Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  171
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. கொரோன வைரஸ் நிலவரம் எப்படி செல்லும் என்று எவருக்கும் தெரியாது. அது சில மாதங்களில் கட்டுக்குள் வரலாம். வருசங்களும் ஆகலாம். முடிவில் யார் யார் உயிருடன் மிஞ்சுவார்கள். அது விட்டு செல்லும் அழிவுகள், பொருளாதார சரிவுகள் எதுவுமே எமக்கு தற்போது தெரியாது. 

  சமூக தனிமைப்படுத்தல் அணுகுமுறையை ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் பொறுமையாக கடைப்பிடிப்பார்கள் என்பதும் தெரியாது. 

  ஒரு கட்டத்தில் கொரோன வைரஸ் என்று பயந்து ஒதுங்குவதை விட  நாளாந்த வாழ்க்கையை வழமைபோல் வாழ்வதே பலரின் தெரிவாய் போகலாம். இந்நிலையில் கோயில்கள், விகாரைகளிற்கு வருகை வந்து  மனஆறுதல், மன தைரியம் பெற பலரும் முனையலாம்.

  கோரோனோ வைரஸில் இருந்து தப்புதல் சரி, ஆனால் மறுபக்கம் இதனால் வரக்கூடிய உளவியல் நெருக்கடிகள், மன உளைசல்கள், மன வியாதிகள் பற்றியும் யோசிக்க வேண்டும். இவற்றை சமாளிக்க சமயஸ்தலங்கள் உதவக்கூடும். 

 2. On 3/16/2020 at 9:22 AM, போல் said:

  ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்தின் அடையாளம். அதனை யாரும் திசை மாற்றி அல்லது கொள்கை மாற்றுவதற்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து அனுமதிப்பீர்களாக இருந்தால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் மீது நீங்கள் நின்று பேசுகின்ற பேச்சுக்கு உங்களை தெய்வம் தண்டிக்காவிட்டாலும் இவர்களின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது.

  இப்படி ஒரு விசயம் உள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரியுமா? இந்த வாதத்தில் போரில் இறந்து போன பல்லாயிரம் சனங்களின் ஆத்மாக்கள் கணக்கில் எடுக்கப்பட தேவை இல்லை? 

 3. ஒரு பக்கம் கோரோனோ கிருமி தாக்குதல். இது வேற; எந்த மண்டை பிழையின் செயலோ. மகிழ்ச்சியாய் வாழ்க்கையை வாழவேண்டிய வயது. கனடாவில் இவ்விளம் பிள்ளைக்கு இப்படி ஒரு முடிவு. ஆழ்ந்த அனுதாபங்கள்! 

 4. இந்துக்கள் மதம் மாறுகின்றார்கள் என்று பலர் புலம்புகின்றார்கள். 

  மத மாற்றத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சாதியம்.

  சாதி வேறுபாடுகளால் ஒதுக்கப்படுபவர்களுக்கு மதம் மாறுவது ஒரு ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் கொடுக்கலாம். 

  கொடியில் தொங்குவது நந்தி ஆகட்டும், சிங்கம் ஆகட்டும் கருடன் ஆகட்டும்... இனம், மதம் என்று பரந்து விரியமுன் மூலமுதல் ஆரம்பம் சாதியமே.

  கலியாணம் பேசட்டோ?

  பேசட்டோ; பேசலாம் பேசலாம் பேஷாய் பேசலாம்; சாதியை சொல்லிவிட்டு.

  சாதி பாகுபாடுகளில் இருந்து வெளியில் வராதவரை தமிழர் சுயநிர்ணயம் எல்லாம் வெறும் கனவே. 

  • Like 3
 5. On 3/11/2020 at 9:36 PM, கற்பகதரு said:

  UoJ_logo.png

  இது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சின்னம். இதில் இந்து சமயத்துக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.

  https://en.m.wikipedia.org/wiki/University_of_Jaffna

   

  படத்தில் உள்ள மாடு இந்து சமயம் என்பதை விட யாழ்ப்பாண வெள்ளாளர் சாதியை குறிப்பதாகவும் இருக்கலாம்.  

  மாட்டு இறைச்சியை கிறிஸ்தவர்களும், முசுலீம்களும் அடித்து உண்கின்றார்கள். எனவே, இது இந்து சமயத்தை மட்டும் குறிக்கவில்லை. 

 6. கதிரைக்கு ஆசைப்படுவதில் தப்பேதும் இல்லை. 

  உங்கு வைத்தியர், வக்கீல் தொடக்கம், ஊடகவியலாளர்வரை  சேவை மனப்பான்மை, மனிதாபிமானத்துடன் செய்யப்பட வேண்டிய அத்தனை துறைகளும் காசுக்காகவும், புகழுக்காகவும், தனிப்பட்ட நலன்களுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது, பயன்படுத்தப்பட்டுள்ளது. 

  வெளிநாடுகளில் உள்ள முதலைகள் தமக்கு உகந்த குடும்பிகள் தாயகத்தில் பதவியை பிடிக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமது கிடுக்கு பிடியினுள்வைத்து குடும்பிகளை ஆட்டுவிப்பதை  இவர்கள் தமது தாயக கடமையாக கருதுகின்றார்கள். வேறு காரணங்களும் இருக்கலாம். இதன் சூத்திரம் முதலைகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.   

 7. தற்போதைய சூழ்நிலையில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பது நல்லது. 

  நிலைமை நாளுக்கு நாள் வேகமாக மாற்றம் காண்கின்றது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கடினம் ஆகலாம். போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடையலாம். பொருளாதார முடக்கங்கள் நாளாந்த வாழ்வை நிலை குலைய செய்யலாம். 

  வியாதியின் நேரடி பாதிப்பு என்பதை விட இதனால் வரக்கூடிய வெளி நெருக்கடிகள், அலைச்சல்கள் அதிகம். 

 8. சாதி, சமயம், ஊர், பாடசாலை, சங்கங்கள், இயக்கங்கள் என பல்வேறு  வேறுபாடுகளால் பிரிந்து நின்று ஒருவருக்குள் ஒன்னொருவர் குத்துப்படுவது தமிழர்களாகிய எமது அடையாளம்.

  இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறாவது எமது பலத்தை காண்பிக்கின்றது.

 9. காணி உரிமையாளருக்கு (உண்மையான உரிமையாளராக இருந்தால்) கிடைத்தது மகிழ்ச்சி.

  மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று கூறப்பட்டது. இங்கு புலி முகமூடியை அணிந்து பலர் செய்த, செய்கின்ற அநியாயங்கள் நாங்கள் அறிந்ததே.

  குறிப்பாக மாவீரர் குடும்பம் எனும் tokenஐ காட்டி சிலர் செய்த, செய்கின்ற அராஜகம் அதிகம்.

  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சீரழிந்து போனமைக்கு அமைப்பை பாவித்து குளிர் காய்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. 

  தமது சுய லாபங்களுக்காளாக, தமது சுய பெருமைக்காக, தமது தனிப்பட்ட கணக்கு, வழக்குகளை தீர்த்து கொள்வதற்காக புலி முகமூடியை  அணிந்தவர்கள், அணிந்து உள்ளவர்கள் பலர். 

  யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அடாவடித்தனமாக அடுத்தவன் வீடு, காணியை பறிமுதல் செய்வது வழமையாக இருந்தது. இதை முன்னின்று செய்தவர்கள் புலி முகமூடியை அணிந்த கிருமிகள். 

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.