Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

sOliyAn

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  2,687
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by sOliyAn

 1. எனக்கு ஒண்டுமே விளங்கேல.. ரெலிபோன்ல நேரடியா கதைச்சால்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்.. நம்பரைத் தாங்கோ!!
 2. சகோதரி நிலாமதிக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!
 3. ஆ.. நான் போட்ட வாழ்த்தை காணேலை! கானேலை!! காணேல!!! ( பொய் சொல்லுறான்!! ) யாயினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
 4. எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 5. மனம் நிறை நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
 6. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி மற்றும் நெடுக்ஸ்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரதி .
 7. தமிழ் சிறிக்கு மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
 8. 500 பச்சைப்புள்ளிகளை பெற்றுப் பிரகாசிக்கும் மருதங்கேணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
 9. நேற்று ராத்திரி வன்னியனும் சிறியரும் எதோ செய்யப்போகினம் எண்டது திண்ணையில மணத்தது... வடிவாக பார்க்கமுடியவில்லை. விடிய எழும்ப வேணும் என்ற கவலையோட போய் படுத்தீட்டன். இப்பதான் பாக்கிறன்... வன்னியன் சார்.. சிறி சார்.. மற்றும் வாழ்த்துகள் தெரிவிப்போர் யாபேருக்கும் நன்றிகள்!!!!! மேலும் விரைவாக பச்சைப் புள்ளிகளை குவிக்கும் விவசாயி விக், யாயினி ஆகியோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!!!!
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகர்!
 11. அர்ஜுனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
 12. சாந்தி வவுனியன், சுண்டல் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
 13. நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!!
 14. பகலவன், புலவர்!! நல்லினிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
 16. அலை மகளுக்கு பிந்திய பிறந் த நாள் வாழ்த்துக்கள்
 17. யாழில் ஒரு காதல் 8 அங்கா பாருங்கோ…! முள்ளுக்கிளுவைக் கதியால்கள் நெருக்கினாற்போல் அடைத்திருந்த வேலியோடு ஒட்டியிருந்த பச்சைத் தகரப் படலையடியில் குந்தியிருக்கிறாரே… அவர்தான்.. அவரேதான்.. ஆத்தைப்பிள்ளை ஆச்சி. ‚உந்தக் கிழவிக்கு வேறை வேலை இல்லாட்டி வீட்டுக்கை போய் படுத்திருக்க வேண்டியதுதானே.. இண்டைக்கோ நாளைக்கோ எண்டு மண்டையைப்போடுற வயசில றோட்டாலை ஆர் போகினம், வருகினம் எண்டு விடுப்புப் பாத்துக் கொண்டு..‘ அந்த வீதியிலுள்ள சனம் முணுமுணுத்தாலும், நேரே ஆத்தைப்பிள்ளை ஆச்சியிடம் கூறத் துணிவில்லை. சொன்னால் அவ்வளவுதான்… ஆச்சியின் வாயில் இருந்து உதிரும் சொற்களில் இருந்து இலகுவில் தப்ப முடியாது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ‚உந்தக் கிழவியோடை அண்டக்கட்ட முடியாமைத்தான் அந்தாள் யாக்குறுக் கிழவன் நேரத்தோடை மண்டையைப் போட்டூட்டுது..‘ ஆத்தைப்பிள்ளை ஆச்சியின் கணவர்தான் யாக்குறு. இருவரின் மண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள் அம்பிகா.. அவளுக்கு ஒரு மகன் நாகேந்திரன். கட்டிளம் காளை. படிப்பு ஏறாததால், சொந்தமாக உள்ள காணிகளில் வெங்காயம் மிளகாய் என்று தோட்டம் செய்து கொண்டிருந்தான். "பிள்ளை… அங்கை பார்.. அந்தக் கோழியைக் கலை பிள்ளை.. காலங்கார்த்தால விறாந்தைல பீச்சப் போகுது" என்று கத்தினாள் தாய் பொன்னம்மா "சும்மா இரணை.. நா பள்ளிக்கூடத்துக்கு நேரஞ்செண்டு போச்செண்டு அவதிப்படுறன்.. நீங்கள் அதுக்கை வேறை" என்று எரிச்சலுடன் கூறினாள் நிலா. "ஓமோம்.. ஒண்டையும் ஒழுங்காய் வைக்கிறேல்லை.. அததை அங்கங்கை போடுறது.. பேந்து சுடூது மடியைப் பிடியெண்டு அந்தந்த நேரத்தில தேடினால் நேரம் போகும்தானே.. நான் என்ன சொன்னாலும் உனக்கு புறக்குடத்திலை ஊத்தின நீர்போலை.. சரி சரி.. கெதியா வெளிக்கிடு பிள்ளை.." அவசர அவசரமாக தோள்வழி தவழ்ந்து புரண்டு நெளிந்த அந்த இரட்டைப் பின்னல்களை முன்னால் இழுத்து யன்னலில் இருந்த சின்ன கண்ணாடியில் அழகு பார்த்தவள் எதையோ நினைத்தவளாகக் குபுக்கென்று சிரித்துக் கொண்டாள். 'ஏ.. இரட்டைப் பின்னலே.. பெயர் தெரியாத மதுரனுக்கு என் அடையாளப்படுத்தியது நீதானே?!’ பின்னல்களைப் பின்னால்விட்டு, நெற்றியில் சிறு கோடாக விபூதியை ஒரு விரலால் பூசியவாறு, "அம்மா.. போவிட்டு வாறன்.." என்று திண்ணையால் முற்றத்திற்கு இறங்கிணாள் நிலா. "பொறு பிள்ளை.. இந்தா தேத்தண்ணிய ஒரு வாய் குடி.. நான் றோட்டிலை போய் ஆர் வரீனம் எண்டு பாக்கிறன்.. எதுக்காலை தப்பினாலும் எங்கடை சனத்தின்ரை முழுவியளத்துக்காலை தப்பேலாது.." "உங்களூக்கு வேறை வேலை இல்லை… முழுவியளம் அது இதெண்டு கொண்டு.. திருந்தமாட்டியள்.." தாயிடம் இருந்து மூக்குப்பேணியை வாங்கி அண்ணாந்து வாய்க்குள் விட, விறுவிறென்று முகதலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு வீதிக்கு விரைந்தாள் பொன்னம்மா. சற்று தூரத்தில் ஆத்தப்பிள்ளை ஆச்சி தனது வீட்டு படலைக்கு முன்பாகக் குந்திக்கொண்டிருந்தார். "உந்தக் கிழவி வீட்டிலை அடங்கிக் கிடக்காது.. றோட்டாளாஇ போற வாறதுகளை ஆந்தைக் கண்ணாலை சுட்டுப் போடும்.." நிலா றோட்டடிக்கு வர, "அங்கால திரும்பிப் பார்க்காதை பிள்ளை.. ஆத்தைப்பிள்ளை குந்திக் கொண்டிருக்குது.. அதீன்ரை முகத்திலை முழிச்சால் ஒண்டும் விடியாது.. இப்பிடியே நேர பாத்துக் கொண்டு போ…" நிலாவுக்கு தாயின் அறியாமையை எண்ணிச் சிரிப்பு வந்தாலும்.. வழமைபோலவே தாயின் மனதைப் புண்ணாக்க விரும்பாமல் ஆத்தைப்பிள்ளை ஆச்சி இருந்த திசையை பார்ப்பதைத் தவிர்த்தவளாகச் செல்ல ஆரம்பிக்கும்போது ஆத்தைப்பிள்ளை பொன்னம்மாவைக் கூப்பிட்டார். "வேலியள் எல்லாம் கறையான் அரிச்சு உக்கிப் போட்டுது.. அதுதான் பாத்துக்கொண்டு நிக்குறன்..“ "ம்.. இதுக்கொண்டும் குறைச்சலில்லை.. விடுப்புப் பாக்கிறதுக்கெண்டு ஒரு வியாக்கியானம்.." அப்போது… அந்த வழியால் சுரேஷும் மதுரனும் கண்ணனும் சைக்கிளில் வருவதைக் கண்டு, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் முகம் சிவக்க நடை தளரத் தடுமாறினாள் நிலா. "அட.. உந்தா.. அதிஷ்டசாலிதான்.. ரட்டைப்பின்னலே முன்னலை வரூது.. இதுதான்போலை வீடு..“ என்று கிசுகிசுத்தான் கண்ணன். "ம்…“ - சுரேஷ். "டேய் மதுரா.. வீட்டை வடியாய் பார் மச்சான்.. இதுதான் சீதன வீடு.." என்று பெருங்குரலில் சிரித்தான். "ஆர் தம்பியவை நீங்கள்.. எங்கை போறியள்..“ ஆத்தப்பிள்ளை வார்த்தைகளால் கொழுவி இழுத்தார். "நாங்கள் சுரேஷிட்டை வந்தனாங்கள்.. இதாலை போறம்..“ "இப்ப காலம் கலியுகம்.. ஆரார் எங்கை போய் வரீனம் எண்டு ஆருக்கு தெரியும்… உந்த குமரியளும் வீடு வாசலள்ளை அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறேல்லை.. பொடியளும் றோட்டுவழிய படங்காட்டிக் கொண்டு திரியுதுகள்…“ 'சுரீர்‘ என்று தாக்கியது பொன்னம்மாவுக்கு. விறுவிறென்று நடக்கலானாள் நிலா. "கிழவி.. ஆரைச் சொல்லுறாய் எண்டு விளங்குது… மரியாதைக்கு பேசாமை இருந்தா வர வர மேலை மேலை போய்க்கொண்டிருக்கிறாய்… உன்னாலை றோட்டால பெட்டை பொடியள் போக வழியில்லை…“ பொன்னம்மா பொரிந்து கொட்டினாள். "ஓமடி ஓம்.. உண்மையைச் சொன்னால் பொத்துக் கொண்டு வரூதாக்கும்… இண்டைக்கு மூண்டு பேர் போறாங்கள்.. போகப் போக எத்தினை பேர் போறாங்கள் எண்டு பாக்கத்தானே போறன்..“ ஆத்தப்பிள்ளை ஆச்சியின் சத்தத்தில் வேலி ஓலைக்குள் இருந்து கரகரத்த கறையான்கூட அமைதி காத்தது. (தொடரும்…)
 18. ஆயிரம் பச்சை வாங்கிய அதிபராக்கிரம தமிழ்சூரியனுக்கு வாழ்த்துகள்!!
 19. கடவுளை கடவுளாகப் பார்த்தால் கடவுள் எங்கும் தெரிவார். கடவுளை கறுமமாகப் பார்த்தால் கறுமம்தான். இங்கே கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் ஏதோ தங்களின் மானம் மரியாதை போய்விட்டது போன்ற வறட்டுக் கௌரவ உணர்வில் ஒருவர் மனங்களை மேலோட்டமான வசைகாடல்ளின்மூலம் நோகடிப்பதையே அவதானிக்க முடிகிறது. மதங்கள் பொதுவாகக் கூறும் மனிதாபிமான உணர்வே பல கருத்தாடல்களில் இல்லாதபோது, இத் திரியை அகற்றுவது இப்படி ஒரு கசப்புணர்வை மறக்க வைக்க உதவும் என நினைக்கிறேன். மற்றும், காலம் காலமாக பிரிவினைகளை மட்டுமே கட்டிக் காவாந்துபண்ண இடம் பெறும் சாதி, சமயம் சம்பந்தமான கருத்தாடல்களை நிர்வாகம் தடைசெய்வது இக்கள உறுப்பினர்களிடையேயாவது கசப்புணர்வுகளை வளர்க்காமலிருக்க உதவும் என் நினைக்கிறேன். இக் கருத்தை தயவு செய்து நிர்வாகம் கவனத்தில் எடுக்கவும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.