
நியாயத்தை கதைப்போம்
-
Content Count
171 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by நியாயத்தை கதைப்போம்
-
-
உயர்தரம் கற்பதற்கான விண்ணப்பமா அல்லது உயர்தரம் பரீட்சை எடுப்பதற்கான விண்ணப்பமா? நாங்கள் கற்ற காலத்தில் உயர்தரம் கற்பதற்கு நாடளாவிய ரீதியில் ஏதும் விண்ணப்பம் செய்ததாக நினைவு இல்லை. நாம் கற்ற பாடசாலையில் எமது தெரிவை சமர்ப்பித்தோம்.
-
கொரனாவின் பாதிப்புக்கள் ஒருபக்கம் போக மறுபக்கம் வழமையான சாவுகள் மாரடைப்பு, புற்றுநோய், தற்கொலை, விபத்துக்கள் என தொடர்கின்றன.
இப்போது ஒரு சமூகமாக கொரனாவுக்கு எதிராகவே முதல் சிரத்தை எடுக்கவேண்டி உள்ளது.
மற்றும்படி அவரவர் உடல் உபாதைகளின் பிரகாரம் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றவேண்டும்.
எனக்கு தெரிந்த ஒருவர் டபயட்டிஸ், சிறுநீரக பிரச்சனை என்பன காரணமாக டயலசிஸ் சிகிச்சை எடுக்கின்றார் கிழமைக்கு நான்கு தரம். அவருடன் கதைத்தபோது டயலஸிஸ் சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலை சென்றுவரும்போது தான்படும் சிரமங்களை விபரித்தார்.
-
ஆரம்பத்தில் பத்து, இருபது, நூறு என்று இறப்புக்கள் அதிகரித்தபோது அதிர்ச்சியாகபட்டது.
ஒரு நாளைக்கு ஆயிரம் என்று பெருகியபோது இன்னும் அதிர்ச்சியாகபட்டது.
இப்போது எங்கள் மனம் இசைவாக்கம் அடைந்து தொடர்ச்சியாக தினமும் கொரோனா சாவுகள் தொடர்கின்றபோதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வழமையான வாழ்க்கைக்கு இயல்புநிலையில் திரும்பும் வகையில் மனம் செயற்பட தொடங்கிவிட்டது.
மருத்துவர்களுடன் உரையாடியபோது எமது அசமந்தபோக்கு, கொரனாவுக்கு எதிரான எமது எச்சரிக்கை, எமது தற்காப்பு நடவடிக்கைகள் மெது மெதுவாக குறைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்கள்.
கொரனா கிருமி அப்படியே உள்ளது தனது விளையாட்டை காட்டிக்கொண்டு.
நாங்கள் எங்கள் மனதினுள் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக எச்சரிக்கை இல்லாமல் செயற்பட்டால் எமக்கும் நாளை வெண்டிலேட்டர் பூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எங்கள் மனதை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி நாங்கள் இக்கட்டான இந்த கொரனா ஆபத்தில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ளவேண்டும்.
-
On 9/5/2020 at 09:29, பெருமாள் said:
அந்த பெண்பிள்ளைகளுடன் கொழுவி கடைசியில் ஆமியுடன் கொள்ளுப்பட்ட காவாலி கூட்டத்தை சுமத்திரன் தன் செல்வாக்கை பயன்படுத்தி வல்வெட்டிதுறையில் உள்ள வீட்டில் போய் ஒளித்து இருக்க சொல்லி இருக்கிறார் அங்கு ஏற்கனவே ஆமியின் புலனாய்வுகள் கூடின இடம் இலகுவாக ஆட்களை பிடித்து விட்டினம் வீட்டுக்காரருக்கு போனில் சுமத்திரன் கேட்டு கொண்டபடியால் இடம் கொடுத்து இருக்கிறார் .
சுமந்திரன் மீதான உங்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? இருந்தால் காண்பியுங்கள் நானும் அறிந்துகொள்கின்றேன்.
-
சுகதேகத்துடன் கழிகின்ற ஒவ்வொரு நாட்களிற்கும் நாம் எமது உடலிற்கு நன்றி உடையவர்களாய் விளங்குவோம் ராஜா
.
உடல் எமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற செல்வம், பெரும் பொக்கிசம். அதை பாதுகாக்கவேண்டியது எமது பொறுப்பு, கடமை.
-
குடை நல்லதொரு கவசமாக தெரிகின்றது. வீட்டிற்கு வந்ததும் குடையையும் சவர்க்காரத்தில் குளிப்பாட்டி எடுக்கவேண்டும்.
-
1
-
-
போஸ்ர்மோடம் மருத்துவ அறிக்கை இல்லாமல் ஒரு இறப்பை வேகமாக கொலை, தற்கொலை என்று நிறுவுவதற்கு எங்கள் ஊடகங்களை விட்டால் வேறு ஒருத்தரும் அடிக்கமுடியாது.
இறந்த சிறுமிக்கு காணப்பட்ட உளவியல் பிரச்சனைகள், வாழ்ந்த சூழ்நிலை, பெற்றோர், நண்பர்கள், சுற்றம், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனம் என பல்வேறு காரணிகள் ஆராயப்படவேண்டும்.
ஒருவர் தனது உயிரை தானே எடுத்துக்கொள்வது எதேச்சையாக நடக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா, இந்த சிறுமியின் இறப்பின் பின்னால் உள்ள விடயங்கள் எவை இவை எல்லாம் மருத்துவர் அறிக்கை, உளவியல் மருத்துவர், சமூகவியல் விற்பன்னர்களால் ஆராயப்பட்டு எமக்கு விளக்கப்படவேண்டிய விடயங்கள்.
குத்துமதிப்பாய் செய்தியை எழுதி சிறுமியை குறை பிடிப்பான் ஏன்?
ஆழ்ந்த அனுதாபங்கள் சிறுமி, குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை சமூகம் அனைவருக்கும்!
-
கூலித்தொழில் செய்பவர்கள், உடலால் தொழில் செய்பவர்கள் வீடுதிரும்பியதும் உடல் நோ நீங்குவதற்கு, உடல் அடித்துப்போட்டது போல் உள்ளபோது உடலை ஆற வைப்பதற்கு, நோவை மறந்து தூக்கம் செய்வதற்கு சாராயம் பருகுவதாக கூறக்கேட்டு உள்ளேன். இவர்கள் குடியை அளவுடன் நிறுத்தும் மனக்கட்டுப்பாடு இல்லாமல் போவது போகாதது எமக்கு தெரியாது. அதற்காக பொறுப்பு இல்லாமல் மதுபானக்கடையில் காசை கொட்டுகின்றார்கள், மதுபானம் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றார்கள் என்று சந்தி சிரிக்க நாற்சந்தியில் எழுதி ஒட்டத்தேவையில்லை .
இரத்த உறவுகள், சகோதரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு அனுப்புகின்றார்கள், சரி. அதற்காக அவர்கள் குடிக்கின்றார்கள் நாங்கள் குளிருக்குள் கஸ்டப்பட்டு வேலை செய்து அனுப்பும் காசை கரி ஆக்குகின்றார்கள் என்று முறைப்பாடு செய்து செய்தித்தாளில் தலையங்கமாக போடவேண்டுமா? அவர்களுடன் தொடர்புகொண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறுவது தவறு இல்லை.
காதும் காதும் வைத்தாற்போல் செய்யவேண்டிய வேலையை பறை அடித்து ஊரைக்கூட்டி மதுபான கடைகளுக்கு செல்லும் எல்லாரையும் அவமானம் செய்தாற்போல் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகளை கிறுக்கி தள்ளுவது அசிங்கமானது.
உங்களுக்கு நீங்கள் வெளிநாடுகளில் முதுகுமுறிய வேலை செய்து அனுப்பும் காசை அங்குள்ள உறவுகள் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால் வெறும் காசு என்று கொடுக்காமல் ஒரு சிறிய முதலீடுபோல் கொடுங்கள் அல்லது அவர்களை வேலை செய்யச்சொல்லி அதற்கு கூலியாக கொடுங்கள். அதற்கு பிறகு நீங்கள் கொடுக்கும் வேதனத்தை அவர்கள் எப்படியும் செலவு செய்வது அவர்களின் தனிப்பட்ட விடயம்.
பெரிய தொகை இல்லாமல் சிறிய சிறிய தொகையாக அனுப்பலாம். இவ்வாறே அவர்களின் தேவைக்கு ஏற்றபடிஅளவு அறிந்து பணத்தை அனுப்பலாம். இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன.
-
வெளிநாட்டில் உறவினர்கள் வாழலாம் வாஸ்தவம்தான். ஆனால் வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் எல்லாம் ஊரில் உள்ள உறவுகளுக்கு காசு அனுப்புகின்றார்கள் என்பது உண்மை இல்லை. வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்துகொண்டு ஊரில் வாழும் தாய், சகோதரங்களை கவனிக்காமல் உள்ள நல்லவர்களும் உள்ளார்கள்.
ஒருவகையில் பார்த்தால் வெளிநாட்டில் உறவினர் வாழ்கின்றார் என்றுசொல்லி ஊரில் உள்ள ஒருவரின் கொடுப்பனவுகளை வெட்டுவது நியாயம் இல்லை.
சமுர்த்தி காசு கிடைக்கலாம். சரி. ஆனால், எவ்வளவு கொடுக்கின்றார்கள். மாதம் ஒரு பத்தாயிரம் கிடைக்குமா? ஐயாயிரம் கொடுக்கப்பட்டது என்றே செய்திகளில் பார்த்தேன்.
ஊரில் வாழ்பவர்கள் ஒழுங்காக சாப்பிட்டு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நான்கு பேர் அமைந்த குடும்பத்துக்கு மாதம் எவ்வளவு காசு போதுமானது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
சமுர்த்தி பணத்தை வைத்து மாதத்தில் உள்ள எத்தனை நாட்களை சமாளிக்கமுடியும்.
நானும் முன்பின் தெரியாதவர்களுக்கு காசு அனுப்புவதுண்டு. எப்படி செலவளிக்கின்றார்கள் என்று கேட்பதில்லை. அது எனக்கு நியாயமாகப்படவில்லை பெருமாள்
-
அய்யா இறந்தால் அய்யாவின் சகோதரி ஆட்சிக்கு வருவார் என்று சொல்லப்படுகின்றது. பார்ப்போம் என்ன நடக்கின்றது என.
-
தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்காதே என்று ஒரு பழமொழி இருக்கின்றது.
உதவி செய்வதோடு தமது எல்லைகளை அறிந்து நின்று கொண்டால் அவரவர்க்கு நல்லது.
உதவிசெய்கின்றோம் எனும் உரிமையில் அடுத்தவன் வீட்டு படுக்கை அறைவரை செல்வது அநியாயம்.
உதவிசெய்கின்றோம் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் சுதந்திரத்தை பறிப்பது மனிதாபிமானம் இல்லை.
முதலில் இலங்கையில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு மண்டைக்குள் ஒன்றும் இல்லை அவர்களுக்கு வாழத்தெரியாது ஒன்றுமே தெரியாது முட்டாள்கள் எனும் நிலையில் நினைப்பில் இலவச அறிவுரைகள், அழுத்தங்களை கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.
இங்கு வெளிநாடுகளில் செய்யாததை அங்கு அவர்கள் செய்யவில்லை. தமக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் எனும் போக்கும் தவறானது.
ஒரு காலத்தில் தாங்களும் ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எப்படி இருந்தார்கள் என்பதை வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு ஓடர் போடுபவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
அங்குள்ளவர்களை மட்டம் தட்டுவது, ஓரம் கட்டுவது, ஒன்றும் தெரியாத மடையர்கள் எனும் கணக்கில் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகள் பிரசுரிப்பது எல்லாம் தவறானது.
இப்படியான போக்கு அங்குள்ள மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். கஸ்டப்படுபவனை தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். தலையில் குட்டி கெடுக்கக்கூடாது.
நீங்கள் அங்கு இருந்து உதவி பெறும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று வகுப்பு எடுத்தால் உங்களுக்கு எப்படி உரைக்கும் என்பதை ஒருகணம் தயவுசெய்து சிந்தித்து பாருங்கள்.
வெளிநாட்டில் இருந்து காசு கொடுப்பவர்கள் அங்குள்ள மக்களை எப்படி தங்கள் விருப்பு வெறுப்பின் பிரகாரம் ஆட்களை இருத்தி எழுப்புகின்றார்கள் என்பது பற்றியும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதுங்கள்.
-
உடும்பை வேட்டையாடுவதும் தடுக்கப்பட்டுள்ளது பிடிபட்டால் இருபத்தையாயிரம் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை என்று யாரோ கூறினார்கள்.
-
கட்டிலுக்கு போனால் நித்திரை உடனடியாக வருவது, காலை எழுந்ததும் இலகுவாக க*கா போவது நல்ல விசயம் அம்பனை
.
கட்டிலுக்கு போய்விட்டு நித்திரை இல்லாமல் மாறி மாறி புரண்டு உருளுவதும் இடையிடையே போனை சுரண்டிக்கொண்டு இருப்பதும், இவ்வாறே காலையில் க*கா போகாமல் முக்கிக்கொண்டு இருப்பதுவும் நல்ல அறிகுறிகள் இல்லை.
நாங்கள் சிறிதுகாலமாய் கொரோனா கொரோனா என்று அலறி அடித்து ஓடுகின்றோம். இந்த வாட்ஸப், வைபர், பேஸ்புக் எல்லாமே கூட அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டிய கிருமிகளே. எங்கள் உடலையும், உளத்தையும் சின்னாபின்னமாக்கி வாழ்க்கையையே நாசமாக்கக்கூடிய வலிமை இவற்றுக்கு உள்ளது.
எல்லாம் அளவாக கட்டுப்பாட்டுடன் பாவித்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அளவுடன் நிற்பாட்டும் அளவுக்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் மனக்கட்டுப்பாடு உள்ளதா? கொலஸ்ரோல், சுகர் போல இவற்றின் அளவு எல்லை மீறிகடந்து பல வில்லங்கங்களில் மாட்டி நிற்கின்றோம்.
நல்ல நிலையில் திடகாத்திரமாய் வழுவழு என்று உடம்பை காப்பதுவும், உளம் ஆற்றல்கள் மிகுந்ததாக விளங்கும் வகையிலும் வைத்து பேணுவது பெரும் எமக்கு போராட்டமே.
-
9 hours ago, நிழலி said:
வணக்கம் நியாயத்தை கதைப்போம்,
தவறு என்னுடையது.
உங்கள் பதிலை வாசித்து இருந்தேன். அதில் எந்தவிதமான கள விதி மீறலும் இருக்கவில்லை.
விவசாயி விக்கின் கருத்து ஒன்றை இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் மேற்கொள் காட்டி விவசாயி விக்கின் தனிப்பட்ட விடயங்களையும் இணைத்து கருத்து ஒன்று எழுதியிருந்தார். நடு இரவு எழும்பி கைத்தொலைபேசியில் அதை வாசித்த பின் அந்த கருத்தை நீக்க போய், உங்கள் கருத்தையும் சேர்த்து தவறுதலாக நீக்கிவிட்டேன்.
இந்த தவறுக்கு உளமார வருந்துகின்றேன்.
நன்றி
நிழலிவணக்கம் நிழலி,
உங்கள் தகவலுக்கு நன்றி.
கருத்துக்களத்தில் ஒருவர் எத்தனை கருத்துக்களை தினமும் பதியலாம் என்று ஒரு கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். இது நிர்வாகத்தில் இருப்பவர்களின் வேலைபழுவை குறைக்கும். அத்துடன், கருத்து எழுதுபவர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஆற, அமர நிதானத்துடன் கருத்துக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
புதிய தலைப்புக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் இவ்வளவு என.
கருத்துக்கள், செய்திகளின் எண்ணிக்கைகளை விட அவற்றின் தரம் முக்கியம்.
ஆளுக்கு ஒரு நாளைக்கு இத்தனை விருப்பு புள்ளிகள் என உள்ளது போல், இத்தனை கருத்துக்கள் என நிர்ணயம் கொடுக்கும்போது கருத்துக்களத்தின் தரம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
-
பட்டறிவு நிச்சயம் கண்ணை திறக்கவேண்டும் உடையார்
.
எங்கள் அறிவு மற்றவர்களுக்கு பயன்படவும், மற்றவர்கள் அறிவு எங்களுக்கு பயன்படவும் இந்த மனிதசமூகம் இக்கட்டான இந்தக்காலகட்டம் மூலம் நல்ல பல விடயங்களை கற்று முன்னேறட்டும் நிலாமதி
.
இந்த நிமிடத்தில் வாழ்வது இலகுவானது இல்லை. அது வரம். எங்கள் குரங்கு மனம் அதற்கு இடம் கொடாது. அவரவர் மனவலிமையின் உதவியில் இந்த நிமிடத்தில் வாழ முயற்சிப்போம் சுவை
.
மனித மனம் மனிதனுக்கு அழகு, அழிவு, அறிவு அனைத்தையும் கொடுக்கின்றது ஈழப்பிரியன்
.
-
வணக்கம்,
மேற்கண்ட தலைப்பில் நேற்று எமது நேரம் (கனடா) இரவு என்னால் ஒரு கருத்து பதியப்பட்டது. தற்போது அதை காணவில்லை.
ஏதும் தொழில்நுட்ப காரணங்களா அல்லது நிர்வாகத்தினால் அந்த கருத்து நீக்கப்பட்டு உள்ளதா? கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் ஏதும் தகவல் இல்லை. எனக்கு தனிப்படவும் இதுபற்றி ஏதும் தகவல் தரப்படவில்லை.
எனது பதிவில் கருத்துக்களத்தின் எதுவித விதிமுறை மீறல்களும் இருக்கவில்லை (கருத்துக்களத்தின் விதிமுறை மீறல் இருப்பின் அதை சுட்டிக்காட்டினால் நல்லது). கருத்து காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகின்றேன்.
யதார்த்தமான நிலைமைகளை உள்வாங்கிய யதார்த்தமான கருத்து அது. எவரது கருத்தும் மேற்கோள் காட்டப்படவில்லை. எவரையும் தனிப்பட குறிப்பிடவில்லை. செய்தியின் பிரகாரம் பொதுவான கருத்தே என்னால் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக தேவை என்றால் விரிவான ஒரு உரையாடலுக்கு தயார்.
நன்றி!
-
செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது.
ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம்.
சுயநினைவு திரும்புமா? தெரியாது.
ஆனால்,
திரும்பவேண்டும்.
பின்பு...?
கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும்.
மேலும்?
காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும்.
இவை மட்டும் போதுமா?
இல்லையே.
படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவேண்டும். நடக்க செல்லவேண்டும். முன்புபோல் இன்னும் பலநூறு காரியங்கள் சேர்ந்தே செய்யவேண்டும்.
இதற்கு என்ன செய்யலாம்?
கோயிலிற்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யலாமா?
இல்லை, கோயில் திறந்து இருக்குமா என்பதே நிச்சயம் இல்லை.
ஆட்களுக்கு சொல்லி கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஜெபிக்க சொல்லலாமா?
வேறு ஏதாவது...
என்ன செய்யலாம்?
அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டும்.
முயற்சி பயன் அளிக்குமோ தெரியாது. ஆனால், எங்கள் மனம் அமைதி அடைவதற்கு எதையாவது செய்து பார்க்க வேண்டும். எமது அன்புக்குரியவர் பிழைக்கவேண்டும்.
நேற்றுவரை உலகம் நன்றாகவே சுழன்றது.
இன்று ஏன்? இப்படி?
நோய், துன்பம், பிணி, இறப்பு, சாக்காடு இயல்பு நிலை. அது ஏன் எமக்கு வரும் என்பதை உணரமுடியாமல் போனது?
மற்றவர்களுக்கு அவை நடக்கும்போது அதன் தாக்கம் உணரப்படமுடியவில்லை. எமக்கு ஒன்றும் நடக்காது என்பதையே நம்பி இவ்வளவு காலமும் ஓடியது.
என்றாலும் கடைசியில்..
எமக்கு விரித்த வலையின் விரிப்பினுள் எதிர்பாராத தருணத்தில் கால்கள் முடங்கிவிட்டன?
இனி என்ன செய்வது?
மனம் சுதாகரித்தது.
பரிவு, பரபரிவு நரம்புத்தொகுதி புத்துணர்ச்சி பெற்றதோ? நீளவளைய மையவிழையத்தில் ஏதேனும் அதிசயம் நடந்ததோ? மூளையில் எந்தப்பகுதியில் என்ன நடந்தது? தெரியவில்லை.
இப்போது..
உலகம் தேவலோகமாக தெரிகின்றது.
நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.
எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..
அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும்.
வேறு என்ன?
வியாதி ஒன்றும் வேண்டாம்.
சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும்.
ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.
இன்றைய நாள் நல்ல நாள்.
இன்றைய பொழுது நல்ல பொழுது.
இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,
நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,
அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,
மகிழ்கின்ற..
உணர்கின்ற..
வாழ்கின்ற..
தருணம்
இது!
-
8
-
1
-
-
மற்றைய பிராணிகளை கொன்றும் வாழும் மிருகம் என்றாலும் செய்தியை வாசிக்கும்போது துயரமாகவே உள்ளது.
அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். ஆபிரிக்கா காட்டில் வாழும் புலி ஒருவர் மானை வேட்டையாடிவிட்டு அதை கவ்விக்கொண்டு உயரமான மரத்தில் ஏறி, பின் ஆறுதலாக தனிமையில் உணவை ருசித்து அடிப்பதற்கு மானை பாட்டமாக கிளைகளிடையே கிடத்துகின்றது
-
-
ம் என்னத்தை சொல்வது. காலத்துக்கு காலம் காட்சிகள் மாறுகின்றன.
ஈழம்24/7 எனும் பெயரில் ஒரு தளத்தில் இப்படி ஒரு செய்தி.
பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!
ஏதோ நெருடுகின்றது.
ஆட்களை வடிகட்டி பகுப்பு செய்ய தொடங்கினால் இன்னும் எவ்வளவோ சரக்குகள் வெளியில் வரும்.
மனதில் உள்ளவிடயங்களை உள்ளே வைத்து வேகவிடாமல் வெளியில் பகிர்ந்துகொள்வது நல்லவிசயமே ஒரு வகையில்.
-
வெஸ்டன் யூனியன் கமிசன் தொகை அதிகம். மணி கிராம் சேவை கட்டணம் மிகவும் குறைவு. மணிகிராம் மூலம் நான் தேவைப்படுபவர்களுக்கு காசை அனுப்புகின்றேன்.
எதுவாக இருந்தாலும் உங்கள் கிரடிட் கார்ட் வங்கி தகவல்களை ஒன்லைனுக்கால் கொடுப்பது ஆபத்தானது. ஒன்லைன் எக்கவுண்டும் நல்லது இல்லை. நேரடியாக முகவரிடம் சென்று (உதாரணமாக தபாலகம்) பணம் செலுத்தி காசை அனுப்புவதே சிறந்தது. ஒன்லைன் என்றால் உங்கள் கிரடிட் கார்ட் வங்கி தகவல் திருடப்பட்டு மோசடி இடம்பெறலாம்.
-
1
-
-
ஒன்லைனில் ஆக்ரோசமாக அறிக்கைகள் விடுவது இலகு. பக்குவமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நலன்களை சரியான முறையில் வழிப்படுத்தி செய்துகொடுப்பது கடினமானது.
அடிப்படை பொறிமுறைகள் பயன்படுத்தப்படாமல் விசிலடி வாங்குவதற்காக உசுப்பேத்தல் செய்வது எதுவித பயனையும் கொடுக்காது.
சட்டவல்லுனர்கள் பலர் அரசியலில் உள்ளார்கள். பிரதேச சபை, உள்ளூர் ஆட்சி சபை, மாகாணசபை, பாராளுமன்றம் என பல மட்டங்களில் சேவைகள் பெறப்படவேண்டியவர்கள் பதவியில் உள்ளார்கள். இவர்கள் ஆறாம் சட்டம் பத்தாம் சட்டம் சுயநிர்ணயம் என்று சூடேற்றி உணர்ச்சி அரசியல் செய்யாமல் மேற்கண்ட செய்திகளில் சம்மந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் அடைவதற்கு கடை நிலையில் களத்தில் இறங்கி பணி செய்தால் போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்.
முறைகேடுகள் பதிவில் முறைப்பாடுகளாக பேணப்படவேண்டியது அவசியம்.
-
இலங்கையின் முப்படையினரும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சேவை செய்யவே உள்ளார்கள்.
யாராவது அக்கறை உள்ளவர்கள் அல்லது தொண்டு அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டை பொலிஸ் பதிவு செய்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாதவண்ணம் செய்யலாம்.
இடம், திகதி, நேரம் தொடக்கம் கிடைக்கக்கூடிய முழுவிபரங்களையும் பெற்று பொலிஸ் முறைப்பாடு செய்யவேண்டியது முதல்விடயம்.
அராஜகம் செய்பவர்கள் சம்பவம் பற்றி வெளியில் ஒருவரும் சொல்லக்கூடாது என மிரட்டுவது வழமையே. புதுமுக மாணவிகளிடம் குளியல் அறையில் நிர்வாணமாக நின்று வீடியோகோல் எடுக்குமாறுகூறிய யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்களில் சிலரும் இப்படித்தான் சொன்னார்கள்.
முறைப்பாட்டின் முடிவில் நீதி/பரிகாரம் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். முறைப்பாடு செய்யாவிட்டால் அராஜகம் நிச்சயம் தொடரவே செய்யும்.
-
பின்பக்கத்தால் பிடரி அடிபட வீழ்ந்து வெளிநாடுகளில் பலர் இறந்துள்ளார்கள். உடுத்த சாரம் தடக்கி, மேஸ்மெண்ட் படிகளில் வழுக்கி என வெவ்வேறு நிலமைகளில் சம்பவங்கள். இது அதில் ஒரு வகை.
கடைக்காரன் பாவம். அவனுக்கு தேவையில்லாத பிரச்சனையால் வேறு சோலிகள். கடையில் வேலை செய்யும் பிள்ளைகள் தள்ளிவிட்டவரை ஆத்திரப்பட்டு வெளியில் போகவேண்டாம் என்று கைகளைகாட்டி அறிவுறுத்துவது வீடியோவில் தெரிகின்றது. அவருக்கு என்னவோ தன்மானம் விடவில்லை. இறந்தவருக்கு சவாலாக கடையைவிட்டு வெளியேறுகின்றார்.
நாங்கள் இந்தியன் ஆமியிடமும், சிறீ லங்கா அரசிடமும் நிவாரணம் வாங்கியபோதும், கிளாலியில் படகில் ஏறும்போதும், ஓமந்தை சோதனை சாவடிக்கு பாஸ் பெற்று செல்லும்போதும், கோயிலில் பிரசாதம் வாங்க வரிசையில் நின்று கைநீட்டும்போதும், பேருந்து, புகையிரதத்துக்கு காத்து நிற்கும்போதும் எப்படியான சூழ்நிலையிலும் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நிற்கும்போது இடையில் ஆட்கள் நுழைவதை விரும்புவது இல்லை. இந்த குணம் வெளிநாடுகளுக்கு வந்தாலும் விட்டுபோகாது. ஏன் என்றால் எங்கள் மனிதசுபாவம் அப்படி. மேற்கண்ட சம்பவத்திலும் வரிசையில் இடையில் புகுந்தது பிரச்சனையை உண்டு பண்ணியது என்று உள்ளது.
மனுசன் ஒன்லைனுக்கால் சாப்பாட்டை ஓடர் பண்ணி, கியூவில் சண்டையும் பிடித்து கடைசியில் வாங்கிய அந்த உணவை பசிதீற ருசித்து உண்ணும்முன்பே வாழ்க்கை போய்விட்டது.
நாங்கள் வழமையாக கூடுகின்ற இடங்களில் தள்ளுப்படும், நெஞ்சை நிமிர்த்தி வாக்குவாதம் செய்யும் சம்பவங்களில் ஒன்று சாவில் முடிந்துவிட்டது. ஆனால் இதை பார்த்தும் நாங்கள் திருந்த மாட்டோம். எங்கள் திமிரை எங்கள் ஆட்களுக்குத்தானே நாங்கள் காட்டமுடியும். அங்கேதானே நமது பெருமை, கெளரவம் உள்ளது. இப்படியான ஒரு சம்பவம் வெள்ளைக்காரன் ஒருவனது கடையில் எம்மவர் அல்லாத வேறு சமூகத்தவர் மத்தியில் நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதா?
வேறு என்னத்தை சொல்வது? அநியாய சாவு, ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
4
-
புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது; மாணவனை நினைத்து வெட்கப்படுகிறேன்: விக்னேஸ்வரன் சூடு!
in ஊர்ப் புதினம்
Posted
இணையத்தில் தினமும் காலையும் மாலையும் என சுமந்திரன் புராணம் நன்றாய் ஓடுகின்றது.
இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யார் அறிவாரோ?