Jump to content

குழலி - Kuzhali

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  12
 • Joined

 • Last visited

Community Reputation

10 Neutral

About குழலி - Kuzhali

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. மிக்க நன்றி சசிவர்மன். உங்கள் பாராட்டில் மிக மகிழ்ந்தேன். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெண் போன்ற பெண்களின் பலவீனந்தான் இப்படியானவர்களுக்கு வசதியாக அமைந்து விடுகின்றது. யுத்த அனுபவங்களைப் பற்றிக் கதைக்க ஹோட்டல் தேவையா? இப்போதுதானே எத்தனையோ வசதிகள் உள்ளன. அம்மா, அப்பா, சகோதரம், உறவு, நட்பு... என்ற வட்டத்துக்குள் உள்ளவர்களை நேரில் பார்த்து பேச முயன்றால் ஏற்றுக் கொள்ளலாம். சும்மா ஒருவர் அதுவும் Facebookஇல் அறிமுகமான ஒருவர் "ஹோட்டலுக்கு வா" என்றதும் போக வேண்டுமா? அந்தளவிலாது அந்த வைத்தியரின் உள் நோக்கத்தைப் புரிந்து அவர் தப்பித்துக் கொண்டது நல்லதே
 2. நன்றி உடையார். அழிய வேண்டுமென்று நினைத்தால் ஏராளம் வழிகள் உண்டு. Facebook தான் வேண்டுமென்றில்லை. Facebook ஆலும் பயன்கள் நிறைய உண்டு. நாம் அவதானத்துடன் செயற்பட்டால் சரி. மிக்க நன்றி சுவி
 3. நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச்
 4. அப்படி ஒரு போட்டி மனப்பான்மையுமில்லை. நட்போடு வந்திருக்கிறேன் என்னை அப்படி பகிடி பண்ண மாட்டியள்தானே?
 5. மூன்றாகப் புறித்து வாசித்தேன். மிக நீட்டி எழுதியுள்ளீர்கள். ஐரோப்பியாவில் நடந்து கொண்டிருக்கும் துன்பமானதும் கொடுமையானதுமான சம்பவங்களில் ஒன்று. ஆனாலும்வாசித்துக் கொண்டு போகும்போது இப்படியானதொரு முடிவை நான்எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே இப்படியான கொடுமையான வாழ்வு வாழும் பெண்களுக்கு நல்லதொரு வாழ்வைக் கொடுக்க முடியா விட்டாலும் பரவாயில்லை. இப்படியொரு கொடிய முடிவைக் கொடுக்கத் துணியும் ஆண்களும் உள்ளார்களே. பெருந்துயரம்
 6. அருமை. மிகவும் ரசித்து வாசித்தேன் குமார் மூர்த்தி குறிப்பிடத்தக்கதொரு நல்ல எழுத்தாளர். அவரது எள்ளலுடனான இந்தக் கதையை இங்கு பகிர்ந்து எம்மையும் மகிழ்ச்சிப்படுத்தியதற்கி நன்றி கிருபன்
 7. என்னை வரவேற்ற உங்கள் எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி
 8. அடிக்கடி இதாலை போறனான். ஒரு எட்டு பார்த்திட்டுப் போவம் எண்டு உள்ளை வந்திருக்கிறன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.