Jump to content

காவடி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    735
  • Joined

  • Last visited

Everything posted by காவடி

  1. 1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். விமானம் வீழ்த்தப்பட்டது - வரலாற்று நிகழ்வு நேற்று (30.04.2007) அன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 இரக குண்டுவீச்சு விமானமொன்று வன்னிப்பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. அவ்விமானம் வீழ்ந்துவிட்டதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசதரப்போ அதைப்பற்றி மூச்சும் விடவில்லை. அதன்காரணத்தால் மற்றச் செய்தி நிறுவனங்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. விமானம் எங்கு வீழ்ந்தது? வானோடிக்கு என்ன நடந்தது? போன்றவற்றுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை. கடலுக்குள் விழுந்திருக்க வேண்டுமென்று புலிகள் தரப்புச் செய்திகள் சொல்கின்றன. விமானம் தாக்குதலுக்குள்ளாகி புகைகக்கியவாறு திரும்பியதை வன்னிமக்கள் பார்த்திருக்கிறார்கள். கக்கிய புகையின் அடிப்படையில் அவ்விமானம் மீளமுடியாத நிலையிலிருந்ததாகவே கருதப்படுகிறது. அதேநேரம் கொழும்பு வான்படைத்தளத்திலோ அல்லது வேறெங்குமோ புகைகக்கியபடி விமானமொன்று தரையிறங்கியதாகத் தகவலில்லை. பொதுமக்களுக்குத் தெரியாமல் தரையிறங்கக்கூடிய எவ்விடமும் சிறிலங்கா அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குளில்லை. எனவே புலிகளின் செய்தியை நம்பாத நடுநிலையாளர்கள்கூட விமானம் எங்கோ வீழ்ந்திருக்கிறது என்று தாராளமாகக் கருதலாம். மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து இரண்டு அவ்ரோ இரக விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இவ்விரு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஈழப்போராட்டத்தில் விமான எதிர்ப்பில் புதிய எழுச்சியொன்று அத்துடன் தொடங்கியது. பன்னிரண்டு ஆண்டுகளின்பின் அதே நாட்களில் மிகையொலி விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டு புதியமுறையிலான வடிவமொன்றைக் கொடுத்துள்ளது. ***************** இதுவொரு வரலாற்று நிகழ்வு. ஈழப்போராட்டத்தில் முதன்முதலாக மிகையொலி குண்டுவீச்சு விமானமொன்று களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. மிகையொலி விமானங்கள் இலங்கையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கடந்த பதினைந்தாண்டுகாலத்தில் ஒருதடவைகூட இவ்வகை விமானங்கள் களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டதில்லை - ஏன் சேதமாக்கப்பட்டதுகூட இல்லை. 1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். (அதற்கு முன் ஏதாவது தாக்குதல் இவ்விமானங்களால் நடைபெற்றிருந்தால் அறியத்தரவும்). இவ்விமானங்களின் வருகைக்கு முன், விமானச் சத்தத்தைக் கேட்டு, அது வட்டமிடுவதைப் பார்த்து, எங்கே குண்டுவிழப்போகிறதென்று ஊகித்துத்தான் மக்கள் காப்புத் தேடிக்கொள்வார்கள். ஆனால் இவற்றின் வருகைக்குப்பின் குறிப்பிட்ட காலம் அப்படியெல்லாம் செய்யமுடியாமற் போனது. இவற்றின் வேகம் காரணமாக சத்தத்தைக்கொண்டு விமானத்தைக் கணிக்க முடியாதிருந்தது. இதன் இரைச்சலே மக்களைக் கிலிகொள்ள வைத்தது. தொடர்ந்த போராட்டத்தில், இவ்வகை மிகையொலி விமானங்களே குண்டுவீச்சில் முதன்மைப் பங்கை வகித்தன. மிக அதிகளவான சேதத்தையும் ஏற்படுத்தின. புலிகளால் அவ்வப்போது குண்டுவீச்சு விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படும். மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து சில விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஆனால் மிகையொலி விமானங்களெவையும் வீழ்த்தப்படவில்லை. இவற்றின் அதிகூடிய வேகம், தானியங்கியாகச் செயற்படும் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை என்ற காரணிகளால் இதன்மீதான தாக்குதல்கள் அனைத்தும் முழுவெற்றியை அளிக்கவில்லை. தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் - குறிப்பாக ஓயாத அலைகள் - 2 க்குப்பின்னான காலப்பகுதியில் இவ்வகை விமானங்களை குறிப்பிட்ட உயரத்தின்கீழ் தாழப்பதிந்து குண்டுபோட முடியாமல் செய்வதில் மட்டுமே எதிர்ப்புத் தாக்குதல்கள் வெற்றீட்டின. இதன்மூலம் குண்டுவீச்சைத் துல்லியமற்றதாக்கியது பெரும் அனுகூலமாக அமைந்தது. எனினும் எல்லாநேரத்திலும் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தும் சாத்தியமிருக்கவில்லை. எதிர்ப்புத் தாக்குதலுக்கு ஆகும் மிகப்பெரிய செலவு ஒருகாரணம். ஒருகட்டத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றிருந்தது. நேற்றுவரை, தாம் தாக்கப்படுவோமென்ற பயமேதுமின்றித்தான் விமானங்கள் குண்டுவீச்சை நடத்திக்கொண்டிருந்தன. இடைப்படட காலத்தில் மிகப்பெரிய அழிவை இவ்விமானங்கள் தமிழர் தரப்புக்கு - மக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன. இவ்வகை விமானங்களிலொன்று நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்டது. *********************** மிகையொலி விமானங்களில் 'கிபிர் (Kfir) எனப்படும் இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்கள் யாழ்ப்பாண இடப்பெயர்வை ஒட்டிய காலத்தில் சிறிலங்கா அரசபடையால் பயன்படுத்தப்பட்டத் தொடங்கின. தொன்னூறுகிளின் இறுதியில்தான் ரஸ்யத் தாயரிப்பான மிக் இரக விமானங்கள் களத்துக்கு வந்தன. கிபீர் ஒப்பீட்டளவில் வேகம் கூடியது. அதனால் இரைச்சலும்கூடியது. மக்களை உளவியல் ரீதியில் அதிகம் வெருட்டியது கிபிர் விமானம்தான். ஆனால் மிக் வகையோடு ஒப்பிடும்போது துல்லியம் குறைவாகவே இருந்தது. இரைச்சல் மூலமும் வேகம் மூலமும் பெரும் பயத்தை உண்டுபண்ணினாலும் துல்லியக்குறைவு காரணமாக இது அதிகளவில் பாதிப்புக்களைத் தரவில்லையென்று சொல்லலாம். மிக் விமானம் ஒப்பீட்டளவில் வேகம் குறைவென்றாலும் தாக்குதல்திறன் அதிகமானது. போராளிகளுக்கு அதிகம் சிக்கலைக் கொடுத்தது மிக் விமானம்தான். துல்லியமாக பல தாக்குதல்களை அவ்வகை விமானங்கள் நடத்தியிருந்தன. வேகம் குறைவென்றபோதும் இதுவரையான அனைத்து விமான எதிர்ப்பு நடவடிக்கைகளின்போதும் தப்புவதற்கு அவ்வேகம் போதுமானதாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசபடையினரின் வான்டையினரின் தாக்குதல்கள் என்றுமில்லாத வகையில் மிகக்கடுமையாக இருந்தன என்பதோடு பாரியளவில் சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அண்மைக்காலத்தில் அரசவான்படை ஏற்படுத்திய கிலியைப் போலவோ சேதத்தைப்போலவோ முன்னர் இருந்ததில்லை. வெல்லப்பட முடியாத சக்தியாகவே இது இருந்தது. நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வோடு தற்காலிகமாகவேனும் சிறிலங்கா வான்படையின் தாக்குதல்ளும் செயற்பாடுகளும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்படும். இவ்வகையான வெற்றிகள் தொடர்ந்தும் கிடைக்குமா அல்லது அரசவான்டை தொடர்ந்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியே. எனினும் முதன்முதலில் மிகையொலி விமானமொன்றைச் சுட்டுவீழ்த்திய நிகழ்வு, ஈழப்போராட்டத்தில் ஒரு மைல்கல் என்பதை மறுக்க முடியாது. அதைப்பதிவாக்கவே இவ்விடுகை.
  2. 3ம் கட்ட ஈழப்போர் 1995 ஏப்ரல் ஆரம்பித்தது. ஆனால் கிபிர் விமானங்கள் 93 இறுதிகளில் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டன. ஏ... நான் நெடுக்கின்ர தகவலில பிழை பிடித்து விட்டேன். என்னத்த பிடித்து என்ன செய்ய..? இனி அவர் வந்து பூசி மெழுக சரியா இருக்கும்
  3. நானும் ஆங்கில தளங்களை அப்பப்ப பாக்கிறன். ஒண்டையும் காணேல்ல
  4. புலிகளின் குரல் தளத்தில் இரவுச் செய்தியும் பின்னர் செய்தியாசிரியர் தவபாலனுடனான அலசலும் இடம் பெற்றிருக்கிறது. ஓடிச் சென்று கேளுங்
  5. ஐயா ஈழவன்.. நீரும் நிதர்சனத்தின்ர வேலையை தொடங்கிட்டீரோ..? அத யஸ்ரின் வேறு நம்பிட்டாரு..
  6. எழுதலாமோ

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.