Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2222
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Posts posted by Kandiah57

  1. 10 minutes ago, பையன்26 said:

    வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................

    இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பியது   பெற்று கொடுத்தது,.......எங்களை பெறுத்த மட்டில். இந்தியா மத்திய அரசாங்கம் விருபவில்லை   

  2. 13 minutes ago, பையன்26 said:

    உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே

    ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................

    தமிழ்நாடு ஒரு மாநிலம் 

    தமிழ்நாடு தனிநாடு இல்லை 

    தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது 

    தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது 

    தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை   

    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது 

    எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி?? 

    ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀

    • Like 1
  3. 1 hour ago, Kavi arunasalam said:

     

    முதலிலேயே சொல்லிவிட்டார்தானே

    ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀

    • Haha 1
  4. 9 minutes ago, ரசோதரன் said:

    எனது மாமா மற்றும் மாமி, மனைவியின் பெற்றோர்கள், பல வருடங்களின் முன் போய் வந்தனர். இன்றும் சுகமாக இருக்கின்றார்கள்.

    ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள்   

    ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி   சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று   

  5. 1 hour ago, ரசோதரன் said:

    'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன்.

    பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன.

    இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.    

    நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது?

    அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது. 

    '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
    நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
    நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார்.

    *************   

    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்)
    -------------------------

    கேட்கும் கேள்விகளிலிருந்தும்
    அளிக்கும் பதில்களிலிருந்தும்
    கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும்
    நமக்கிடையேயான தூரத்தை
    நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம்


    தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்
    உடைத்து உடைத்து உள் பார்க்கிறது
    தொடர்ந்து அளிக்கும் பதில்கள்
    உள் திறந்து திறந்து காண்பிக்கிறது


    தொடரும் மௌனம்
    இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது
    பூட்டினால் திறக்கவும்
    திறந்தால் பூட்டவும்


    கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
    நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
    நம்மைவிட்டு விடுகிறது

    https://akazhonline.com/?p=6797

     

    நல்ல கவிதைகள்  ஆனால் ஒன்றும் விளங்கவில்லை   😀

    • Haha 1
  6. 10 minutes ago, பையன்26 said:

    பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75

    8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............

    நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀

  7. 19 minutes ago, island said:

    சும்மா இருந்து இழுபட்ட திரி @goshan_che வந்ததும் அதிருது. விவசாயி சின்னத்தை விட கோஷானுக்கு  அதிக வலு உள்ளது. 💪

    பேசாமல் சீமான் கோஷானை தனது கட்சியில் சேர்ததால் கொஞ்சமாவது தேறலாம் போல இருக்கு. 

    ஒம் செய்யலாம்  ஆனால் இருக்கும் 8% கூட இல்லாமல் போய் விடும் .....🤣🤣 

    • Haha 1
  8. 4 minutes ago, nunavilan said:

    அவரின் பிள்ளைகள் வீட்டில் தமிழ் கற்கிறார்கள் என்று கூறி உள்ளார். ஆகவே தமிழ் படிக்கவில்லை என்ற கூற்று அடிபட்டு போகிறது. ஏனைய மொழிகளை விருப்பின் அடிப்படையில் கற்கலாம்.

    ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 

  9. 4 hours ago, கந்தப்பு said:

    மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

    கந்தப்பு உங்கள் கணிப்பு அருமை ...மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி  

    எப்படி  சுகமாக இருக்கிறீர்களா?? 😀

    • Like 1
  10. 1 hour ago, valavan said:

    யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு.

    இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள்.

    சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம்.

    தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது.

    ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு.

    அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது,

    எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான்.

    மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே 

    அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா?

    சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா?

    யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது.

    உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, 

    நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?

    மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு. 

    மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத 

    போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத 

    போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா 

    சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  

  11. On 21/3/2024 at 23:11, விசுகு said:

    பிரான்ஸ் பரவாயில்லை போல

    நாங்க களவெடுக்க மாட்டோம். கொழுத்தி விடுவோம்.🤣

    சிறந்த கள்வர்களுக்கு உலகளாவிய ரீதியில் போட்டி நடத்தினால்  பிரான்ஸ் தான் சாம்பியன்ஷிப்பை வெல்லும் என்று கேள்வி பட்டேன்  உண்மையா.?? 🤣

  12. 6 minutes ago, goshan_che said:

    தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣

    மன்னிக்கவும் மாறி பதிந்து விட்டேன்   அது உங்களிடம் கேட்கும் கேள்வி     ....இருந்தாலும் கவி.....படம் வரையலாம்.  பொறுத்து இருந்து பார்ப்போம் 😀

    • Haha 1
  13. On 26/3/2024 at 09:21, Kavi arunasalam said:

    சரி போகட்டும் விடுங்கோ. இப்ப ஏதாவது சொல்லி விடுங்கோவன்.  வரக்கை  கொண்டு வருவார்

    அவர்   குமாரசாமி  அண்ணை  கொடுத்து தான் பழக்கம்  கை நீட்டி வேண்டிய பழக்கம் இல்லை  😀

    அந்த தாமரை என்னாச்சு,....உங்களுடன் தான்  இருக்கிறதா ?? 🤣😂🤣

  14. 46 minutes ago, theeya said:

    ஆமாம்... பார்க்கவே மனம் கனக்கிறது. 
    140,000 வரையான மக்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர். இன்னும் மூன்று வருடத்தில் பொன்விழாக் காண இருந்த பாலம் சரிந்தது, இது வரும் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பே. 

    அக்கா, வரிகளில் இருந்த இடைவெளியை திருத்தி விட்டேன் - நன்றி 

    கவிதைகள் நன்று   வாழ்த்துக்கள்   140000 பேர்  வேலைவாய்ப்பை இழப்பார்களா.??   இந்த பாலத்தில் தினமும் 30000 பேர் தான்   பயணம் செய்வார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன்  அப்படி இருக்கும் போது  எப்படி இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்படும்??

    • Like 1
  15. 53 minutes ago, நிலாமதி said:
    56 minutes ago, நிலாமதி said:

    நிகழ் தகவு அருமையான சொற்பதம்.

    சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது    

    எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம்.  உயர் கணிதம்  .  . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு    கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில்   இதில் நிகழ்தகவு  என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது    மூன்று பந்துகளில்.  இரண்டு இரணடாக.  எத்தனை முறைகள் எடுக்கலாம்    ??    இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம்    

    1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும்   லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு”   முதலாவது பல இலட்சம்கள். வரும்   பல தடவைகள்  வெற்றி கிடையாது விடில்  பில்லியன் வரும்   ஆனால் 

    நிகழ் தகவுப்படி     49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை  1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால்  வகுக்க. வரும்  தடவைகள்   நிரல்களை    லொத்தர். வெட்டினால்.  நிச்சயம் ஆறு இலக்கம். வரும்   ஆனால் செலவு  பரிசு தொகையை விட. அதிகம்   🤣🤣🤣

    குறிப்பு,. முயன்று பாருங்கள்  😂

    • Haha 3
  16. 8 hours ago, Kapithan said:

    ஸ்ஸ்,..... ப்பா,.....

    கந்ஸ் ....

    என்னப்பா  இது, 

    தூய தமிழ் உங்களுக்கு புரியாது என்பதால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன்,🤣

        Verantwortung இப்போது புரிகிறதா? 

    🤣🤣

    இல்லை இல்லாவேயில்லை    இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன்   

  17. 17 minutes ago, குமாரசாமி said:

    இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் ....
    அறிவுறுத்துவீர்களா? 
    அறிவுறுத்துவீர்களா? 
    அறிவுறுத்துவீர்களா? 

    எனது கருத்துக்கு எழுதினால்  கண்டிப்பாக  இதே பதில்கள் தான்   

    மேலும்  உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு எழுதினால் நான் ஏன்  தலை போட வேண்டும் ...ஏனெனில் நீங்கள் அல்லது வேறு ஒருவர் ஆங்கிலத்தையும் விரும்பலாம் இல்லையா ?? 

    4 minutes ago, பையன்26 said:

    அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் பெரியவரே..............இப்ப‌ புரியுதா😜😁.................................

    😀ஆமாம் 

  18. Just now, பையன்26 said:

    என்ன‌ பெரிய‌வ‌ரே 

    இத‌ன் அர்த்த‌ன் என்ன‌................. 

    பத்தையும் விட. கூட என்பது  .......அது சரி அது நீங்கள் தானா  ?? 🤣. -5.    -10.  க்கே   ஆண் சிங்கம் என்கிறார்கள்  

    • Haha 1
  19. On 24/3/2024 at 00:35, பையன்26 said:

    இதென்ன‌ பிர‌மாத‌ம் உங்க‌ளை விட‌ ஒரு திரியில் -12 எடுத்த‌வ‌ரும் இருக்கிறார்😁.........

     

  20. 9 hours ago, Kapithan said:

    கந்தையர்,

    responsibility என்பது பதவி/அதிகாரத்துடன் கூடவே வருவது. அதை ஒருவரும் கையால் கொடுப்பதில்லை. புரிந்தால் சரி.  

     

    முதலில் துய தமிழில் எழுதுங்கள்   உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்தை எழுதி இருந்தால்  அவர்கள் சிறந்த மட்டுறுத்தினர்கள்.  இல்லையென்றால் அவர்கள் ஒரு பக்கச் சார்பனாவர்கள் இது ஒரு அச்சுறுத்தலாகும் எனது கருத்துகளுக்கு எதிராக எழுதாதே என்று சொல்வது போன்றது’  கருத்துக்கு,.கருத்துகள் மூலம் பதில்கள் வழங்கும் ஆற்றல் இல்லையா?? அமைதியாக கடத்து செலுத்துங்கள் 😀

    3 hours ago, putthan said:

    அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃

     

     

  21. 1 hour ago, suvy said:

    418159222_1034465998111206_5975988788409

    நீங்கள் விரும்பி கேட்ட உணவுகள் உங்கள் முன் மேசையில் இருக்க, மீண்டும் மெனு கார்ட்டைப் பார்ப்பது ஞாயமா ........!  😂

    வேறு ஒன்றுமில்லை விலையை பார்த்திருப்பார்கள் ..   விலை பாரப்பதில். ஏதும் பிழையுண்ட??? 😀

  22. 11 hours ago, Kapithan said:

    ஒரு மட்டுறுத்தினர் இவ்வாறு ஒருபக்கச்சார்பாக தனது கருத்துக்களை  முன்வைப்பாராக இருந்தால், இவர் நியாயமாக நடப்பார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? 

    இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் 

    மட்டுறுத்தல் வேலையின் போது அதை செய்யலாம் 

    ஒரு கருத்தாளனாக. கருத்தையும்  பதியலாம்  எந்தவொரு கருத்தாளனும். தான் கருத்துக்கு எதிரான  கருத்தை பதிவு செய்ய முடியாது  ..   ஆனால்  ஒரு மட்டுறுத்துனார்.  தனது கருத்துக்கு எதிரான கருத்தையும் ஒத்த கருத்தையும் அனுமதிக்க முடியும்  

  23. மிக்க மகிழ்ச்சி வாருங்கள்… வரவேண்டும்,. .🙏👍,.பக்கம்’ பக்கமாக.....கருத்துகளை எழுதுங்கள்,.மீண்டும் கண்டதில். மகிழ்ச்சி    நாதமும்.  வருமா??? 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.