Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1345
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. @nedukkalapoovan தற்போது எந்த நாட்டில் வாசம் செய்கின்றீர்கள்? இலங்கை, இலங்கை போலிஸ் பற்றி சல்லடை போடுவது சரி. உங்கள் தற்போதைய நாட்டை அறிந்தால் நாங்கள் வகுப்பை, ஆராய்ச்சியை உங்கள் நாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்: அதன் போலிஸ், அதன் அரசாங்கம், அதன் வரலாற்று சம்பவங்கள் என ஒவ்வொன்றாக.. உங்கள் கதையை பார்தால் உங்கள் அமைவிடம் நிச்சயம் தேவலோகம் போல் தெரிகின்றது.
  2. 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎉🎉
  3. இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.
  4. இலங்கைக்கு நமது ஆயுள் காலத்தில் மீண்டும் இன்னோர் சுனாமி வரக்கூடாது. பெரிய பிரச்சனை என்ன என்றால் நம்மட சனம் இருக்கும் இடத்தைவிட்டு மசியாது. ஆட்களை குண்டுக்கட்டாக தூக்கித்தான் அப்புறப்படுத்த பேண்டும். எச்சரிக்கை கொடுக்கப்பட்டதும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்வதற்கு உதுகள் சொல்வழி கேட்கும் சனங்களா.
  5. வரப்போகுது வரப்போகுது என்று சொல்லி ஒரு நாள் திரும்ப வரப்போகுது என்று வைப்போம். எச்சரிக்கை கொடுப்பது சரி. இன்னோர் சுனாமி அழிவின் பாதிப்புக்களை தடுக்க/குறைக்க எப்படியான முன்னேற்பாடுகள் தற்போது உள்ளன? எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் அந்த எச்சரிக்கையை மக்கள் செவிமடுத்து கேட்டு தம்மை பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இறங்குவார்களா? இயற்கை அழிவுகளுக்கான ஆபத்துக்கள் நிறையவே உள்ளன. இதற்கான தயார்ப்படுத்தல் உள்ளதா?
  6. வாஸ்தவம் தான். இணைய உலகில் புகுந்த ஆரம்பத்தில் நாங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அது போய் சேர்ந்துவிட்டது எனும் (செண்ட்) செய்தி காண்பிக்கும்வரை நீண்டநேரம் பொறுமையுடன் பார்ப்போம். டயல் அப் இண்டர்நெட் நிலவியபோது பலவிதமான சத்தங்கள் எல்லாம் நெட்வேர்க் ஊடாக கேட்க ஒரு பக்கத்தை பார்ப்பதற்கும், புரட்டுவதற்கும் இடையில் அது லோட் செய்யும்போது அந்த இடைப்பட்ட நேரத்தில் பலவித காரியங்களை செய்துவிடுவோம். இப்போது எல்லாம் வேகமாகத்தான் உள்ளது. இருபத்து ஐந்து வருடங்கள் முன்புடன் ஒப்பிடும்போது இப்போது அசுரவேகம் என கூறவேண்டும். இருந்தும் என்ன பயன்? எமது வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளதா? உலகில் அமைதி நிலவுகின்றதா? மனிதன் முன்பை விட மகிழ்ச்சியாக வாழ்கின்றானா? எல்லாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள். இப்போது ஒரு சில நிமிடங்களில் எவ்வளவோ தகவல்களை பரிமாறுகின்றோம், தரவேற்றுகின்றோம், இறக்குகின்றோம். தகவல்கள் அசுர வேகத்தில் பரிமாறப்படுகின்றன. இருந்தும் என்ன பயன்? பல வினாக்கள் எழுகின்றன.
  7. @venkkayam இந்த பதிவு உங்கள் சொந்த ஆக்கமா? ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு கல்வியூட்டல் நிச்சயம் எல்லாரும்கும் தேவை. முதலுதவி பயிற்சியின்போது இதைப்பற்றி அறிந்தேன். இலங்கையில் Epi pen பாவனை இல்லையா? இதற்கு நிகராக எப்படியான வழி பயன்படுத்தப்படுகின்றது? அஸ்மா உள்ளவர்கள், மூச்சு எடுப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் எல்லாம் அவதானம் தேவை. அலர்ஜி இல்லை என்று நினைத்துக்கொண்டு மருந்து தரப்படுவது பற்றி கவனம் வேண்டும்.
  8. மெதுவாக இயங்குவதும் நல்லதுதான். கருத்தை எழுதும்போது கொஞ்சம் நிதானமாக சீர்தூக்கி சிந்தித்து எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ரொம்ப வேகமாக இயங்கி என்னதான் எழுதி கிழிக்கப்போகின்றோம்.
  9. இலங்கையில் வயது வேறுபாடின்றி கில்மிசா பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வாயிலாக பலரும் பார்ப்பதையும் கில்மிசா மீது கொண்ட அபிமானத்தையும் நான் நேரில் பார்த்தேன். சிறிய வயதில் இந்த சிறுமி மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்க, இடம்பிடிக்க முடிந்தது. இங்கே பெரியவர்களின் நக்கல்கள், நையாண்டிகள் புரியவில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?
  10. எம்மில் பலருக்கு விஜயகாந்த் அவர்கள் ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனாகவே தெரியும். எனது நினைவில் விஜயகாந்த் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படம், இதில் வரும் பாடல்கள், அதில் அவர் நடிப்பு எம்முடன் கலந்தவை. ஆழ்ந்த அனுதாபங்கள்!
  11. இனரீதியாக மக்களிடம் பாகுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு வசதிகள், வாய்ப்புக்கள் பெருன்பான்மை இனத்திற்கு செல்லும்வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்ததே இலங்கையில் சிறுபான்மை இனத்தினர் தனிநாடு சிந்தனை நோக்கி செல்வதை வலுப்படுத்தியது. எனவே, இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பெருன்பான்மை மக்களின் நலன்களை மையப்படுத்தி சிறுபான்மை மக்களை நலிவுறசெய்யும் சட்டங்கள், நடைமுறைகள் படிப்படியாக இரத்து செய்யப்பட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் கோட்பாடு வெற்றி பெறும். மனோகணேசனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக தென்படுகின்றது. பேச்சுவார்த்தையில் பங்காளிகளான தரப்புக்கள் விட்டுக்கொடுப்புக்கு தயார் இல்லை என்றால் பேச்சுவார்த்தை பயன் தராது.
  12. இங்கு என்ன சொல்லப்படுகின்றது என்றால் வெளிநாட்டில் இருந்து நாம் கொண்டு சென்றுபோய் அங்கே அன்பளிப்பாக கொடுக்கும் அன்லொக் செய்யப்பட்ட கைத்தொலைபேசிகள், மற்றும் பொதிகளில் அனுப்புகின்ற கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது என்றால் அவற்றை முதலில் இலங்கையில் பதிவு செய்யவேண்டும்? இந்த செய்தி விபரம் அறிந்தவர்கள் செய்தியின் பொழிப்புரையை வழங்குங்கள் பார்க்கலாம். கைத்தொலைபேசி விலைகள் 2024 தொடக்கம் அதிகரிக்கவுள்ளதாக முன்னம் செய்தி பார்த்த ஞாபகம். அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு இலங்கையில் பதிவுசெய்யப்படாத கைத்தொலைபேசிகளை தடை செய்ய முஸ்தீபு நடக்கின்றதோ? செய்தி புரியவில்லை.
  13. வரலாற்றை கொஞ்சம் முன்னம் பார்த்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த விடயத்தில் முன்னம் தவறு செய்தது என்று இப்போதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. என்னவோ கஜேந்திரகுமார்… ??
  14. கீல்மிசா 28ம் திகதி பலாலி விமானநிலையம் வருவதாகவும், பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் ஒரு யூரியூப் காணொளி பார்த்தேன். பலரது மனதை கில்மிசா வெகுவாக கவர்ந்துள்ளார்.
  15. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகின்றது. இன்னும் இதே அளவு காலம் சென்றால் 30 வருடங்கள். இனி வரும் தலைமுறை பிரச்சனைகளை எப்படி கையாளுமோ.
  16. இலங்கையில் பல்வேறு தரப்புக்களை சந்தித்தவர்கள் தமிழர் தரப்பில் உள்ளவர்களையும் சந்திக்கலாம். இனி இதை செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.
  17. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் @ஏராளன் 🎂🎈
  18. இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?
  19. நீங்கள் இன்னமும் விமான பயணம் செய்யவில்லை போல? பிரித்தானியாவில் விமானத்தில் ஏறும் ஒருவரின் பொதிகளை பரிசோதனை செய்வது யார்?
  20. நல்லதொரு வினா. இலங்கையில் ஓர் தீர்வு வேண்டுமென்றால் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டிய தரப்புக்கள் எவை? அடுத்ததாக, யார் யாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் தீர்வு கிடைக்காது? முதலில் தமிழ் தரப்புக்களை மட்டுமாவது ஒரு நேர்கோட்டில் இணைக்க முடியுமா? இது சாத்தியமா? இல்லை என்றால் இன்னும் நூறு வருடங்களின் பின்னரும் பிணக்குகள் தொடரும்.
  21. என்னப்பு உலக நடப்பு விளக்கம் போதாது போல. டிரம்ப் ஐயா அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. தேவையானவர்கள் எதற்கும் இப்பவே பிரசர் குளுசையை போட தொடங்குங்கள்.
  22. எவ்பிஐ, மொசாட் தொடங்கி எல்லா நாட்டு உளவுப்பிரிவும் எல்லாத்துக்கையும் நிற்குது போல. நூறு டம்மிகளில் நான்கைந்தை கண்டுபிடிப்பது கடினம்தான். எனக்கு இந்த தருணத்தில் வடிவேலுவின் பின்லாடன் பகிடி நினைவுக்கு வருகின்றது.
  23. இதற்கு காணொளி ஆதாரம் உள்ளதா? கரி ஆனந்தசங்கரி கதைப்பதை ஏன் இணைக்கமுடியவில்லை?
  24. இலங்கையில் தமிழ் மகப்பேற்று நிபுணர்கள் உள்ளார்கள் ஐயா. சிலரிடம் சென்றால் பிள்ளையும் வேண்டாம் குட்டியும் வேண்டாம் ஆளை விடுங்கோ என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடத்தான் வேண்டும். இதுகள் எல்லாம் எப்படி படித்து பட்டம் பெற்று மருத்துவராய் வந்து இருக்குங்கள் என்று பிரமிப்பு தோன்றும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.