Jump to content

sivarathan1

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  183
 • Joined

 • Last visited

About sivarathan1

 • Birthday 11/29/1995

Contact Methods

 • Website URL
  https://www.youtube.com/c/sivasview

Profile Information

 • Gender
  Male
 • Location
  யாழ்ப்பாணம்

sivarathan1's Achievements

Community Regular

Community Regular (8/14)

 • One Year In
 • Very Popular Rare
 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • First Post

Recent Badges

199

Reputation

 1. கான காலமா மாட்டு வண்டி சவாரிய நேர பாக்கணும் எண்டு ஒரு ஆசை, அப்பிடி நான் பார்த்து, கேட்டு அனுபவித்த விடயங்களை ஒரு காணொளியாவும் ஆக்கி இருக்கன், பாருங்க பாத்து உங்க கருத்துக்களையும் சொல்லுங்கோ
 2. 2, 3 வயசு பிள்ளைகள் இருந்தா அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு கறி எப்பிடி செய்வம் எண்டு பாப்பம் வாங்க. இப்பிடி செய்தா அவர்களும் விரும்பி சாப்பிடுவதோட உடம்புக்கும் நல்ல சத்தும் கிடைக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க. இத மாதிரி வேற குழந்தைகளுக்கு குடுக்கிற உணவுகள் எப்பிடி செய்யணும் எண்டா கீழ சொல்லுங்கோ.
 3. கருவாடு குழம்பு வாசத்துக்கும் சுவைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாலமே இருக்கு, நாங்க இண்டைக்கு இந்த கிராமத்தில செய்யிற மாதிரி இந்த கருவாடு வச்சு ஒரு குழம்பு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்யுங்க. உங்க தெருவுக்கே இந்த வாசம் வீசும். செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
 4. அதுக்கு என்ன மிக விரைவில பதிவேற்றி விடுறம்.. அட ஒரு உள்ளூர் கலகத்த உருவாக்கி விட்டம் போல... நாராயணா நாராயணா... எங்க பாட்டி சம்பியா நாட்டுக்கு போய் இருந்த போது அங்க பழகி எங்களுக்கு காட்டி தந்த ஒரு சம்பல் இது. புட்டு சோறு ஓட சாப்பிட நல்லா இருக்கும். என்க வீட்ட பழுத்த மிளகாய் இருந்தா இப்பிடி செய்து நல்ல கண்ணாடி போத்தலுக்கிள்ள போட்டு வைப்பம். 2 வாரம் மட்டும் இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
 5. இண்டைக்கு நாம இன்னொரு ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, உள்ளி வச்சு உள்ளி ஊறுகாய்.
 6. மிக்கநன்றி , யாழ்ப்பாண பக்கம் வந்தா எல்லாரும் கட்டாயம் வாங்கோ. . எனக்கு முதலே சொல்லுங்கோ,, எல்லாரையும் சிறப்பா கவனித்து அனுப்ப முடியும். செய்து உடனடியாவே சாப்பிட கூடிய பச்சை மிளகாய் ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு தான் இண்டைக்கு நாம பாக்க போறம், நீங்களும் இப்பிடி செய்து மரக்கறி சாப்பாட்டோட சாப்பிடுங்க, விடவே மாட்டீங்க. இத மாதிரி செய்து பாத்து சொல்லுங்கோ எப்பிடி வந்த எண்டு.
 7. பாரம்பரிய யாழ்ப்பாணத்து மண் சட்டி ஒட்டி மீன் குழம்பு | Traditional jaffna style clay pot fish curry யாரெல்லாம் இப்பிடி மீன் குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கீறீங்க.. சொல்லுங்க பாப்பம்.
 8. " ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!" ஆடிக்கூழ் செய்முறை தேவையான பொருட்கள் 200g பச்சை அரிசி மா - 200g Raw Rice flour 100g உழுத்தம் மா - 100g Plow flour 1 மேசைக் கரண்டி வறுத்து அரைத்த மிளகு சீரக தூள் - 10g True cardamom with sugar 1/2 மூடி தேங்காய் பால் - 1/2 coconut milk 1/4 தேங்காய் சொட்டு - 1/4 Coconut drops 150g பனங்கட்டி - 150g Panankatti 10g ஏலக்காய் வறுத்து சீனியுடன் அரைத்த - 1 Table spoon Pepper Cumin powder 100g பயறு - 100g Green gram உப்பு - Salt செய்முறை 1. பச்சை அரிசி மாவுடன் உளுத்தம் மாவினையும், சிறிதளவு உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 2. கலந்த கலவையில், கொஞ்சத்தினை தனி பாத்திரத்துக்குள் மாற்றவும், அதில் கொதிக்கும் தண்ணியினை விட்டு புட்டு மா பதத்திற்கு எடுக்கவும். 3. கையில் சிறிது எண்ணெய் தடவி, குழைத்த மாவினை சிறிது சிறிது உருண்டைகளாக பிடிக்கவும். 4. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரினை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது வறுத்த பயறு, அதற்க்கு ஏற்ற உப்பு என்பவற்றை போட்டு மூடி நன்றாக அவிய விடவும் 5. 1 ஆம் படிமுறையில் கலந்து வைத்த கலவையில், 2,3 ஆம் தேங்காய் பாலினை விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். ( எந்த கட்டியும் இல்லமால் ) 6. பயறு நன்றாக அவிந்த பின், சிறு சிறு உருண்டைகளை ( படிமுறை 3 ) அதனுள் போட்டு நன்றாக அவியுமட்டும் மூடி விடவும். 7. அடுப்பினை குறைத்து விட்டு, கலந்து வைத்த மாவினை கொஞ்சம் கொஞ்சமாக பாத்திரத்தில் விட்டு கை விடாமல் கிளறவும். நாங்கள் விட்ட மா நன்றாக அவியுமட்டும் கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். 8. நன்றாக அவிந்த பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்த தேங்காய் சொட்டினையும், பனங்கட்டியையும் உள்ளே போட்டு நன்றாக கலக்கவும். 9. நன்றாக கலந்த பின், முதலாம் பாலினை விட்டு நன்றாக கலக்கவும். அத்துடன் மிளகு சீரக தூள், ஏலக்காய் வறுத்து சீனியுடன் அரைத்த கலவை என்பவற்றை சேர்க்கவும். 10. மெல்லிய ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான ஆடிக்கூழ் தயார், நீங்களும் இதே போல செய்து குடும்பத்துடன் சுவைத்து மகிழ்ந்திடுங்கள். யாரெல்லாம் ஆடி கூழ் செய்தீங்க.. காணொளி விளக்கம். .
 9. வணக்கம், இங்க கன பேருக்கு Yarl samayal எண்டு ஒரு யூடியூப் பக்கம் வச்சு இருக்க தெரியும், அந்த பக்கத்தில இது வரைக்கும் 250 க்கும் மேல உணவுகள் போட்டு இருக்கம், அதுல பெரும்பான்மையா யாழ்ப்பாணத்தில செய்யிற உணவுகளை எங்கட பாட்டி எப்பிடி செய்து காட்டிதந்தாவோ அதே மாதிரி செய்து காட்டிற வழக்கம். அத தனி தனி திரட்டுக்களா போடாம, ஒரு திராட்டா போடுறதுக்கு தான் இது. அதோட மட்டும் இல்லாம, உங்களுக்கு இருக்குற சந்தேகங்கள், அடுத்ததா நாங்க என்ன உணவுகள் செய்து காட்டலாம் எண்டு எல்லாம் நீங்க சொல்ல முடியும். அதே மாதிரி ஏதும் பிழைகள் விட்டாலும் நீங்க இதுல சொல்ல முடியும், வாங்க ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல செய்வம்
 10. வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமா கேரளா உணவு ஒன்று செய்து பாப்பம், அதுவும் வாழை இலையில சுத்தி செய்யிற கோழி போழிச்சது எப்பிடி செய்யிற எண்டு பழகுவம் வாங்க . நீங்களும் இப்பிடி செய்து குழந்தைகளுக்கு குடுங்கோ, வித்தியாசமா இருக்கும் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
 11. 2021ஆம் ஆண்டு மன்னார் காட்டுக்குள்ள பாலைப்பழம் தேடி போன கதையின பாப்பம் வாங்க. இது 2 தரம் நான் போன அனுபவங்களை சேர்த்த ஒரு காணொளியா இருக்கும் நீங்களும் பாருங்க பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
 12. வாங்க இண்டைக்கு இலகுவில செய்ய கூடிய உப்புமா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். அதுவும் நல்ல உதிரி உதிரியா வர கூடிய மாதிரி செய்வம் எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
 13. வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து சாப்பிட கூடிய உருளைக்கிழங்கு போண்டா எப்பிடி சுவையா மொறு மொறு எண்டு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து சுவைத்து மகிழுங்கோ. எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்கோ.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.