• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் அரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  28
 • Joined

 • Last visited

Community Reputation

13 Neutral

About யாழ் அரியன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. நான் உள்ள வரேக்க ஓரு நாலு,ஐந்து நல்ல ஜீவனுகள் மட்டும் தான் வரவேற்றார்கள். இப்ப தோழி என்றொருத்தர் வந்தவுடனே ஆலாய்பறந்து விழுந்து வரவேற்கிறார்கள் எல்லோரும். ஆங், வாங்கோ தோழி. நானும் தோழன் தான்.
 2. காளான் கறி. மம்மம்மம சாப்பிட்டதே இல்லை. சரி அக்கா அந்த கப்பியலுக்கு எண்ணை விடுங்கோ. அயலட்டையில் சனம் தூங்கேலாது. முந்தி என்ர வீட்டுக்குப் பக்கத்தில இருந்த நண்பன் விடிய 4 மணிக்கு எழும்பி படிக்க தொடங்கிடுவான். அவன் முகம் கழுவ தண்ணி அள்ளுற சத்தம் கேட்க அம்மா தொடங்கிடுவா "உங்கா அந்தப் பிள்ள படிக்க எழும்பிடுத்து" என பிறகு ஒன்றும் செய்யேலாமல் நான் இரவு களவாக இறங்கி கப்பியலுக்கு எண்ணை ஊத்தினான். சமையல் நல்லாயிருக்கு. சிலவற்றில் கொஞ்சம் கவனமெடுங்க அக்கா.
 3. யாராவது இவரிடம் இந்த கேள்விக்கு பதில் வாங்கித் தர இயலுமா ? முன்னாள் போராளி, மற்றும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். புலம்பெயர்ந்து தன்னை புலிகளின் கொள்கை வகுப்பாளர்களின் நீட்சி பிரபல்யப்படுத்திக் கொண்டுள்ளவர் என்ற வகையில், புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் நலன் கருதி இவர் ஏன் இன்றுவரை பேசவில்லை ? வெளிநாடுகளில் இருக்கும் கட்டமைப்புகள் குறித்து ஏன் மௌனம் காக்கிறார்? ஜனநாயக போராளிகள் குழு குறித்த இவரது கருத்து என்ன ? இதில் இவர் சொல்லுகின்ற பலவிடயங்களில் உடன்படலாம். ஆனால் சந்திரிக்கா 94 நூலகத்தை புணரமைக்க விரும்பினார் என்பது கற்பனை. புலிகள் குறித்த மிகைப்படுத்தல்களால்தான் எம் அழிவிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இனியும் அப்பாடி மிகைப்டுத்தி கற்பனை காண்பதுகைப்புண்ணை கண்ணாடி கொண்டு பார்ப்பது போலத்தான். பாலபட்டபெண்டி, மெலிந்த மொரகொட போன்றவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை வெறும் ஆறுமாதங்கள். அவர் முன் வைத்த அரசியல் தீர்வு இன்றுவரை சிறந்தது.
 4. வாக்களிக்கும் முறையில் தவறு நிகழுமென்றால் சுமந்திரன் வருவதை தவிர்க்க இயலாது. வாக்களிக்கும் ஒவ்வொருவரும் விருப்பு வாக்கையும் வாக்காளருக்கு அளிக்கவேண்டும். தவறியவர்களின் விருப்பு வாக்குகள் முதல் மூன்று நபர்களுக்கும் சேர்க்கப்படும். வீடு சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு விருப்பு வாக்கை போடாமல் வந்தால் அந்த விருப்பு வாக்குகள் முறையே முதல் மூவருக்கும் சேரும்.
 5. பர்மாவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் கப்பால் போக்குவரத்து இருந்திருக்கிறது. அருசி இறக்குமதி செய்திருக்கிறார்கள். தண்டையலாக வெங்கடாசலபதி (தலைவர் பிரபாகரனின் பூட்டனார் குடும்பம் ) இருந்திருக்கிறார். அவர் அங்கு பர்மாவில் ஒரு கோவிலை நிறுவி இருந்ததாகவும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந. அனந்தராஜ் பதிவு செய்திருந்தார். http://www.velichaveedu.com/20218-3/
 6. சரி முடிஞ்சால் இந்த முறை அவரை வரமால் பண்ணுங்கோ பாப்பம். அது எல்லாதல்லோ... பிறகு என்ன
 7. இண்டைக்கே புளிக்கவைக்கிறம் நாளைக்கே சுடுறம். பிழைச்சால் கடையிலாவது வாங்கிச் சாப்பிடுறம்.
 8. அங்கயனின் தந்தை இராமநாதன் முதலே மகிந்தவின் நெருங்கிய நண்பர் என்று நினைக்கிறேன். இவர்கள் வல்வையை சேர்ந்தவர்கள். ஒரு பொறுக்கித்தனமான அரசியல்வாதிகள். இம்முறையும் உதிரி வாக்குகளால் ஒருவர் அல்லது இருவர் பாராளுமன்றம் செல்லக்கூடும். விகிதாசார தேர்தலின் விளைவு. டக்ளஸ் எப்படியும் இரண்டு ஆசனங்கள் பெற முயற்சி செய்யலாம். சிலநேரம் சாத்தியமாகலாம். சுமந்திரன் mp ஆகிவிடுவதை விட டக்ளஸ் மோசமில்லை. தேசியப்பட்டியல் தான் சிக்கல்
 9. அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால். நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால அதனை நினைக்கவேயில்ல
 10. தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள். நாங்கள் புகை போடுவதில்லை. என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும். நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.
 11. இலங்கையில் சாதி ரீதியான ஒடுக்குதல்கள், தீண்டாமை என்பன இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.இவ்வளவும் ஏன் "யாழ்" என்ற சொல்லுக்கூட ஒருவித மேட்டிமைத்தனம் தான். தலித் ஒரு இந்திய சொல்தான். ஒடுக்கப்படும் மக்களின் அடையாளமாக அந்தச்சொல்லை பாவிக்கிறார்கள். பஞ்சமர் என்ற சொல்லை பலரும் பாவிப்பதும் உண்டு. சொல்லில் என்ன இருக்கிறது ஆயிரம் தமிழ் சொல் இப்படி வந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் சேலைக்கூட எங்கள் அடையாளம் இல்லையே. தாலி தமிழர் மரபில் இல்லை. இன்று பலரும் புலி உருவ தாலி போடுவதை ஏற்றுக்கொள்கிறோம் தானே. அப்படி இந்த சொல்லை குறியீடாக பாவிப்பதில் என்ன குறைந்துவிடப்போகிறது. மாற்றங்களை உள்வாங்காதவரை எதுவும் சாத்தியமில்லை. பிழையானவர்கள் கையில் சாதிய முரண்பாடுகள் போய் விடாமல் தடுக்கவேண்டியது மிக முக்கியம். பிழையானவர்கள் பிழையாகவே வழிநடத்துவர். சரியானவர்கள் அதனை எடுத்து சரி செய்துவிடவேண்டும். விலகிப்போக கூடாது. புதுவை, சேரன் எப்படி முக்கியமான கவிஞரோ, நிலாந்தன் எப்படி முக்கியமான கருத்துருவாக்கியோ , ஜெயபாலன் எப்படி ஒரு முக்கியமான நடிகர் கவிஞர் சமூக செயற்பாட்டாளரோ அதேபோல சோபா சக்தியும் ஒரு எழுத்தாளர்தான். சும்மா குடிகாரன் என்றோ அழுக்கான ஆடை அணிபவர் என்றோ ஒருமனிததை அடையாளப்படுத்துவதை வெறுக்கிறேன். உங்கள் உறவுகள் கூட இப்படி நிறையபேர் இருக்கக்கூடும். அவர்களையெல்லாமா வெறுப்பீர்கள். நீங்கள் பிரான்சில் இருப்பதாக பதிவு செய்திருக்கிறீர்கள். எத்தனை தமிழர்கள் அங்கு தெருவில் இருப்பதாக வீடியோ எல்லாம் போட்டார்கள். அவர்களையெல்லாம் ஒதுக்குவீர்களா என்ன
 12. நன்றி உடையார், நிறைய எழுத்துப்பிழைகள் மன்னிக்கவேண்டும். கைப்பேசியில் எழுதியதால் திருத்த இயலவில்லை. இனி இத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.
 13. இதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்னையை அணுகமுடியாது. 1) சந்திரிக்கா முதலில் தானே நூலகத்தை திறக்க விரும்பியிருந்தார். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு ஐ.தே கட்சியை பழிவேண்டும் அரசியல் அதற்கு ஆனந்தசங்கரி துணைபோனார். (அனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருதெல்லாம் வெளிநாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசு சந்திரிகா பிரான்சில் கல்வி கற்றவர் ) 2) அக்காலப்பகுதி சமாதான உடன்படிக்கை உருவாகி ஒருவருடம் நிறைவு பெறவில்லை. புலிகள் சர்வதேசத்தால் கண்கொத்திப் பாம்பு போல கண்காணிக்கப்பட்டார்கள். 3) புலிகள் சாதி தொடர்பில் தம்மால் இயன்றவற்றை செய்தார்கள். தண்டனைகள் கூட வழங்கி இருக்கிறார்கள். சட்டங்கள் கூட இயற்றி இருக்கிறார்கள். அதில் அவர்கள் பூரணமாக தொழிற்படவில்லை என்பவர்கள், அவர்கள் ஒரு போராளிகள் குழு என்பதை மறந்துவிடுகிறார்கள். இவர்கள் என்ன சாதி ரீதியாக தொடுக்குபவரை சுட வேண்டும் என்று சொல்கிறார்களா ?அப்படி சுடடால் அதற்கு மனிதஉரிமை என்று வருவார்கள். புலிகளைபபொறுத்தவரை அவர்கள் 18 வயதுகளில் ஆயுதம் ஏந்துகிறார்கள். அமைப்புக்குள் சாதி இல்லை. அவர்கள் அந்த அமைப்பின் வளர்ச்சியுடன் உருவாகுகிறார்கள்.தீண்டாமை பற்றிய எதுவுமே அவர்களிடம் இல்லை. மக்களும் அவர்களிடம் காட்டவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக .. இருந்ததை அவர்கள் தமிழீழத்தில பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள். பின் காலத்தில் தான் சமூகநீதி பற்றிய கல்விகள் நடைமுறைப்படுத்தகிறது. போராளிகள் குழுவாக இருந்து அரசாக மாறும்போது அது இயல்பாகவே உள்வாங்கப்படுகிறது 4) இலங்கை அரசு கூட 57 களில் சாதி ஒடுக்குமுறைக்கு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு தானே செய்ய முடிந்தது. 5)சாதி ரீதியாக புலிகளை தீண்டாதவர்களாக்கும் ஒரு பொறிமுறை புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அது புலிவிரோத அரசியல். தமிழ் நாட்டின் சில அறிவுஜீவிகள் உடன்போனர்கள். 2009 புலிகள் அழிவின் பின் அவர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்து பலவேறுகுழுக்களாகி விட்டார்கள். இலக்கிய இருப்புக்காக சிலர் இன்னும் புலி எதிர்ப்பை பேசுகிறார்கள். 6) மேயர் செல்லன் கந்தையா அவர்கள் ஒரு துணைமேயர். ரவிராஜ் mp ஆகியபின் மேயர் ஆக்கப்பட்டார். அவர் கூடடணிக்குள் எவ்வாறான ஒடுக்குதலுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார் என்று பேசுவரில்லை. இன்றுவரை சாதியாக இயங்கும் கூட்டமைபை இன்னும் ஆதரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் செய்யும் புலி நீக்க அரசியல். (புலிகளின் காலத்தில் தாழ்த்தப்பட்ட இந்த வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனத்தவர் சிலர் பாராளுமன்றம் போயிருந்தனர். அதையும் பேசுவாரில்லை ) 7)ஆனந்தசங்கரி புலிகளை விரோதிக்கிறார் சந்திரிக்கா ஏற்படுத்திய சாணக்கியம் அது. பேச்சு மேடையில் தானும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதன் மூலம் புலிகளை பலவீனமான ஒரு தரப்பாக்க சந்திரிக்கா விரும்புகிறார். (ரணிலும் அதைத்தான் செய்தர். சந்திரிக்காவை விட ரணில் எவ்வளவு புத்திசாலி பாருங்கள்) 8 ) பல்கலைக்கழ மாணவர் தலைவர் அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறார். (அவர் தங்களை ஒரு ஹீரோ நிலையில் வைத்துதான் அன்று இருந்தனர். 40 ஆயிரம் சவப்பெட்டிகள் கதைக்கு அப்பாடியோரு கிழி வேண்டியிருந்தார் தலைமையிடம் ) பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் சங்கரியுடன் பேச்சு நடத்துகிறது, சங்கரியார் உடன்படவில்லை. மாவை சம்மந்தன் உற்பட்ட முக்கிய தமிழரசுக் கடசியினர் நூலகத்தை நினைவுச் சின்னமாக வைத்திருக்கவே விரும்பினார். ஏனென்றால் அது அவர்கள் கால அடையாளம். 9 ) ஆனந்த சங்கரி செல்லன் கந்தையாவை பயன்படுத்துகிறார். ஆனந்தசனகிரியின் வலதுகை வடமராட்சி உறுப்பினர் மேயரை தாக்குகிறார். அதற்க்கு வேறு காரணம் சொல்லபப்டுகிறது. 10 ) புலிகள் வெளியில் நின்று ஆலோசனை சொல்கிறார்கள். அவர்களுக்கு நூலகம் பொருட்டாக இல்லை. ஆனால் சமாதானகாலத்தில் நடைபெறும் புனரமைப்புகளின் நிகழும் அரசியலுக்கு தலையீடு கடுமையாக செய்கிறார்கள். தமிழீழம் என்ற கோரிக்கையில் நூலகம் ஒரு துரும்பு. ஆனால் அன்றைய புனரமைப்பை புலிகள் விரும்பவில்லை என்பதும் உண்மைதான். காரணம் சர்வதேச தூதுவர்களை அதனை ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்க விரும்பினார்கள். (உண்மையும் தானே ) 11) இப்ப புலி எதிர்பாளர்கள் தங்கள் இருப்புக்காக தமக்கு ஏற்றவாறு வளைத்து பேசுகின்றனர். அவர்களின் சந்தர்ப்பாவாத உரைகளை கேளுங்கள். தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு தலித் தான் என்பார்கள். வெளிநாட்டு செய்திகளில் புலிகளை போற்றியே பேசுவதாக சொல்வார்கள். நேர் எதிராக இங்கு பேசுவார்கள். புலிகளின் அதனை கொலை கொள்ளைகளுக்கு ஆதரவாக ஆரம்பகாலத்தில் இருந்துவிட்டு இப்ப அதற்கு வியாக்கியானம் கூறுவார்கள். இதுதான் அசல் வெள்ளாள ஆதிக்க புத்தி.
 14. நானெல்லாம் என்ன பிஞ்ச வாழ்க்கையை வாழுறன். சா உதெல்லோ வாழ்க்கை ." நங்கி கீல வெடக் நா " மாசிக் கருவாடு , வெங்காய தாள் கலந்த முட்டை அவியல். அந்த தயிர் வதக்கிய மிளகாய் பச்சடி செமயாய் இருக்கும். தயிரைப் பார்க்கவே மட்டக்களப்பு போகணும் போலயே இருக்கு. இரட்டை சூட்டு அடுப்பு நினைவிருக்குதா. தமிழீழ பொருண்மியம் அறிமுகம் செய்தவர்கள்.