Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  171
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. வெளிநாடுகளில் இருந்து ஒரு மொட்டை கடிதத்தை எழுதி யாழ்பாணத்தில் வேலை வெட்டி இல்லாமல் உள்ள ஒருவரிடம் பல்கலைக்கழக சுவரில் ஒட்டிவிடுமாறு சொல்லி அவருக்கு சில ஆயிரங்களை உண்டியலில் அனுப்பிவிட்டால் அடுத்தநாள் ஐ.பி.சிக்கும் தமிழ்வின்னுக்கும் சுடச்சுட ஒரு  செய்தி ரெடி.

  அறிக்கையின் முடிவில் எப்படியான பெயரிலும் உரிமை கோரலாம். புத்திசீவிகள், ஆவா குழு, எல்லாளன் படை, மாணவர் முன்னணி, மற்றும் விருப்பமான பெயர்களில்.

  அதை யாழ் இணையத்தில் ஒருவர் சாதனை செய்வதுபோல் இணைப்பார். பலரும் நாடி, நரம்பு புடைக்க ஆவேசமாய் கருத்து சொல்வார்கள். இப்படியே காலம் கழிகின்றது நமக்கு.

  ஆக மொத்தத்தில் மக்களை மொக்குகூட்டம் என நினைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் அதி மேதாவிகள் பலர்.

  • Like 1
 2. சட்டம் அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. பாடசாலை நேரங்களில் வேலை செய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை விதிக்கலாம். இவ்வாறே வேலை செய்யும் நேரத்தையும் மட்டுப்படுத்தலாம் இத்தனை மணித்தியாலங்கள் ஒரு நாளைக்கு/கிழமைக்கு என்று. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி உள்ளது. 

  பிறந்தது தொட்டு  அம்மா, அப்பாவின் வளர்ப்பில் பிள்ளைகள் தங்கி இருந்து பரந்த அறிவு இல்லாமல் கடைசியில் பல்கலைக்கழக பட்டத்தையும் வைத்துக்கொண்டு வேலை இல்லாமல் திண்டாடுவதை காட்டிலும், நான்கு சதம் உழைப்பது எப்படி என்று 14வயதிலேயே கற்றுக்கொண்டால் பணத்தை பக்குவமாய் பயன்படுத்தும் நாட்டமும், வேலைத்தளங்கள், பல்வேறு துறைகள் பற்றிய நடைமுறை அனுபவமும் பிள்ளைகளுக்கு ஏற்படும்.

  உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கலாம், சட்ட வரைபுகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை தேவை.

 3. காலத்திற்கு காலம் சிந்தனை ஓட்டமும், தேவைகளும் மாறும்போது சிலைகளும் மாறலாம். எல்லாம் மனிதனின் சிருஷ்டி தானே.

 4. சம்மந்தன் அவர்கள் தனது நண்பராக தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து கூறலாம். 

  சம்மந்தரின் தனிப்பட்ட வாழ்த்து அவரது கட்சியோ அல்லது அவரது மக்களோ ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

  தமிழ் அரசியல்வாதிகள் காலையில் பாராளுமன்றத்தில் அனல் பறக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதம் செய்துவிட்டு மாலையில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

  ஆக மொத்தத்தில் சம்மந்தரின் இந்த வாழ்த்து செய்தியில் எமக்கு செய்தி ஏதும் இல்லை? 

 5. நல்லவிசயம். ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட உங்கள் பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுங்கள். 🤔

 6. விரிவான தகவல்கள் ஒன்றும் தெரியாமல் ஊகித்து கருத்து சொல்லமுடியாது. இலங்கையில் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளார்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஈடாக. ஆனால், அரசாங்கம் இவர்களின் ஆலோசனைகளை கருத்தில் எடுத்து முடிவு எடுக்கின்றதா அல்லது எதேச்சையாக சிலரின் விறுப்பு, வெறுப்புகளுக்கு அமையவும் தனிப்பட்ட சிலரின் நலன்களுக்காகவும் செயற்படுகின்றதா என்று எமக்கு தெரியாது.

  செயற்கை சினைப்படுத்தல், ஹோர்மோன் பாவனை, சுகாதார பாதிப்புக்கள் என பல விடயங்கள் இந்த அவுஸ்திரேலியா கால்நடைகளுடன் சம்மந்தப்படலாம்.

  இலவசமாக/இனாமாக/குறைந்த வட்டிக்கு எதை கொடுத்தாலும் வாங்கி பழகியவர்கள் நீண்டகால பின்விளைவுகளை கவனத்தில் எடுப்பார்களா என்பது சந்தேகமே.

  இந்த துறையில் அனுபவம் பெற்றவர்களே விளக்கம் கொடுக்கவேண்டும்.

  அதுவரை.. 😷

 7. அவுஸ்திரேலியா இலங்கை ஆகியன கிட்டட்தட்ட காலநிலையில் அதிகம் வேறுபாடு இல்லை. இவற்றை பண்ணையில் வைத்து வளர்ப்பார்கள் எனவே வேறுவிதமான போட்டிகள் கால்நடைகளுக்கு இல்லை. தப்பி பிழைக்கும் என எதிர்பார்ப்போம்.

  இப்போது மத்தளன் விமானநிலையம் வெட்டியாய்த்தானாம் உள்ளது. கால்நடைகளை மத்தளன் விமானநிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டு அங்கேயே மேயவும் விடலாம்.

 8. இந்திய புலனாய்வு துறை தலையீடு இல்லாவிட்டால் இலங்கையில் போர் ஏற்பட்டு இருக்குமா என்பதே சந்தேகமே. தமிழர் சிங்களவர் இடையில் முறுகல் நிலமைகள் தோன்றினாலும் நாடு பொருளாதாரத்தில் முன்னேறி ஆசியாவில் மாபெரும் வளர்ச்சியை கண்டு இருக்கும் .

  சீமானை இந்திய புலனாய்வு துறையின் ஆட்டுவிப்பில் இயங்குபவர் என கூறுவது எம்மவர்கள் வழமையாக ஆட்களுக்கு துரோகி பட்டம் கொடுத்து துரோகி முத்திரை குத்துவதற்கு ஒப்பானது.

  இந்திய புலனாய்வு துறையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யார் செயற்படவில்லை என்று ஒருவராலும் நிறுவமுடியாது தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் உட்பட.

  • Like 1
 9. சைனாவுக்கு ஈடு கொடுத்து வேறு நாடுகளால் மலிவுவிலையில் பொருட்களை தயாரிக்க முடியவில்லையே. என்னதான் இருந்தாலும் சைனாக்காரனின் முயற்சி, கடின உழைப்புக்கு ஒரு சல்யூட் போடலாம். சைனாவின் வளர்ச்சி உலக நாடுகள் பலவற்றுக்கு மரண பயத்தை கொடுக்கலாம். ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

  • Like 2
 10. எமது காலத்திலேயே சீனா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உலகம் வந்துவிடுமோ தெரியாது. சரி பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

 11. பிரமதாசா அரசிடமும், மகிந்த அரசிடமும் தமிழீழ விடுதலை புலிகள் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுள்ளதாக உள்ளகவேலை பார்த்தவர்கள் கூறி உள்ளார்கள். 

  நாம் எமது கண்ணால் காணாத ஒன்றை உண்மை என்றும் சொல்ல இயலாது, மறுக்கவும் இயலாது. ஆனால், இவை எல்லாம் இப்போது விவாத பொருளாகி எமது நேரம், சக்தியை வீண்விரயம் செய்யப்படவேண்டுமா?

  போர் நிறைவடைந்து ஆயுதங்களும் மெளனிக்கப்பட்டுவிட்டது. 

  பழைய பூராயங்களை ஆராய்வதைவிடுத்து இப்போது மக்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறவும், வாழ்க்கை செழிக்கவும் நேரம், சக்தியை செலவு செய்தால் சிறப்பு.

  • Like 1
 12. பெளதிகவியல் பேராசிரியர் ரவிராஜன் சிறப்பான பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

  யாழ் பல்கலைக்கழகம் ஆய்வுகள், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை பரிமாறுவதில் அதிக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. முக்கிய காரணம் வெளிநாடுகளில் கல்விபயின்ற பல முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சேவை ஆற்றுகின்றார்கள்.

  வெளியில் விளம்பரம் இல்லாதவகையில் அமைதியாக பல நல்ல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  நாங்கள் வெளிநாடுகளில் இருந்து மற்றவர்களை மட்டம் தட்டுவதை விடுத்து எமது அறிவு, அனுபவங்களை பயனுள்ள வகையில் பிரயோகம் செய்ய முயற்சி செய்யலாம்.

  • Thanks 1
 13. பிள்ளைகள் ஒழுங்காய் படித்து தத்தம் துறைகளில் நிபுணத்துவம் பெற்று ஆரோக்கியமான, வலுவான சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு உகந்த ஒரு கல்வியியலாளரை தெரிவு செய்தால் புண்ணியமாய் போகும்.

  அரசியல் சாக்கடைகள் யாழ் பல்கலைக்கழகத்தின் திறனை வலுவிழக்க செய்யாது பார்த்துகொள்ள வேண்டிய சமூக பொறுப்பு துணைவேந்தர் தெரிவு குழுவுக்கு உள்ளது.

 14. முதலில் யாழ்ப்பாணத்து பள்ளிக்கூடங்களில் உள்ள சாக்கு பிச்சுகளை தூக்கிவிட்டு ஒழுங்கான பிச் போட்டு கொடுக்கவேண்டும், அதை பராமரிக்கவும் வசதி செய்து கொடுக்கவேண்டும். சாக்கில் விளையாடி சர்வதேச தரத்துக்கு எப்படி முன்னேறுவது?

 15. கனம் யாழ் நிருவாகத்தினருக்கு,

  யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன.

  சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.

  • Like 1
 16. சுமந்திரன் அல்ல, சுமந்திரனின் இடத்தில் யார் தற்போது இருந்தாலும் அவதூறுகள் வந்த வண்ணமே அமையும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பமுடியாது.

  பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

  சுமந்திரன் மீதான பாய்ச்சல் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் என்று எடுக்கப்படாது ஏமாற்றங்கள் நிறைந்த ஒரு சமூகம் தனது இயலாமையை வெளிப்படுத்தும் செயற்பாடு என்று எடுத்து கொள்ளலாம்.

  • Like 1
 17. On 18/5/2020 at 13:03, நியாயத்தை கதைப்போம் said:

  சுரேஸ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  //

  சுரேஸ் அவர்கள் பற்றிய விரிவான பல தகவல்களை இணைத்தமைக்கு நன்றி அம்பனை.

  வட்ஸப் வீடியோ ஒன்று பார்த்தேன் சி.டி.வி இன். விபத்தில் சிக்கிய இன்னோர் சாரதிக்கு உதவி செய்ய சென்றபோது மறைந்தார் என. பிள்ளைகளும் கதைக்கின்றார்கள். மிகவும் கவலை தரும் செய்தி. பலமான ஓர் தூணாக நின்று உள்ளார் தமிழ் சமூகத்துக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  https://ottawa.ctvnews.ca/family-friends-remember-ottawa-man-killed-while-helping-crash-victim-1.4945801

  • Like 1
 18. மேலுள்ள எல்லா செய்தி இணைப்புக்களையும் வாசிக்க தலை சுத்துகின்றது.

  பாடசாலை இயல்பு நிலைக்கு தொடங்குதல், அரச, தனியார் அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு மீளுதல் ஆகியவை எப்படி போகும் என்பது சுகாதார அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் ஊகமே.

  இனி உலகம் முழுதும் இது ஒரு சவாலாக போகின்றது.

  கொரனா பாதிப்பில் சாவுகள் தொடர்வது உலக அளவில் குறைந்தபாடில்லை.

  முன்பு ஊரில் ஆமி ஷெல் அடிக்க அடிக்க, விமானங்கள் குண்டுவீச, பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டு நாங்கள் வாழ்க்கையை கொண்டு சென்றது போலத்தான் இனி கொரனாவுடன் வாழப்போகின்றோம்.

 19. சுரேஸ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  //

  சுரேஸ் அவர்கள் பற்றிய விரிவான பல தகவல்களை இணைத்தமைக்கு நன்றி அம்பனை.

 20. ஒரு வழக்கறிஞரிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் சேவையை பெறுவதற்கு அணுகும்போது அல்லது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வழக்கறிஞர் சேவையை கொடுக்கும்போது அவர்கள் அரசியல் பின்புலங்கள், விருப்பு, வெறுப்புக்கள் ஆதிக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் விடலாம். ஆனால், அவை ஒருவரின் வழக்கை ஒரு வழக்கறிஞர் பொறுப்பு ஏற்பதற்கு காரணமாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை. சுமந்திரன் அவர்கள் கட்டணம் இல்லாமல் தனது சேவையை கொடுக்கின்றாரா, தானாக பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய முன்வந்தாரா என்பது பற்றி தெரியாமல் ஒன்றுடன் இன்னொன்றை முடிச்சு போட ஏலாது.

 21. இந்த வழக்கும், விசாரணையும், தீர்ப்பும் எதிர்காலத்தில் புதிய பரிமாணத்தில் வெளிச்சத்துக்கு வராத பல விசயங்களை இழுத்து போடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மூலம் நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்டமை கவனத்துக்குரியது. 

  ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு, போரும் ஓய்ந்து, பெரிய தலைகளே சுதந்திரமாக திரியும் இந்த காலத்தில் பொதுவாழ்வில் தன்னை இணைத்துக்கொண்ட ஒருவருக்கு தண்டனை அதிகபட்சமாகவே தெரிகின்றது.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.