Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  300
 • Joined

 • Last visited

Everything posted by நியாயத்தை கதைப்போம்

 1. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இதன் காணொலி கிடைத்தால் யாராவது இணையுங்கள் பார்ப்போம். யாழ் பல்கலைக்கழகம் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகவும், சர்வதேசமட்டத்தில் முகம் கொடுக்கும் வகையிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கட்டும். ஒரு காலத்தில் யாழ் பல்கலை மாணவர் சோதிலிங்கம் குறுந்தூர வேக ஓட்டத்தில் முன்னணி வகுத்தார்.
 2. Duolingo எனும் செயலியை பாவித்து கைத்தொலைபேசியில் பிரென்ச் உட்பட எனக்கு விருப்பமான சில வேற்று மொழிகளை கற்கின்றேன். நல்ல சுவாரசியமாய் உள்ளது கற்பதற்கு.
 3. ஜனாதிபதி யார் என தெரிவு செய்வது அமெரிக்க குடிமக்களின் தீர்ப்பு. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் ராஜபக்சேக்களை தெரிவு செய்வது போல் அமெரிக்காவில் ட்ரம்ப் தெரிவு ஆகினால் நன்மையோ தீமையோ வெளியார் என்ன செய்வது? எமக்கு ட்ரம்பை பிடிக்க இல்லை என்பதற்காக ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்க தேவை இல்லையே. இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்பை ஏற்கவேவேண்டும். நம்பிக்கைத்தன்மை சீர்குலைந்துவிட்டால் அது எதிர்காலத்திற்கு பிழையான வழிகாட்டுதல் ஆகிவிடும். கடந்த தடவையும் அமெரிக்க குடிமக்கள்தானே அத்தனை மில்லியன் வாக்குளை டிரம்புக்கு அளித்தார்கள். அங்குள்ள ம
 4. கொலைகள், சித்திரவதைகள், மனித அவலங்களை யார் செய்தாலும், ஏற்படுத்தினாலும் அது இலங்கை அரசபடைகளாகட்டும், புலிகளாகட்டும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆகட்டும், இந்திய படைகளாகட்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளாகட்டும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது, ஒதுக்கப்படவேண்டியது. இல்லாதுவிடின் மனிதம் செத்துவிடும். சட்டங்களின் பிடியில் சிக்காமல் குற்றவாளிகள் தப்பக்கூடும். ஆனால் மனச்சாட்சி உள்ளவர்களை அவர்தம் ஆயுள்காலம் முழுதும் புற்றுநோயாக தாம் செய்த பாவங்கள் அரித்து அரித்து மனதை வாட்டி எடுக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வரலாறு புகட்டும் பாடம் இது.
 5. எங்கள் பாடசாலை காலங்களில் இவ்வாறான திமிங்கில வருகை எல்லாம் நடந்து நினைவில்லை. இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். சூழல் மனிதனால் எவ்வளவு சீர்குலைந்து விட்டது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம். இனி வேறு என்ன எல்லாம் வருமோ.
 6. ஓரு சினிமா நடிகையின் இத்தனைவிதமான, பல்வேறு கோணங்களில், சூழல்களில் எடுக்கப்பட்ட படங்கள் இதுவரை இப்படி யாழ் கருத்துக்களத்தில் ஒரே தலைப்பின் கீழ் பார்த்தது இல்லை.
 7. பயங்கரவாதிகளும் அரசாங்கமும் ஒரே மாதிரியாக ஏட்டுக்கு போட்டியாக செயல்படமுடியாது. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்கவேண்டிய பொறுப்பும் பிரான்ஸ் அரசுக்கு உள்ளது. அரச அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டிய தேவை உள்ளது. இது நாளைக்கு நாளன்றைக்கு முடிக்கக்கூடிய பிரச்சனை இல்லை. உணர்ச்சிபூர்வமாக நாட்டின் சிறுபான்மையினரை சீண்டக்கூடிய அறிக்கைகள், செயல்பாடுகள் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் உக்கிரம் பெறவே வழிவகுக்கும். காதும் காதும் வைத்தாற்போல் களையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம்.
 8. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கருத்து கூறுவதை வீடியோ பதிவு செய்துள்ளார்களா? அல்லது அவர் கூறிய கருத்து திரிவுபடுத்தப்பட்டுள்ளதா?
 9. ஒன்லைனில் மிரட்டல் விட்டவர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், குற்றம் செய்ததாக கண்டறியப்பட்டால் தண்டிக்கப்படவேண்டும். ஐ.பி.சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்றும் கண்டறியப்பட வேண்டும். நீதித்துறை, காவல்துறையை தற்போது ஐ.பி.சி தனது கையில் எடுத்துள்ளதா?
 10. இலங்கையில் எத்தனை மருத்துவபீடங்கள் உள்ளன? ஒரு கல்வியாண்டில் ஆக 270 மருத்துவத்துறை அனுமதிகள் மட்டும்தானா? இது போதுமா? இங்கு தமிழ் மாணவர்கள் ஒரு ஐம்பது தேறுமா?
 11. சமய புடுங்குப்பாடுகள் மாறப்போவது இல்லை. ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டதே. விஞ்ஞானம், தொழில்நுட்ப அறிவுகளின் முன்னேற்றம் சுய சிந்தனைகளின் தேடல்களில் உருவாகின. இவற்றுக்கு மதங்களின் பங்களிப்பு என்ன? மதங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப விருத்திக்கு ஆதரவாக செயற்பட்டதா அல்லது எதிராக செயற்பட்டதா? நாளை சவூதி மன்னருக்கு ஹார்ட் அட்டாக் என்றால் அவரை நவீன வைத்தியசாலைக்குத்தான் உடனடியாக எடுத்து செல்வார்கள். பள்ளிவாசலுக்கு அல்ல. தற்போதைய எமது வாழ்க்கையை செளகரியமாக்கியது விஞ்ஞானம், தொழில்நுட்பமா அல்லது மதங்களா? பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் எல்லாம் இல்லாமல்
 12. இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி. வாழ்த்து பகுதியில் இதற்கு வாழ்த்து தெரிவிக்கலாமா? மூட நம்பிக்கைகள் பற்றி இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதாக கருத்துக்களில் மாற்றம் பகுதியில் சில தடவைகள் அவதானித்தேன். எனவே சந்தேகம் தோன்றியது. மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது என்று யாழ் கருத்துக்களத்துக்கு எதிராக ஒரு கேஸை போடலாம் என்று சொல்ல வாறீங்களோ? ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறுக சிறுக கேகரித்து பொக்கிசமாக போற்றும் பச்சை நாளை ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காணாமலும் போகலாம். எனவே ஸ்கிரீன் சொட் எடுத்து வையுங்கள்.
 13. ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும். ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது.
 14. கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே.
 15. நல்ல தலையங்கம். கிரிக்கெட் மச்சோ அங்கு நடைபெறுகின்றது. உருப்பட்ட மாதிரித்தான்.
 16. விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!
 17. மன்னர் ஆட்சியில் இது பரவாயில்லை. மகனுக்கு வேறு என்ன பிரதமர் அலுவலகத்தில் பியூன் வேலையா கொடுக்கமுடியும்.
 18. சோசல் மீடியாவுக்கு பிரச்சனைகளை கொண்டு வருவது தீர்வுக்கு பதிலாக மேலதிக பிரச்சனைகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தலாம். இப்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன். வட்ஸாப் தொடக்கம் பேஸ்புக், யூரியூப் வரை குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இளையவர்கள் குறுக்கு வழிமுறைகளை தேடினாலும் பெரியவர்கள் தீக்குச்சி போல் அல்லாமல் கொஞ்சம் நிதானம் கடைப்பிடிக்கலாம். அண்மையில் பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் படுகொலையும் சோசல் மீடியாவின் தவறான பாவனையை காண்பிக்கின்றது. மீடியா என்பது தீயை கொளுத்தி போடும் இடம் அல்ல.
 19. வைத்திய நிபுணருக்கு பாராட்டுக்கள். நான் அறிந்தேன் இப்போது யாழ் போதனா வைத்தியசாலையே நவீன மருததுவ வசதிகள், பொறிமுறைகளுடன் வெளிநாட்டு வைத்தியசாலைகள் போல் முன்னேறிவிட்டது என்று.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.