதை வளர்த்துவிட்டாலே சமூகத்துக்கு செய்கின்ற பெரும் புண்ணியமாக போகும். பிறந்தநாள் பரிசாக மரம் ஒன்றை கொடுத்து அதை வளர்த்து எடுக்கும் பொறுப்பை பிள்ளைகளிடம் கொடுக்கலாம். ஒவ்வொருவரும் தமது பிறந்ததினத்தின்போது நினைவாக ஒரு மரத்தை நடுகை செய்து வளர்த்து எடுக்கலாம்.
 10. துயர் மிகுந்த செய்தி. நகைச்சுவை மன்னருக்கு இதய அஞ்சலிகள்.
 11. பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஆசிரியர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கிராம சேவைஅலுவலர் வரை அனைவருமே இலங்கை அரசாங்கத்திற்கு கூலிக்கு வேலை செய்கிறார்கள். இந்த வகையில் இலங்கை இராணுவம், இலங்கை காவல்துறை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையில் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் குற்றம் அல்லவே. இராணுவத்தில் தமிழர்கள் ஏற்கனவே உயர் பதவியும் வகித்து உள்ளார்கள். வெளிநாட்டு காசு ஊரில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லையே.
 12. வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.
 13. அந்தக்காலத்து புலவர்கள் நூறு பாடல்களை ஒரு நாளில் எழுதி முடிப்பார்கள். நம்ம பையன் வருட கணக்காய் முக்கி நூறு பாடல்களை எழுதி முடிக்கவும் பொண்ணு "நன்றி நண்பா!" சொல்லிவிட்டு பசையான மாப்பிள்ளை ஒருத்தனை கைப்பிடித்து லைபில் செட்டில் ஆகவும் கணக்கு சரியாய் போகும்.
 14. கதைக்கரு சரியான லூசுத்தனமாய் உள்ளது. ஒரு பெண்ணை அடைவதற்கு அறிவு உள்ள ஒரு பையன் நூறு பாட்டுக்களை எழுதி மினக்கடுவானா? பெத்து வளர்த்த தாய், தகப்பனுக்கு ஒரு பாடலாவது எழுதினால் நன்றிக்கடனாக போகும். எங்கள் இளைய தலைமுறை காதல்பித்து பிடித்து அழிவதற்கு இப்படியான கதைக்கரு உதவலாம். பையன் நூறு பாடல்களை நூறு வெவ்வேறு பெண்களுக்கு எழுதினால் அதில் ஒரு பத்தாவது பையனை நோக்கி பரிதாபத்துடன் திரும்பி பார்க்கும். ரஃமான் சாரிடம் காசு உள்ளது. செலவு பண்ணுறார்.
 15. மேயர் மணிவண்ணன் ஒரு அரசியல் தலைவராக வருவதில் தப்பு ஏதும் இல்லையே. ஆட்களுக்கு முத்திரை குத்தி சாணி அடிப்பது எல்லா காலங்களிலும் நடக்கின்றது.
 16. மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம். கொழும்பு மேயரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள நகரஙகளின் மேயர்களோ மாநகர சபையின் அங்கத்தவர்க்களுடன் அபிப்பிராயம் கேட்காது ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஊடகங்களே துரத்தி, துரத்தி உருட்டி எடுக்கும். அரச பணியாற்றும் வளர்ந்து வரும் ஒரு இளைய தலைமுறை சேவையாளருக்கு இப்படியான மனநிலை காணப்படுவது ஆர
 17. கைது செய்யப்படும் அளவுக்கு பயங்கரவாதமாய் சீருடையிலோ அல்லது இலச்சனையிலோ எதும் இல்லை. மேயருக்கு பூச்சாண்டி காட்டவேண்டிய ஒரு தேவை அரசுக்கு உள்ளது போலும்.
 18. விட்னி பில்லியனர் ஆகிவிட்டார். பம்பிலை பயன்படுத்தி எத்தனைபேர் கரை சேர்ந்து உள்ளார்கள்? பம்பில் அனுபவம் இங்கு யாருக்காவது?
 19. குறிப்பிட்ட சம்பவத்தில் காண்டாமிருகம் மாதிரி ஒன்று தெருவுக்கு வந்து ஒரு பொதுமகன் மேல் பாய்கின்றது. நல்லகாலம் உயிர் ஆபத்து ஏற்படவில்லை. நீதிமன்றம், மனித உரிமை ஆணைக்குழு எல்லாம் சென்று முறைப்பாடு கொடுக்கலாம். ஆனால் அதற்கு பாதிக்கப்படுபவர் உயிருடன் தப்ப வேண்டுமே?
 20. அஜித் ரோஹண விளக்கத்தை பார்த்தால் தன்னை யாராவது தாக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகின்றார் போலும். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பொறுப்பான காவல்துறை அதிகாரியின் விளக்கமாக இது தென்படவில்லை.
 21. இரண்டாயிரத்து ஒன்பதில் போர் நிறைவுக்கு வந்துவிட்டது. பன்னிரண்டு வருடங்களின் பின்னர் உணரப்படும் போரின் அழிவுகளில் இதுவும் ஒன்று. எமது கல்வியில் கைவைத்துவிட்டான், தரப்படுத்தலில் எம்மை புறக்கணிக்கின்றான் என்று தொடங்கிய போராட்டத்தி்ன் முடிவில் பாடசாலைகளுக்கே மூடுவிழா என்பது இன்னோர் அவலச்செய்தி. மூடப்படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள பாடசாலைகளில் முன்னம் கல்விகற்ற பழைய மாணவர்கள்தான் தமது பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்பட உதவிக்கரம் கொடுக்கவேண்டும். பீ2பீ, உண்ணாவிரதம், வாகன பேரணி என சர்வதேசத்தை நோக்கி எங்களுக்கு சோலிகள் பல. ஆனால், அத்திவாரமே ஆட்டம் காண்கின்றது இங்கு. யாழ் பல்கலைக்கழக
 22. எவ்வளவு காலம்தான் துப்பாக்கி சூட்டுக்கு பலி என்று தலையங்கம் எழுதுவார்கள். துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி. வீரகேசரி நல்ல முன்னேற்றம்.
 23. விடுதலைபுலிகள் இயக்கத்தின் தூண்களில் ஒன்றாக விளங்கிய மாத்தையாவின் சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், தலைவருக்கு முன்னம் காரியத்தில் கருணா முந்திவிட்டார். , 80களில் மாற்று இயக்கங்களை ஓரம் கட்டியதில் தொடங்கிய பிரிவினை கடைசியில் விடுதலை புலிகள் அமைப்பையும் சின்னாபின்னம் ஆக்கியது. ஆளையாள் குற்றம்சாட்டியும், தண்டித்தும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவது இல்லை என்பதே வரலாறு இதுவரை எமக்கு போதித்த பாடம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.