Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தோழி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  106
 • Joined

 • Last visited

Community Reputation

86 Good

About தோழி

 • Rank
  உறுப்பினர்
 • Birthday February 27

Profile Information

 • Gender
  Female
 • Location
  கனவுலகம்
 • Interests
  ஆடல், பாடல், நீச்சல், வாசித்தல், நடத்தல் & கற்பித்தல்!

Recent Profile Visitors

666 profile views
 1. எத்தனையோ அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்தும் இன்னும் எமது சமூகம் திருந்தவில்லை, இப்படிச் செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பது மிக அவசியம்!
 2. பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொற்று அபாயம் தமக்கு மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதாக, தமது குடும்ப வைத்தியரின் கடிதம் கொடுத்தும் கடமைக்கு வரும்படி அரச உத்தரவு வந்துள்ளது. குழந்தைகளிலிருந்து குழந்தைகளுக்கு இந்நோய் பரவும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் சொல்வதும் காரணமாக இருக்கலாம். முகக்கவசம் பாவித்து கைகளை தகுந்த முறையில் கழுவி கவனமாக இருக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.
 3. குழந்தைகள் உலகமும் அவர்களது உரிமைகளும் - ஒரு ஆசிரிய நோக்கு -தோழி குழந்தைகள் உலகம் அழகானதும் அலாதியானதுமானது . அதைச் செம்மைப்படுத்தி அடுத்தடுத்த படிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாகவும் உறுதியானதுமாகவும் வளர்த்தெடுப்பதற்கு, அவர்களின் வாழ்வின் அத்திவாரம் சரியான முறையில் கட்டப்பட வேண்டும். இன்றைய புலம் பெயர் தமிழ் சமுதாயத்தில் குழந்தை வளர்ப்பில் பலவிதமான சிக்கல்களும் விரக்தியும் பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கும், அதே வேளை குழந்தைகளுக்கும் கூட ஏற்படுவத
 4. பாகம் ஒன்று வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால
 5. என்ன செய்யிறது, அம்மா பிறந்த இடம் ஆதலால் கொடிகாமம் தெரியும். மருதங்கேணி தெரியாது!
 6. நான் நியூயோர்க்கில தான் பிறந்தனான், எப்போதாவது கொடிகாமம் போகும் போது அந்தச் சந்தைக்கும் இந்தச் சந்தைக்கும் ( விற்கும் பொருட்களைத் தவிர) கணிசமான அளவில் வித்தியாசம் தெரியேல்ல. உங்கட கண்ணும் மனசும் என்ன மாதிரியோ? ஹையோ, பந்தயம் பிடிக்கிறதுக்கு இந்த விசயமா கிடைச்சது? எனக்கு தெரிந்த விடயங்களுக்காக நான் ஏன் நேரம் மினக்கெட்டு பந்தயம் பிடிப்பான்?
 7. ஏன் நீங்கள் வரேக்க மணல் கும்பிகள் எல்லாம் ஒளிச்சிட்டுது போல? கடற்கரையில இருந்து சில மைல் தூரத்தில மணல் இல்லாமல் சருகுகளா இருக்கும் ஐயா? எல்லாம் அழகுதான் அழகான மனமும் சரியான கண்களும் இருந்தால்!
 8. அற்புதம்! சிறப்பான சிந்தனை ! எனக்கும் தொடர்ந்து தாயகத்தில் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இம்முறை போன சில பாடசாலைகளுக்கு மரங்கள் வாங்கிக் கொடுக்க முடிந்தது. நானும் இதை உயிலில் சேர்த்துக் கொள்ளலாம்!
 9. நீங்கள் கொடிகாமம் வந்தால் உங்களுக்கும் இவை போன்ற இயற்கை காட்சிகள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருந்தாலும் இவற்றை புனைவாகவே எழுதியிருந்தேன்.நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் எனில் அப்படியே இருக்கட்டும்.
 10. உங்கள் ஆதங்கம் புரிகிறது. எதுவாக இருந்தாலும் ஒருவர் இறந்த பின் அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் செயல்களைப் பார்த்தால் எமக்கு கோபம், ஆதங்கம், கவலை என பல உணர்வுகள் எழுவது வழக்கம் தான். இதற்கு ஒரு வேளை நாம் எல்லோருமே நாம் இறந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு உயில் எழுதி வைத்தால் என்ன என்று தோன்றுகிறது. என்னைக் கேட்டால் பெட்டியைத் திறந்து வைத்து ஆவடியம் காட்டாமல் மரியாதையாய் மிகக் குறைந்த செலவில் எல்லாவற்றையும் முடித்து விட்டால் ஒருவருக்கும் சிக்கல் இல்லை!
 11. எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ? அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது. எங்கள் ஊரிலும் சோழகக் காற்று எல்லாம் இருக்கிறதே, மருதங்கேணியில் மாத்திரம் சுழற்றி அடித்து விட்டு ஓய்ந்து விடுமா ? அதுவும் போக மன்னிக்க வேண்டும், எனக்கு மருதங்கேணி எங்கு இருக்கிறது என்றும் தெரியாது.
 12. அருமையான கதை ஓட்டம், வித்தியாசமான கதைக்கரு. இது எமது சமுதாயத்தில் ஒரு பேசாப் பொருள். பெண்களுக்கு தமது விருப்பு வெறுப்புகளை செயல்படுத்தக் கூடிய ஆளுமையும் துணிவும் தேவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 13. நன்றி !அப்பிடி இருக்குமோ ? நாங்கள் சாவகச்சேரிப் பக்கம், தெல்லிப்பளை, நீர்கொழும்பு என பல பகுதிகளிலும் இருந்திருக்கிறேன். மருதங்கேணியும் இப்படியான அழகான இடங்களில் ஒன்றாக இருக்கலாம். நன்றி தீயா! சில விடயங்களை உரத்துச் சொல்வது வழக்கம்!
 14. நன்றி , இது பல ஆண்டுகளின் முன் நான் ஒரு இளம் பட்டதாரியாய் இருந்த போது ஏற்பட்ட அனுபவம். பல ஆண்டுகளில் பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தன. நீங்கள் சொன்னது போல பொல்லால் சண்டையும் நடந்தது ஆனால் எனக்கு அடிக்கவல்ல. அது இரு வயோதிப தாத்தாக்கள் ஒரு அழகான பாட்டிக்காக அடித்துக் கொண்டார்கள். தொடர்ந்தும் எழுத முயற்சிக்கிறேன்.
 15. நன்றி உடையார், இது பல ஆண்டுகளின் முன் நான் ஒரு இளம் பட்டதாரியாய் இருந்த போது ஏற்பட்ட அனுபவம். அதன் பின்னர் என்னை மீள் பயிற்சி செய்து ஒரு ஆசிரியையாக கடமை ஆற்றினாலும் இரண்டு வயதுப் பிரிவினரும் நீங்கள் சொல்லியது போல குழந்தைகள் தாம். இப்போதும் வயதானவர்களைக் கவனித்துக் கொள்கிறேன் ஒரு வேலையாக அல்ல, அவர் தம் தேவை கருதி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.