Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Crest

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  22
 • Joined

 • Last visited

Crest's Achievements

Apprentice

Apprentice (3/14)

 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

3

Reputation

 1. கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது. கல்யாண முருங்கையானது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது. கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண முருங்கை. பெண்களுக்கு பெண்தன்மையை அளிக்கும் ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் மிக சிறப்பான கீரை. ஏனேனில் அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் இவர்களை அண்டாது. அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த கல்யாண முருங்கை.
 2. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
 3. உடல் நரம்புகளை வலுவாக்கி, வீக்கங்களைக் குறைத்து, மூட்டு வலிகளுக்கு மட்டுமன்றி, சுவாச பாதிப்புகள் மற்றும் இரத்த சர்க்கரை பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணம் தருகிறது, வாத நாராயணன் மூலிகை. அழகிய சிவந்த மலர்களையும், புளிய இலைகள் போன்ற இலைகளையும் உடைய மருத்துவப்பலன்கள்மிக்க வாத நாராயணன் மரம்,
 4. நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். ... நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டுவதல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்து கொள்ளமுடியும். அதைபோல் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் நாட்டு கோழி (nattu koli) முட்டை சாப்பிடுவதால் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். மலட்டு தன்மை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பெற உதவும்.
 5. ஆமணக்கு எண்ணெய் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய எண்ணெய் வகை ஆகும்; ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை விளக்கெண்ணெய் என்றும் கூறுவர். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்; ஆனால், நாம் இந்த எண்ணெய் மூட்டு வலி, கீல் வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை மட்டுமே போக்க உதவும் என்று அறிவோம்.
 6. உலகத்தில் சில தாவரங்கள் மட்டுமே அவற்றின் ஒவ்வொரு பாகமும் பலன் தரக்கூடிய வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று முருங்கை. முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர்.
 7. பசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள் [2- மணி நேரம்] உண்பது நன்று. அவ்வாறு உண்டால் அப் பால் தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்யமான பசுவின் பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை,பாண்டு,இரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும். தேகம் ஒளிவிடும், தாது புஷ்டி உண்டாகும், மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம். சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்
 8. முருங்கை - இயற்கை வயாகரா உலகத்தில் சில தாவரங்கள் மட்டுமே அவற்றின் ஒவ்வொரு பாகமும் பலன் தரக்கூடிய வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று முருங்கை. முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர்.
 9. பூசணிக்காயில் உள்ள சத்துக்களை போலவே பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பூசணி விதையில் உள்ள மக்னீசிய சத்துக்கள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துக்கள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் இரசாயன் தாக்கத்தை தடுத்து, ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ‘இ’ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
 10. மரவள்ளிக் கிழங்கு நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்கள் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும். தினமும் கேரள மக்கள் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தக் காரணம் மரவள்ளிக்கிழங்கின் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்கின்றனர். மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளையும், இனிப்பு கார வகைகளையும் செய்யலாம். மேலும் சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம் மற்றும் கூட்டு, பொரியலாக செய்யலாம். மரவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும். மரவள்ளிக்கிழங்கை குச்சிகள் போல சீவி, அல்லது வட்ட வடிவில் சீவி, எண்ணையில் இட்டு பொறித்து, அவற்றை “மரவள்ளி சிப்ஸ்” என்ற பெயரில் சுவையான நொறுக்குத் தீனியாக தயாரிக்கின்றனர்.
 11. மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச் சார்ந்தது. தற்போது, அதல் மருததுவ குணங்கள் அதிகம் இருப்பதால், விவசாயில் பயிரிடுகிறார்கள். மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.
 12. இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் இருக்கிறது. நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
 13. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே 'குங்குமப்பூ' என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும். உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.
 14. முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது. முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
 15. சப்பாத்திக்கள்ளியின் மேல் பாகத்தில் அடர் சிவப்பு நிறத்தில் பரவலாகத் தோன்றும் பழங்கள், காண்பதற்கு அழகு மட்டுமல்ல, உண்பதற்கும் சுவையானவை, இந்த பழங்களிலும் முட்கள் மிகுந்து காணப்படும், பழங்களை நடுவில் பிளந்து, கவனமாக முட்களை எடுத்து விட்டு, சுவைக்க, வாயெல்லாம் இரத்தச் சிவப்பில் இனிக்கும், நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் C மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும். நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.