Jump to content

செண்பகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    560
  • Joined

  • Last visited

Everything posted by செண்பகம்

  1. மேலும் 351 பேருக்கு கொரோனா Daya Dharshini October 26, 2020மேலும் 351 பேருக்கு கொரோனா2020-10-26T06:52:40+05:30 FacebookTwitterMore திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 398 உயர்ந்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொ த்த எண்ணிக்கை 7ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது, தற் போது நாட்டின் 30 வைத்தியசாலைகளில் 4 ஆயிரத்து 054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றால் 3ஆயிரத்து 803 நேற்று குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. https://thinakkural.lk/article/83084
  2. தொடங்கொடவில் 50 வீடுகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு Daya Dharshini October 25, 2020தொடங்கொடவில் 50 வீடுகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு2020-10-25T08:33:39+05:30 FacebookTwitterMore களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரி விற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது. வேதவத்த /மகாலந்தாவ தெற்கு / மகுருமஸ்வில / குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட தெற்கு ஆகிய 5 கிராமங் களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குப் போக் குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கை களைக் கருத்தில் கொண்டு குறித்த கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://thinakkural.lk/article/82929
  3. தெஹிவளை சந்தை தொகுதி மூடல்! கொழும்பு – தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். பேலியகொட மீன்சந்தை வளாகத்தில் இருந்து தெஹிவளை மத்திய சந்தைப் பகுதிக்கு மீன்களை ஏற்றிவந்த லொறியின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான குறித்த நபர் தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதியில் மீன் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. https://newuthayan.com/தெஹிவளை-சந்தை-தொகுதி-மூட/ சற்றுமுன் 259 பேருக்கு தொற்று உறுதி! கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (22) இதுவரை 309 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 182 பேருக்கும் மினுவாங்கொடை தொடர்பு காரணமாக பல்வேறு இடங்களில் 75 பேர், தனிமைப்படுத்தல் மையத்தில் இருவர் என 77 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதியானது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,817 ஆக உயர்ந்துள்ளது. https://newuthayan.com/சற்றுமுன்-259-பேருக்கு-தொற்/
  4. வவுனியாவுக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; 3 பேருக்கு தொற்று உறுதி Bharati October 21, 2020வவுனியாவுக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; 3 பேருக்கு தொற்று உறுதி2020-10-21T17:57:54+05:30 FacebookTwitterMore வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/81892 பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு தொற்று! October 21, 202002 SHARE0 கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது https://newuthayan.com/பேலியேகொடை-மீன்-சந்தையில/
  5. நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு Bharati October 21, 2020நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு2020-10-21T06:48:14+05:30 FacebookTwitterMore நாட்டில் நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 120 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,457 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்துமுள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந் தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத் தக்கது. https://thinakkural.lk/article/81613 களுபோவில வைத்தியாசாலை ஊழியருக்கு கொரோனா-மினுவாங்கொடை பரவலுடன் தொடர்பில்லாதவர் Rajeevan Arasaratnam October 21, 2020களுபோவில வைத்தியாசாலை ஊழியருக்கு கொரோனா-மினுவாங்கொடை பரவலுடன் தொடர்பில்லாதவர்2020-10-21T10:21:08+05:30 FacebookTwitterMore கொழும்பு களுபோவில வைத்தியாசாலையின் பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பணியாளர் 15ம் திகதி பணியிலிருந்தவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையி;ன் போது அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் தெகிவளையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளி கொஸ்கம கொவிட்19 கிசிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் மினுவாங்கொட பரவலிற்கும் தொடர்பில்லை என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 16 ஊழியர்களுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/81674
  6. நோயாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரிரு நாட்களில் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள்- பிசிஆர் சோதனை முடிவுகள்குறித்து சந்தேகம் Rajeevan Arasaratnam October 20, 2020நோயாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரிரு நாட்களில் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள்- பிசிஆர் சோதனை முடிவுகள்குறித்து சந்தேகம்2020-10-20T00:06:20+05:30 FacebookTwitterMore இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சில பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன. முதலில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயினால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். முதல் தடவை நோயாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் 14 நாட்களின் பின்னரே நோயாளியில்லை என அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். முதலில் நோயாளி என ஒருவர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பாதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு அடுத்த ஓரிருநாட்களில் வெளியாகின்றது என்றால் அதன் அர்த்தம் ஆய்வு கூடசோதனைகளி;ல் தவறு நிகழ்ந்துள்ளது என்பதே என அவர் தெரிவித்துள்ளார். நோயாளி என அறிவிக்கப்பட்டவர்கள் அடுத்த ஒரிருநாட்களில் நோயாளிகள் இல்லை என அறிவிப்பு வெளியாவது குறித்து கரிசனை வெளியாகியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை செயலாளர் மருத்துவர் ஹரிதே அலுத்கே தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/81206
  7. கொழும்பும் அதிக ஆபத்து நிலவும் பகுதி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் Rajeevan Arasaratnam October 15, 2020கொழும்பும் அதிக ஆபத்து நிலவும் பகுதி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்2020-10-15T21:52:23+05:30 FacebookTwitterMore கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். நாளொன்றிற்கு பத்தாயிரம் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்வதற்கு கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான கொள்கைகளை தரமுயர்த்தவேண்டும்,சரியான சோதனை கொள்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/80025 மினுவாங்கொடையில் மேலும் மூன்று கிராமங்கள் இன்று முடக்கப்பட்டன Rajeevan Arasaratnam October 15, 2020மினுவாங்கொடையில் மேலும் மூன்று கிராமங்கள் இன்று முடக்கப்பட்டன2020-10-15T17:16:36+05:30 FacebookTwitterMore மினுவாங்கொடையில் மேலும் மூன்று கிராமங்களை அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர். ஹனிகிமுல்ல,பெரலந்தவத்தை,ஹெலகந்தான ஆகிய கிராமங்களையே அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பலர் இந்த கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அதிகாரிகள் இந்த கிராமங்களை முடக்கியுள்ளனர். மினுவாங்கொடையில் மேலும் பிசிஆர் பரிசோதனைகளை அதிகாரிகள் இன்று மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/80003
  8. பிலியந்தல விகாரையில் 74 பௌத்த குருமார் உட்பட 90 பேரிற்கு தனிமைப்படுத்தல் உத்தரவு Rajeevan Arasaratnam October 14, 2020பிலியந்தல விகாரையில் 74 பௌத்த குருமார் உட்பட 90 பேரிற்கு தனிமைப்படுத்தல் உத்தரவு2020-10-14T12:08:28+05:30 FacebookTwitterMore பிலியந்தல சிலுமின விகாரையை சேர்ந்;த 74 பௌத்த மதகுருமார் உட்பட90 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிலியந்தலையில் உள்ள ககாபொல சிலுமின மகாவிகாரையின் தலைமை மதகுரு உட்பட 90 பேரையே தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கிம்புலாவலயிலிருந்து குறிப்பிட்ட விகாரைக்கு சென்ற ஒருவர் கொரோனாவினால்பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் மகன் குறிப்பிட்ட விகாரையின் மதகுரு எனவும் தகவல்கள்வெளியாகியுள்ளன. https://thinakkural.lk/article/79609
  9. மணப் பெண்ணுக்கு கொரோனா; மாப்பிளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற அனைவரும் தனிமைப்படுத்தல் Daya Dharshini October 13, 2020மணப் பெண்ணுக்கு கொரோனா; மாப்பிளை, பதிவாளர் உட்பட திருமண பதிவுக்குச் சென்ற அனைவரும் தனிமைப்படுத்தல்2020-10-13T19:57:59+05:30 FacebookTwitterMore மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை பதிவுத் திருமணம் செய்வதற்காகச் சென்ற மாப்பிளை, திருமணப் பதிவாளர் உட்பட பதினான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பதிவுத் திருமணத்துக்காக இவர்கள் கடந்த 2 ஆம் திகதி மினுவாங்கொடைக்குச் சென்றமை தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பியகம நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்தார். மினுவாங்கொடைக்கு கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்யத் தனது உறவினர்களுடன் இளைஞன் ஒருவர் சென்று திரும்பிய சில நாட்களில் குறித்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குறித்த இளைஞர் உட்பட அவருடன் சென்ற 14 பேருக்கும் கடந்த 10 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இவர்களுக்குப் பதிவு திருமணத்தைச் செய்து வைத்த சபுகஸ்கந்த – கோனவல பகுதியிலுள்ள திருமணப் பதிவாளர் உட்பட திருமண சாட்சிக்குக் கையொப்பமிட்ட இருவர் கடந்த 10 ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேற்படி இளைஞரும், யுவதியும் கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், 9 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டதையடுத்து, அதற்குச் சென்றவர்களை தனிமைப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பியகம நிர்வாக பொதுச் சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்தார். https://thinakkural.lk/article/79415
  10. இன்று194 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்- இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000 த்தினைதாண்டியது. Rajeevan Arasaratnam October 13, 2020இன்று194 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்- இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000 த்தினைதாண்டியது.2020-10-13T22:35:49+05:30 FacebookTwitterMore கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 194 பேர் இன்றுஅடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000த்தினை கடந்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஏனைய 114 பேர் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள். இதன்காரணமாக ஒக்டோபர் நான்காம் திகதி தெரியவந்த மினுவாங்கொட கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1591 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் வெலிசரை கடற்படை முகாம் கொத்தணியில் அதிகளவாக 950 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மினுவாஙகொடையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மினுவாங்கொடை கொத்தணி குறித்த விபரங்கள் வெளியானவுடன் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் உட்பட் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நோயாளிகள் பெரும்பான்மையானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை கொழுமபிலும் பலர் கண்டுபிடிக்கப்பட்டுளளனர். மினுவாங்கொட கொத்தணி சமூக தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 194 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையி;ல இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5003 ஆக அதிகரித்துள்ளது. https://thinakkural.lk/article/79453
  11. கொழும்பு பாடசாலை மாணவிக்கு கொரோனா Daya Dharshini October 13, 2020கொழும்பு பாடசாலை மாணவிக்கு கொரோனா2020-10-13T10:37:34+05:30 FacebookTwitterMore கொழும்பு மகளிர் பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெயங்கொட – எலுவபிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி உட்பட அவரது குடும்ப உறுப் பினர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக மேல் மாகாண பொலிஸ் நிலையம் தெரி வித்துள்ளது https://thinakkural.lk/article/79208 மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா Daya Dharshini October 13, 2020மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா2020-10-13T09:29:23+05:30 FacebookTwitterMore மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் 90 பேர் கொ ரோனா தொற்றுக்குள்ளானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார். குறித்த கொரோனா தொற்றாளர்களில் 40 பேர் தனிமைப் படுத்தல் நிலை யங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள துடன், ஏனைய 50 பேரும் அவர் களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள் ளார். இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோ னா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 1,397ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித் துள்ளது. இந்நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாகத் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா Daya Dharshini October 13, 2020மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா2020-10-13T09:29:23+05:30 FacebookTwitterMore மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் 90 பேர் கொ ரோனா தொற்றுக்குள்ளானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார். குறித்த கொரோனா தொற்றாளர்களில் 40 பேர் தனிமைப் படுத்தல் நிலை யங்களில் அடையாளங்காணப்பட்டுள்ள துடன், ஏனைய 50 பேரும் அவர் களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள் ளார். https://thinakkural.lk/article/79199
  12. தொற்றில்லாத நிலையிலும் கட்டாய தனிமைப்படுத்தல் - ஊவா வெல்லச பல்கலை மாணவர்கள் விசனம்
  13. யூனியன் பிளேஸ் ஆடம்பர தொடர்மாடியில் வசிப்பவர்களிடம் பிசிஆர் சோதனை Rajeevan Arasaratnam October 12, 2020யூனியன் பிளேஸ் ஆடம்பர தொடர்மாடியில் வசிப்பவர்களிடம் பிசிஆர் சோதனை2020-10-12T23:31:43+05:30 FacebookTwitterMore கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள ஒன்320 தொடர்மாடியின் குடியிருப்பாளர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். தொடர்மாடியில் வசிக்கும் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தொடர்மாடியில் குடியிருப்பவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ள அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் தொடர்மாடியில் குடியிருப்பவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். டவர் இரண்டில் வசித்தவரே பாதிக்கப்பட்டுள்ளார் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களை வெளியே செல்லவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்மாடியை முற்றாக முடக்கவில்லை,ஆனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அயலவர்கள் ஒருவரையொருவர் தொடர்கொள்ளவில்லை,மக்களை பதட்டப்படவேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் அங்கு வசிப்பவர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள சில நாட்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர் அவரது சகாவொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார், அவரின் சகோதரர் மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையில் பணியாற்றுபவர் இதன் காரணமாக நோய் எங்கிருந்து பரவியது என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். தொடர்மாடிக்குடியிருப்பில் வசிப்பவர்களில் எவராவது இருமல் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த தொடர்மாடியில் இராஜதந்திர சமூகத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவு வசிப்பது குறிப்பிடத்தக்கது https://thinakkural.lk/article/79171
  14. மன்னாரில் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டன Rajeevan Arasaratnam October 11, 2020மன்னாரில் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டன2020-10-11T20:04:59+05:30 FacebookTwitterMore கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மன்னாரில் இரண்டு கிராமங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். பள்ளித்தோட்டம் பெரியகடை கிராமங்களை உடனடியாக முடக்குவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மறுஅறிவித்தல் வரை இந்தகிராமங்களுக்குள் யாரும் நுழைய முடியாது அந்த கிராமங்களில் இருந்து வெளியேற முடியாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/78836 மினுவாங்கொடையில் நேற்று 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இராணுவத் தளபதி Bharati October 12, 2020மினுவாங்கொடையில் நேற்று 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இராணுவத் தளபதி2020-10-12T05:59:57+05:30 FacebookTwitterMore மினுவாங்கொடையில் மேலும், 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 79 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 22 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 689 ஆகபதிவாகியுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 306 பேர் குணமடைந்து வீடுகளுக்குத்திரும்பியுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 308 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/78836 முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 6 மாத சிறை; வருகின்றது வர்த்தமானி அறிவித்தல் Bharati October 11, 2020முகக்கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 6 மாத சிறை; வருகின்றது வர்த்தமானி அறிவித்தல்2020-10-11T17:37:53+05:30 FacebookTwitterMore தனிமைப்படுத்தல் சட்டங்களை அரசாங்கம் விரைவில் வர்த்தமானி மூலமாக வெளியிடவுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால், 10,000 ரூபா வரையிலான அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சிஷேட வர்த்தமானி இரண்டு தினங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/78829 கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு பூட்டு Daya Dharshini October 11, 2020கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு பூட்டு2020-10-11T15:47:13+05:30 FacebookTwitterMore கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்கா தென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார். அதன் படி குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்குப்பட்டவர்கள் 7 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கு உட்பிரவேசிக்கவோ வெளியேறவோ முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்களில் நான்கு துறவிகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், கம்பஹா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில், மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணி யாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் , குறித்த வைத்தியசாலையில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்குட் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 70 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/78812
  15. தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு சென்ற இருவருக்கு கொரோனா; ஆபத்தான நிலையில் 80 கடைகள் Daya Dharshini October 11, 2020தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு சென்ற இருவருக்கு கொரோனா; ஆபத்தான நிலையில் 80 கடைகள் 2020-10-11T10:06:02+05:30 FacebookTwitterMore தம்புள்ளை பொருளாதார மையத்திற்குச் சென்ற இருவர் கொரோனா தொற்றார் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபர்கள் மீது மேற்கொண்ட பி சி ஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய படபொல பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருடன் கதிர்காமத்திற்குச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது. கொரோன தொற்றுக்குள்ளான இருவரும் தம்புள்ளை பொருளாதார மையத் தின் சுமார் 80 கடைகளுக்கு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/78716 கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் தலைமறைவு; படையினர் தொடர்ந்தும் தேடுதல் Bharati October 11, 2020கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் தலைமறைவு; படையினர் தொடர்ந்தும் தேடுதல்2020-10-11T06:43:01+05:30 FacebookTwitterMore கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடுகின்றோம் என்று கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் நேற்று தெரிவித்தார். மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று வரை 5 ஆயிரத்து 357 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் எனவும் அவர் கூறினார். கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் தம்மிடம் உள்ளன எனவும், அதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/78689 இன்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று; இராணுவத் தளபதி தகவல் Bharati October 10, 2020இன்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று; இராணுவத் தளபதி தகவல்2020-10-10T21:43:54+05:30 FacebookTwitterMore மினுவங்கொட பிரென்டிக்‌ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த இருவர் உள்ளிட்ட 103 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார். https://thinakkural.lk/article/78682
  16. திருமலை சென்று கொழும்பு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா! October 9, 202000 SHARE0 திருகோணமலை – கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். கந்தளாய் பிரதேச கொரோனா நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (09) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை வழங்கினார். வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெண், கொழும்பில் இருந்து கந்தளாய்க்கு கடந்த மாதம் 26ம் திகதி சென்றதாகவும் பின்னர் 28ம் திகதி அவர் மீண்டும் கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கொழும்பில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண், கந்தளாய் பகுதியில் தங்கியிருந்த போது அவருடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார் https://newuthayan.com/திருமலை-சென்று-கொழும்பு/
  17. ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து- தொழிற்சங்கம் கவலை Rajeevan Arasaratnam October 9, 2020ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து- தொழிற்சங்கம் கவலை2020-10-09T21:52:19+05:30 FacebookTwitterMore மினுவாங்கொட தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும்; அதிகமான ஆடை தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஆடைதொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தபட்டதாக தோன்றிய பின்னர் மினுவாங்கொடையில் மீண்டும் நோய் பரவல் காணப்படுவது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இ;ந்த பிரச்சினைக்கு கருணையுடன் உணர்வுபூர்வமான விதத்தில் தீர்வை காணவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வேலைவாய்பினை வழங்கும் நிறுவனங்களால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றளர் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் அவர்கள் மினுவாங்கொட கட்டுநாயக்க சீதுவை வெலிசரையில் தொழில் புரிகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளன. இந்த தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலையின் நிரந்தர தொழிலாளர்கள் இ;ல்லை இவர்கள் பல தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மேலும் குறிப்பிட்ட தொழிற்சாலையில்பணிபுரிபவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவேளை தொழிற்சாலை அதனை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் அதிகாரிகள் தங்கியிருந்தனர் அவர்கள் நிறுவனத்தின் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் சென்றனர் அந்த தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தொழிற்சாலைகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக பொது கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும்,எதிர்காலத்தில் இவ்வாறான பரவலை தடுப்பதற்காக தொழிற்சாலைகளில் நோய் பரவலை கண்டுபிடிப்பதற்கான சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/78428
  18. மறுஅறிவித்தல் வரை அனலைதீவு முடக்கம் !அரசாங்க அதிபர் தெரிவிப்பு
  19. கொழும்பு புத்தக கண்காட்சிக்கு சென்ற நபருக்கும் கொரோனா கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் கடந்த 23ம் திகதி பங்கேற்ற சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் 23ம் திகதி குறித்த நபர் கோட்டையில் உள்ள பஸ் டிப்போவுக்கு பயணம் செய்ததாகவும், மேலும் 30ம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. https://newuthayan.com/கொழும்பு-புத்தக-கண்காட்ச/ முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம் Bharati October 9, 2020முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம்2020-10-09T13:31:43+05:30 FacebookTwitterMore மன்னார் நிருபர் மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்.. மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த புதன் கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு எழுந்த மானமாக பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது. அதற்கமைவாக குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெண்னப்புவ பகுதியை சேர்ந்த மன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மான வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த நபர் பணியாற்றிய மற்றும் நடமாடிய தொடர்புகளை பேணிய இடங்கள் மற்றும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கட்டட நிர்மாண பணிகளை மேற்கொண்ட ஆயர் இல்லத்தில் கொரோன தொற்று அபாயம் காணப்படலாம் எனும் அச்சத்தில் முழு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதுடன் தனிமைபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நபருடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் கொரோனா அச்சம் என சந்தேகிக்கப்படுகின்ற பலருக்கு இன்றைய தினம் மேலதிக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது https://thinakkural.lk/article/78324
  20. நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது- பொலிஸ் பேச்சாளர் கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ்பிரிவுகளில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த பலர்ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்கவேண்டிய நிலையிலுள்ளதாக பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என அவர்குறிப்பிட்டுள்ளார். நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆடைதொழிற்சாலை தொழிலாளர்கள் தாமாக முன்வந்து தங்களை பதிவு செய்வதற்கு நேற்றுடன் காலஅவகாசம் முடிவடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் தனிமைப்படுத்தலை தவிர்க்க முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் https://thinakkural.lk/article/78223 முடக்கப்பட்ட புங்குடுதீவின் இப்போதைய நிலவரம் என்ன?
  21. 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி Daya Dharshini October 8, 2020 நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கம்பஹா – மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். அத்துடன், கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத் தலுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இருக்க முடியாது என்றும் அவர் கள் வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோர் இதுவரை வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தலுக்குட்படா தவராயின் 011 3 456 548 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத் தளபதி கேட்டுகொண்டுள்ளார். https://thinakkural.lk/article/78007 20ம் திகதியே நோய்அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன – மினுவாங்கொட தொழிலாளர்கள் மினுவாங்கொட பிரன்டிக்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் செப்டம்பர் 20 ம் திகதியே நோய் அறிகுறிகள் தென்பட்டன என தொழிலாளர்களை மேற்கோள் காட்;டி சிலோன் டுடே செய்திவெளியிட்டுள்ளது. காய்ச்சல் இருமல் போன்ற பாதிப்புகள் குறித்து முறைப்பாடு செய்த தொழிலாளர்களுக்கு பிரன்டிக்ஸ் மருத்துவநிலையம் வலிநிவாரணிகளையே வழங்கியது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 27 ம் திகதி அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ள தொழிலாளர்கள் ஆனால் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் உரிய மருத்துவசிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அன்று தொலைநோக்குடன் செயற்படாததன் காரணமாக இன்று தொழிற்சாலை மோசமான நெருக்கடியை எதிர்கொள்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்தகத்திற்கு சென்ற அனைவருக்கும் வலிநிவாரண மருந்துகளே வழங்கப்பட்டன தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளியொருவர் தெரிவி;த்துள்ளார் https://thinakkural.lk/article/77976
  22. தப்பியோடிய தொற்றாளி கைது ராகமை வைத்தியசாலையில் இருந்த தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். https://newuthayan.com/தப்பியோடிய-தொற்றாளி-கைது/
  23. இன்று மேலும் 8 கொரோனா நோயாளர்கள் குணமடைவு நேற்று 7 கொரோனா நோயாளர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் இன்று மேலும் 8 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொற்று நோய் மருத்துவமனையில் 05 நோயாளர்களும் , வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 02 நோயாளர்களும் ,ஈரானாவிலா மருத்துவமனையில் இருந்து 01 நோயாளியும்சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் . இலங்கையில் இந்நோயினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,274 ஆக அதிகரித்துள்ளது. https://thinakkural.lk/article/77752
  24. கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரவுப் பணிப்பெண் ஊழியர் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரி சந்திக பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார் https://thinakkural.lk/article/77730 ராகம வைத்தியாசாலையிலிருந்து தப்பியோடிய நபரின் படம் வெளியானது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை தப்பியோடி நபரின் படத்தினை காவல்துறையினர் வெளியிட்டுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கான உதவியை நாடியுள்ளனர். பேலியகொடவை சேர்ந்த நபரே மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/77717 சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில் சீதுவ பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/77706 கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை Bharati October 7, 2020கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை2020-10-07T11:18:07+05:30 FacebookTwitterMore “மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன்.” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு சற்று முன்னர் விடுத்த செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செய்தியின் விபரம் வருமாறு; கொவிட் தடுப்பிற்காக அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவடைந்ததே நோய்த்தொற்று மீண்டும் பரவியதற்கான அடிப்படை காரணமாகும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொவிட் நோய்த் தடுப்புக்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட செயற்பாடுகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றாமை பெரும் குறைபாடாக அமைந்து விட்டது என காவற்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் – அது தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, மக்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கைகளை ஊடகங்களும் குறைத்துக்கொண்டுவிட்டிருந்தன. கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது. தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு – கோவிட் பரவல் மேலும் நிகழ்வதனைத் தடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு – அனைத்து ஊடகங்களுக்கும், எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன். https://thinakkural.lk/article/77631
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.