Selvamuthu

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  612
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Selvamuthu

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Location
  United Kingdom
 • Interests
  writing, reading, sports, helping to teach Tamil
 1. வசம்புவின் வாழ்வில் விதி விளையாடி விட்டது. களத்தில் தினமும் வலம் வந்து கொண்டிருந்த காலத்தில் பல முறை தனி மடலில் உரையாடி இருக்கின்றோம். மிகவும் பண்பானவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அறியத்தந்த கள உறவு ரமாவுக்கும் எனது நன்றி.
 2. அன்பான உறவிற்கு ஆயிரம் வணக்கங்கள். இத்தனை காலத்திற்குப் பிறகுதான் உங்கள் ஆக்கத்தினைப் பார்த்தேன். ஆகா! என்னைப் பற்றியும் ஒருவர் அறிந்து வைத்து மறக்காமல் எழுதியிருப்பதைப் பபார்த்தவுடன் நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை. எப்போதும் களத்திற்கு வருவேன் ஆனால் கருத்தெழுத முற்படுவதில்லை. குழந்தைபோல் ஒருவர், தொடங்குவதும் முடிப்பதும் வௌ;வேறாய் ஒருவர், எதற்கெடுத்தாலும் ஏறுமாறாக வாதிடுவார் ஒருவர் இப்படிப் பல உறவுகள். ஏதோ மனம் விரும்பவில்லை அதனால் ஒதுங்கிக்கொண்டேன். நான் களத்தில் நுழைந்த காலத்தில் பல கண்காணா உறவுகளைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். ஒருநாள் களத்திற்கு வரவில்லையென்றால் அந்தநாள் திருப்திகரமானதாகவே இருக்காது. பட்டிமன்றங்களும், விவாதங்களும், கவிதைகளும், கவிதைப் போட்டிகளும் பலபல. தொடர்பற்றிருந்த ஊர் உறவுகளைக்கூடச் சந்திக்க வாய்ப்பளித்தது இந்த யாழ்தான். அண்மையில் கனடா சென்றிருந்தபோதுகூட கண்காணாத யாழ்கள உறவுகள் சிலர் என்னை நேரே வந்து சந்திக்க ஆவல் கொண்டார்கள். ஆனால் காலமும் நேரமும் கைகூடவில்லை. தொலைபேசியில் மட்டும்தான் உரையாடினேன். யான் யாழில் பெற்ற அனுபவமே தனியானது, என்றுமே மறக்கமுடியாதவை. தமிழை தவறாக எழுதுவது தவறு. அதனால்தான் அவ்வப்போது சில அறிவுரைகளை அள்ளி வழங்கினேன். அதனால் நீங்களும் பயன் அடைந்ததாகப் படித்தவுடன் கட்டாயம் களத்தில் எழுதவேண்டும் என்றே இவ்வளவற்றையும் எழுதினேன். நேரமிருப்பின் நிச்சயம் களத்தில் கருத்தெழுத முயல்கிறேன். அதுவரை உங்கள் நல்ல பணிகள் தொடரட்டும். நன்றி.
 3. நீங்கள் கூறுவது சரி. சந்திரகாந்தன் அவருடைய இரண்டாவது மகன். தந்தைக்கு பிள்ளைகள்தான் வாழ்த்துப்பா பாடுவார்கள். ஆனால் எமது அமுதுப்புலவரோ தான் பெற்ற மகனுக்கே வாழ்த்துப்பா பாடுகிறார். மகனுக்காக அவர் எழுதிய சில பாடல்களை மட்டும் இங்கே இணைத்துள்ளேன் படித்துப் பாருங்கள். பேராசிரியர், தவத்திரு சந்திரகாந்தன் அடிகளாருக்கு சந்தணத்தில் தொட்டுச் செந்தமிழில் பொட்டு வெண்பா புன்னகையும் தண்ணளியும் பொன்னுரையும் கண்ணியமும் அன்னையெனும் நாட்டினிலே அன்புறவும் – தன்னகத்தே கொண்டசந்திர காந்தக் குருமணியின் வெள்ளிவிழாக் கண்டிடுவோம் வாரீர் களித்து. பிறப்பும் சிறப்பும் அறுசீர் விருத்தம் முக்கனி சிறந்த நாடு முத்தமிழ் முழங்கும் நாடு திக்குகள் போற்றும் நாடு திருத்தலம் கொண்ட நாடு மக்களின் பக்தி அன்பால் மழைபெய்யும் புனித நாடு கொக்குகள் நீந்தும் நன்னீர்க் குளங்களைக் கொண்ட நாடே. படிப்பும் பணியும் தந்தையாய் அன்புத் தாயாய் தம்பியாய் அண்ணன் போலும் சொந்தமாய்க் குருவாய் எங்கள் தோழனாய் அடியா னாகிச் சிந்தையில் பிறர்க்குச் சேவை செய்வதால் சிறப்புப் பெற்றீர் இந்தமா நிலத்தில் ஓடும் இன்னொரு நதியென் பாரே! மங்கல வாழ்த்து அலைகடல் கைகள் நீட்டி ஆனந்தப் பன்னீர் ஊற்றும் மலைகளே முகட்டில் மேக மல்லிகைப் பந்தல் போடும் கலைநிறை மதியே விண்மீன் கலங்களே! வானே காற்றே இலைமலர் கனிகாள்! வாரும் இறைவனின் குருவை வாழ்த்தும். வானமும் தவறிப் போகும் மழையின்றி வரண்டால்; பெண்கள் மானமும் தவறும் வாழ்வில் வடுக்களைச் சுமந்தால்; வள்ளல் தானமும் தவறும் கையில் தரும்பொருள் தட்டுப் பட்டால் ஞானமும் தவறிப் போமோ? நடுநிலை தவறா வேந்தே! பேச்சும் எழுத்தும் மெல்லிய தென்றல் போலும் வெண்ணிலா ஒளியைப் போலும் நல்லரும் மலர்கள் செண்டில் நறுமணம் பரம்பல் போலும் கல்லினில் அரைத்த கட்டைச் சந்தன மணத்தைப் போலும் சொல்லொடு பொருளைக் கேட்டோர் சுட்டிப்பா ராட்டு வாரே. மங்கிடா ஊற்றாய்க் கீரி மலையினில் அருவி பாய்ந்து பொங்கிடும் ஆங்கி லத்தில் புத்தகம் இயற்றி வைத்தீர் திங்களும் தென்றல் காற்றும் திரிந்திடும் எழுத்தைக் கண்டோம் சங்கினில் முத்துப் போலச் சான்றோரில் சிறந்து வாழ்வீர். எண்சீர் விருத்தம் என்னருமைக் குருமகனே எங்கள் வீடும் ஈழமென்ற தாய்நாடும் களிக்கு மாறு பொன்னான பணிகளினால் விழுது விட்டீர் போனதிசை எல்லாமே போற்றக் கண்டோம் அன்னையெனும் தெய்வமிங்கே இல்லை ஐயா அமலனடி யிருந்துமலர் சொரியக் கண்டீர் மன்னனெனும் மாசற்றோன் காலில் தொட்டு வாழ்த்துகிறேன் வெள்ளிவிழா மகனே வாழி! - அமுது
 4. அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி செவாலியர் இளவாலை அமுதுப் புலவர் அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர். வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன. இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் அழைக்கும் இடமெல்லாம் சென்று வருந்தவர். அவரின் தமிழ் அறிவும், நகைச்சுவை கலந்த பேச்சும் அவருக்கே சொந்தம். அவருடைய பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் எப்போதும் இனிக்கும். கவிதை, கட்டுரை, நாவல், வரலாற்று நூல்கள் என எழுதிய நூல்கள் பலவாகும். மாதா அஞ்சலி (கவிதை), நெஞ்சே நினை, இவ்வழிச்சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள் (வைத்தியநூல்), அமுதுவின் கவிதைகள் 1991, அன்பின் கங்கை அன்னை திரேசா (மூன்று பதிப்புக்கள்), மடுமாதா காவியம், இளவாலை அன்னம்மாள் வரலாறு, அமுதுவின் கவிதைகள் (திருத்திய பதிப்பு), இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், பூந்தமிழில் பொன்னாடைகள் என பலவாகும். கிடைத்த பட்டங்கள்: சொல்லின் செல்வர், புலவர் மணி, செந்தமிழ்த் தென்றல், முப்பணி வேந்தர், கவியரசர், தமிழ்க்கங்கை, பாவேந்தர், மதுரகவி, மகாகவி, கலாபூசணம், கௌரவ கலாநிதி, முத்தமிழ் அறிஞர் என்பவற்றோடு வத்திக்கான் பாப்பரசரிடமிருந்து கிடைக்கப்பெற்ற “செவாலியர்” பட்டம் மிகவும் உயர்வானது. இப்பட்டம் தமிழுலகில் உலகிலே ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது. ஈழமண் மேலும், அன்னை தமிழின் மேலும் தாளாத பற்றுடையவர் புலவர்மணி. ஈழத்தமிழ் மக்கள் பல ஆண்டுகளாகப் படும் இன்னல்களைத் தனது நூல்களிலே கவிதைகளாக வடித்துள்ளார். எப்போதும் சிரித்த முகமும், நிமிர்ந்த நடையும், தமிழ் இலக்கணத்தை அப்போது வாழ்ந்த தமிழ் அறிஞர்களான பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர்மணி இளமுருகனார், போன்றோரிடம் ஐயந்திரிபுறக் கற்ற பழுத்த அறிவு அவரின் பேச்சிலும், எழுத்திலும் தெள்ளமாகத் தெரியும். இவர் தமிழ் அன்னைக்குத் தனது மரபுக்கவிதைகளால் பல ஆண்டுகளாக அர்ச்சனை செய்வதால் தமிழ் உலகில் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறார். தான் வாழும் காலத்தில் தனக்கு உதவுபவர்களையும் ஒருநாளும் மறவாத நன்றியுணர்வு மிக்க ஒரு நல்ல மனிதராகவும், தெய்வ பக்தி மிக்க ஒருவராகவும் எம்மிடையே இலண்டனில் வாழ்ந்த அவர் இன்று அமரர் ஆகிவிட்டார்.
 5. has not set their status

 6. Vanakkam Senthil.Naan nalam.

 7. ayya vanakkam nalamaayirukirkala ?

 8. நல்ல ஆய்வு. ஆனால் தமிழில் எல்லாமாக 247 எழுத்துக்கள் உள்ளன என்று மாற்றிவிடவும். தட்டச்சுச் செய்யும்போது தவறு ஏற்பட்டிருக்கலாம். நன்றி
 9. உறவுகளே எல்லோரும் செய்யவேண்டும். நானும் எனது பங்களிப்பைச் செய்துவிட்டேன். இதனை வேறு தொடர்பு சாதன நிலையங்களுக்கும் அனுப்புங்கள். முக்கியமாக உங்கள் நாட்டில் இருக்கும் தேசிய வானொலி, தொலைக்காட்சிகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் நேரடியாக பேசக்கூடியவர்கள் (live) ஆகப்பேசமுடியுமானால் பேசவும். பகல் இரவென்று பாராமல் இவற்றை எல்லா நாட்டு மக்களுக்கும் தெரியப் படுத்தவேண்டும். நாம் எமக்குள்ளே பேசுவதும், பெருமிதப்பட்டுக்கொள்வதும், கருத்தெழுதுவது மட்டும் போதாது. நாம் உண்மையைத் தெரியப்படுத்தும்போது யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.
 10. எனக்கு சின்ன வயதில் ஓர் ஆசிரியனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. என் வயதை ஒத்தவர்களுடன் சேர்ந்து பல மரங்களுக்குப் பாடம் சொல்லி, கணக்குக்கேட்டு அடிபோட்ட அனுபவங்களும் இருந்தது. ஆனால் க.பொ.த சாதாரணம் படித்தபோது நானும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணராக வரவேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆனால் அந்த ஆசையும் அற்றுப்போனது. அதன் பிறகு இலண்டனுக்கு வந்து கற்றது பொறியியல், தற்போதைய தொழிலும் அதுவே. ஆனால் இங்கேதான் எனது இளவயது ஆசையும் நிறைவேறியது. அதுதான் ஆசிரியர் என்று எல்லோரும் அன்பாக அழைப்பது. எனக்குப் பிடித்ததும் அதுவே. எம்மிளம் சந்ததியினர்க்கு எம்மினிய தமிழ்மொழி, கலை, கலாச்சாரங்களை கற்பிப்பதற்கு உதவுவது ஒருவித மனநிறைவையும் தருகிறது.
 11. கடந்த பல நாட்களாக என்னிதயத்தில் கனத்துக்கொண்டிருக்கும் நெருடல்களை உங்கள் கவியில் வடித்துள்ளீர்கள். நன்றி
 12. இப்போதுதான் நானும் பார்த்தேன் பாராட்டுகள். எனக்குப் பத்து வயதாக இருந்தபோது நானும் ஒருமுறை எமது கிணற்றினுள் தண்ணீர் அள்ளும்போது தவறி விழுந்துவிட்டேன். அருகிலே இருந்த அம்மா கூக்குரலிட்டபடி ஓடிவந்து துலாக்கொடியில் கட்டியிருந்த வாளியை நான் தண்ணீரில் அமிழ்ந்து மேலே வந்தபோது என் கைகளின் அருகே நீட்ட நான் எப்படியோ பிடித்துக்கொண்டேன். அம்மா போட்ட கூக்குரலைக்கேட்டு ஓடிவந்த மற்றையவர்கள் எல்லோருமாகச்சேர்ந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள். இந்த வேளையில் எனது அம்மாவையும் நினைவுகூர வைத்த கந்தப்பு அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி.
 13. இலண்டனில் ஒருசில மாதங்களில் DR பட்டம் எடுத்தவரும் இருக்கிறார். ஓர் ஆலயத்தில் செய்த சேவைக்காக இந்தப் பட்டம் கொடுக்க ஒருவரைச் சிபார்சு செய்யுங்கள் என்று கொழும்பிலிருந்து தொலைபேசியில் அழைக்க, இவரே தற்செயலாக அந்த அழைப்பிற்கு பதில் கூறி, பின்னர் தனது பெயரைத் தானே சிபார்சு செய்ய, எவருக்குமே தெரிவிக்காமல் கொழும்பு சென்று பட்டம் வாங்கிவர, இங்கே அவருக்கு இன்னொருவர் பாராட்டுவிழா வைக்க, (அவர்தான் ஒழுங்கு செய்தாரோ தெரியாது) அதனை அறிந்தவுடன் அதிகமானோர் பொங்கியெழ, இவர் தனித்து நின்று முதலைக் கண்ணீர் வடிக்க...........இப்படியே கதை சென்றது. இப்படிப் பட்டம் எடுப்பதை விட அது சிறந்தது.
 14. உங்களின் எண்ணப் பகிர்வு, ஒன்றுகூடலுக்கு வந்திருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி மகிழ்வித்தது. பாராட்டுகள்.
 15. கதை படிப்பதற்கு நன்றாகவுள்ளது. கனகர் ஓய்வு நாட்களில்தான் கணணியில் செய்திகளைப் படிப்பாரா? ஓய்வு நேரங்களில் என்று வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இவர்களுக்கு எத்தனை பெண்கள்? பெரியவள், சிறியவள் என்று இரண்டு பேர் உள்ளார்களா? கதையைத் திரும்பத்திரும்ப படித்ததினால் வந்த வினை இல்லை வினாக்கள் இவை. தவறானால் மன்னிக்கவும்.