Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

sivarathan1

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  97
 • Joined

 • Last visited

About sivarathan1

 • Birthday புதன் 29 நவம்பர் 1995

Contact Methods

 • Website URL
  https://www.youtube.com/c/sivasview

Profile Information

 • Gender
  Male
 • Location
  யாழ்ப்பாணம்

sivarathan1's Achievements

Collaborator

Collaborator (7/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • First Post
 • Collaborator
 • Conversation Starter

Recent Badges

93

Reputation

 1. வாங்க இண்டைக்கு நாம புரட்டாதி சனிக்கு செய்ய கூடிய ஒரு விரத சாப்பாடு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இந்த எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு விரதம் இருக்கும் பொதும் விசேஷமா செய்வாங்க, நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
 2. வாங்க இண்டைக்கு நாம ஒரு ருசியான, சாப்பிட்டா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுற கோழி மிளகு வறுவலும் அதோட சாப்பிட அடுக்கு பரோட்டா ரொட்டியும் செய்வம் .நீங்களும் ஒரு நாள் இப்பிடி செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
 3. வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்துல செய்யிற ஒரு சுவையான வறை செய்வம், இது வெங்காய தாளில செய்யிற ஒரு வறை, சோறு கறியோட சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க,
 4. வாங்க இண்டைக்கு நாம எங்க தோட்டத்துக்கு போய் அங்க மரவள்ளி கிழங்கு மரத்தில இருந்து கிழங்கு கிளப்பி, அத நெருப்பில சுட்டு, அதோட சாப்பிட ஒரு பச்சமிளகாய் சம்பலும் இடிச்சு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோட சாப்பிடுவம் வாங்க.
 5. வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
 6. வாங்க இண்டைக்கு நாம இந்த காலத்துக்கு மிகவும் தேவையான, எங்கட உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற ஒரு பாரம்பரிய மரக்கறி சூப் செய்வம், இப்பிடி தான் நாங்க சின்னனா இருக்கேக்க என்கட பாட்டி செய்து தாறவ, நீங்களும் இத மாதிரி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கவன்.
 7. நான் இத எழுத்தல, facebookல முந்தி பாத்தன், நல்லா இருந்த அது தான் இங்க உங்க எல்லாரோடையும் பகிர்ந்து கொள்ளுறன் அப்பத்தட்டி என்பது ஓடக்கரை வீதியில் ஒவ்வொரு வீட்டு மதிலிலும் நிலமட்டத்துடன் ஒரு சிறிய ஓட்டை செய்திருப்பார்கள். இரண்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் முகம் தெரியாது. வாங்குவதும் விற்பதும் ஓட்டை வழியால் தான். காலையிலும் மாலையிலும் வியாபாரம் சூடுபறக்கும். சில வீடுகளில் பேப்பரும் காலையில் விற்பார்கள். பல வீடுகளில் இப்பொழுது அப்பத்தட்டிகளை காணவில்லை. ஆனால் அவை இருந்ததிற்கான அடையாளங்கள் இருக்கின்றன. பருத்தித்தறையின் கலாச்சாரத்தில் இந்த “அப்பத்தட்டி” ஊறிப்போன விடயம். அப்பம் தோசை சுட்டு விற்பதை இவர்கள் இழிவாக நினைப்பதில்லை. மாறாக, தங்களது பாரம்பரியமாகவும், பெண்களுக்குப் பொழுதுபோக்குடன் கூடிய, தங்கள் சிறிய பொருளாதரத் தேவைகளை நிறைவேற்றும் முறைமையாகவுமே பார்க்கின்றார்கள். எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிக ஜனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது. அந் நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகமாக விளங்கியது. கப்பல் வாணிபம் நடைபெற்றது. அதனால் அக்காலத்தில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள் பலவும் இந்நகரில் இருந்தன.நாங்களும் சிறுவயதில் மாவுக் கப்பல்கள் இத் துறைமுகத்தில் வந்து இறக்குவதை கண்டிருக்கின்றோம். முன்னர் பர்மா இந்தியாவிலிருந்து தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு கோயில் கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தியதாக எங்கள் பாட்டி கூறியிருக்கிறார். வீட்டு ஓடுகளும் இந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியதாகச் சொன்னார். இந்திய, சீனப் பட்டுகளும் கொண்டுவரப் பட்டு விற்கப்பட்டன. இந்நகர் வியாபார நகராக இருந்ததால் இந் நகரை அண்டியுள்ள பிரதேசங்களிலிருந்து தொழிலுக்காக பல மக்களும் இங்கு வந்து குடியேறினார்கள். இந்நாட்களில் படித்த சிலர் சிங்கப்பூர், பர்மா நாடுகளில் தொழில் புரியவும் சென்றார்கள். அதனால் அந்நாட்டு உணவு முறைகளையும் நாளடைவில் இந்நகர மக்கள் அறிந்திருந்தனர்.அம்முறையில் பலவகை உணவுகளும் அறிமுகமாயின. நகரத்தில் கூலிக்காக வேலை செய்பவர்களுக்கு உணவுத் தேவை ஏற்பட்ட வேளைகளில் வீடுகள் தோறும் சிறிய தட்டிகள் வைத்து உணவு விற்பனை செய்யும் வழக்கம் இத்தெருக்களில் ஏற்படலாயிற்று. இங்கு தயாரிக்கும் உணவுகள் மிகவும் ருசிமிக்கதாக இருந்தது. அவற்றின் சுவையோ ஆகா சொல்லி மாளாது. அதனால், சுற்று வட்டாரத்தில் ஏறத்தாள ஆறு மைலகள் தூர வரையுள்ள மக்கள் இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லும் வழக்கம் உருவாயிற்று. விசேடமாக இவர்கள் தயாரிக்கும் முட்டை அப்பம், வெள்ளை அப்பம், தோசை, பொரிவிளாங்காய், வெள்ளை முறுக்கு, இனிப்பு சிப்ஸ், தட்டை வடை,சீடை, கச்சான் தட்டு இன்னும் பலப்பல சொல்லலாம். சீனாவிலிருந்து வரும் புட்டரிசி என்ற ஒரு அரிசியை ஆவியில் வேக வைத்து தேங்காய் சர்க்கரை சேர்த்து உண்பார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும் என எனது அம்மா சொல்லுவார்.நகரைச் சுற்றியுள்ள மக்கள் தமது வாழ்க்கையில் ஓரிரு தடவையேனும் இவ்வுணவை ருசிக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். மாலையானால் உணவு வாங்குவதற்காக சுற்று வட்டாரங்களிலிருந்து மக்கள் நடையாகவும், சைக்கிள்களிலும் ஓடக்கரையை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிறிய அகலம் குறைந்த அந்தப் பாதையால் செல்வோர் தொகை கணக்கில் அடங்காது. சைக்கிள்கள் அவசரமாக விரைந்தால் ஒன்றுடன் ஒன்று இடிபட்டுக் கிடக்கும். மிகவும் நிதானமாகவே இங்கு செல்லல் வேண்டும். அண்டிய ஊர்களில் காச்சல் வந்தவர்களுக்கு காச்சல் மாறியதும் பத்திய உணவாக முதல் முதல் கொடுப்பது இங்கு செய்யப்படும் வெள்ளை அப்பத்தையே. இது எங்கள் வீட்டிலும் நடக்கும். பலதடவைகள் நடந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்விடம். விசேடமாக இவர்கள் தயாரிக்கும் தோசை அதற்கான மூன்று நான்கு வகை அம்மியில் அரைத்த சட்னி,சம்பல் ,கறிவகைகள், பொடி சம்பல், என அனைத்தும் சுவையானது.மெத்தென்ற தோசை அதன்மேல் பச்சை மிளகாய் சட்னி, அதன்மேல்தோசை சிவப்புக் காரச் சட்னி, அதன்மேல்தோசை காரக்கறி, பொடி சம்பல், என மாற்றி மாற்றிஅடுக்கிக் கொடுப்பார்கள். கால ஓட்டத்தில் இப்பொழுது ஓரிரு வீடுகளில் மட்டும் தட்டி வைத்து விற்பதைக் காணலாம்.சம்பல் ஊறி மெத்தென இருக்கும். தோசை சாப்பிட வீட்டில் போட்டி நடக்கும். விசேடமாக தோசைக்கு ஒரு காரக்கறி வைப்பார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.