Jump to content

தமிழகன்

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  108
 • Joined

 • Last visited

Recent Profile Visitors

317 profile views

தமிழகன்'s Achievements

Enthusiast

Enthusiast (6/14)

 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

22

Reputation

 1. உங்கள் வரவேற்பிற்கு நன்றி. ஈழ உறவுகள் மீது எனக்கு எப்போதும் பாசமும் நம்பிக்கையும் உண்டு.
 2. மன்னிக்க வேண்டும் உறவே, நான் சூது வாது இல்லாமல் வெள்ளந்தியாகவே எழுதுகிறேன். பாமரன் என்பதால் என் எழுத்து கடுமையாக தொனிக்கலாம். இப்படி கூறுதற்கு மன்னிகவும். ஒரு சமயம் நீங்கள் சூது வாதுடன் எழுதி, உங்களை போல் மற்றயவர்களையும் கருதுகிறீகளா? இதில் அண்ணனையோ கட்சியையோ நான் இணைக்கவில்லை. எனக்கு ஆங்கிலம் அதிக பரிச்சயம் இல்லை. நீங்கள் பெரும் அறிவார்ந்த மனிதர் போல என் மனதில் தோன்றியது. இங்கிலாந்து அமைச்சர்களிடம் தொடர்பு உள்ளவர் என இன்னோர் உறவு எழுதியதையும் வாசித்து அறிந்தேன். அந்த நம்பிக்கையில் இந்த தகவலை நம்பி நான் அதை பொதுவெளியில் பரப்பப்போய் அவர்கள் நாம் தமிழர் தம்பி முட்டாள்தனமாக போட்டோஷாப்பை உண்மை என்று நம்பி விட்டார் என்று, என்னையும் கட்சியையும் மிக மோசமாக கிண்டல் செய்கிறார்கள். உங்கள் ஆதாரமற்ற செய்தியை நம்பி நான் அவமானப்படும் படிஆயிற்றே? அதைதான் சுட்டினேன் உறவே. வேறெந்த மனகசப்பும் இல்லை.
 3. உறவே, தயவுகூர்ந்து வரும்காலத்தில் இது போல செய்திகளை பகிரும் போது கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள் உறவே. புதிய உறுப்பினர் என என் ஆலோசனையை தட்டி கழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் பகிர்வை நான் பல வாட்சப் குழுக்களில் பல கட்சிகாரார், குறிப்பாக தீம்கா காங்கிரஸ்காரர் இருக்கும் தளங்களில் எல்லாம் பகிர்ந்து விட்டேன். இப்போ அவர்கள் எல்லாம் என்னையும், அண்ணனையும் , நாம் தமிழரையும் மிக மோசமாக கிண்டல் அடிக்கிறார்கள். உங்களை போல் இதை நகைசுவையாக சொன்னேன் என்று பல்டி அடிக்கும் லாவகமும் எனக்கு வாய்க்கவில்லை. கருத்தில் எடுங்கள் உறவே.
 4. நான் அண்ணனுக்கு உரிமை கோரவில்லை. அவர் இந்த இனத்தின் பொக்கிசம். மேதகுவின் அவதாரம்.
 5. இந்தியாவை தமிழர் நலன் பேணும் பேரரசாக மாற்றும் தலைமை தமிழ்நாட்டில் அமையும் போது சரிவரும். உங்கள் 5ம் கருத்தில் அறவே உடன்பாடில்லை.
 6. மிக சரியாக சொன்னீர்கள் உறவே, இந்தியா அல்ல இந்திய ஆளும் வர்க்கம் ஆண்மையற்றது. அண்ணனை போல் ஆண்மை மிக்கவர்கள் ஆட்சி பீடம் ஏறும் போது இது மாற்றம் காணும். அந்த நிலை ஏற்பட உழைப்பாலும், பொருளாதாரத்தாலும் அண்ணனை கட்டி எழுப்புவது நம் கடமை.
 7. நான் அண்ணனை நக்கல் அடித்தேனா? இங்கே பலர் என் மீது உள்நோக்கத்தோடு அபாண்டம் சொல்லி வருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா? எமது இனத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் என்று நம்பி களமாடுபவன் நான். உங்களை போன்று இன்னோர் அரசியல்வாதியாக அன்றி, ஒரு காலம் தந்த கொடையாக அண்ணனை நேசிப்பவன் நான். அண்ணணை ஆயுத பயிற்சி என்பதன் மூலம் நக்கல் அடிப்பது நீங்கள் அல்லவா? அண்ணன் ஒரு போதும் ஆட்சியை ஆயுத புரட்சி மூலம் கைபற்றுவதாக சொல்லியதில்லை. தேர்தல் மூலம் ஆட்சி மாற்றத்தை அல்ல அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள் நாங்கள். நாங்கள் கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்க அல்ல, கட்டிடத்தை உடைத்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வந்தவர்கள். நாம் தமிழர், நாமே தமிழர்!
 8. காங்கிரஸ் பாஜகவால் வழிநடத்தபடும் மத்திய அரசாங்கங்கள் மீதான வன்மத்தை இந்திய பெருந்தேசத்தின் மீது சுமத்துவது முறையல்ல.
 9. வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா? இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான். இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார். இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும். ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.
 10. இந்த கட்டுரைக்கான பதில் கடலில் மேதகு படம் பொறித்த மேலாடையில் சிங்கள படையை கதற விட்ட சகோதரனின் செயலில் உள்ளது. அண்ணன் தமிழ்நாட்டில் ஆட்சி பீடம் ஏறியதும் சிங்களர்களையும், சீனர்களையும் ஒருசேர கதற விடுவார். பொறுத்திருங்கள்.
 11. உறவே தனியே சீரியலை ஒதுக்குவது மட்டும் ஆகாது. உங்களுக்கு இனமான உணர்வு ஒரு சிறிதளவாவது இருப்பின், அமேசன் வீடியோ, அமேசன் புத்தகம், பொருட்கள் வாங்கும் கணக்கு சகலதையும் ரத்து செய்யுங்கள். நான் செய்து விட்டேன். தென்னமரிக்காவின் பெரும்காடு மட்டுமே இனி தமிழர்கள் வாழ்வியலில் ஒரே ஒரு அமேசன்.
 12. என்னை உறுப்பினர்களை முட்டாள் ஆக்க எத்தனிப்பதாக நீங்கள் அபாண்டம் கூறியதன் பின் உங்களிடம் உரையாடுவதை தவிர்கவே விரும்பினேன். ஆனால் இவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, கையில் நெய் இருக்க வெண்ணைக்கு அலைவனேன் என எதிர்கட்சியில் இருக்கும் போது கருணாநிதியே கேட்டுள்ளார். ஆக விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் சுடாலின் நாடகம் ஆடுவதே உண்மை. தீரா விட அனுதாபிகளும் எல்லாம் மத்திய அரசு கையில் என்று சால்ஜாப்பு சொல்வார்கள்.
 13. அண்ணனின் ஆட்சியில் இந்த உறவுகளுக்கு இந்திய குடியுரிமை, குடிசை மாற்று வாரிய இலவச வீடு, கல்வியில், அரச வேலை வாய்ப்பில் தனி உள் ஒதுக்கிடு முதல் நூறு நாட்களுக்குள் செய்து தரப்படும். வெளிநாடு வாழ் ஈழ உறவுகள் பலர் தனவந்தர்களாக, அறிஞர்களாக இருப்பது பெருமைபட வேண்டியதே. இந்த தளத்தில் கூட உலக, இந்திய, தமிழக அரசியலை எல்லாம் நுட்பமாக அலசுவதை காண்கிறேன். ஆனாலும் உங்கள் சொந்த இன மக்கள் இந்த வதை முகாம்களில் திராவிடர்களிடம் கையேந்தி பிழைக்கும் நிலையை களைய ஏனோ யாரும் முயற்சிக்கவில்லை. வசவு, பழி, காவலர்களின் பாலியல் இலஞ்சம் - அப்பப்பா எத்தனை கொடுமைகள். இவர்களை திராவிட இந்திய அரசுகளிடம் கையேந்தாமல் சொந்த நாட்டில் வாழ வழி செய்ய முடியாதா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.