Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

செண்பகம்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  560
 • Joined

 • Last visited

Everything posted by செண்பகம்

 1. நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை (முழுமையாக) Bharati November 18, 2020 நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை (முழுமையாக)2020-11-18T22:35:37+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore “மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் ‘நாட்டை காப்பாற்றுங்கள்’ என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அவர் நிகழ்த்திய உரையில முழு விபரம் வருமாறு; “இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாக்களித்தனர் என்பது உண்மை. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முகங்கொடுத்து சிங்கள இனம், எமது மதம், தேசிய வளங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்ற நியாயமான அச்சம் இருந்ததால் அவர்கள் அணிதிரண்டனர். மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் ‘நாட்டை காப்பாற்றுங்கள்’ என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை. எனது ஆட்சிக் காலத்தில், இனம், மதம் என்ற பேதமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் நீதியை உறுதி செய்யும், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு ஆட்சியை நிறுவுவேன் என்றும், இந்த நாட்டின் உச்ச அரசியலமைப்பின் படி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன் என்றும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பேன் என்றும் அன்று ருவன்வெலிசேய புன்னிய பூமியில் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் நான் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளேன். ஒவ்வொரு மாதமும் நான் மூன்று நிகாயக்களினதும் முன்னணி பௌத்த பிக்குகள் உள்ளடங்கிய ஆலோசனை சபையை சந்தித்து ஆட்சி குறித்த அவர்களின் ஆலோசனையைப் பெறும் நடைமுறையொன்றையும் நான் பின்பற்றி வருகின்றேன். நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பு, மத தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டில் பல உயிர்கள் பலியாகியிருந்தன. பாதாள உலக செயற்பாடுகள் தீவிரம் பெற்று நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்தது. இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறியிருந்தது. புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் பலவீனமடைந்திருந்த காரணத்தினால் நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்று தளங்கள் கூட தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. நான் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்கு பொருத்தமான அதிகாரிகளை நியமித்து அவர்களது பொறுப்புகளை குறைவின்றி நிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரம் அளித்தேன். சீர்குலைந்திருந்த புலனாய்வுத்துறை சேவைகளை மறுசீரமைத்து அவற்றுக்கு புத்துயிரளிக்க நடவடிக்கை எடுத்தேன். அந்த வகையில் எந்தவிதமான தீவிரவாதமும் மீண்டும் தலை தூக்குவதற்கான சாத்தியத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருளைக் கட்டுப்படுத்த மிகவும் முறையான மற்றும் செயற்திறமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று சிறைச்சாலைகளுக்குள்ளிருந்து போதைப்பொருள் கடத்தல் அல்லது பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொள்ள இனியும் இடமில்லை. இந்த நாட்டில் மக்கள் இனியும் பாதாள உலக கும்பல்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு பயந்து வாழ வேண்டியதில்லை. எதிர்காலத்தில் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் இப்போது ஒரு விசேட செயலணியை அமைத்துள்ளேன். நாம் இதுவரை செய்த அனைத்துமே ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்களினால் மக்களுக்காக தயாரிக்கப்பட்ட ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரமாகவே ஆகும். படைவீரர்களை காட்டிக்கொடுக்கும், தேசிய வளங்களை விற்கும், குறுகிய கால இலாபத்திற்காக எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கத் தயாராக இருக்கும், நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிட அனுமதிக்கும் யுகம் இப்போது முடிந்துவிட்டது. எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவதற்குத் தயாரான, எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாத, சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையேயான மோதல்களுக்கு ஒரு தரப்பாக இல்லாத, ஒரு பெருமைமிக்க, இறைமை கொண்ட தேசமாக எமது நிலைப்பாட்டை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளோம். அதனால்தான் இன்று பிராந்திய சக்திகளிடமிருந்தும் உலக வல்லரசுகளிடமிருந்தும் எமக்கு உரிய மரியாதை கிடைக்கின்றது. மிகக் குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தில் பல மனப்பான்மை மாற்றங்களைச் செய்ய முடிந்தது. ஜனாதிபதித் தேர்தலுடன் அதைத் தொடங்கினோம். பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் சுவரொட்டிகள் இல்லாத, அவமதிப்பு மற்றும் அவதூறுகளிலிருந்து விடுபட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் நாட்டிற்கு அறிமுகப்படுத்தினோம். அதன் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலையும் அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் முன்மாதிரியான ஒரு தேர்தலாக குறிப்பிடலாம். பெரும்பான்மையான வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்தனர், தேர்தல் சட்ட மீறல்கள் குறைந்தபட்சமாகவே இருந்தன. வன்முறைகள் அல்லது தேர்தல் மோசடி பற்றி கூட கேட்கப்படவில்லை. இந்த மாற்றத்துடன் மக்களும் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் பல முன்னாள் அரசியல்வாதிகளுக்கு பாராளுமன்ற வாய்ப்பு கிடைக்காதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் விளைவாக, புதிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சில காலத்திற்கு முன்பு 225 பேருமே வேண்டாம் என்ற கருத்தில் இருந்த மக்களின் கௌரவத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகும், ஜனாதிபதி பதவி என்பது ஒரு பொறுப்பேயன்றி வரப்பிரசாதம் அல்ல என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நான் செயல்பட்டேன். அதன்படி, தேவையற்ற செலவுகள், விரயங்கள் மற்றும் பயனற்ற நடவடிக்கைகளை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த காலப்பிரிவில் நாங்கள் நீதித்துறைக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவில்லை. நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் அனைத்தும் எந்தவொரு அரசியல் செல்வாக்குமின்றி தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன. அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் முறையை நாங்கள் முற்றிலும் நிராகரித்தோம். சட்டத்தின் ஆட்சியை நாம் எவ்வாறு உண்மையாக நிலைநிறுத்துகிறோம் என்பதை வார்த்தையால் அன்றி முன்மாதிரியாகக் காட்டினோம். உயர் அரசாங்க பதவிகளுக்கு பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர்களின் குழுவை நாங்கள் நியமித்துள்ளோம். இத்தகைய கொள்கையொன்றை இதற்கு முன்னர் எந்த அரசாங்கமும் செயல்படுத்தவில்லை. அரசியல் செல்வாக்கு காரணமாக பொருத்தமற்ற நபர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை இது மேலும் தடுத்தது. நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பாரிய வீழ்ச்சியை கண்டு 2.1% என்ற மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. 2014 இல் 4.3% ஆக குறைந்திருந்த வேலைவாய்ப்பின்மை 2019 ஆகும் போது 4.8% ஆக உயர்ந்தது. டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி துரிதமாக வீழ்ச்சிகண்டிருந்த காரணத்தினால் நிதிப்பிரிவு சீர்குலைந்து பொருளாதாரம் பெரும் நிச்சயமற்ற நிலைக்கு முகம் கொடுத்திருந்தது. சுற்றுலாத் துறை வீழ்ச்சி கண்டிருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடான ஆண்டு வருமானம் குறைந்து கொண்டிருந்தது. நாட்டின் கடன் சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தது. அரசாங்கம் மக்கள் மீது பெரும் வரிச்சுமையை சுமத்தியிருந்தது. அதிக வட்டி விகிதங்கள் காரணமாக, சுதேச வணிகங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பல விரைவான நடவடிக்கைகளை எடுத்தோம். வரிச்சுமை குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. குறிப்பாக சம்பள வருவாய் மீதான நேரடி வரி குறைக்கப்பட்டதுடன் வட்டி மீதான நிறுத்தி வைக்கும் வரி நீக்கப்பட்டது. உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு பல வரிச் சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வரி முறைமைகள் எளிமைப்படுத்தப்பட்டன. உள்நாட்டு உற்பத்திக்கு சாதகமற்ற போட்டி இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வட்டி விகிதங்களை பெருமளவில் குறைப்பதன் மூலம், கடன்கள் தேவைப்படும் மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக படிப்படியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அந்நிய செலாவணி வீதத்தை நிலையானதாக பேண நடவடிக்கை எடுத்தோம். வேகமாக உயர்ந்து சென்ற வெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்தினோம். அதேபோன்று எங்கள் நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து வெளிநாட்டு கடன் தவணைகளையும் நாங்கள் செலுத்தினோம். கடந்த அரசாங்கம் உள்நாட்டு வழங்குனர்களுக்கு செலுத்தாதிருந்த நிலுவைத் தொகையில் பெருமளவை நாங்கள் செலுத்த நடவடிக்கை எடுத்தோம். உரத்திற்கு ரூ. 24 பில்லியனும், மருந்துகளுக்கு ரூ. 32 பில்லியனும், நிர்மாணத் துறைக்கு ரூ. 119 பில்லியனும், சிரேஷ்ட பிரஜைகளின் உதவித்தொகை ரூ. 20 பில்லியனும், பல்வேறு அமைச்சுக்களுக்கு சேவைகளை வழங்கியவர்களுக்கு ரூ. 47 பில்லியனும் செலுத்தினோம். இந்த வகையில் சமூகத்திற்கு நிதியை விடுவித்தது முடங்கிப்போன நாட்டின் பொருளாதார செயல்முறையை மீண்டும் செயல்படுத்த உதவியது. எமது நாட்டில் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறைக்கு புத்துயிரளிக்க குறுகிய காலத்தில் நாங்கள் பெருமளவு பணிகளை செய்துள்ளோம். நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலை ரூ. 32 லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உர மானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உள்ளூர் விவசாய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க, மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டதுடன் சில விவசாய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. நெல், சோளம், தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி வரிகள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. எத்தனொல் இறக்குமதி முற்றிலும் தடைசெய்யப்பட்டது. நாடு முழுவதும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடுவதன் மூலமும், இளைய தலைமுறையினரை விவசாயத்திற்கு ஈர்ப்பதன் மூலமும், மக்களை வீட்டுத் தோட்டச் செய்கைக்கு ஊக்குவிப்பதன் மூலமும் விவசாயத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்க முடிந்தது. எத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும், எங்கள் ஏற்றுமதி வீழ்ச்சியடைய நாங்கள் இடமளிக்கவில்லை. தற்போது எங்கள் மொத்த ஏற்றுமதி வருவாய் முன்னைய ஆண்டுகளை விட அதிக அளவில் உள்ளது. கிராமப்புற மக்களின் வறுமைக்கு தீர்வு காண்பது நமது பொருளாதாரக் கொள்கையில் முன்னுரிமை பெறுகின்றது. அந்த வகையில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டியப பல துறைகளை நாம் இனம்கண்டுள்ளோம். நாட்டின் ஏழ்மையான குடும்பங்களை இலக்காகக் கொண்டு 100,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். இந்த ஒவ்வொரு வேலை வாய்ப்பின் மூலமும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த ஒரு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிகவும் பொருத்தமானவர்களைத் தேடி 35,000 தொழில்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் தொழில்கள் வழங்கப்படும். நாட்டின் செல்வத்தை செலவிட்டு கல்வி வழங்கப்பட்ட ஏராளமான பட்டதாரிகள் நீண்ட காலத்திற்கு வேலையில்லாமல் இருந்தால் அது கல்வி முறையின் தவறு. பல்கலைக்கழக கல்வி சீர்திருத்தங்கள் மூலம், எதிர்காலத்தில் அந்த பிழையை சரிசெய்வதுடன் இது வரை வேலையற்றிருந்த 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் மேலும் அவர்கள் நாட்டிற்கு உற்பத்தித் திறன்வாய்ந்த சேவையைச் செய்யத் தேவையான பயிற்சியையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம். கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக, காணிகளை இழந்த 20,000 குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீரை வழங்குவதற்கான எங்கள் திட்டத்தின் கீழ் 429,000 குடும்பங்களுக்கு நாடு முழுவதும் நீர் வழங்குவதற்கான ஆரம்ப பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கி.மீ வீதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மூன்று 10,000 கி.மீ திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. 10,000 பாலம் கட்டுமான திட்டத்தின் கீழ் சுமார் 5,000 பாலங்களின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், நகர்ப்புற குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் 20,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 4000 தோட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடத்தில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையில் வேறு எந்த வருடத்திலும் இதுபோன்ற அதிகரிப்பு காணப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களின் திறனை எதிர்காலத்தில் இதே முறையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் சாதாரண சூழ்நிலையில் செய்யவில்லை. பல சவால்களுக்கு மத்தியிலேயே செய்தோம். நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட நாள் முதல் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை ஒரு சிறுபான்மை அரசாங்கத்துடனேயே பணியாற்ற வேண்டியிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சியிடமே இருந்த காரணத்தினால் எந்தவொரு சட்டத்தையும் வரவுசெலவுத்திட்டத்தையும் நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் கோவிட் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. 2020 ஜனவரியில் சீனாவின் வுஹான் நகரம் மூடப்பட்டபோது, உடனடியாக தீர்மானம் மேற்கொண்டு 33 இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வந்து, அவர்களை முறையாக தனிமைப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி, உலகின் பிற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியை அமைத்தோம். இலங்கையில் முதல் கோவிட் நோயாளி கண்டறியப்படும் போது, ஏற்படக்கூடிய கோவிட் அலையை கட்டுப்படுத்த ஒரு செயலணியை நாங்கள் ஏற்கனவே அமைத்து திட்டங்களை உருவாக்கத் தொடங்கியிருந்தோம். இதனால் கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இக்காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையில் பொருளாதார தாக்கத்தை குறைக்க அரசாங்கம் செயல்பட்டது. அத்தியாவசிய உணவை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான முறைகள் வகுக்கப்பட்டன. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. நான் கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்தேன். இந்த ஆண்டு ஆகஸ்டில் ஒன்பது மாதங்கள் கழித்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் செயல்பட்ட விதத்தை மக்கள் அங்கீகரித்ததால்தான் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 2/3 பெரும்பான்மையை வழங்கினர். எனது வெற்றி அல்லது தோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் மக்கள் கருத்தேயன்றி சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் அல்ல. கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது வேகமாக பரவும் கோவிட் வைரஸின் புதிய வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு புதிய சவால் என்ற போதும் இந்த முறை எமக்கு கடந்த கால அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பரிசோதனை அளவை அதிகரித்தல், தொற்றாளர்களையும் தொடர்புடையவர்களையும் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான தனிமைப்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்துதல், அவதானத்திற்குரிய பிரதேசங்களை மட்டும் வேறுபடுத்தி ஏனைய பிரதேசங்களில் இயல்புவாழ்க்கையை பேணுதல் போன்ற நடவடிக்கைகளில் இந்த அனுபவம் மிகவும் பயன்படும். கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் நாங்கள் ஒரு திட்டத்துடன் செயல்படுகிறோம். நோய் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது. எனவே, நாம் அனைவரும் சுகாதார ஆலோசனைகளைப் உரிய முறையில் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட்டால், முதல் கொரோனா அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதைப் போலவே எதிர்காலத்திலும் இந்த புதிய சூழ்நிலையை நாம் கட்டுப்படுத்த முடியும். நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பல துறைகளை அடையாளம் காண்டு, அவற்றுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும், அவர்களுக்கு பொருத்தமான விடயத் துறைகளையும் பணிகளையும் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதறகு தேவையான ஏற்பாடுகளை தங்கள் அமைச்சுக்களுக்கு நேரடி ஒதுக்கீடு செய்துள்ளதாலும், நிதிப் பொறுப்பைக் கொண்டிருப்பதாலும் தடையின்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். அமைச்சுக்களை ஒதுக்கும் போது நாட்டின் பெரும்பான்மையான மக்களில் தாக்கம் செலுத்தும் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடி மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. ‘மகிழ்ச்சியான குடும்பம்’ என்ற சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைவதில் பல்வேறு சமூக மட்டங்களில் வாழும் சமூகங்களின் வீட்டுத் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக தனியான மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிக அந்நிய செலாவணியை செலவிட்டு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, உள்நாட்டில் பல மருந்துகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம். மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய ஊழலை ஒழிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நோக்கத்திற்காக, மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கு ஒரு தனி இராஜாங்க அமைச்சு நிறுவப்பட்டது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, உற்பத்தித் திறன் வாய்ந்த குடிமக்களை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் திறன் மேம்பாடு மிகவும் முக்கியம். எனவே, இன்று கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளோம். நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள தனியான இராஜாங்க அமைச்சு ஒன்றையும் இரண்டு செயலணிகளையும் அமைத்துள்ளோம். சுதேச மருத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத விஞ்ஞான கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத 10 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்பை (City Universities) உருவாக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தாதியர்களுக்கு வழங்கப்படும் டிப்ளோமா சான்றிதழுக்கு பதிலாக ஒரு பட்டப்படிப்பு வரை படிக்க வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தேன். அதன்படி, நாட்டின் அனைத்து தாதியர் கல்லூரிகளையும் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இது எங்கள் தாதியர்கள் வெளிநாட்டு தொழில் சந்தையில் நுழைவதற்கான வாயிலைத் திறக்கும். எங்கள் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கவும் விளையாட்டு பொருளாதாரத்திற்கு வழி வகுக்கவும் மற்றும் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கவும் நாட்டின் பல பிரதேசங்களில் அதன் பீடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக, பல்கலைக்கழக நுழைவைப் பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆங்கிலம், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை கட்டாய பாடங்களாக கற்பிப்பதற்கும் சர்வதேச தரத்திலான சான்றிதழை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம். நான் வாக்குறுதியளித்தபடி, உயர் தரம் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களின் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், திறந்த பல்கலைக்கழக முறையை மேம்படுத்துவதற்கும் தொலை கல்வியை மேம்படுத்துவதற்கும் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு திறந்த பல்கலைக்கழகங்களில் 10,000 புதிய மாணவர்களை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்காக சேர்ப்பதற்கும், அவர்களுக்கு முதலாம் ஆண்டிலிருந்து தொழில்செய்துகொண்டே கல்வியை வழங்குவதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாடத்திட்ட மறுசீரமைப்பின் ஊடாக அனைத்து பட்டப்படிப்பு திட்டங்களும் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நேரடியாக பங்களிக்கக்கூடிய பாடங்களாக மாறுவதை உறுதி செய்ய பல்கலைக்கழக அமைப்புக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இதன் போது தொழில்நுட்ப கல்வி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்க விசேட கவனம் செலுத்தப்படும். மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்ய, நாம் தொடர்ந்து மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும். இதன் காரணமாக என்னால் முடிந்த போதெல்லாம் நான் மக்களிடம் செல்கிறேன். கடந்த காலங்களில், இலங்கையின் பல பகுதிகளில் உள்ள மிகவும் கஷ்டமான கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தேன். இந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொதுவான பிரச்சினைகள் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து நன்கு புரிந்துகொள்வதற்கும், இது தொடர்பாக தேவையான முடிவுகளை எடுப்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக மக்களிடம் சென்று அவர்களது உண்மையான பிரச்சனைகளை விளங்கி அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வினைத்திறனான அரச சேவை மிகவும் முக்கியமானது. எனவே, சட்டத்தின் போர்வையில் தங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காமல் மக்களின் நியாயமான தேவைகளை விரைவாக நிறைவேற்றுமாறு அனைத்து அரச ஊழியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இது சரியாக நடக்கிறதா என்று கண்டறிய நான் அவ்வப்போது அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் செல்கிறேன். இதை தொடர்ந்து செய்ய நான் எதிர்பார்த்துள்ளேன். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் தமது நிறுவனங்களின் பணிகள் நடைபெறும் விதம் குறித்து கண்காணிக்க வேண்டும். அரச நிருவாகத்தில் வீண் விரயத்தையும் ஊழலையும் அகற்றுவோம் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளோம். எனவே, அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் விரயம் மற்றும் ஊழலை முற்றிலுமாக நிறுத்தவும், சம்பந்தப்பட்ட நபர்களின் தராதரங்களைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக நாடொன்றின் வெற்றி தங்கியிருக்கும் அடிப்படை அரசியலமைப்பாகும். 19 ஆவது திருத்தத்தால் ஏற்பட்ட குழப்பத்தை 20 ஆவது திருத்தத்தின் மூலம் எங்களால் அகற்ற முடிந்தது என்றாலும், இன்னும் சில சர்ச்சைகள் இருக்கவே செய்கின்றன. எனவே, புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிக்கவும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கும் நாங்கள் ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளோம். பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்ல மக்கள் எனக்கும் எங்கள் அரசாங்கத்திற்கும் மிகப் பெரும் ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். தனிப்பட்ட விருப்பை விட திறமைக்கு இடமளிக்கும், தனிப்பட்ட நலன்களுக்கு மேலாக பொது நலன்களுக்கு முதலிடம் அளிக்கும், கடனை விட முதலீட்டை ஊக்குவிக்கும், பேச்சை விட செயலை மதிக்கும் வெற்றுக் கோசங்களைப் பார்க்கிலும் உண்மையான மக்கள் சேவையை மதிக்கும் ஆட்சியொன்றை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும். இதற்காக அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளது. பல சவால்கள் எங்களுக்கு முன்னால் உள்ளன. அந்த சவால்களை வெற்றிகொண்டு, ஒரு குறிப்பிட்ட கொள்கை சட்டகத்திற்குள் செயல்பட்டு, திட்டமிட்டபடி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நாட்டை நேசிக்கும் அனைத்து இலங்கையர்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை. கூட்டு முயற்சியின் விளைவாக எமது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த எல்.டீ.டீ.யீ பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. அன்று நம் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் ஒரே நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். குழு உணர்வுடன், ஒழுக்கப் பண்பாடுகளை மதித்து சவால்களுக்கு முகம்கொடுத்தனர். ஒருபோதும் முடிவடையாது என்று பலர் கூறிய போரை எமக்கு வெல்ல முடியும் என்றால் எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எமக்கு வெற்றிகொள்ள முடியுமாக இருக்க வேண்டும். என்றாலும் அதற்கான பொதுவான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், சேவைகளை வினைத்திறனானதாக ஆக்கவும், ஊழலை ஒழிக்கவும், விரயங்களை குறைக்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி மக்களும் பங்களிக்க வேண்டும். நான் எப்போதும் சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்து விடுபட்டு ஓடும் பழக்கம் என்னிடம் இல்லை. வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்க மாட்டேன். நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாட்டைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். என்னிடம் எனது நாடு குறித்த ஒரு தொலைநோக்கு உள்ளது. ஒரு பயனுறுதிமிக்க பிரஜையாக, ஒற்றுமை உணர்வோடு, ஒழுக்கப் பண்பாட்டுடன் செயற்பட்டு, உங்களினதும் எனதும் தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பங்களிக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். https://thinakkural.lk/article/90515
 2. இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு Daya Dharshini November 19, 2020இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு2020-11-19T08:21:02+05:30 LinkedInFacebookMore நாட்டில் மேலும் 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 325 பேர் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 893 ஆக உயர்ந் துள்ளது. வெளிநாட்டில் வருகை தந்த கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக உயர்ந் துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 377 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித் துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 5 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 489 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது. https://thinakkural.lk/article/90572
 3. மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி Bharati November 18, 2020 மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி2020-11-18T12:10:17+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூர்வதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யுத்தத்தினால் மடிந்து போன மக்களை போராளிகளை நினைவு கூர்வதற்கான ஒரு நடைமுறையை இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கின்றது. நினைவு கூர்வதைக்கூட இரகசியமாகச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வந்திருக்கிறது. தமது மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை போராளிகள் என்று பார்ப்பதற்கு தமிழ் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் போராளிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள். எம்மைப் பொறுத்தவரையில், அவர்கள் விடுதலை வீரர்கள், புனிதர்கள், எமது விடுதலைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். ஆகவே அவர்களை நினைவு கூர்வதற்கான சகல உரித்தும், தகைமையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இது சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்ட நியமமும்கூட. எமது பிள்ளைகளுக்காக எமது உறவுகளுக்காக எமது விடுதலைக்குப் போராடியவர்களுக்காக நாம் கண்ணீர் சிந்துவதென்பதும் நினைவு கூர்வதென்பதும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் எமது அடிப்படை மனித உரிமையும் தார்மீகக் கடமையுமாகும். ஆனால், எம்மை அடக்கியாள முற்படும் அரசாங்கமானது, எமது நினைவுச் சின்னங்களை அடித்து நொறுக்கியது. துயிலும் இல்லங்களை தரை மட்டமாக்கியது. எமக்காக மரணித்தவர்களை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று இப்பொழுது கூறிவருகின்றது. நாம் இன்னமும் அடக்குமுறையின் உச்சத்தில் இருக்கிறோம் என்பதைத்தான் அரசாங்கம் வருடாந்தம் வெளிக்காட்டி நிற்கின்றது. பயங்கரவாதிகளை நினைவுகூரக்கூடாது என்ற அடிப்படையிலும், கோவிட்-19 வைரஸ் தாக்குதல்கள் என்ற அடிப்படையிலும் மீண்டும் பொலிசாரும் இராணுவத்தினரும் வடக்கு – கிழக்கில் நினைவுகூர்வதற்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். துயிலும் இல்லங்களை துப்புரவு செய்பவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் அல்லது அத்தகைய செயல்களிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். ஒன்று கூடுவது சட்டத்திற்கு முரணானது என்று கூறுகின்றனர். ஆகவே அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டு தமிழ் மக்கள் தமது மறித்துப் போன உறவுகளை நினைவுகூர்வதற்காக அவர்களுக்கு உள்ள உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் இருக்கக்கூடிய சுகாதார அச்சுறுத்தலான சூழ்நிலையில், நினைவு கூர்தல் எந்த அடிப்படையில் நடைபெற வேண்டும் என்ற வழிமுறையைக் குறிப்பிட வேண்டுமே தவிர, அதற்குத் தடைவிதிப்பதென்பது அநாகரிகமானதும் சட்டத்திற்கு முரணானதுமாகும். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்தவர்களை நினைவு கூர்வது என்பதை வருடாந்தம் ஒரு பிரச்சினையாகவே அரசாங்கங்கள் மாற்றி வருகின்றன. நினைவு கூர்தலுக்காக ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் போராட வேண்டியுள்ளது. தார்மீக அடிப்படையிலோ அல்லது சட்ட அடிப்படையிலோ அரசாங்கத்தினால் இந்த விடயங்கள் கையாளப்படுவதாக இல்லை. மாறாக, பொலிசாரையும் தமது படையினரையும் பாவித்து, தாம் விரும்பியவாறு அவர்கள் வழிநடத்தப்பட்டு அதனூடாக இத்தகைய நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், ஒவ்வொரு அரசாங்கமும் தாம் விரும்பியவாறு, இது தொடர்பில் தான்தோன்றித்தனமான முடிவினையே எடுக்கின்றன. எனவே இது நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரும் புதிருமாகப் பேசுவதை விடுத்து, இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முன்வரவேண்டும்.” https://thinakkural.lk/article/90319
 4. சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு! Bharati November 18, 2020 சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு!2020-11-18T05:27:41+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குமாரதாஸன், பாரிஸ் “கோவிட் 19″ என்று மருத்துவப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பாக “சீன வைரஸ்” என அறியப்பட்ட கொரோனா வைரஸின் முதற் தொற்றாளர் கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. சீனாவின் ஹூபேய் (Hubei) மாகாணத்தில் 17 நவம்பர் 2019 அன்று அடையாளம் காணப்பட்ட 55 வயதான நபர் ஒருவரே நாட்டின் முதல் வைரஸ் நோயாளி (patient zero) என்று சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் முதல் கொரோனா தொற்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தினம் 8 டிசெம்பர், 2019 ஆகும். “சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்” இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் முதல் நோயாளியின் வருகையைக் குறிக்கும் நவம்பர் 17 ஆம் திகதியை வைரஸின் “பிறந்த தினமாக” சமூகவலைத் தளங்களில் பலரும் நினைவு கூர்ந்துவருகின்றனர். உலகைப் போர்க்கால நிலைமையை ஒத்த பெரும் பேரிடருக்குள் தள்ளிய ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெளிப்படுவதற்கு முன்பாகவே உலகின் வேறு பகுதிகளில் பரவியிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கொரோனாவின் பிறப்பு எங்கே, எப்போது என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியவரவில்லை. ஆனால் முதலில் நோயாளிகள் மருத்துவ ரீதியில் அடையாளம் காணப்பட்ட இடமான சீனாவின் வுஹான் (Wuhan) அதன் பிறப்பிடமாகவும் முதல் நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவம்பர் 17, 2019 அதன் பிறந்த நாளாகவும் குறிக்கப்பட்டுவருகிறது. வைரஸ் வுஹானில் (Wuhan) உள்ள உயிருடன் விலங்குகளை விற்கும் சந்தையில் (Wet Market) இருந்து வந்ததா அல்லது அங்குள்ள பெரிய வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பாய்ந்ததா என்பதும் இன்னும் அறிவியல் மற்றும் மருத்துவரீதியில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சீனாவுக்கு வெளியே சில நாடுகளில் சாதாரண சுவாச நோய்களுக்காகச் சிகிச்சை பெற்றவர்களது பழைய மருத்துவ ஆய்வுகள் மீளப்பரிசோதிக்கப்பட்டபோது வைரஸ் பரவியதாக நம்பப்படும் காலப்பகுதிகள் குறித்துக் குழப்பமான தகவல்களை அவை வெளிப்படுத்தி உள்ளன. இத்தாலியில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பரில் புற்றுநோயாளர்கள் சிலரில் செய்யப்பட்ட நுரையீரல் பரிசோதனைகள் அவர்களது உடலில் “கோவிட் வைரஸ்” எதிர்ப்புச் சக்தி தூண்டப்பட்டிருந்ததைக் காட்டி உள்ளன. இத்தாலியின் தேசிய புற்றுநோய் நிலையம் இத்தகவலைத் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. இத்தாலியில் முதலாவது தொற்றாளர் உத்தியோக ரீதியில் இனம் காணப்பட்டது கடந்த பெப்ரவரி 22,2020 இல் ஆகும். ஆனால் 2019 செப்ரம்பரிலேயே அங்கு வைரஸ் நுழைந்துவிட்டதா என்ற சந்தேகத்தைப் புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. இதே போன்று பிரான்ஸ் உட்பட வேறு சில நாடுகளிலும் சாதாரண நோயாளிகளிடம் செய்யப்பட்ட சுவாசப் பரிசோதனைகளின் பழைய பைல்கள் கிளறப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் வைரஸ் பரவத் தொடங்கிய காலப்பகுதி தொடர்பாகப் பல்வேறு ஐயங்களைக் கிளப்பி உள்ளன. பிரான்ஸில் கடந்த சுமார் ஓராண்டு காலத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன்கள் (2,036,755) என்ற அளவை இன்று மாலை தாண்டிவிட்டது என்ற தகவலை சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 46 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர். https://thinakkural.lk/article/90178
 5. ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள் Bharati November 17, 2020 ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள்2020-11-17T19:04:12+05:30கட்டுரை LinkedInFacebookMore அ.மயூரன் ஈழத் தமிழினம் வரலாற்றைத் தொலைத்தவர்களாக, வரலாற்றை மறந்தவர்களாக, வரலாற்றுத் தேடலற்று, அறிவியல் தேடலோ, ஆர்வமோ அற்றாவர்களாக காணப்படுகின்றனர். கடந்த 400 ஆண்டுகளாக எஜமானுக்குச் சேவைசெய்யும் கல்விப் பாரமபரியத்துக்குள்ளால் வளர்ந்தவர்களாக தம்மைத்தாமே படித்தவர்கள் என்று கற்ப்பனாவாதப் பெருமிதத்தில் வலம்வந்ததன் வெளிப்பாடுதான் இன்று தமக்கான ஒரு சரியான வரலாற்றைத் தெரியாதவர்களாகவும், அதே நேரத்தில் தமது இனத்தின் எதிர்கால வாழ்வியலைத் தீர்மானிக்க முடியாதவர்களாகவும், தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஓர் இனம் தன் வரலாற்றைத் தொலைத்துவிட்டால் அதன் வாழ்வும், வளமும் அஸ்த்தமனமாகிவிடும். பொதுவாக ஈழத் தமிழினத்தில் காணப்படும் தலைவர்களும், புத்திஜீவிகளும் வரலாற்று அறிவற்று தமிழர் தாயகத்தை சிதைத்து, எதிரிகளின் கையில் கொடுக்கும் நிலையிற்தான் இன்று காணப்படுகின்றனர். ஈழத் தமிழினத்தின் தொன்மைமிகு வரலாறு தமிழர் தாயகத்தின் நிலப்பரப்புக்கள் எங்கும் பரவலாகப் புதைந்து கிடக்கிறது. இந்தத் தொல்பொருட்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றை நிரூபிப்பதற்கான இறுதிச் சான்றாதாரங்களாக எம்மிடம் இருக்கிறன. இந்தவகையில் 1917 ஆம் ஆண்டு கந்தரோடையை முதன்முதலில் ஆய்வுசெய்த திரு.போல் பீரிஸ் அவர்கள் 1919 பெப்ரவரி 22 ஆம் திகதி டெய்லி நியூஸ் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி முக்கியமானது. “”I hope the Tamil People will realise that in truth, there is buried in their sands, the story of much more fascinating development than they had hitherto dreamed“ என்றார். அதாவது “”இதுவரை கனவிலும் எண்ணிப்பார்க்காத தமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக் கட்டடம் பற்றிய சான்றுகள் உண்மையகவே மண்ணுள் புதைந்திருப்பதை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் உணர்வார்கள் என நம்புகின்றேன்.”” என்று சொன்னார். ஆனால் இத்தகைய பெறுமதி வாய்ந்த ஈழத்தின் மூத்தகுடிகள் நாம் என்ற வரலாற்றை உறுதிப்படுதும் தொல்பொருட்களை தமிழினத்தின் கையிலிருந்து தட்டிப்பறிக்கக் கூடிய வகையில் ஒருபுறம் அரச தொல்லியல் திணைக்களமும் மறுபுறம் புதையல் தோண்டும் குழுவினரும் அவற்றை நாசமாக்குகின்றனர்.. போருக்குப் பின்னர்தான் இத்தொல்லியல் தடயங்கள் புதையல் தோண்டுபவர்களால் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகள் காலத்தில் அதாவது 1980 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டுவரை வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காணப்பட்ட தொல்லியல் தடயங்கள் யாவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன. எங்கு தொல்லியல் தடயங்கள் இருக்கிறன என்று தெரிந்தும் அதனைப் பார்வையிட்டவர்கள் அதனைச் சேதப்படுத்தாது அப்படியே விட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காணப்பட்ட தொல்லியல் தடயங்களில் 90 வீதமானவை அழிக்கப்பட்டு விட்டன என்பது மட்டுமல்ல அவற்றை புதையல் தோண்டுகிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களே இவற்றை அழித்தனர் என்பதே வேதனைக்குரிய விடயமாகும். 1980 களிலிருந்து 2009 வரை இத்தொல்லியல் தடயங்கள் பாதுகாக்கப்பட்டதனாற்தான் இன்று புதையல் தோண்டுபவர்களால் இவை எடுக்கப்படுவது மட்டுமல்ல இத்தடயங்களில் காணப்படும் பொருட்கள் கீழடிக்கு இணையாகவும் இருக்கின்றன என்ற உண்மையும் தெரியவருகிறது. குறிப்பாக வன்னியில் வவுனிக்குளம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான், கல்விளான் பகுதிகளில் 2019, 2020 காலப் பகுதில் ஆங்கங்கே எடுக்கப்பட்ட தடயங்கள் கீழடியையும் விஞ்சிநிற்கிறன. இதில் கல்விளான், கரும்புள்ளியான் பகுதியில் 2018 ஆம் ஆண்டு புதையல் தோண்டுபவர்களால் இங்கு கிடைக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் வாசிக்க முடியாத அளவிற்கு தடயமே தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் ஆங்காங்கே காணப்பட்ட கற்றூண்களை தூக்கிச் சென்று தங்களின் வீடுகளைக் கட்டுவதற்கு பயன்படுத்துவதையும் காணமுடிகிறது. போரின் பின்னர் கல்லுடைக்கும் வியாபாரிகளால் வன்னியிலும், கிழக்கு மாகாணங்களிலும் சிறிய மலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வாவெட்டி மலை, கல்நீராவி மலை என்பன கல்லுக்காக உடைக்கப்பட்டு அதிலிருந்த எழுத்துக்கள் தடயங்கள் தெரியாமல் அழிக்கப்பட்டன. அதேபோல் திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குவிந்திருக்கும் தொல்லியல் தடயங்கள் 2009 வரை பாதுகாக்கப்பட்டிருக்க போர் முடிந்தபின்னர் சில புதையல் தோண்டும் முஸ்லிம் குழுக்களினால் அழிக்கப்படுகின்றன. இங்கு வேடிக்கை என்னவென்றால் புதையல் தோண்டுவதற்கென்றே முஸ்லிம் குழுக்கள் இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி பாரிய அளவில் இயங்குவதுதான். இக்குழுவில் மந்திரவாதிகள், மெளலவிகள், பிக்குகள் என புதையல் தோண்டும் விடயத்தில் இணைந்து தமிழர்களின் தொல்லியலை அழிக்கின்றனர். இதில் பசீர் காக்கா குழு, றியாஸ் குழு என்பன பிரபலம் . இவர்களில் றியாஸ் குழு அண்மையில் திருகோணமலையில் ஒரு தமிழரின் காணியில் புதையல் தோண்ட அதில் கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு சாடிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த நான்கு முட்டிக்குள் நான்கு புட்டிகள் (குடுவை) காணப்பட்டன. அந்த வெளிப்பக்க முட்டிகளில் மேல்ப் பக்கத்தில் தாமரை படமும், அதன் நான்கு பக்கங்களிலும் நாகங்கள் அந்த முட்டிக்கு பாதுகாப்பாகவும் அதனையடுத்து சூலமும், வச்சிராயுதமும் காணப்பட. அந்த முட்டிக்குள்ளே உள்ள புட்டிகளில் வெளிப் பக்கத்தில் பாளி மொழியில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்குள் மந்திரிக்கப்பட்ட நீரும் இருந்திருக்கிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட நான்கு சாடிகளில் மூன்று சாடிகளை றியாஸ் குழு உடைத்தும்விட்டது. எஞ்சிய ஒரு முட்டியை இந்த றியாஸ் குழுவிலுள்ள மந்திரவாதிகள் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் வன்னியில் குளவி சுட்டானில் உள்ள ஒரு குடும்பம் புதையல் தோண்டும் ஆசையில் இந்த மந்திரவாதிகள் குழுவைக்கொண்டு புதையலைத் தோண்ட ஆரம்பிக்க ஏற்கனவே திருகோணமலையில் இருந்து எடுத்த எஞ்சிய முட்டியை இங்கு மறைத்து வைத்துவிட்டு இம்முட்டி குளவிசுட்டானில் புதையல் தோண்டிய இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாக நாடகமாடிய மந்திர வாதிக்கள் அம்முட்டிக்குள் தங்கம் இருப்பதாகவும் இது பலகோடி பெறுமதி வாய்ந்ததாகவும் கூறி தமக்கு வெறும் ஒன்பது லட்சத்தை தந்துவிட்டு இம்முட்டிகுள் இருக்கும் தங்கத்தை விற்று எடுக்கும் காசை நீக்களே சந்தோசமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றுவிட்டது. இம்முட்டிக்குள் தங்கம் இல்லை என்று உணர்ந்த அந்த குடும்பம் காவல்துறையில் தம்மை அந்த மந்திரவாதிகள் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்துள்ளது. இதை விசாரித்த காவல்த்துறையும் அந்த முட்டியை கைப்பற்றியதோடு. புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் அக்குடும்பத்தினரை கைது செய்தும் உள்ளனர். இதேபோலத்தான் அம்பாறை மாவட்டத்தில் சம்மாதுறையில் புதையல் தோண்டும் குழுவினரால் ஐம்பொன்னாலான 940 கிராம் கொண்ட தெய்வானையின் சிலை எடுக்கப்பட்டு இது சோழர் காலத்திற்குரிய தங்கச்சிலை என இரண்டு கோடிக்கு விலை பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தெய்வானை சிலை 20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுக்குரியவை 1956 ஆம் ஆண்டு அம்பாறையில் சிங்கள, முஸ்லிம்களால் அழிக்கப்பட்ட முருகன் கோயிலின் சிலையாக அறியக்கிடக்கிறது, இச்சிலை இன்று சோழர் கால சிலை என பல கோடிகளுக்கு இம்முஸ்லிம் குழுக்களால் ஏலம் பேசப்படுகிறது. மேலும் இவ்வாறுதான் வடகிழக்கில் புதையல் தோண்டுபவர்களினால் தமழர்களின் தொன்மையான வரலாறு அழித்தொழிக்கப்படுவதை அறியாமலே பல தமிழர்கள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக திட்டமிட்ட தமிழர் வரலாற்று அழிப்புக்கு தம்மை பக்கபலமாக்குகிறார்கள் என்பதே துரதிஸ்டவசமானது. இதில் படித்த புத்திஜீவிகளும் உள்ளடக்கம். வடகிழக்கின் தொன்மை வரலாற்றை அறிதியிட்டுக் கூறக்கூடிய தமிழர் தொல்லியல் தடங்களைத் திட்டமிட்ட முறையில் கையகப் படுத்துவதிலும், ஆக்கிரமிப்பதிலும், சிங்கள பெளத்த பேரினவாத அரசு மும்முரமாகச் செயற்படுவதோடு தமிழர் தொல்லியலை சிங்களவர்களின் தொல்லியல் எனத் திரிபுபடுத்திக் காட்டி உன்மைக்குப் புறம்பான கற்பனையான சிருஸ்டிக்கப்பட்ட வரலாற்றியல் ஒன்றை சிங்கள தேசம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனை அறிவியல் பூர்வமாக சர்வதேச நியமங்களுக்கூடாக ஆக்கபூர்வ நடவடிக்கைகளை புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் அறிஞர்கள் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் வரலாற்றைத் தொலைத்த மக்கள் கூட்டமாக உலகப் பரப்பில் சிதறி வாழ்ந்து சிதைந்து போவோம் என்பது திண்ணம். https://thinakkural.lk/article/90150
 6. கிராமப்புற பாடசாலைகளில் இம்முறை சிறந்த பெறுபேறுகள் – பல பாடசாலைகளின் பெறுபேறுகள் உள்ளே!!! 1.கோண்டாவில் சி.சி.த.க பாடசாலை செல்வி.கீர்த்தி சுரேஸ் 168 2.மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் செல்வி.சி.அம்சவி 179 செல்வன்.கே.திலக்சன் 172 மேலும் 15 மாணவர்கள் 100புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 3.கைதடி குருசாமி வித்தியாலயம் செல்வி.கி.பவிசனா 171 4.மந்துவில் சிறீபாரதி வித்தியாலயம் செல்வி.எஸ்.றிஸ்மிதா 168 5.மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை செல்வி.கே.பவிஷனா 164 செல்வி.ச.கர்சனா 162 6.கெற்பேலி அ.த.க பாடசாலை செல்வன்.ச.நிருசாந் -178 செல்வி.க.ஜென்சிகா -178 செல்வன்.ந.கபிலன் -161 மேலும் 12 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். 7.நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலயம் செல்வன்.ந. தமிழாரன்——–184 செல்வி.ரு. துஜிதா ——–163 8.மட்டுவில் தெற்கு அ.மி.த.க பாடசாலை செல்வி.சதீஷ்வரன் நிதுசிகா – 162 செல்வி.க.யதுசிகா – 161 9.மந்துவில் றோ.க.த.க பாடசாலை செல்வன்.டி.திஷாந்த் 174 செல்வன்.எஸ்.ஹம்சன் 173 செல்வி.ஜே.ஷோபிகா 166 10.மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலை செல்வன்.சி.யெகு 170 மேலும் 70 புள்ளிக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 11.கிளி/ சோரன்பற்று சி.சி.த.க பாடசாலை செல்வி.நி.பம்சிகா 187 புள்ளிகள் 12.கிளி/சோரன்பற்று கணேசா வித்தியாலயம் செல்வன்.க.பிரஜீன் 188 செல்வன்.கோ.தனதீஸ் 176 மேலும் 70 புள்ளிக்கு மேல் 13 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 13.கரம்பை அ.மி.த.க பாடசாலை செல்வன்.பி.கஜானன் 166 மேலும் 70 புள்ளிக்கு மேல் 7 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 14.கிளி/கரியாலை நாகபடுவான் இல.02 அ.த.க பாடசாலை செல்வி.செ.மதுசாளினி 165 https://newuthayan.com/இம்முறை-கிராமப்புற-பாடசா/ உசன் இராமநாதன் ம.வி’யில் 2 மாணவர்கள் சித்தி !!! தரம் 5 புலமைப் பரீட்சையில் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் 18 மாணவர்களில் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும் 15 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ம.கவிமாறன் -177 க.பவிசன் -169 https://newuthayan.com/உசன்-இராமநாதன்-ம-வி-2-மாணவர/ 7வது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் சாதனை!!!! வவுனியா வடக்கு வலயத்தில் 7 ஆவது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இருந்து 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதித்துள்ளனர். https://newuthayan.com/7-வது-வருடமாகவும்-வவுனியா/
 7. இன்று 401 பேருக்கு உறுதியானது தொற்று! கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (17) இதுவரை 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,568 ஆக உயர்ந்துள்ளது. இன்று வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் தொற்று உறுதியானது. இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 18,075 ஆகும். இதேவேளை மொத்தமாக 12,210 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 5,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/இன்று-401-பேருக்கு-உறுதியான/
 8. வெளியானது விசேட வர்த்தமானி Daya Dharshini November 18, 2020வெளியானது விசேட வர்த்தமானி2020-11-18T07:49:08+05:30 FacebookTwitterMore துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்த மானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்டிப இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/90204
 9. எண்ணெய் ஊற்றும் இனவாத அரசியல் மொஹமட் பாதுஷா சமூகங்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும், பொதுவாகவே நிரந்தரமான தீர்வு காண்பதை விடுத்து, மய்யப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத விடயங்களுடன் முடிச்சுப்போட்டு, பூதாகரமாக்கி, காலத்தைக் கடத்துகின்ற போக்குகளையே, இலங்கையின் அரசியல் சூழலில் கண்டு வருகின்றோம். குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத ரீதியான அபிலாஷைகள், கோரிக்கைகள் என்று வருகின்ற போது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி, அதில் யாகம் வளர்க்கின்ற வேலையைத்தான், பெருந்தேசிய அரசியல்வாதிகள் சிலரும் அவர்களை ஆட்டுவிக்கின்ற இனவாத சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒன்றாக, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) எரிப்பு விவகாரமும் உருவாகி இருக்கின்றது. இவ்வாறாக, எத்தனையோ விவகாரங்களுக்கு ஆண்டாண்டு காலமாக நிரந்தரத் தீர்வு காணப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருப்பதையோ, ஒருதலைப்பட்சமான தீர்வுகள் திணிக்கப்படுவதையோ வரலாற்றில் காண முடியும். பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை விடுத்து, ‘பிச்சைக்காரனின் புண்ணை’ப் போல, அவ்விவகாரத்தைக் கொதிநிலையில் வைத்திருந்து அரசியல் செய்யவே, பிற்போக்கு அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். தமிழ் மக்கள், 50 வருடங்களுக்கு மேலாக, இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை வேண்டி நிற்கின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களால் சில படுகொலைகள், மனிதாபிமானத்துக்குப் புறம்பான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், ஒருதூய போராட்டம், வேறு வடிவங்களை எடுத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும், விடுதலைப் புலிகளோ வேறு ஆயுதம் தரித்த இயக்கங்களோ செய்த தவறுகளுக்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவை என்று புறமொதுக்கிவிட முடியாது. அந்தவகையில், சாத்தியமானதும் ஆகக் குறைந்தபட்சமானதுமான தீர்வு ஒன்றைத்தானும் அரசாங்கங்கள், தமிழ் மக்களுக்கு வழங்கி ஆறுதலடையச் செய்யவில்லை. அரசமைப்பின் 13ஆவது திருத்தம் கூட, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், மாகாண சபை முறைமையே இல்லாதொழிக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம், இப்போது மேலோங்கியுள்ளது. முப்பது, நாற்பது வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் முஸ்லிம்கள், தமிழர்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை, இன்று அச்சமூகம் உரிமை கொண்டாட முடியாத நிலையுள்ளது. அதிலும் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, தொல்பொருள்கள், வனவளம், வனஜீவராசிகள் என்ற பெயரால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் கணிசமான காணிகள், உரிமைசார் பிணக்குகளுக்குள் சிக்கியுள்ளன. இவை எதற்கும் தீர்வு காணப்படவில்லை. தமிழர்கள், சில ஏக்கர் காணிகளையாவது தமது போராட்டங்களின் ஊடாக மீட்டுக் கொண்டுள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கே ஆளில்லை. அரசியல் தலைமைகள், அது பற்றி விவரமாக அறியமாட்டார்கள் என்றே தெரிகின்றது. இந்த இலட்சணத்தில், காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிட்டுவதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை. இதேவேளை, கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக, சிறுபான்மை மக்களை நசுக்குவதற்கு முனைகின்ற இனவாதத்துக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் பற்றிப் பேசிப் பேசியே, இன உறவுகள் விரிசல் அடைவதற்கான அரசியல் சூழலே கட்டமைக்கப்படுகின்றது. இதனால், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மை அடைவது மட்டுமன்றி, பேரினவாத சக்திகள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பிரயத்தனப்படுகின்றன. நாட்டில் இடம்பெறுகின்ற அநேக பிரச்சினைகளுக்கு, இனவாத சக்திகளின் செயற்பாடுகளே காரணம் என்ற நிலையிலும், அச்சக்திகளைப் பின்னணியில் பக்கபலமாக வைத்துக் கொண்டே, இன்றுவரை ஆட்சியாளர்கள் தமது அரசியலைச் செய்து வருகின்றனர். ஒரே சமயத்தில், இரு சிறுபான்மைச் சமூகங்களையும் பகைமை பாராட்டாமல், ஒரு கட்டத்தில், ஒரு சிறுபான்மை சமூகத்தை இணைத்துக் கொண்டு, மற்றைய சமூகத்துக்கு எதிரான திட்டங்கள் மிகச் சூட்சுமமாக முன்னகர்த்தப்படுகின்றன. அளுத்கம, திகண, அம்பாறை போன்ற இடங்களில் இடம்பெற்று கலவரங்களிலும் 2019 ஏப்ரலில் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளாலும் முஸ்லிம்கள் தெளிவாகவே இலக்குவைத்துத் தாக்கப்பட்டனர்; சொத்துகள் அழிக்கப்பட்டன. அரசியல் பக்கபலம் கொண்ட இனவாதிகளே இவற்றைச் செய்தார்கள், என்பது பட்டவர்த்தனமாகக் காணப்பட்ட போதும், இரண்டு அரசாங்கங்களும் இனவாதிகளைத் தண்டிப்பதற்குப் பயந்தனர் என்பதே நிதர்சனமாகும். இந்தப் பின்புலத்தில், இனவாத சக்திகளைக் கட்டுப்படுத்தாத காரணத்தால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், சிறுபான்மைச் சமூகங்களுக்கு உள்ளும் அதற்கொப்பான ‘வாதங்கள்’ சிறியளவில் தலைதூக்குவதற்கான களநிலைமைகள் உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், இனவாதத்தை மய்யமாகக் கொண்ட பிரச்சினைகளுக்கு, உண்மைக்கு உண்மையாகத் தீர்வு காணும் பாங்கிலான அரசாங்கங்களின் முயற்சிகள், ‘ஏட்டுச் சுரக்காய்’ போலவே இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், காட்டுமிராண்டித்தனமானவை என்பதும் எந்த அடிப்படையிலும் ஒரு விவாதத்துக்குக் கூட, ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதுமே பொதுவான நிலைப்பாடாகும். இதில், முஸ்லிம்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. தமது சொந்தத் திட்டத்துக்காகவோ, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காகவோ அப்பாவிச் சகோதர மக்களை உயிர்ப்பலி எடுத்த சஹ்ரான் கும்பலை, முஸ்லிம் சமூகம் தம்மைச் சார்ந்தவர்களாகப் பார்க்கவும் இல்லை. பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் முஸ்லிம்களோடு முடிச்சுப் போடும் வழக்கம், உலகெங்கும் இருந்தாலும் கூட, நிஜத்தில் இதற்கும் மதங்களுக்கும் இடையில், எவ்வித தொடர்பும் இல்லை. பயங்கரவாதிகள் எந்த அடையாளத்தை முன்னிறுத்தினாலும், அவர்கள் எந்த மதத்தையும் சரியாகப் பின்பற்றாதவர்கள் என்பதே உண்மையாகும். இதை, இலங்கை முஸ்லிம் சமூகம், தெளிவாக வெளிப்படுத்தி விட்டது. இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது, முஸ்லிம்களைப் போல வேடம்தரித்த நபர்கள் என்றாலும், அதற்குப் பின்னால், பலமான மறைகரம் ஒன்று இருந்ததை உலகறியும். அத்துடன், இதுபற்றி அரச உயர்மட்டமும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் முன்கூட்டியே அறிந்திருந்தும், இவ்விடயம் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இன்னும் விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றமையால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்து இயக்கிய உண்மைச் சூத்திரதாரிகள் யார் எனக் கண்டறிந்து, இவ்விவகாரத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. மாறாக, இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எது நடந்தாலும், அதை இந்தப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளோடு முடிச்சுப் போடுகின்ற, கீழ்த்தரமான அரசியல், இனவாதச் செயற்பாடுகளே முன்கையெடுத்துள்ளன. இவ்வாறே, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை, இனவாத சக்திகளும் கடும்போக்கு அரசியல்வாதிகளும், தமது அரசியலுக்காக இன்று கையிலெடுத்துள்ளனர். எனவே, ஜனாஸாவை எரிக்கும் பிரச்சினைக்கு, தீர்வு காணப்படாதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் கணிசமான முஸ்லிம்கள் மரணமாகியுள்ளனர். பொதுவாகவே, சமய அனுஷ்டான விடயத்தில், சற்றுக் கூடுதல் கவனம் எடுப்பவர்களான முஸ்லிம்கள், குறிப்பிட்ட உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைக் கோரி வருகின்றனர். ஒருவேளை, உலக சுகாதார ஸ்தாபனமானது ‘எரிக்கவே வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாலோ ஏனைய உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்த ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருந்தாலோ, இவ்வாறான ஒரு வேண்டுகோளை முஸ்லிம்கள் முன்வைத்திருக்க முடியாது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அமைச்சரவையில் இவ்விடயம் பேசப்பட்டதாகவும் நிபுணத்துவ குழுவின் முடிவின்படி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இதுபற்றிய தகவல்கள் வெளியாகிய சில மணித்தியாலங்களுக்குள், சொல்லி வைத்தாற்போல், ‘குட்டை’ குழப்பப்பட்டு உள்ளது. அரசாங்கத்தின் மனமாற்றம் பற்றி, ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் வெளியில் சொல்கின்றார்கள்; முஸ்லிம் சமூகத்தின் பக்குவமற்ற சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், அதைக் கொண்டாடுகின்றார்; சர்ச்சைக்குரிய முஸ்லிம் அமைப்பொன்று நன்றி தெரிவிக்கின்றது. அதன்பிறகு, இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது ஒரு சமூகத்தின் கோரிக்கையாகும். சுகாதார விஞ்ஞான அடிப்படையில், அதை ஏற்றுக் கொள்ள முடியுமா, இல்லையா என்று தீர்க்கமான முடிவை, அதிகாரிகள் எடுக்க வேண்டும். ஆனால், இங்கு என்ன நடக்கின்றது? இக்கோரிக்கை அடிப்படைவாதமாகப் பார்க்கப்படுகின்றது. இதற்குச் செவிசாய்த்தால், ஆட்சியே மாற்றப்படும் என்ற தோரணையில் பிக்குகள் எச்சரிக்கின்றனர். ஆகவேதான், இனவாத சக்திகள், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதால், மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் போலவே, இப்பிரச்சினைக்கும் சுமூகத் தீர்வு கிட்டாதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஜனாஸா எரிப்பு தொடக்கம், இனப் பிரச்சினைக்கான தீர்வு வரை, அனைத்து விதமான மக்களின் பிரச்சினைகளையும், இனவாதிகளின் கைகளில் கொடுக்காமல், காலக்கெதியில் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பிருக்கின்றது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எண்ணெய்-ஊற்றும்-இனவாத-அரசியல்/91-259149
 10. உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம் Bharati November 17, 2020 உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்2020-11-17T21:29:13+05:30Breaking news, அரசியல் களம் LinkedInFacebookMore கலாநிதி தேவநேசன் நேசையா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியிலும் பரந்தளவு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்குள் ஆபிரிக்க அமெரிக்க மக்கள், முஸ்லிம் சனத்தொகை, அண்மைக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து வந்த குடியேற்றவாசிகளுக்கு நிச்சயமாக பயன்தரும். ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் கீழ் இருந்ததை விடவும் கூடுதலான அளவு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு அமெரிக்க சனத்தொகையில் இந்த பிரிவுகளுக்கு கிடைக்கும். வெள்ளையர் சனத்தொகையில் வறிய பிரிவினர் கூட , அவர்களில் பெரும்பாலானவர்கள் ட்ரம்புக்கே வாக்களித்திருந்தாலும், நிதிச் சீர்திருத்தங்கள், வேலைவாய்பின்மை குறைப்பு மற்றும் பின்தங்கிய பிரிவினரை நோக்கிய வேறு சமூக நலன்புரித் திட்டங்களினால் பயனடைவர். கொவிட் -19 தொற்று நோயின் விளைவான சுகாதார நெருக்கடியை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமாக உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் கணிசமான பயன்களை பெறக்கூடியதாக இருக்கும். அத்துடன் காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பொறுத்தவரை பெருமளவுக்கு மருத்துவ மற்றும் விஞ்ஞான நிபுணத்துவத்தில் நம்பிக்கை வைத்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அமெரிக்காவின் பல பகுதிகள் சூறாவளிகளினாலும் காட்டுத் தீயினாலும் உருக்குலைந்து போயிருக்கின்றன. இந்த அனர்த்தங்களுக்கும் சுற்றுச்சூழல் கொள்கைக்கும் இடையில் உள்ள உறவுமுறையை புதிய நிருவாகம் விளங்கிக்கொள்ளும். இந்த பிரச்சினைகளை கையாளுகின்ற விடயத்தில் கூடுதலான அளவிலும் சிறப்பாகவும் முதலீடுகளும் சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்கும். ட்ரம்பின் நிருவாகத்தில் அமெரிக்கா வாபஸ் பெற்றுக்கொண்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை போன்ற சர்வதேச செயற்திட்டங்களில் பைடன் நிருவாகம் மீண்டும் இணைந்துகொள்ளும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றம் யூனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களில் இருந்தும் விலகிய அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. வெளியுறவுக் கொள்கைக்கு பல்தரப்பு அணுகுமுறையை பெருமளவுக்கு கடைப்பிடிக்கப் போவதற்கான சமிக்ஞையை பைடனின் அணி ஏற்கெனவே காட்டியிருக்கிறது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இப்போது பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் நலன்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கிறது. கடந்த காலத்தில் அதன் வெளியுவுக்கொள்கையின் முன்னுரிமைகள் பெருமளவுக்கு மூன்றாம் உலக நோக்குடையவையாகவே இருந்தன. உதாரணமாக, பாலஸ்தீன நெருக்கடி இலங்கைக்கு பெரும் முக்கியமானதாக விளங்கிய காலம் ஒன்று இருந்தது. அமெரிக்காவின் வரலாற்றில் ட்ரம்ப் நிருவாகமே மிகவும் தீவிரமாக இஸ்ரேலை ஆதரிக்கின்ற – பாலஸ்தீனர்களுக்கு எதிரான நிருவாகம் என்ற உண்மை அதன் வெளியுறவுக் கொள்கையை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்திருக்கும். ஆனால், இலங்கையில் தற்போது நிலவுகின்ற முஸ்லிம் விரோத உணர்வுகளின் பின்புலத்தில், இந்த பிரச்சினை முக்கியத்துவம் பெறவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனின் நிர்வாகம் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு மிகவும் கூடுதல் கவனம் செலுத்தும் என்பது நேரடி முக்கியத்துவம் கொண்டதாக இருக்கப்போகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்ளக்கூடும் என்பதுடன் கொள்கைப் பிரச்சினைகளில் மீண்டும் சம்பந்தப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த கொள்கைப் பிரச்சினைகளில் சில இலங்கைக்கு பொருத்தமானவையாகும். குறிப்பாக, இனத்துவச் சிறுபான்மையினரின் நல்வாழ்வுடனும் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையிலான குடிமக்கள் படுகொலையுடனும் தொடர்புடைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளில் அமெரிக்கா முன்னணி பாத்திரத்தை வகித்தது. இத்தகைய பிரச்சினைகளில் ட்ரம்ப் நிருவாகம் அக்கறை கொண்டதாக இருக்கவில்லை என்கிற அதேவேளை, தற்போதைய இலங்கை அரசாங்கமும் மனிதஉரிமைகள் பேரவை நிபந்தனைகளுக்கு இணங்கிச் செயற்படுவதில் முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை. இலங்கைஅரசாங்கமும் மக்களில் சிலரும் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும் என்று விரும்பியிருக்கக்கூடும். மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவர்களின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், புதிதாக ஒரு முன்னேற்றம் ஏற்படுவதற்கான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பைடன் நிருவாகம் கொடுக்கிறது. என்றாலும், மாறிவிட்ட சூழ்நிலைகளின் காரணமாக தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பெல்லையையே கொண்டிருக்கின்றன. மாறிவிட்ட சூழ்நிலைகளில் இலங்கையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றமும் உள்ளடங்குகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்துவருகின்றமையும் சூழ்நிலை மாற்றங்களில் முக்கியமான ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் வேறு சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக சீனா உறுதியளித்திருக்கிறது. அதேவேளை, சீனாவுடனான இரு தரப்பு உறவுகளில் பாதகமான விளைவுகள் ஏற்டக்கூடும் என்ற காரணத்தால் பைடன் நிருவாகமும் நெருக்குதலைக் கொடுக்க தயங்கக்கூடும். ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் தனித்தன்மை வாய்ந்தவையே என்று கூறமுடியும். ஆனால், 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வழமையை விடவும் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்ததாகும். தற்போதைய சூழ்நிலையில் இனம், பால்நிலை, குடிவரவு , மனித உரிமைகள் மற்றும் வெளியுறவு கொள்கைப் பிரச்சினைகளில் பலவும் முன்னென்றும் இல்லாத அளவுக்கு பரிமாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மறுதலையாக்க முடியாத பல சிக்கலான மாற்றங்கள் ஜனாதிபதி ட்ரம்பின் நான்கு வருடகால நிருவாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் நான்கு வருடங்கள் இந்த மாற்றங்களை மேலும் முன்னெடுத்துச் சென்று நடைமுறையில் அறவே மாற்றியமைக்க முடியாதவையாக்கிவிட்டிருக்கும். தேசத்தின் பண்பும் படிமமும் உலக விவகாரங்களில் அதன் இடமும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் முன்னணி வகிபாகம் காரணமாக உலகளாவிய ரீதியில் நிலையான பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்த மாற்றங்களில் சிலவற்றையாவது இல்லாமல் செய்யக்கூடிய சாத்தியத்தை ஜனாதிபதி மாற்றம் கொண்டுவந்திருக்கிறது. ட்ரம்பின் கொள்கைகளை மறுதலையாக்குவதிலிருந்து முற்போக்கான திசையில் செல்வது வரை அமெரிக்க அரசாங்கம் எந்தளவுக்கு செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது பைடன் நிருவாகத்தின் குணாதிசயத்திலேயே தங்கியிருக்கிறது. பேர்னி சாண்டேர்ஸ், எலிசபெத் வாரென் மற்றும் ஸ்ரேஸி ஏபிராம்ஸ் போன்றவர்களுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படுமானால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் சாத்தியமாகலாம். ஆனால், செனட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் கணிசமான மாற்றங்கள் ஏற்படுவதென்பது கஷ்டமானதாகும். இதற்கு ஜோர்ஜியா மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் செனட் சபைக்கான இறுதிதேர்தல் போட்டியில் ஜனநாயக கட்சிக்காரர்கள் வெற்றிபெறவேண்டியது அவசியமாகும். https://thinakkural.lk/article/90163
 11. கொவிட் -19 பாதிப்பில் இலங்கைக்கு 99ஆவது இடம் C.L.Sisil November 17, 2020கொவிட் -19 பாதிப்பில் இலங்கைக்கு 99ஆவது இடம்2020-11-17T12:23:11+05:30 FacebookTwitterMore கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது. மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகாஸ்கர் 101 ஆவது இடத்தில் உள்ளது. குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலுள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/89988
 12. கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் மக்களை தாக்கும் சமூக ஊடக போலிச் செய்திகள் Bharati November 16, 2020 கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் மக்களை தாக்கும் சமூக ஊடக போலிச் செய்திகள்2020-11-16T13:53:35+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் சமூக ஊடக போலிச் செய்திகள் மக்களை தாக்குகிறது. இது ஆரோக்கியமற்றது. கருத்தோவியம் ; ஆர்.சுரேந்திரன் https://thinakkural.lk/article/89660 நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா Daya Dharshini November 17, 2020நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா2020-11-17T08:51:03+05:30 FacebookTwitterMore இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெரும் பாலானவர் கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 387 பேர் கொவிட்-19 கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர் இவர்களில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 42 பேர், களுத் துறை மாவட்டத்தில் 20 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி மாட்டத்தில் 02 பேர் , இரத்தினபுரி , கேகாலை, மொன ராகல, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களிலும் தலா ஒரு தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் 41 பேர், வெலிகட சிறைச் சாலையில் ஒருவர் , பொலிஸ் அதிகாரிகள் 08 பேர், பொ லிஸ் சிறப்புப் பணிக்குழுவினர் 05 பேர் ஆகியோர் இவ் வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/89853
 13. இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன? Bharati November 17, 2020 இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன?2020-11-17T08:56:57+05:30Breaking news, ஆசிரியரின் சிந்தனையில் FacebookTwitterMore “புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.” இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி. இலங்கை அரசியலரங்கில் எது நடைபெறப்போவதில்லையோ அது நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், அவர் சொல்லியிருப்பதுதான் நாட்டுக்கு அவசியமானது. இல்லையெனில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் தமக்கேற்ற அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் முன்னெடுப்பார்கள். இதனால், தலைவர்களின் ‘தேவை’கள் நிறைவேறும். நாட்டின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கும். கடந்த காலங்களிலும் அவ்வாறுதான் நடைபெற்றுவந்திருக்கின்றது. புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரப்போவதாக இப்போது சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் அதற்கான யோசனைகளையும் கோரியிருக்கின்றது. இதற்கான நிபுணர்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு 42 வருட காலத்தில் 20 தடவைகள் திருத்தப்பட்டுவிட்டது. 18, 19, 20 ஆவது திருத்தங்களைப் பார்க்கும் போது ஆட்சியில் உள்ளவர்கள் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதை மட்டும் இலக்காகக்கொண்டே அந்தத் திருத்தங்களைக் கொண்டுவந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இவற்றைப் பார்க்கும் போது மற்றொரு அரசியலமைப்பைக் கொண்டுவரவேண்டிய தேவை எதுவும் அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவசரமாக 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிய ராஜபக்‌ஷக்களின் தமது இலக்குகளை அடைந்துவிட்டார்கள். ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டைக் குடியுரிமையால் உருவான தடைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சரவை வெறும் ‘ரப்பர் ஸ்ராம்ப்’ என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. 19 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்‌ஷக்களுக்குப் போடப்பட்ட கட்டுக்கள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டுவிடன. கடந்த நான்கு வருடகால ராஜபக்‌ஷக்களின் அபிலாஷைகளை 20 ஆவது திருத்தம் தீர்த்துவிட்டது. அவர்கள் எதிர்பர்த்ததும் அதனைத்தான்! 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரும் போது பல நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டது. எதிர்க்கட்சி தரப்பிலிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள் ஆவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. பொதுஜன பெரமுனையின் பங்காளிக் கட்சிகள் தரப்பிலிருந்தும், உட்கட்சிக்குள் இருந்தும் உருவான எதிர்ப்புக்கள்தான் ஜனாதிபதிக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி சொன்ன விடங்களில் ஒன்றுதான் “புதிய அரசியலமைப்பு” என்பது. அதாவது, “20 ஆவது திருத்தம் தற்காலிகமானதுதான். உங்களுடைய கருத்துக்களைக் கவனத்தில் எடுத்து புதிய அரசிலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவோம்” என்பதுதான் அவர் சொன்ன சமாதானம். அதன்மூலமாகவே மூன்றில் இரண்டுடன் 20 ஐ நிறைவேற்ற அவரால் முடிந்தது. ‘மொட்டு’ அணியைப் பொறுத்த வரையில் அதன் நிகழ்சி நிரலில் இருந்தது ’20’ மட்டும்தான். அரசங்கத்துக்குள் ஒரு அரசாங்கமாக இருக்கும் ‘வியத்மக’வின் திட்டமும் அதுதான். புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்து ’20’ இன் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளை விட்டுவிட ‘மொட்டு’ தயாராக இருக்கும் என யாராவது நினைத்தால் அவர்கள் இந்த நாட்டு அரசியலை புரிந்துகொள்ளாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். அல்லது ராஜபக்‌ஷக்களின் இலக்குகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். ஆக, “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கள் அர்த்முள்ளவையாக இருக்கலாம். சர்வதேசத்தினாலும், அரச சார்பற்ற அமைப்புக்களாலும் வரவேற்கப்படலாம். ஆனால், இலங்கையின் அரசியலுக்கு அவை பொருந்தப் போவதில்லை என்பதைக் காலம்தான் உணர்த்த வேண்டியிருக்கும். ஆசிரியர் https://thinakkural.lk/article/89854
 14. சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள் Bharati November 17, 2020 சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள்2020-11-17T05:59:46+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore இதயச்சந்திரன் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது. சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையான ஒப்பந்தங்களின் நோக்கம். அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டு பார்த்த, அணிமாறி நின்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன. நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப்போர் என்று விரிந்து சென்ற அமெரிக்க -சீன நவீன ஏகாதிபத்தியப்போர், இனி வேறு வடிவில் நகரப்போவதை இந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தம் புலப்படுத்துகிறது. 10 ஆசியான் நாடுகளுடன் , சீனா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து போன்ற கூட்டமைப்பிலில்லாத 5 நாடுகளும் இணைந்து, கடந்த நவம்பர் 15 ஆம் திகதியன்று, ‘முழுமையான பிராந்திய பொருளாதார பங்காளிக் கட்டமைப்பு’ (Regional Comprehensive Economic Partnership -RCEP ) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. கடந்த 8 வருடங்களாக இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இடையில் வந்த TPP வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட டொனால்ட் டிரம்ப் மறுத்ததால். 2017 இல் TPP முழுமையாகக் கைவிடப்பட்டு , மீண்டும் ஆர்செப்பிட்கான (RCEP ) பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத் சீர்குலைவினால், வேறுவழியின்றி இக்கூட்டு ஒப்பந்தம் சாத்தியமானது என்கிற பார்வையுமுண்டு. சீனாவைப் பொறுத்தவரை, அதன் உற்பத்தித்துறையில் ஓரளவு தேக்கநிலை காணப்பட்டாலும், உற்பத்தியாகும் பண்டங்களிற்கான வாங்குதிறன் கொண்ட சந்தைகள் தேவைப்படுகிறது. ஏனைய 14 நாடுகளுக்கும் இதேவிதமான பிரச்சினை, அளவு வேறுபாட்டுக் காணப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிகழ்ந்த இராஜதந்திர- பொருண்மியப்போர் தீவிரமடைந்திருந்தது. கொரோனா பரவல் குறித்து, சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்தது அவுஸ்திரேலியா அரசு. இதனால் சினம் கொண்ட சீனா, அவுஸ்திரேலியா மீது பொருளாதாரத் தடையை விதித்தது. சீன துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலியா சரக்குக் கப்பலை தடுத்தது. ஆனாலும் ஒரு மாதத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை சீனாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் ஈடுபடாத ஜப்பான் தேசம், அமெரிக்க நட்பு வளையத்திலிருந்து வெளியே வருகிறது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்து ஜப்பானுடன் முறுகல் நிலையில் இருக்கும் தென் கொரியா, இந்த கூட்டு வர்த்தக தளத்தில் இணைவது வியப்பாகவிருக்கிறது. ஏற்கனவே ஆசியான் கூட்டமைப்புடன் தனித்தனியே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்த, சீன (ACFTA ), ஜப்பான் (AIFTA ), அவுஸ்திரேலியா – நியூஸிலந்து (AANZFTA ) மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு ஏன் இந்த விரிவான- பலமான சுங்கத்தீர்வை குறைந்த வர்த்தக உடன்பாடு தேவைப்படுகிறது?. TPP (TRANS -PACIFIC ) ஒப்பந்தமானது அமெரிக்காவால் கைவிடப்பட்டதும், அந்நாட்டு அதிபரின் சுதந்திர வர்த்தகத்திற்கெதிரான இறுக்கமான நிலைப்பாட்டினால், அதன் நட்புநாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலிய மற்றும் தென் கொரியாவின் சர்வதேச வர்த்தக மூலோபாயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பலமான வர்த்தக கூட்டு தேவைப்படுகிறது. இருப்பினும் சீனா எதிர்கொள்ளும் பிரச்சினை வேறு. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவற்று நீண்டு செல்கிறது. அங்கெலா மேர்கல் இணங்கி வந்தாலும் ஜெர்மனியின் அதிகாரபீடமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம் வாய்ந்த நாடுகளும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பின்னடிக்கின்றன. 5G விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால், HUAWEI நிறுவன ஒப்பந்தங்களை புறந்தள்ளுகிறது பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும். ‘ஆசியாவில் சீனாவின் விரிவாக்கம் அபாயகரமானது ‘ என்கிற தந்திரோபாயக் கோசத்தோடு தொடங்கப்பட்ட ‘குவாட்’ (QUAD), அமெரிக்காவின் படைத்துறை வர்த்தகத்திற்கே சேவை செய்தது. அதுவும், சீனாவின் இருப்பிற்கு அச்சுறுத்தலான விடயமாகப் பார்க்கப்பட்டது. அதேவேளை RCEP இன் ஆரம்பகால உரையாடல் உறுப்பினரான இந்தியா, இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் ஏன் இணைந்து கொள்ளவில்லை என்கிற கேள்வி, மேற்குலக மற்றும் இந்திய ஊடகங்களில் பலமாக எழுப்பப்படுகிறது. சீனாவின் விலைமலிவான பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிந்தால் , உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதே இந்தியத்தரப்பு வாதம். RCEP இன் 15 நாடுகளிலிருந்து, 2004 இல் ஏற்பட்ட ஏற்றுமதி-இறக்குமதி பற்றாக்குறை ( Trade Deficit ) 7 பில்லியன் அமெரிக்க டொலராகவும் , 2018 இல் அப்பற்றாக்குறை 105 பில்லியனாக உயர்ந்துள்ளதாக இந்தியத் தூதுவர் ஒருவர் கவலையுடன் கூறுகின்றார். விவசாயத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்கிற கவலை வேறு இந்தியாவிற்கு இருக்கிறது. 8 வழிசாலையில், மலைகளும், விவசாய நிலங்களும் சூறையாடப்படுகிறது. கார்பொரேட் கம்பெனிகளின் இலாபத்திற்காக, மீத்தேன்-ஏதேன் எரிவாயு திட்டத்தினூடாக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாழ்பட்டுப்போவது குறித்து கவலைப்படாத இந்திய நடுவண் அரசு, தேசிய நலன் குறித்து அக்கறைப்படுவது வேடிக்கையாயிருக்கிறது. இந்திய தனது மனதை மாற்றிக் கொண்டால் எப்போதும் இக்கூட்டில் இணைந்து கொள்ளலாம் என்கிற அழைப்பும் நிலுவையில் உள்ளது. ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும்வரை காத்திருக்குமா? இல்லையேல் அதானி, அம்பானி, அகர்வால்களின் பச்சை சமிக்ஜை வரும்வரை பார்த்திருக்குமா? என்பது தெரியவில்லை. வர்த்தகம், சந்தை என்பதைத் தவிர, வேறெந்த நீண்ட மூலோபாயத்திட்டங்களை இந்த ஒப்பந்தமூடாக சீனா சாதிக்க முனைகிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் வங்கிச் சேவைகளின் பெரும்பாலான பகுதிகளில் எண்மிய நாணயம் (Digital Currency ) பயன்பாட்டில் வந்துள்ளது. இது எண்மியப் பொருளாதாரத்தை நோக்கிய முதல்கட்ட நகர்வாகும். குறிப்பாக RCEP இன் 15 நாடுகளுக்கிடையிலான வர்த்தகமும், அதற்குரித்தான பணப்பரிவர்தனையும் (Financial Clearance ) அந்தந்த நாடுகளின் எண்மிய நாணயத்தினூடாக நடைபெறக்கூடிய சாத்தியமுண்டு. உலக வர்த்தக பொது நாணயமான அமெரிக்க டொலரினை பிரதியீடு செய்யும் வகையில் நிதியியல் கட்டமைப்பு மாறலாம். சீனாவின் நோக்கமும் அதுதான். இதுவரை அமெரிக்க டாலரில் வர்த்தகத்தை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட Currency Swap என்கிற நாணயப் பிரதியீடு முறைமை, எண்மிய யுகத்தில் நுழையும் வர்த்தகத்தில் வேறு வடிவம் பெறும் . இந்த வர்த்தக கூட்டில் 18 மாதங்களின் பின்னர் எவரும் சேரலாம். அதற்கு முன்பாக ஆசியானிலுள்ள 6 நாடுகளும், ஏனைய 5 இல் 3 நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் (ratify )அளிக்க வேண்டும் . அப்போது ரஸ்யாவும் இணையலாம். சாங்கை ஓத்துழைப்பு கூட்டுத்தாபன (SCO ) நாடுகளும் சேரலாம். பாதுகாப்பு குறித்த சீனாவின் கடும்போக்கானது, சிலவேளைகளில் ஜப்பான், தென் கொரியாவுடன் பிரச்சினைகளை உருவாக்கலாம். அதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உண்டு. இந்தோ-பசுபிக் என்பது மறுபடியும் ஆசிய- பசுபிக்காக மாறும் போல் தெரிகிறது. https://thinakkural.lk/article/89816
 15. மேலும் 382 பேருக்கு கொரோனா Daya Dharshini November 17, 2020மேலும் 382 பேருக்கு கொரோனா2020-11-17T07:01:35+05:30 FacebookTwitterMore நாட்டில் மேலும் 382 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 382 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170 ஆக உயர்ந் துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்ந் துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதி கரித்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 464 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது. https://thinakkural.lk/article/89830
 16. புத்துார் சோமஸ்கந்த ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச்சாதனை!!! நேற்று வெளியாகிய புலமைப்பரிசில் முடிவுகளின்படி புத்துார் சோமஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச்சாதனை படைத்திருக்கிறார்கள். இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை தேர்வில் 98 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 37 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதுடன் 59 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். கிருபாகரன் நிருஷிகா 192 பாலசுரேஸ் தமிழ்விழி 191 ரமேஸ் அஸ்மிகா 189 சசிக்குமார் சானுஜன் 187 சௌந்தரராஜா டிலான் 184 ரதீஸ்வரன் நியுசர்மி 182 கிருசாந்தகுமார் வைஸ்ணஜா 180 சபேஸ் சஞ்சையன் 179 துஸ்யந்தன் லக்சிகா 179 மகேஸ்வரன் லக்ஸன் 178 கஜேந்திரன் கர்சயன் 178 ஜெயபாலன் வர்ணன் 178 ரவீந்திரன் ரினுஸ்ரன் 177 ஜெயச்சந்திரன் துஷானி 176 சுரேஸ் கனிஸ்ரிகா 175 சரவணபவானந்தன் துர்க்காயினி 173 லபிதாஸ் பாத்திமா 171 புவனேஸ்வரன் பாவனா 170 மகேஸ்வரன் மதுசாயினி 170 றஜீவ்மோகன் வைஸ்ணவி 169 ஜெயக்குமார் ஜெனிலியா 168 கஜேந்திரன் ரம்சன் 168 ஜெயராஜா தஸ்வினி 168 ஜெயக்குமார் கயுர்ணன் 167 லட்சுமணன் சந்துரு 167 சுதாகரன் ஆர்த்திகா 166 கமலரேகன் தருணிகா 165 குகேந்திரராஜா சௌமி 164 இதயகமலதாஸ் ஜதுர்சிகா 164 ரதீபன் தக்சயன் 164 பரமேஸ்வரன் கீதசாயி 163 நீதிராஜா காவியா 162 ராஜசேகரன் விதுசா 162 கஜீவன் கவியிசை 161 வில்வீரசிங்கம் கவிந்தன் 161 ரதீஸ்குமார் ரஸ்மிகன் 160 தில்லைநாதன் ரட்சிகா 160 https://newuthayan.com/புத்துார்-சோமஸ்கந்த-வித்/
 17. சாவகச்சேரி இந்துவில் 36 மாணவர்கள் சித்தி !!!! தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் 36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். பிறேமவாசன் பௌவினன் 187 நேசரூபன் நேருஜன் 187 தவனேசன் ஆரணன் 186 தயாக்குமரன் கேசிகா 186 துளசிதாசன் அனிஸ்கா 185 சகுலன் கிஷோர் 184 செந்துாரன் அப்சரகான் 182 சுஜீகரன் ஆருரன் 182 உதயகுமார் அர்ச்சயா 182 சதீஸ் ஸப்தமி 181 மகேந்திரன் மாதுமை 181 ஸ்ரீதரன் விரோசன் 178 மதிவதனன் டிலுக்சிகா 178 சிவகரன் சாமந்தி 177 சிவானந்தன் ஆரபி 177 சிவானந்தமூர்த்தி பானுஸ்யா 175 விஜிதரன் அஸ்வினி 175 கிருஸ்ணகுமார் திசானா 174 சிவநிதன் ஷம்சிகா 173 கிரிசங்கர் வஸ்மியா 172 உதயகுணசிங்கம் யனுசன் 172 மயூரதன் மயூரக்சிகா 171 ஜீவராசா ஹர்சன் 170 முகுந்தன் கிருஸ்ணிகா 170 சதீஸ்கண்ணா தனோபிகா 170 சுபாஷ்கரன் ராகவி 170 ஈஸ்வரன் அபிஷாந் 168 மயூரன் பிரகலாதன் 168 சுரேஸ்குமார் டதுர்ஷிகா 166 இரத்தினசிங்கம் சுஜானி 163 ஜெயரட்ணம் அர்ச்சனா 163 ஜெயக்குமார் பிரசாந் 162 கிருஸ்ணராசா கிசாந் 162 சந்திரகுமார் ஆராதனா 160 நகுலேஸ்வரன் நர்த்தனா 160 சசிகுமார் ஆரபி 160 அனைத்து மாணவர்களுக்கும் உதயனின் வாழ்த்துக்கள் https://newuthayan.com/சாவகச்சேரி-இந்துவில்-36-மா/ தென்மராட்சி கல்வி வலயம் : வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்!! தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் நேற்று(15) வெளியாகிய ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விபரம் வருமாறு சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை. 36 மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை. 22 கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பபாடசாலை. 16 சாவகச்சேரி மகளிர் கல்லூரி. 13 சாவகச்சேரி கல்வயல் ஶ்ரீசண்முகானந்தா வித்தியாலயம். 7 இயற்றாலை அ.மி.த.க.பாடசாலை 6 கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம் 6 மிருசுவில் அ.த.க.பாடசாலை 6 கச்சாய் மகா வித்தியாலயம் 5 கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம் 5 இடைக்குறிச்சி ஶ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம் 4 எழுதுமட்டுவாள் ஶ்ரீகணேசா வித்தியாலயம் 3 விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம் 3 கரம்பைக்குறிச்சி அ.த.க.பாடசாலை 3 கெற்பேலி அ.த.க.பாடசாலை 3 மந்துவில் றோ.க.த.க.பாடசாலை 3 நுணாவில்கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் 3 நாவற்குழி ம.வி. 2 உசன் இராமநாதன் ம.வி. 2 மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம் 2 மட்டுவில்தெற்குஅ.மி.த.க.பாடசாலை 2 மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் 2 கைதடி எருதிடல் அ.த.க.பாடசாலை 2 கைதடி கலைவாணி வித்தியாலயம் 2 நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலயம் 2 மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை 2 கைதடி குருசாமி வித்தியாலயம் 1 கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை 1 மந்துவில் ஶ்ரீபாரதி வித்தியாலயம் 1 கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் 1 கைதடி நாவற்குழி அ.த.க.பாடசாலை 1 கரம்பை அ.மி..த.க.பாடசாலை 1 மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலை 1 சாவகச்சேரி சக்தியம்மன் வித்தியாலயம் 1 அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் , பெற்றோர்கள் அனைவருக்கும் உதயனின் வாழ்த்துக்கள் https://newuthayan.com/தென்மராட்சி-கல்வி-வலயம்/ கரம்பைக்குறிச்சி அ.த.க. பாடசாலையில் 3 மாணவர்கள் சித்தி!!! நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கரம்பைக்குறிச்சி அ.த.க. பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும் 14 மாணவர்கள் 70புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உ.லஸ்மிதா -171 க.அபிலாஸ் -161 வி.யனுசாந் -160 https://newuthayan.com/கரம்பைக்குறிச்சி-அ-த-க-பா/ யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!!! மயிலிட்டி மாணவன் சாதனை!!! யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசந்துறை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலத்தின் சார்பில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற முதலாவது மாணவன் என்ற சாதனையை மயிலிட்டியைச் சேர்ந்த சா.மதுஷாந்த் படைத்துள்ளார். 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை-2020 இல் 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் என்ற மாணவன் 170 மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளார். அந்தவகையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் 5ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் முதலாவது சித்தியடைவாக இது அமைந்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். மயிலிட்டி பகுதியும் 1990/06/15 அன்று இடப்பெயர்வை சந்தித்து 27 ஆண்டுகளின் பின்னர் 2017 முதல் மீள்குடியேறி வரும் பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/யாழ்-நடேஸ்வரா-கனிஷ்ட-வித/ கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் : 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல்!!! கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பெருமை பாடசாலைக்கு சேர்த்துள்ளனர். இப்பரீட்சைக்கு 29 பேர் தோற்றி, 12 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து 41.38% மும், 100 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 90%மாகவும், 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 96.5% மாகவும் அமைந்துள்ளது. நா.கவிநயா 186 பா.திலக்சிகா 183 ப.திராளினி 180 வி.ஜனுஷன் 179 சி.நிதுர்ஷிகா 177 ர.கஜானன் 177 சு.கபிசாணி 176 ஸ்ரீ.ஜானுஜா 170 க.ஆதீரன் 169 ம.தனஜா 165 த.தரணிகா 162 றி.திலக்ஷிகா 161 https://newuthayan.com/கிளிநொச்சி-பிரமந்தனாறு-ம/
 18. கொழும்பு நகரை 3 வாரங்கள் முடக்க வேண்டும் – மாநகர மேயர் கொழும்பு நகரை மூன்று வாரங்கள் பயணக் கட்டுப்பாடுகளுடன் முடக்க வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “கொழும்பில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அது சவாலானதாக மாறும். நகரில் முதியோர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குள்ளாகி வருகிறது. தனிமைப்படுத்தலில் உள்ள மட்டக்குளியில் இருந்து நேற்றும் வேலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் தேவை. எனவே கொழும்பு நகரை 14 அல்லது 21 நாட்களுக்கு வெளியேற, உள்வரத் தடை விதித்து முழுமையாக முடக்க வேண்டும்” – என மேயர் கோரியுள்ளார். https://newuthayan.com/கொழும்பு-நகரை-3-வாரங்கள்-ம/
 19. புதிய அரசியலமைப்பிற்கான மாற்று முன்மொழிவுகள் பிரதமரிடம் கையளிப்பு Bharati November 17, 2020புதிய அரசியலமைப்பிற்கான மாற்று முன்மொழிவுகள் பிரதமரிடம் கையளிப்பு2020-11-17T05:34:26+05:30 FacebookTwitterMore இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல் நேற்று பௌத்த மகா சம்மேளனத் தலைவர் ஜகத் சுமதிபால அவர்களினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கப்பட்டது. பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மதிப்பிற்குரிய மஹா சங்கத்தினரால் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்நூல் கௌரவ பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின், தேசிய கொள்கை திட்டமிடல் குழு, சட்டம், அரச நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக் குழுவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய வஜிராராமாவாசி ஞானசீஹ தேரர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பிரனாந்து, ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ், ஜனாதிபதி சட்டத்தரணி வைத்யரத்ன, கலாநிதி பாலித கோஹொன, பேராசிரியர் லலிதசிறி குணருவண், ரஞ்சித் தென்னகோன், கலாநிதி நிமல் ஹெட்டிஆராச்சி, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோரை இத்துணைக் குழு கொண்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் பௌத்தசாசன செயலணியின் தலைவர், ஆனந்த மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற உதவி அதிபர், கலாநிதி திவியாகத யசஸ்தி தேரர், அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம், தேசிய கொள்கை திட்டமிடல் குழு,சட்டம், அரச நிர்வாகம் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக்குழுவின் தலைவர் வணக்கத்திற்குரிய வணக்கத்திற்குரிய விஜேராராமவாசி ஞானசீஹ தேரர், பௌத்த சம்மேளனத்தின் தலைவர் திரு.ஜகத் சுமதிபால, பிரதி தலைவர் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோர் கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/89813
 20. 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று – ராஜபக்‌ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு Bharati November 17, 20202021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று – ராஜபக்‌ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு2020-11-17T04:59:32+05:30 FacebookTwitterMore கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக 267804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகையில் 78227 கோடியே 8091000 ரூபா ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலேயே இத் தொகை ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வின் ஜனாதிபதி செலவி னங்களுக்காக 934 கோடியே 5660000 ரூபாவும் அவரே பாதுகாப்பது அமைச்சராக இருப்பதனால் பாதுகாப்பு அமைச்சுக்கென 35515 கோடியே 9250000 ரூபாவும் என மொத்தமாக 36450 கோடியே 4910000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சமல் ராஜபக்சவின் நீர்ப்பாசன அமைச்சுக்காக 4658 கோடியே 7700000 ரூபாவும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்காக 15246 கோடியே 5042000ரூபாவுமென 19905 கோடியே 2742000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நிதி அமைச்சுக்காக 15760 கோடியே 3715000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 2352 கோடியே 1199000 ரூபாவும் புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சுக்காக 694 கோடியே 6000000 ரூபாவும் பிரதமரின் செலவினத்துக்கென 105 கோடியே 1750000 ரூபாவுமென 18912 கோடியே 2664000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்திர ராஜபக்சவின் நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சுக்கு 1867கோடியே 0160000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்சவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 1092 கோடியே 7615000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 267804 கோடி ரூபா நிதியில் ராஜபக்சக்களுக்கு 78227 கோடியே 8091000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/89805
 21. சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம் Bharati November 16, 2020 சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்2020-11-16T08:07:19+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore அ.நிக்ஸன் அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள்ளடக்கியுள்ளதால் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலகளாவிய மக்கள் தொகையில் ஏறத்தாள மூன்றில் ஒரு பகுதியையும் அதன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30சதவீதத்தை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் வர்த்தக ஊக்குவிப்பு என்ற போர்வையில், படிப்படியாக கட்டணங்களை குறைக்கும், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு வாதத்தை எதிர்த்து முதலீட்டை அதிகரிக்கும், பிராந்தியத்திற்குள் பொருட்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிப்பது போன்ற செயற்பாடுகளே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமென நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் பொருளாதார அமைச்சர்கள் சீன மற்றும் ஜப்பானிய கூட்டுத் தொடர்பான பொருளாதார வழிமுறைகள் குறித்த விரிவான பேச்சு ஒன்றைத் தொடக்கி வைத்தனர். அதன் தொடர்ச்சியாகவே 2012ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டு ஆண்டுகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15 நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வியட்னாம் தலைநகரில் வீடியோவில் நடத்தப்பட்ட மாநாட்டின் மூலமாக (Video Conference) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 15 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். 2012ஆம் ஆண்டில் இருந்து 29 கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. 29ஆவது கூட்டமே கோவிட் 19 நோய் பரவல் காரணமாக வீடியோ மாநாடாக நடைபெற்றது. சென்ற ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை வீடியோ மாநாடாக நடைபெற்றது. பின்னர் மே மாதம் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வீடியோ மாநாடாக நடைபெற்றது. இதன் போது உடன்பட்டுக் கொண்ட விடயங்கள் அறிக்கைகளாகத் தயரிக்கப்பட்டு 15 நாடுகளும் இணக்கம் தெரிவித்த பின்னர், மீண்டும் யூன் மாதம் ஒப்பந்தம் பற்றிய மதிப்பீட்டு மாநாடு நடத்தப்பட்டது. ஓகஸ்ட் 27ஆம் திகதியும் மற்றுமொரு மீளாய்வு வீடியோ மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னரே நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 15 நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திடவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் தொடர்பான 28ஆவது கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, இந்தியா தொடர்பாக முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திட முடியாதென இந்திய உட்துறை அமைச்சர் அமீத் ஷா தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் அதன் உண்மை நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை, இதன் விளைவு நியாயமானதாகவோ அல்லது சீரானதாகவோ இல்லை. இதில் இறக்குமதி உயர்வுக்கு எதிரான போதிய பாதுகாப்பு, சீனாவுடனான போதிய வேறுபாடு, அடிப்படை விதிகளை மீறுதல், சந்தையை அணுகுதல் மற்றும் கட்டணமில்லா தடைகள் குறித்து நம்பகமான உத்தரவாதங்கள் இல்லாதது போன்ற முக்கிய பிரச்னைகள் இருப்பதாக அமீத் ஷா புதுடில்லியில் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை செய்தியாளரிடம் கூறியுள்ளார். ஆனால் இந்தக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இணைய இந்தியாவுக்காகக் கதவுகள் திறந்தே இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கவே முடியாதென இந்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா புதுடில்லியில் செய்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது மாநாடு புதுடில்லியில் நடைபெற்றபோதே இந்திய நிலைப்பாடுகள் குறித்தும், சீனாவிடம் இருந்து வரக்கூடிய பாதுகாப்பற்ற தன்மைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதென்றும், ஆனாலும் இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதற்கு உரிய பதில் தரவில்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார். உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பதினைந்து நாடுகள் உலகின் மிகப்பெரிய வர்த்தக முகாமை ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கின் விரிவாக்கமாகக் கருதப்படுகிறது. டொனால்ட் ட்ரம், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 2017ஆம் ஆண்டு 12 நாடுகளை உள்ளட்கிய ஆசிய -பசுபிக் கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்ததில் இருந்து அமெரிக்காவை விலக்கினார். ஆனால் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தில் இணைந்து அதன் மூலமாக சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார். எனினும் டொனால்ட் ட்ரம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், ஆசிய- பசுபிக் கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கூடுதலாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இந்தவொரு நிலையிலேயே 15 நாடுகள் உள்ளிட்ட பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை, இந்தோ- பசுபிக் பிரந்தியத்தில், பொருளாதார ரீதியாக சீனாவின் பலம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானமை, மேகங்களுக்கு மத்தியில் ஒளியையும் நம்பிக்கையையும் தருவதாக அமைந்துள்ளதென சீனப் பிரதமர் லி கெக்கியாங் கூறினார். திரு லி இந்த ஒப்பந்தத்தை பலதரப்பு மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் வெற்றி என்றும் வர்ணிக்கிறார். ஆரம்பத்தில் இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தது. ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் குறைந்த கட்டணங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தியா வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் இந்திய முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாகவே, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் வெளியேறியதாக இந்திய உள்துறை அமைச்சு காரணம் கற்பிக்கின்றது. இருந்தாலும் இந்தியாவின் காரணத்தை ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே ஏற்கவில்லையென என்பிசி செய்திச் சேவை கூறுகின்றது. உலக பொருளாதாரத்தில் 49.5 டிரில்லியன் டாலர் இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திட்ட 15 நாடுகளிடம் இருப்பதால், மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுவாக RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியா இதில் இணைந்தால் மாத்திரமே அது சாத்தியமாகுனெ ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை அவுஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டதை சீனா வரவேற்றுள்ளது. 15 நாடுகளுக்கிடையிலான ஆசிய- பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவோடு உறவை வலுப்படுத்த உதவும் என அவுஸ்ரேலியாவின் வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்கம் தெரிவித்துள்ளார். ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் கையெழுத்திட்டுள்ள சீனா ஆதரவு பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் என்று சீன ஊடகங்கள் வர்ணித்துள்ளன. உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக இது மாறக்கூடும் எனவும் சீன ஊடகங்கள் விபரித்துள்ளன. RCEP எனப்டும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது தற்போதுள்ள நாடுகளுக்கிடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreement) (FTA) எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து ஆசிய வர்த்தக மையத்தைச் சேர்ந்த டெபோரா எல்ம்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கொண்ட வணிகங்கள் ஒரு FTA க்குள் கூட கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடும், ஏனெனில் அவற்றின் தயாரிப்புகளில் வேறு இடங்களில் தயாரிக்கப்படும் கூறுகள் உள்ளன. உதாரணமாக, இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்புக்குப் பதிலாக , ஆஸ்திரேலிய பாகங்கள் உள்ளன, ஆசிய சுதந்திர வர்த்தக வலயத்தில் வேறு எங்கும் கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடும். RCEP எனப்படும் ஒப்பந்தத்தின் கீழ், எந்தவொரு உறுப்பு நாடுகளிடமிருந்தும் பாகங்கள் சமமாகவே கருதப்படும். ஆகவே இவை சிக்கலானது என்று அவர் வாதிடுகிறார். இந்தியா கைச்சாத்திட மறுத்தமைக்கான காரணத்தை அவர் நியாயப்படுத்துகின்றார் போலும். இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த குவாட் எனப்படும் வலையமைப்புக்குள் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து கூட்டுக் கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குவாட்டில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை அமெரிக்க இந்திய நலன்களுக்குப் பாதகமானதென்றே கருதப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க இராஜதந்திரத்திற்கு இது ஏமாற்றமாகவே அவதானிக்கப்படுகிறது. அதேவேளை, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கும் இது வலு சேர்க்கிறது. இந்த இடத்தில் அமெரிக்காவோடு சேர்ந்து நிற்கும் இந்தியா, ஜோ பைடன் நிர்வாகம் வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தொழில் அதிபர்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்த நகர்வுகள் எல்லாமே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் செல்லப்பிள்ளை போன்று இருக்கும் இலங்கைக்கு எந்தப் பக்கம் திருப்பினாலும் சிவீப் ரிக்கற் விழுந்ததுபோன்ற உணர்வுதான். https://thinakkural.lk/article/89516
 22. ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார் என கருதிய புலனாய்வு அமைப்புகள் – ஈரானில் அவரையும் இலக்கு வைத்தது இஸ்ரேலின் இரகசிய புலனாய்வு அமைப்பு Rajeevan Arasaratnam November 15, 2020 ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார் என கருதிய புலனாய்வு அமைப்புகள் – ஈரானில் அவரையும் இலக்கு வைத்தது இஸ்ரேலின் இரகசிய புலனாய்வு அமைப்பு2020-11-15T19:50:26+05:30அரசியல் களம், உலகம் LinkedInFacebookMore ஸ்வாட்டுடே – சிஎன்என் தினக்குரல் இணையம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இணைந்து அல்ஹைதாவின் மிக முக்கிய உறுப்பினர் ஒருவரைஈரானில் கொலை செய்துள்ளன. டிரம்ப் நிர்வாகம் ஈரானிற்கு எதிராக மிக அழுத்தங்களை ஐநாவில் அதிகரித்துக்கொண்டிருந்த தருணத்தில் இந்த துணிச்சலான நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நிர்வாகத்தை சேர்ந்த நான்கு முன்னாள் தற்போதைய அதிகாரிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஈரான் தலைநகரில் அல்மஸ்ரி கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளன. அல்மஸ்ரியை எங்கு இலக்குவைக்கலாம் அவர் எங்கு நடமாடுகின்றார் என்ற தகவலை அமெரிக்கா இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியுள்ளது.அதனை பயன்படுத்தி இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினர் அவரை கொலை செய்துள்ளனர். வேறு இரு அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளனர். 1988ம் ஆண்டு நைரோபி கென்யா -தான்சானியா போன்ற நாடுகளில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற அதேநாளில் அதாவது ஆகஸட் ஏழாம் திகதி அல்மஸ்ரி டெஹ்ரானில் கொல்லப்பட்டுள்ளார். அந்த தாக்குதல்களை இவரே திட்டமிட்டார் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன. செப்டம்பர் 11 தாக்குதல்களை அமெரிக்காவில் முன்னெடுத்த அல்ஹைதா அமைப்பிற்கு இது பாரிய பின்னடைவாகும். அந்த அமைப்பின் தலைவர் அய்மன் அல்ஜவஹிரி குறித்து உறுதி செய்யமுடியாத தகவல்கள் வெளியாகிவரும் தருணத்தில் அல் மஸ்ரி கொலை செய்யப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அய்மன் ஜவஹிரி குறித்த தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்யவில்லை அதனை உறுதி செய்ய முயல்வதாக தெரிவிக்கின்றன. அல்மஸ்ரியை ஈரானில் கொலை செய்தது இஸ்ரேலின் கிடொன் என்ற புலனாய்வு அமைப்பு என இந்த கொலைநடவடிக்கையுடன் நேரடி தொடர்பில் உள்ள புலனாய்வு பிரிவை சேர்ந்த நபர் ஒருவரும்,சிஐஏயின் அதிகாரியொருவரும் தெரிவித்தனர். இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் இரகசிய பிரிவொன்றே- கிடொன். உயர்மட்ட கொலைகளுக்காக உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பு. கிடொன் என்பதற்கு ஈட்டியின் முனை என்பது அர்த்தம். அல்மஸ்ரியின் மகளும் ஹம்சா பின் லேடனின் மனைவியுமான மரியமும் இந்த நடவடிக்கையில் இலக்கு வைக்கப்பட்டார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அல்ஹைதாவின் தலைமையை ஏற்ககூடியவராக மாற்றப்பட்டுகொண்டிருந்த – உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் மரியம் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன. அவர் அல்ஹைதாவின் நடவடிக்கைகளை திட்டமிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன. ஆகஸ்ட் ஏழாம் திகதி டெஹ்ரானின் வடபகுதியில் உள்ள நடுத்தரவர்க்க குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் துப்பாக்கி பிரயோக சத்தத்தினை கேட்டு என்ன நடந்தது என பார்ப்பதற்காக வெளியே ஓடிச்சென்றனர். அங்கு வெள்ளை ரெனோல்ட் வாகனத்தில் நபர் ஒருவரும் இளம் பெண்ணொருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். அவர்களின் வாகனத்தை கடந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அவர்கள் மீது ஆகக்குறைந்தது நான்கு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருக்கவேண்டும். துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என எங்களிற்கு தெரிவித்தார்கள் நாங்கள் அங்கு சென்றவேளை இருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் என உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்ற சிலநிமிடங்களில் ஈரானிய ஊடகங்கள் ஹெல்புல்லா அமைப்புடன் தொடர்புகளை பேணிய லெபனான் பேராசிரியரும் அவரது மகளும் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவித்துள்ளன. அந்த கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை எவரும் கைதுசெய்யப்படவில்லை இதன் பின்னர் அந்த சம்பவம் குறித்து எவரும் அக்கறை கொள்ளவில்லை ஆனால் ஒக்டோபர் மாதத்தில் இனந்தெரியாத சில சமூக ஊடக பயனார்கள் கொல்லப்பட்டவர் லெபனான் பேராசிரியரில்லை மாறாக அவர் அல்ஹைதாவின் முக்கிய நபர் என தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் கவனம் அந்த சம்பவத்தை நோக்கி திரும்பியது. ஒக்டோபரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் டுவிட்டர் ஈரானில் கொல்லப்பட்டது அலமஸ்ரியும் அவரது மகளும் என தெரிவித்தது. நான் ஆப்கான் யுத்தததில் முன்னர் ஈடுபட்டவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் அது அல்மஸ்ரியும் அவரது 27 வயது மகளும் என தெரிவித்தனர் என அந்த பத்திரிகையாளர் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் சம்சாட் நியுஸ் அல்மஸ்ரி ஈரானில் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தது. ஆனால் ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்தும் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்தனர். பயங்கரவாத தடுப்புபிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் அல்மஸ்ரி கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அல்மஸ்ரியும் அவரது மகளும் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டுள்ளனர் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/89470
 23. ட்ரோன் கமெராக்கள் கண்காணித்தன – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது Bharati November 12, 2020ட்ரோன் கமெராக்கள் கண்காணித்தன – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது2020-11-12T21:36:56+05:30 FacebookTwitterMore தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார். https://thinakkural.lk/article/88689
 24. யாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கையளிப்பு Bharati November 13, 2020யாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கையளிப்பு2020-11-13T05:17:31+05:30 LinkedInFacebookMore யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென, பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனி நபர் விசாரணை ஆயத்தின் தலைவர் ஓய்வு நிலைப் பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தினால் இந்த விரிவான விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு, விசாரணை அதிகாரியினால் முன் மொழியப்பட்டுள்ள சிபார்சுகளின் அடிப்படையில் பேரவைக்கான பல்கலைக் கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரை முன்வைக்கப்படும். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி (புறொக்டர்) ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுகின்றார். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாகப் பேரவையினால் இற்றைப்படுத்தப்படும் தீர்மானம் துணைவேந்தரால் நடைமுறைப்படுத்தப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. கடந்த மாதம் கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள்இ துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். எனினும்இ உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர்இ தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று பேரவையினால் அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர். மறுநாள்இ 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவைஇ வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும்இ ஓய்வு நிலைப் பேராசிரியருமான மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது. தனிநபர் விசாரணை ஆயத்தின் விசாரணைகள் கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது. தாக்குதல் சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்இ பாதுகாப்பு ஊழியர்களும் சாட்சியமளித்திருந்தனர். அதன் பின்இ சம்பவம் தொடர்பில் – சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருடஇ மூன்றாம் வருட மாணவர்கள் சாட்சியமளித்திருந்தனர். அதன் பினனர்; துணைவேந்தர் மற்றும் கலைப்பீடாதிபதி ஆகியோரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. https://thinakkural.lk/article/88696
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.