Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  415
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. On 17/5/2021 at 18:44, நன்னிச் சோழன் said:

   

  ltte eastern regiemtn.jpg

   

  கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடிய பால் மணம் மாறாத பிஞ்சுகள், பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்.. படத்தில்.

 2. மீன்கள் நிறைந்துள்ள மூன்றாவது படத்தை Reverse Image Search செய்து பார்த்தேன். இந்தப்படம் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 3. 5 hours ago, கிருபன் said:

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு் இடையிலான நேரடியான அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் மாநாடு ஒன்று அண்மையில் இணையத்தளம் வழியாக நடைபெற்றதுடன் அதற்கு நாமல் ராஜபக்சவே தலைமை தாங்கினார்.

   

  வேற லெவல் செயற்பாடு இது. இலங்கை நாடு நல்லாய் உருப்படும்.

 4. 1 hour ago, Justin said:

  வளவன், ரஞ்சித்தின் இந்த உழைப்பு மெச்சத் தக்கது.

  ஆனால் இது திருத்தமான தகவல்களை மட்டும் வைத்து எழுதப் பட்ட ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. "ரஞ்சித்திற்கு துரோகியாகத் தெரிபவர்கள் பற்றிய தகவல்கள்" என்ற ஒரு ஆவணமாக மட்டும் இது இருக்கலாம்!

   ஏற்கனவே ரஞ்சித் எடுத்த முடிவுகளை நிலை நிறுத்துவதற்காக  பெரும்பாலும் cherry-picking எனப்படும் முறையில்,தேர்ந்தெடுத்த தகவல்களின் தொகுப்பாக மட்டுமே இந்த ஆவணம் இருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! 

  ரஞ்சித்தின் இடுகைகள் யாழ் கருத்துக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. யாழ் நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. 

  நாளை சட்ட ரீதியாக ஏதும் சிக்கல் வராது எனும் துணிவில் தனக்கு பிடித்தமான வகையில் விபரணம் செய்கின்றார். 

  எமது சக உறவு எனும் அடிப்படையில், அது யார் என்றாலும் மனச்சுமைகள் இறங்குவதற்கு, மன ஆற்றுப்படுத்தலுக்கு துணை நிற்கலாம்.  

  மற்றும்படி, இலங்கையில் பிறந்து, கல்விகற்று, அகதிகளாக அலைந்து, எல்லா தரப்பினதும் அராஜகங்களை எதிர்கொண்ட சாதாரண மக்களால் யார் யார் என்னென்ன துரோகங்கள் இழைத்தார்கள் என்பதை இலகுவில் மறக்க முடியாது. 

 5. தனியொருவன்,

  உங்கள் கருத்துக்கள் யதார்த்தமானவை. ஆனால், எங்களுக்கு எங்கள் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் அமையவில்லை. இதனால், உங்கள் கருத்துக்களுக்கு பச்சை குத்தி அழகுபடுத்த முடியவில்லை. 

  பெயருக்கு ஏற்றபடி தனியொருவனாக கருத்துக்களை இடுகை செய்வதற்கு பாராட்டுக்கள். 🤟

  • Like 2
 6. 18 hours ago, தமிழ் சிறி said:

  புளூட்டோ ரொபியை .... நான் வாங்கி சாப்பிட்ட காலங்களில், பத்து சதம்.
  அதன் லேபிளில்... "குணசேன" என்று சிங்களப்  பெயர்,  இருந்த நினைவு. 

  நீங்கள் கூறுவது அளவில் மிகவும் சிறியது. 50 சதத்துக்கு வாங்குவது அளவில் பெரிது.

  புளூட்டோ தவிர..

  கச்சான் அல்வா, கோக்கனட் ரொபி, மாஸ்மலோ, ஜுஜூபி, கறுவா, பினாட்டு, பெப்பமின்ட், சுவிங்கம், மோல்டீஸ் இப்படி பல... 

 7. நான் அதிகம் சாபிட்ட ரொபி புளூட்டோ. வெள்ளை ரிசு பேப்பரில் சுத்தப்பட்ட மண்ணிறமான கிட்டத்தட்ட ஒரு இஞ்சி நீளமான இனிப்பு. ஒன்று ஐம்பது சதம். கடைகளை பொறுத்து தரம், நிறம்- மென்னிறம், கருநிறம், சுவை எல்லாம் வேறுபடும். இரண்டு ரூபாய்க்கு நாலு புளூட்டோ ரொபி வாங்கினால் ஒரு நாளைக்கு போதும். வாயில் ஒன்றை போட்டு அரை மணித்தியாலம்கூட மினக்கடலாம். ரியூசன் போகும் போதும், வரும்போதும் புளூட்டோ வாங்குவது வழமை.

 8. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நன்கொடை தரும் பெருந்தகைகளின் நாமங்களை நாங்கள் கல்லில் பொறித்து விமானநிலையத்தில் விளம்பரப்படுத்துவோம் எனக்கேட்டு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் உண்டியல் குலுக்கி பார்க்கலாம். நல்ல வசூல் சேரும். 

 9. 14 hours ago, கிருபன் said:

  இதை வேறு இடத்தில் விவாதிக்கலாம். ஜனரஞ்சமாக வணிக நோக்கத்திற்காக எழுதுவதையும், நவீன இலக்கியத்தையும் ஒன்றாக குழப்பிக்கொள்கின்றீர்கள். இது தங்க நகையையும் கில்ட் நகையையும் ஒன்று என்று சொல்வது போலத்தான்.

  ஒருவர் பொழுதுபோக்குக்காக எழுதுகின்றார். ஒருவர் பெருமை, புகழுக்காக எழுதுகின்றார், ஒருவர் பிரச்சாரத்துக்காக எழுதுகின்றார், ஒருவர் எழுதுவதை தொழிலாக செய்கின்றார். எல்லாரும் ஒரு காரணத்துக்காக எழுதுகின்றர்கள். ஒரு ஊடக சாதனத்தை இன்னொன்றுடன் ஒப்பிடுவதும் கடினம். 

  நேரம், வசதி, வாய்ப்பு எல்லாம் கிடைத்தால் எல்லாரும் நவீன இலக்கியத்தில் மினக்கடலாம். எழுதலாம் வாசிக்கலாம். இந்த நவீன உலகில் மக்களை படைப்புக்கள் சென்றடைவதில் சினிமாவுக்குள்ள வீரியம் அபரிமிதமானது. 

  ஒரு சிறியகூட்டம் தாங்கள் கல்விமான்கள், அதிகம் படித்தவர்கள், தமக்கு தெரிந்ததே இலக்கியம், தாம் கூறுவதே இலக்கியம் என்று நிறுவிக்கொண்டு போவார்கள். ஆனால், இவர்கள் பெருன்பான்மை மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெறமுடியாவிட்டால்.. இவர்கள் மொழி சாதாரண மக்களுக்கு புரியாவிட்டால் சுய இன்பம் காண்பது தவிர வேறு அதிகம் என்ன செய்யமுடியும் என தெரியவில்லை.

 10. 12 hours ago, கிருபன் said:

   வைரமுத்து நல்ல சினிமா பாடலாசிரியர். ஆனால் சிறந்த கவிஞரோ எழுத்தாளரோ அல்ல.

  ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

  வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின்முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.”

   

  மிகுதியை அறிய..

   

  மொத்த தமிழ் பேசும் சனத்தொகையில் இலக்கியம் அறிந்த வாசகர்கள், பொதுவாசகர்கள் பரம்பல் பற்றி முதலில் கூறுங்கள். அதன் சதவிகிதம் என்ன?

  எழுந்தமானமாக தமிழ் பேசும் நூறு பேரை அண்மித்து அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் நபர் பெயரையும், வைரமுத்து பெயரையும் குறிப்பிட்டு இருவரையும் யார் என கூறுமாறு கேட்டால்.. பெரும்பாலானோர் எவரை அடையாளம் காட்டுவார்கள்?

  வைரமுத்துவின் வரிகள் தமிழ் அதிகம் எழுத, வாசிக்க தெரியாத புதிய தலைமுறை குழந்தைகளுக்குகூட பரீட்சயமானவை. நீங்கள் குறிப்பிடும் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் எத்தனைபேருக்கு பரீட்சயம்?

  சாதாரண பொது சனத்தை சேரமுடியாத படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மாத்திரம் நுகர்பவை.

  நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் சினிமா ஊடகத்தின் பங்கு அளப்பரியது. சினிமா படைப்பிலக்கியத்தில் வைரமுத்து ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

   

  • Like 1
 11. சர்வஜன வாக்குரிமை மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிமுறையில் இன்னோர் மைக்கல். மன்னர் ஆட்சியில் வாழ்ந்து பழகிய மக்கள் மக்கள் ஆட்சியின் செளகரியங்களை பெற்றுக்கொள்ள கிடைத்த உன்னதமான ஒரு பொறிமுறை. ஆனால் நிறைவான ஒரு தீர்வு என சொல்வதற்கு இல்லை. ஒரு காலத்தில் இதைவிடவும் சிறப்பான ஒரு பொறிமுறை அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம்.

 12. வணக்கம் நாதமுனி,

  எழுத்தாணியை டெஸ்க்டொப்பில் நிறுவி நேரடியாக தமிழில் எழுதுவதாலும், இப்போது நேரமும் உள்ளதாலும் சற்று விரிவாக எழுத முடிகின்றது. வழமையாக அவ்வப்போது கைத்தொலைபேசி மூலம் வருவதாலும், மற்றும் இங்கு விவாதங்களில் ஈடுபட ஆர்வம் இல்லாதபடியாலும் அதிகம் எழுதுவதில்லை. 

  வைரமுத்து பற்றி அவர் எழுத்தாற்றல் சம்மந்தமாக எனக்கும் சுய மதிப்பீடுகள் உள்ளன. ஆயினும் எமது விறுப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் வைரமுத்துவின் எழுத்துக்கள் தமிழ்கூறும் நல் உலகம் மீது செலுத்திய பாதிப்புக்களை எவரும் குறைத்து  மதிப்பீடு செய்ய முடியாது. 

  பச்சையாக சொல்வதானால் வைரமுத்து தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறப்பதே பலருக்கு வயித்து எரிச்சல். குறிப்பாக தங்களை இலக்கியவாதிகள் என இனம் காட்டிக்கொள்பவர்கள் பலருக்கு வைரமுத்து அவர்கள் என்றாலே அலர்ஜி.

  வைரமுத்துவின் வரிகள் சில்லறைத்தனமானவை என்பதை நிறுவி சுய இன்பம் காண்பது பலருக்கு பொழுதுபோக்கு. சாதாரண மக்களுக்கு புரியமுடியாத பாசையில் இலக்கியம் எனச்சொல்லி எதையாவது கிறுக்குவது. பின்னர் மக்களின் போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனும் ஏமாற்றத்தில் படைப்பாளி மீது பொறாமை கொள்வது... தமிழ் இலக்கிய பரப்பில் இவை எல்லாம் புதியவை அல்ல.

  அந்தக்காலத்தில் கவிஞர் கண்ணதாசன் மீது வெறுப்பை உமிழ்ந்த எத்தனையோ தமிழ் இலக்கியவாதிகள் உள்ளார்கள். 1980களில் வந்த தமிழ் இலக்கியப்பரப்பு உரையாடல்களை கூர்ந்து கவனித்தால் இவை எல்லாம்; வியாதி என்றும் சொல்லலாம் விரிந்து கிடப்பதை, புலப்படுவதை காணலாம்.

  தமிழ் சினிமா ஊடகத்தின் மூலம் மக்களை கவர்ந்து தமிழ் மக்கள் மனங்களில் இலகுவாக இடம்பிடித்தது கண்ணதாசன், வாலி, வைரமுத்து செய்த தவறுகள் இல்லை. இவர்களை வைத்து தாம் என்ன லாபம் பண்ணலாம் என்று ஒரு கூட்டம் அலைகின்றது. 

  வைரமுத்துவினால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுபவர் சம்மந்தப்பட்ட தரப்புடன் சட்டரீதியாகவோ அல்லது சமரசம் மூலமோ, பேச்சு வார்த்தை செய்து  ஒரு தவறுக்கு தண்டனை கொடுப்பது, இழப்பீடு பெறுவது ஒரு விசயம். ஒரு பிரச்சனை அத்துடன் முடிந்தது. அப்படி அல்லாமல் ஆயுள் முழுதும் ஒருவரை இலக்கு வைத்து முழுதாக தாக்கி அழிப்பது வேறு.

  ஆயிரம் ஆயிரமாம் பாடல்கள் மூலம் தமிழ் மக்கள் மனங்களுக்கு மருந்து தடவிய ஒரு உளவியல் மருத்துவன் போன்ற ஆற்றல் மிக்க கலைஞனை யாரோ சில முகவரி இல்லாத, சுய விளம்பரம் தேடும் 'மீடூ-நானும்-நானும்' நபர்கள் தமது இஸ்டத்துக்கு சோசல் மீடியாவில் வறுத்து எடுப்பதால் எனது கருத்தையும் இந்த இடத்தில் பொதுவெளியில் பதிவு செய்கின்றேன்.

  வைரமுத்து என்கின்ற தமிழ்நதி தடுப்புக்கள் வந்தாலும், திசை திருப்பல்கள் நடந்தாலும் தொடர்ந்து பிரவாகம் எடுத்து ஓடவேண்டும், வாடிப்போயுள்ள வரண்ட தமிழ்  உள்ளங்களை நனைக்க வேண்டும், குளிர்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  எத்தனை பெரியவர்கள் இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ளார்கள். காதும் காதும் வைத்தாற்போல் பிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து இந்த விடயத்துக்கு புற்றுநோய் போல் பரவவிடாமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

   

  • Like 4
 13. கவிதையா அல்லது பாடலா அல்லது வெறும் வெற்று வரிகளா என மதிப்பீடு செய்வது அவரவர் சுய விறுப்பு, வெறுப்பு. ஆனால் சாதாரண தமிழ் பேசும் மக்கள் காதுகளிற்கு வைரமுத்து பேசும் மொழி மிகவும் பரீட்சயமானது. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு மட்டங்களில் தமிழில் தமது புலமையை வெளிப்படுத்தினார்கள். வைரமுத்து அவர்கள் சினிமா என்கின்ற ஊடக சாதனத்தில் உலகெங்கும் ஒலித்தார். கண்டம் விட்டு கண்டம் நாங்கள் விமானத்தில் பயணம் செய்தது தொடக்கம்... மிக நீண்ட புகைவண்டி, பேருந்து, கார் ஓட்ட பயணங்களில் வைரமுத்து பேசும் மொழியை கேட்டு ரசித்தபடி காலத்தை கடந்தோம்.

  எத்தனைவிதமான கற்பனைகள்... எத்தனைவிதமான விபரணங்கள்.. ஆண்களையும், பெண்களையும் காதலில் பித்துகொள்ள வைத்ததில் வைரமுத்துவின் வரிகளிற்கு அதிக பங்குண்டு. அவர் வரிகள் வீரியம் மிக்கவை. போதையை தரக்கூடியவை.

  ஒரு கலைஞன், கவிஞன், ஒரு முழுநேர படைப்பாளி வாழும் வாழ்க்கை, உலகம் வேறுப்பட்டது. அவனது/அவளது ரசனைகள், பார்வைகள் வேறுபட்டன. நாம் தரிசிக்க முடியாத கோணத்தில் அவன்/அவள் தான் காணும் வண்ணமயமான வாழ்வின் கோலங்களை எங்களுக்கு எழுத்தில் வடிக்கின்றான்/றாள். அவன்/அவள் மனதளவில் ஒரு குழந்தையாகக்கூட கிடக்கலாம். 

  ஒருவரின் பலவீனம் அறிந்து, ஏதாவது உட்காரணங்களுக்காக, கடைசிவரை வெளி உலகுக்கு தெரியமுடியாத உள் நோக்கங்களுக்காக யாரும், எவரையும் இந்த சோசல் மீடியா உலகில் போட்டு தாக்கலாம். யார் என்ன பித்தலாட்டம் உண்மையில் செய்கின்றார்கள் என்று சாதாரண பொதுசனம் அறிவது கடினம். 

  வைமுத்து அவர்களுக்கு இப்போது அகவை 67. அவர் தனது ஆயுட்காலத்தில் இன்னும் எத்தனை படைப்புக்களை செய்வாரோ தெரியாது. சமூக அழுத்தங்கள் அவர் படைப்பாற்றலுக்கு குந்தகம் விளைவிக்கலாம். ஒரு சிலர் அவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய தேசிய விருதுகளை தொடர்ந்து தட்டிவிடலாம், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தலாம். ஆனால்..

  ஒரு படைப்பாளி அவர் பெறுகின்ற விருதுகள் மூலம் நினைவுகூறப்படுவது இல்லை. ஒரு படைப்பாளியை அவரது படைப்புக்களே நிலைநிறுத்துகின்றன. அவர் உருவாக்கிய படைப்புக்களே அவருக்கு பெருமை சேர்க்கின்றன. இந்தவகையில் வைரமுத்து அவர்கள் தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்கும்வரை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் கேட்கும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பார். இதை எவராலும் தடுக்கமுடியாது. 

  • Like 2
 14. சோசல் மீடியா வந்தபின் உலகம் நன்கு மாறிவிட்டது. 

  தனிநபர்கள் ஆளையாள் பிளக் மெயில் செய்வதற்கும், பழிவாங்குவதற்கும் சோசல் மீடியா நல்ல வசதியாகிவிட்டது. ஒன்லைனில் விரோதங்களை வெளிப்படுத்துவது, பல்வேறு ஒன்லைன் மோசடிகள் நாளாந்த வாழ்வின் பகுதியாகிவிட்டன. சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது ஒரு வகை. திட்டமிட்டு சோசல்மீடியாவில் சாணி அடிப்பது  இன்னோர் வகை. 

  எமக்கு வைரமுத்து என்கின்ற பாடல் ஆசிரியர், கவிஞர் அவர் பாடல்கள், கவிதைகள் வாயிலாக பரீட்சயம். ஆனால், வைரமுத்து என்கின்ற தனிமனிதனின் குணாம்சங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடத்தை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. 

  திருக்குறள் உலகப்பொதுமறை என போற்றப்படுகின்றது. இதை இயற்றியவர் திருவள்ளுவர் என சொல்லப்படுகின்றது.

  திருவள்ளுவர் காலத்தில் சோசல்மீடியா பாவனை காணப்பட்டால்.... அவருக்கும் சாணி அடி???

 15. இலங்கையில் நடைபெற்ற அவலங்கள், சம்பவங்கள் உலக அரசுகளிற்கு மிக நன்றாகவே தெரியும். இலங்கை அரசு உலக அரசியலில் நடுநிலமையையும், இராஜதந்திரமான போக்கினையும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலினையும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கடைப்பிடித்து வருகின்றது. பாலஸ்தீனியர்கள், மற்றும் வேறு சில இனத்தினர், அண்மையில் சுதந்திரம் பெற்ற புதிய உலக நாடுகள் இலங்கை தமிழர்கள் போன்று அதே ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் அவர்கள் ஏன் தமிழர்களுக்கு ஆதரவு தராமல் இலங்கை அரசுக்கு ஆதரவாய் நின்றார்கள், நிற்கின்றார்கள் என்பதற்கான ஒரு காரணம் இது. 

   

 16. அரசியல்வாதிகளின் சுயநலம், ஆணவம், மனமுதிர்ச்சி அற்ற தன்மை, சிறுபிள்ளைத்தனம், பேராசை... இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், சோசல்மீடியா உலகில் இனி பழைய விளையாட்டுக்களையே தொடர்ந்தும் காட்டி மக்களை ஏமாற்றுவது கடினம்.

 17. 49 minutes ago, nedukkalapoovan said:

    

  இதே தமிழிச்சிகளை சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு என்று மொழிந்தவர் தான் கோத்தபாய.. நந்தசேன.. என்ற கொடி மிருகம். அந்த மிருகத்தின் இராணுவத்திடம் சீருடை வாங்குவதிலும்..  கேவலம் எதுவுமில்லை. 

  மக்களை அடக்கி ஒடுக்க அல்ல.. இராணுவம். நாட்டை பிற ஆக்கிரமிப்பில் இருந்து காக்கவே இராணுவம். 

  உலகில் கொரோனாவை கட்டுப்படுத்த.. இராணுவக் காவல் சாவடி போட்டு துப்பாக்கி ஏந்தி கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில் சொறீலங்கா தான் முதன்மையா இருக்குது.

  இதே ஐரோப்பாவில் பெரும் கொரோனா நெருக்கடியை சந்தித்த பிரிட்டனில் கூட இராணுவம்.. ஆயுதத்துடன் மக்களை நோக்கி திருப்பட்டதில்லை.

  எதுக்கும்.. சிங்களவன் செய்யும் அநியாயங்களை நியாயப்படுத்துவது.. சில தமிழர்களின் இயலாப் புத்தி என்று தான் சொல்லனும். வேறு எதுவும் அதனை விளக்கச் செய்ய முடியாது. 

   

  கோத்தபாய, மகிந்தர் குடும்பம் ஆட்சியை கைப்பற்ற முன்னரும் இராணுவத்தில் தமிழர்கள் பணியாற்றினார்களே. 

  இலங்கை நாட்டு இராணுவத்தின் பணியாற்றுவதற்கு  தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நாட்டில் அனைத்து அரசு பணிகளிலும் பணியாற்றும் தமிழர்கள் இராணுவத்தில் இணையாமல் விலகிச்செல்வது இனவாதத்துக்கு இன்னும் வசதியாகிச்செல்லும். 

  இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டும் போர் நிறைவடைந்தும் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இனி நடக்கப்போகின்றவை பற்றி பார்க்கலாமே. 

   

  • Like 1
 18. யாரானால் என்ன? தமிழோ, சிங்களமோ.. தனிச்சிங்களத்தில் ஆவணங்கள், சுற்றுநிறுபங்கள் எழுதப்படுகின்றன, அனுப்பப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைக்கும் இந்தக்காலத்தில் பாதுகாப்பு படையினர் தமிழில் உரையாடுகின்றார்கள் என்றாலே ஏதோ ஒரு மகிழ்ச்சிதான். 

  முன்னாள் பெண் போராளிகள்கூட இந்த மோட்டார் சைக்கிள் படையில் பணியாற்றக்கூடும். யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா?

  கண்ணிவெடியகற்றும் ஆபத்தான பணியில் உழைப்புக்கு வேறு வழிகள் இல்லாதபடியால் முன்னாள் போராளிகளும் ஈடுபடுவதாக அறிந்தேன்.

  எங்களைப்போல் இவர்களுக்கும் வெளிநாட்டு வாழ்க்கை யோகம் அடிக்கும் பட்சத்தில்.. (சுய தணிக்கை*)

  • Like 1
 19. அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன். இலங்கை சீனாவின் பொறியினுள் படிபபடியாக செல்வது கண்டு முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா ஆவேசம் அடைந்துள்ளாராம்.

  காலம் எப்போதும் ஒரே மாதிரி அமைவது இல்லை. இன்னும் 50 வருடங்களில் மகிந்த சகோதரர்கள், குடும்பம் பெரும்பான்மை சிங்களவர்களினால் தேசத்துரோகிகளாக சித்திரிக்கப்படலாம்.

  மிக வேகமாக மாற்றம் காணும் சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப உலகில் மக்களின் சங்கிலி கோர்வையாக பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் எவரும் தூக்கி எறியப்படலாம். தனிநபர்கள் நாட்டை கட்டுப்பாட்டில் வைப்பது முடியாமல் போகும். 

  சீனாவிற்கு மற்றைய நாடுகளின் இறையாண்மையை மதிக்கும், பாதுகாக்கும் விடயத்தில் ஏற்கனவே கெட்ட பெயர். இலங்கை சீனா இடையிலான தேனிலவு பெரும்பான்மை சிங்கள மக்களுக்கே இனியதொரு அனுபவமாக அமையாது.

 20. இலங்கை மக்களின் பூரண சம்மதம் தேவை. இலங்கை ஒரு சில அரசியல்வாதிகளின் குடும்ப சொத்து இல்லை. சீனா விடயத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

 21. கொரானாவும் வந்தது; கலியாண புரோக்கர் தொழில், வெளிநாட்டு சம்மந்தம், மாப்பிள்ளை பொம்பிளை தேடல், மணமகன், மணமகள் கண்டுபிடிப்பு, கலியாணம், போக்குவரத்து எல்லாம் பாழ்; இரண்டு வருடங்கள் இழப்பு.

 22. ஒருவரும் ஒருவரையும் மதிக்க எல்லாம் தேவை இல்லை; கருத்துக்கள விதிமுறைகளை அனுசரித்தாலே போதும் முடி கொட்டாது. நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? 😁

  யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினரே,

  எமது சக கருத்தாளர் குமாரசாமி அவர்கட்கு தலையில் முடி வளர வைக்க (அதாவது...டிரான்ஸ்பிளாண்ட் செய்துவிட) முடியுமா? திண்ணை உரையாடலுக்கு மீண்டும் அனுமதி கொடுக்க இயலுமா? 🤔

 23. இலங்கை மீள முடியாத கடன் சுமையில். ஆடம்பரம் சொகுசு எல்லாம் உண்மையில் தேசப்பற்று உள்ளவர்களுக்கு இப்போது தேவைதானா? ஒரு குட்டி நாட்டுக்குள் போக்குவரத்து செய்வதற்கு தேசப்பற்று உள்ள அரச பணியாளர்களுக்கு பழைய வாகனங்களை/மாற்றீடுகளை பயன்படுத்த முடியாதா? பிராண்ட் நியூவில் குந்தினால்தான் அலுவல் நடக்குமா?  ஒவ்வொருவரும் அரசாட்சிக்கு வரும்போது தாய்நாட்டை தங்கள் சொகுசுக்கு சீரழித்து விட்டு செல்லட்டும்; நாடு நல்லாய் உருப்படும்!

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.