Jump to content

செண்பகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    560
  • Joined

  • Last visited

Everything posted by செண்பகம்

  1. யாழுக்கு ரயிலில் வந்த 50 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல்! கம்பஹா – மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான திவுலப்பிட்டிய பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு 50 கடற்படை வீரர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பயணித்துள்ளார். இதனால் 50 கடற்படை வீீரர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தம்பகொலபத்துன முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் குறித்த ரயில் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. https://newuthayan.com/யாழுக்கு-ரயிலில்-வந்த-50-கட/ கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 220 பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்-சவேந்திர சில்வா Daya Dharshini October 6, 2020கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 220 பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்-சவேந்திர சில்வா2020-10-06T09:56:45+05:30 மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார். அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது. இதன் படி நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி கொரொனா தொற்றாளர் கள் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது. https://thinakkural.lk/article/77235 நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதி தெரிவித்தது என்ன? Daya Dharshini October 6, 2020நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதி தெரிவித்தது என்ன?2020-10-06T11:00:22+05:30 கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தால் நாட்டைப் பூட்டு வது எளிதான வழி என்றாலும், இலங்கை மக்கள் வாழ்வா தாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக் கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார். எனவே, கொரோனா தொற்றாளி அடையாளம் காணப் பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கிய மானதல்ல எனவும் மாறாகக் குறித்த தொற்றாளியை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலைத் தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார். குறித்த பகுதியில் பெண் ஒவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த பகுதிகளிலிருந்து அதிகமான மக்கள் பணி நிமித்தம் வருவதைக் கருத்தில் கொண்டே இந்த ஊடரங்கு அமுல் படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார் https://thinakkural.lk/article/77266
  2. புங்குடுதீவு பெண் பயணித்த வழித்தடம் வெளியீடு! கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு காெரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். அதனால் அந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்படி புங்குடுதீவில் கொரோனா தொற்று உறுதியான பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோரை 021-2226666 என்ற இலக்கத்துக்கு அழைத்து பதியுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அப்பெண் புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் (03) இரவு 8.30 மணிக்கு Ran Silu – WP ND 6503 என்ற பேருந்தில் பயணித்து, நேற்று (04) காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார். https://newuthayan.com/புங்குடுதீவு-பெண்-பயணித்/
  3. யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தல்; பிசிஆர் மாதிரி பெறப்பட்டது! கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நாளை (06) கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/யாழ்-பல்கலை-மாணவர்கள்-9-பே/
  4. நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? தொற்று நோய்ப் பிரிவுப் பணிப்பாளர் விளக்கம் Bharati October 6, 2020நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? தொற்று நோய்ப் பிரிவுப் பணிப்பாளர் விளக்கம்2020-10-06T05:20:12+05:30 நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஏற்படும் நிலவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 101 பேருக்கு தொற்று ஏற்பட்டமை நேற்று ,uT உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் அந்தப் பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் காணப்படும் நிலவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா? என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றார். https://thinakkural.lk/article/77212 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு Rajeevan Arasaratnam October 5, 2020பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு2020-10-05T22:30:47+05:30 மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையில் பரவிய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. சோதனைகளின் மூலம் மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குருநாகல் மொனராகலை ஜாஎல மகர சீதுவை கட்டான யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 101 பேரில் 68 பேர் ஆடைதொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என அரசாங்க தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/77196
  5. ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி Rajeevan Arasaratnam October 5, 2020ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி2020-10-05T13:06:05+05:30 ஆனமடுவவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது தடவையாக கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனமடுவை தேனன்குரிய பகுதியைசேர்ந்த 23வயது இளைஞனே மூன்றாவது தடவையாக பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18ம்திகதி ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்த இளைஞர் ஒருவர் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை அவருக்கு கொவிட் 19 பாதிப்புள்ளமை முதலில் தெரியவந்தது என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகன தெரிவித்துள்ளார். வெலிக்கந்தை மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இளைஞர் தன்னை வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அந்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் சோதனையின் போது இரண்டாவது தடவை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது எனஉபுல் ரோகண தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த இளைஞர் இரணவில கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவை அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் அவரது வீட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் அவர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கானசூழலை ஏற்படுத்துவதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். சுய தனிமைப்படுத்தலில்இருந்தவேளை ஒக்டோபர் இரண்டாம் திகதி அந்தஇளைஞர் சிலாபத்தில் உள்ள கொவிட் சோதனை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது அவருக்கு மீண்டும் கொரோனாவைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/76971
  6. திவுலபிட்டிய பாடசாலை மாணவர்கள் 1500 பேர் தனிமைப்படுத்தல் திவுலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சுமார் 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் மகள் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் இன்று கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர் https://thinakkural.lk/article/76984
  7. இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை கம்பஹா, திவுலப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த பணியாளர்கள் 15 பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையில்-பெண்ணுக்கு-கொரோனா-60-பேருக்கு-சுயதனிமை/150-256223
  8. நாட்டில் நேற்று 06 பேர் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதாரப் பிரிவு Daya Dharshini October 1, 2020நாட்டில் நேற்று 06 பேர் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதாரப் பிரிவு2020-10-01T10:27:06+05:30 நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 06 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒமானிலிருந்து நாடுதிரும்பிய 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவர், ஒமானிலிருந்து நாடு திரும்பிய இந்தியக் கடலோடி ஒருவர், அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ள மை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/75575
  9. நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு, வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் சென்னையில் இருந்து நாடு திரும்பிய எட்டுப்பேரும், பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து மூவாயிரத்து 208 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் இன்றும் 139பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாட்டில்-கொரோனா-தொற்று-க-4/
  10. மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு Daya Dharshini September 26, 2020மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு2020-09-26T09:24:08+05:30 நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டாரிலிருந்து வருகை தந்த 6 பேர், உக்ரேனிலிருந்து வருகை தந்த 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த இருவர், அல்பீனியாவிலிருந்து வந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 345 ஆக அதிகரித் துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. 174 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொ டர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப் பிடத்தக்கது. http://thinakkural.lk/article/72305
  11. ரஷ்ய கொரோனா தொற்றாளியால் 37 பேர் தனிமைப்படுத்தல்! மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று (24) தனிமைப்படுத்தப்பட்டனர். குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமானப் பணியாளர் குழுவில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று (23) கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பிரஜைகள் 15 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக கடந்த 13ம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் இன்று சீனா பயணமாக இருந்ததுடன், நேற்று முன்தினம் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிசிஆர் பரிசோதனைக்குட்பட்டனர். இதனையடுத்தே அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யப் பிரஜை சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன், ஹோட்டலின் ஊழியர்கள் குழு ஹபராதுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தம்புத்தேகம, எம்பிலிப்பிட்டிய, தெனியாய, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் மாலிம்பட ஆகிய பகுதிளைச் சேர்ந்தவர்களாவர். ஹோட்டல் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய பிரஜைகள் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி, மனைவி, பிள்ளைகள் இருவர் சகிதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இதேவேளை குறித்த தொற்றாளியுடன் இருந்த ஏனைய ரஷ்ய பிரஜைகள் இரண்டு சுப்பர் மார்கட்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://newuthayan.com/ரஷ்ய-கொரோனா-தொற்றாளியால்/
  12. இலங்கையில் கொரோனா தொற்று அபாய நிலை குறைவடையவில்லை – தொற்று நோய்ப் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை. எனவே பொதுமக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார். http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-தொற்ற-23/
  13. மாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா – தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை Rajeevan Arasaratnam September 24, 2020மாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா – தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை2020-09-24T14:54:37+05:30 மாத்தறையில் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தரஸ்ய பிரஜை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்துஅவருடன்தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். மத்தல சர்வதேச விமானநிலையத்துக்கு சமீபத்தில் வந்த ரஸ்ய விமானமொன்றின் பணியாளர் ஒருவர் ஹோட்டலொன்றிலிருந்து அம்பாந்தோட்டை வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் ஏனைய விமானப்பணியாளர்களுடன் மாத்தறையில் உள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் முதலில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது என தெரிவித்துள்ளனர். எனினும் இரண்டாவது சோதனையின் போதுஅவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஹோட்டல் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ரஸ்ய பிரஜையுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://thinakkural.lk/article/71769 ரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி Rajeevan Arasaratnam September 24, 2020ரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி2020-09-24T22:25:55+05:30 ரஸ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான செயலணிக்கு தெரிவிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவிலிருந்து வந்த பயணியொருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வழமையாக அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது வழமை என தெரிவித்துள்ள இராணுவதளபதி எனினும் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த நபர் மூலம் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/71873 ரஸ்ய பிரஜை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை- பொது சுகாதார பரிசோதகர் சங்கம் Rajeevan Arasaratnam September 24, 2020ரஸ்ய பிரஜை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை- பொது சுகாதார பரிசோதகர் சங்கம்2020-09-24T21:39:18+05:30 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஸ்ய பிரஜை குறித்து அதிகாரிகள் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என பொதுசுகாதா பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ரஸ்ய பிரஜை விமானநிலையத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரஸ்ய பிரஜை எந்த பகுதிகளுக்கு சென்றார் என்பதை கண்டுபிடித்த பின்னர் தொடர்புபட்ட நபர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய பிரஜை பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் வரை அதிகாரிகள் எநத தகவலையும் தெரிவிக்காதது கவலையளிக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. http://thinakkural.lk/article/71865
  14. புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் Daya Dharshini September 22, 2020புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம்2020-09-22T11:18:22+05:30 நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 8 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த கடற்படையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3,298 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 185 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/70772
  15. நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்ககையில் மேலும் அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில், பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் 185 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் 177 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாட்டில்-மேலும்-மூவருக்-2/
  16. நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 18 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 88 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் 186 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 4Shares https://athavannews.com/நாட்டில்-கொரோனா-தொற்று-உ-2/
  17. இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,283ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-அதிகரித்து-செ/
  18. “பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் சமூகத்தினுள் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகின்றனர். எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உற்சவங்கள் நடத்தப்படும்போதும் பொறுப்பற்று செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல்களிலுள்ள ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார். இதன் போது கருத்து தெரிவித்த தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது. மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது. இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். https://www.ibctamil.com/srilanka/80/150839?ref=imp-news
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.