Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Sanchu Suga

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  47
 • Joined

 • Last visited

Everything posted by Sanchu Suga

 1. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. இதெல்லாம் சின்ன மரம். இதை விட பெரிய மரங்களே சின்னனில ஏறி இருக்கிறேன் நீங்கள் பலா மரத்தில் ஏறி விழுந்த கதையை ஏறக்கனவே யாழில் வாசித்ததாக ஞாபகம். இடையே கொஞ்சம் வேலைப்பழு. அது தான் வர முடியவில்லை.
 2. யூரியூப்பில் தமிழ் மொழியை தெரிவு செய்தால் காணொளிகளின் தலைப்பு எல்லாம் தமிழிலேயே வரும் படி மாற்றிவிட்டேன். இனி வரும் காணொளிகளை மறக்காமல் கட்டாயம் தமிழிலும் போடுகிறேன். //என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க.// கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று செய்தது அது. "எல்லாம் பேய்க்காட்டு வேலை" என்று வீட்டிலிருக்கும் பெரிசுகளே சொல்லிவிட்டார்கள். யாழில் தொடர்ந்து இணைப்பதில் சின்ன தயக்கம். உங்கள் ஆதரவுக்காக என்று எவ்வளவு நாளைக்குத்தான் கேட்பீர்கள் என்று யாராவது கோபப்பட்டாலும் என்று தான். இப்போது யூரியூப்பில் த
 3. நானும் பார்த்திருக்கிறேன். பெரிய குடை போல மண்ணிறத்தில் மழைக்காலத்தில் வரும். அது விசத்தன்மை கொண்டது எனவும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் சைவத்துக்கு மாறினீர்கள்? கப்பி சத்தத்தை அலாரம் மாதிரி யோசித்து எழும்பி படிக்காமல் எண்ணை ஊற்றி அடக்கியிருக்கிறியள் எவற்றில் கவனம் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் விபரமாக் சொல்லலாமே?
 4. சில வருடங்களின் முன் ஒரு முகப்புத்தகபதிவில் கறிகளுக்குள் போடும் கறிவேப்பிலைகளை சாப்பிட கூடாது எனென்றால் கறிவேப்பிலைக்கு நச்சு தன்மைகளை உறிஞ்சும் திறன் உண்டு. அது காய்கறிகளில் உள்ள நச்சுக்களை உறிஞ்சுவதால் கறிக்குள் போட்ட கறிவேப்பிலை சாப்பிட கூடாதென்று இருந்தது.அதிலிருந்து உண்பதில்லை. அந்த தகவலின் உண்மை தன்மை தெரியாது. பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடும் பழக்கம் இருக்குறது என்பதால் இதை தவிர்த்தே உண்பேன்.
 5. நன்றி. கைத்தொலைபேசியில் யூரியூப் லிங்கை எடுத்து யாழில் போட்டால் Embed வியூ வராது. Desktop இல் போட்டால் வருகிறது.
 6. பாம்புகள் எங்கள் இடத்தில் அதிகம். அதற்காகவே சில "கினி கோழி" களை வளர்க்கிறோம். அவை குட்டிப்பாம்புகளை சாப்பிட்டுவிடும். நானும் இந்த மண்ணிறகாளான் வகையை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் நான் வைத்த ஒயிஸ்ரர் காளான் கறிக்கு கிட்டவும் நிற்காது
 7. புற்றுக்காளான் கறியை தனியாகவே சாப்பிடலாம். இந்த காளானும் சோறு , பிட்டுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
 8. உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் மொட்டுக்காளானையா சொல்கிறீர்கள்? அதன் சுவை மிக நன்றாகவே இருக்கும்.
 9. காளான் வளர்ப்பதற்க்கு மரத்தை அரியும் போது வரும் தூளை ஈரலிப்பாக்கி பாவிக்க வேண்டும். இங்கே மரக்காலைகளில் கிடைக்கும். சிங்கப்பூரில் மரப்பசளையாக பாவிப்பது சேதன பொருட்களின் அரைத்த தூள்.
 10. எப்படி குற்றினாலென்ன மாவு வந்தா சரிதான். படத்தொகுப்பாளர் வெட்டிய விதத்தில் அப்படி தெரிகிறது. கல்லுரலுக்கு அந்த அளவு அழுத்தம் கொடுத்தால் மாவு முழுக்க நிலத்தில்தான் கிடக்கும்.நீங்கள் சொல்வது மர உரலுக்குதான் நல்லா பொருந்தும். காளான் கறியும் சிவப்பு பச்சை அரிசி சோறும்
 11. நானே சிறுவயதில் புற்றுக்காளான் சாப்பிட்டு இருக்கிறேன்.அந்த சுவையால் இறைச்சி கறியை கூட அடித்து கொள்ள முடியாது...
 12. நாய் கடிக்கிற, பூரான் கடிக்கிற, தேள் கடிக்கிற அனுபவம் கிடைக்கணும் எண்டு சொல்லுவீங்க போல இருக்கே.....! நான்காவது காணொளியில் பதிவேற்றி இருக்கிறேன்.
 13. அப்பத்துக்கு கொஞ்ச கள்ளு போதும். நிறைய வாங்கி யாரோவொரு குடிமகனின் வயிற்றிலடிக்க விருப்பமில்லை. நன்றி
 14. குடல்புழுக்களுக்கு கள்ளு நல்லது என்று சொல்லி எல்லோரும் குடித்து முடித்துவிட்டார்கள். எனக்கு அப்பம் மட்டுமே மிச்சம்.
 15. கள் வாங்கியதோடு என் வேலை முடிந்து விட்டது. அடிமண்டி கூட எனக்கு கிடைக்கவில்லை.ஏற்கனவே சுவைத்துப்பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த அளவுக்கு ஆர்வமும் இருக்கவில்லை. எனக்கு கள்ளு விட்ட அப்பம் மட்டுமே மிச்சம்.அப்பம் சுவையோ சுவை.
 16. வீட்டிலுள்ள பெரியவர்களும் திட்டிவிட்டார்கள். இனிமேல் கவனமாக பார்த்துக்கொள்கிறேன். அறிவுரைக்கு நன்றி. பிள்ளைகளோடு சமைப்பதால் உடையக்கூடிய பொருட்களை பாவிப்பது மிகக்குறைவு. அதனால்தான் வழமையாக பாவிக்கும் பாத்திரங்களை பாவித்தேன். உங்களுடைய கருத்து சரியானது. இனிமேல் அவைகளை கருத்தில் கொள்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.