யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

மேகநாதன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  558
 • Joined

 • Last visited

Community Reputation

1 Neutral

About மேகநாதன்

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • AIM
  na
 • MSN
  na
 • ICQ
  0
 • Yahoo
  na

Profile Information

 • Interests
  Admiring nature and beauty,reading and eager learn more
 1. இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும்.
 2. "கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும் கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும் வாடை தருமூதலிலே நடுங்கும் போதும் வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும் பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும் ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்" இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும். ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது
 3. நாம் இருப்பது,அத்தகைய -அமைப்புக்கள் இயங்க முடியாத சிறிய "சனநாயகத் தீவு" நாடு ஒன்று..அதால்தான் வேலை மினெக்கெட்டு கள உறவுகளிடம் உதவி கேட்கிறேன் நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் nimi0601@yahoo.com நன்றி
 4. வணக்கம். அவசரமாக "எழுக தமிழ்" இறுவட்டு பாடல்கள் தேவை... தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இணைப்புக்களாகவேனும் தந்தால் உதவியாயிருக்கும் தயவு செய்து விரைந்து உதவுங்கள் எனது மின் அஞ்சல் nimi0601@yahoo.com நன்றி
 5. சரியான பதில்களை வழங்கிய அருவி மற்றும் தல ஆகியோருக்கு வாழ்த்துக்கள்....
 6. மிக மிக இலகுவான கேள்வி.... புகழ் பெற்ற ஒருவரின் படத்துடன்..... இப் படத்தில் காணப்படுபவர் யார்? இவர் கல்வி கற்ற புகழ் பெற்ற கல்லூரி எது?
 7. நல்ல விடயம்தான்.... தலைப்பைப் பார்த்து "ஏதோ" என்று பார்த்தால்...??? அப்படிப் பார்க்கப் போனால் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களும்,தாயக விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அத்தனை பொதுமக்களும் ... இத் தலைப்பிற்குள் வருவார்கள்.... {தலைப்புக்களின் "பொருத்தப்பாடு" முக்கியம்.... "நினைவு நாள்" என்று ஒரு பிரிவு இருப்பதை அன்புகூர்ந்து கவனிக்கவும்...}}
 8. நன்றிகள் யாழ்பிரியா மற்றும் மதன் ஆகியோருக்கு "உதவி" கேட்டு உதவிய தாரணிக்கும் நன்றி
 9. "கடவுளுக்குத் தமிழ் தெரியுமா?" என்ற கேள்வியைத் தமிழனே கேட்கிறான்! -------------------------------------------------------------------------------- இதுதான் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது தமிழ்முறைத் திருமணவிழாவில் திரு. ஈழவேந்தன் உரை "தமிழ் அன்னையின் இனிய உயிர் நிலையாம்" திருக்குறளை ஓதி தமிழ் மணம் கமழும் திருமணத்தை சென்ற சனிக்கிழமை 21.01.2006 இல் கொழும்பில் நடாத்தி வைத்த ஈழவேந்தன் அவர்கள்; கவலை தோய்ந்த நிலையில் மேற்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் " என்ற வள்ளுவர் வாய்மொழியையும் மற்றைய குறட்பாக்களையும் மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார். சென்ற சனிக்கிழமை கணனிப்பொறியியலாளர் நளின் அவர்களுக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பட்டதாரி தனுஜா அவர்களுக்கும் திருக்குறள் ஓதி தமிழ்மணம் கமழும் திருமணத்தை மிக்க சிறப்புடன் ஈழவேந்தன் நடாத்தி வைத்தாக். இத் திருமணத்தில் நூற்றுக்கணக்கில் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கல்வி உதவி இயக்குநர் சிவநிர்தானந்த அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஈழவேந்தன் தன் தலைமை உரையில் புரட்சி பூக்கின்ற நிலையில் திருக்குறள் ஓதி வழிபடும் தமிழ் மணம் கமழும் இத்;திருமணத்திற்கு தலைமை தாங்கி உரையை நிகழ்த்துவது தமக்குப்; பெருமிதத்தையும் பேருவகையையும் தருகின்றது என்று குறிப்பிட்ட அவர் 1962 ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வாவின் தலைமையில் தனது திருமணம் தமிழில் நடைபெற்றது என்று குறிப்பிட்ட அவர் பின்பு 1986ல் தனது மகள் யாழினியின் திருமணம் தமிழகத்தில் திருமுறைகள் ஓதி கலைஞர் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத்தலைவர் திரு.இரத்தினசபாபதி அவர்கள் நடாத்திவைத்தார்;. இவ்விழாவில் பழநெடுமாறன்ää வைகோää வீரமணிää தமிழ்க்குடிமகன் ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும் நீண்ட கால இடைவெளிக்குப் பின் 2006 இல் நான் பெறாத செல்வங்கள் நளின் தனுஜா அவர்களுடைய திருமணம் பல அறிஞர் முன்னிலையில் தமிழில் இங்கு சிறப்பாக நடைபெறுவது காலத்தின் கருத்தோட்ட வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. மணமக்கள் இருவரும் வௌ;வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் மொழி பண்பாடு நாகரிகம் வாழ்வியல் முறை ஆகியவை அவர்களை இணைத்துள்ளது. ஈழவேந்தன் அவர்கள் தன் உரையில்; சங்ககாலமää; சங்கமருவிய காலம் ஆகிய காலப்பகுதிகளில் தமிழில் வழிபாடும் தமிழ்த் திருமணங்களும் நடைபெற்றதற்குச் சான்றுகள் உண்டு. பின்பு களப்பிரர் மற்றும் பல்லவர் காலத்தில் வீழ்ச்சியுற்ற தமிழன் வாழ்வு "தமிழால் ஞாலம் அளந்த ஞானசம்பந்தராலும் " "தமிழோடு இசை பாடிய அப்பராலும் " தமிழ் மீண்டும் தலைதூக்கியது. பின்பு "அர்ச்சனை" பாட்டே ஆகும்ää ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழில் பாடுக என்று 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆளுடைய நம்பிக்கு – சுந்தரருக்கு இறைவன் இட்ட கட்டளையை நினைவுபடுத்திய ஈழவேந்தன் அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செந்தமிழ் காப்பியம் தந்த சேக்கிழார் இதனை வலியுறித்திச் சென்றதையும் நினைவுபடுத்தனார். 12 நூற்றாண்டுகள் உருண்டோடிய நிலையில் தமிழ் வழிபாட்டினை 20 ஆம் நூற்றாண்டில் கலைஞர் சட்டமாக்க முனைந்தபோது அங்குள்ள பார்ப்பனீயம் நீதிமன்றம் ஏறித் தமிழ் வழிபாட்டினைத் தடுத்து வடமொழி வல்லாண்மை தலைதூக்க வழி வகுத்தது. எனினும் 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மீண்டும் மறுமலர்ச்சி காண்கின்ற முறையில் தமிழ் வழிபாடும் தமிழ்த் திருமணங்களும் புத்துயிர் பெற்றிருப்பது வீழ்ந்த தமிழன் மீண்டும் எழுச்சி பெற்றதற்கு சான்றாக விளங்குகிறது. இந்நிலையிலும் கடவுளுக்குத் தமிழ் தெரியுமா? என்று தமிழன் கேட்பானாயின் தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ் நாட்டிலும் சரி தமிழீழத்திலும் சரி இடமில்லை. 18 ஆயிரம் தமிழ் உயிர்களை களத்தில் இழந்துள்ள நாம்ää ஏறக்குறைய 70 ஆயிரம் உயிர்களை போரின் விளைவினால் இழந்துள்ள நாம் எப்படி எமக்கு உயிரூட்டும் தமிழை மறந்து வாழ்விழந்த வடமொழிக்கு வாழ்வு கொடுக்க முடியும்? தமிழ் ஈழத்தைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்துவிக்கின்ற திருமணங்கள் தலைவர் பிரபாகரன் தலைமையில் அல்லது அவரை அடுத்த நிலைத்தலைவர்கள் தலைமையில் தமிழில் நஇபெறுகின்றது. புலிச்சின்னத்தோடு கணையாழிகள் மாற்றப்படுகின்றன. மலர் மாலைகளும் மணமக்களிடையே அணியப்படுகின்றன. வாழ்விலும் தாழ்விலும் நாம் இருவரும் ஒன்றுபட்டே வாழ்வோம் என மணமக்கள் தமிழில் எடுக்கின்ற உறுதிமொழி தமிழரிடையே காணப்படுகின்ற வந்தனைக்குரிய சிந்தனைப் புரட்சிக்கு எடுத்துக்காட்டாகும். ஈழத்தமிழ் மக்கள் விரைவில் அரசியல் விடுதலை பெறுவது உறுதி. அத்தோடு தமிழீழம் மலர்வதை எவரும் தடுக்க முடியாது. ஆனால் சமுதாயத்திலும் சமயத்திலும் பொருளியல் வாழ்விலும் புரட்சி பூத்தால்த்தான் எம் அரசியல் விடுதலை ஆக்கம் தரும். 2003 ஆம் ஆண்டு ஒக்தோபர் திங்கள் 12 ஆம் நாள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய போது அவர் சொல்லிய அரிய கருத்துக்களுள் ஒன்று "ஆரிய மாயையில் இருந்து தமிழன் விடுபட்டாற்றான் தமிழினத்திற்கு மீட்சியும் வாழ்வும் உண்டு " என்று அவர் கூறியதைத் தாம் இங்கு நினைவுபடுத்துவதாகக் கூறினார். இறுதியில்; மணமக்களை அவர் விளித்து ஆண்குழந்தையோ பெண்குழந்தையோ எமக்குக் கவலையில்லை ஆனால் "புலிக்குட்டிகளைப்" பெற்று எம் இனத்தின் வாழ்வுக்கும் வளத்திற்கு துணைநிற்க வேண்டும்” என்று அவர் கூறியபோது அவையோரிடம் இருந்து பெருங்கையொலி எழும்பியது தகவல் மூலம்- சூரியன்.கொம்
 10. படம் போட ஏற்கனவே மதன் தந்த இணைப்பு இப்ப வேலை செய்வதிலை...... ஏதேனும் புது இணைப்பு இருந்தால் அறியத் தாங்கோ...
 11. குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது. கிராம மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர். குமாரபுரம் கிருஸ்ணன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 14 குழந்தைகளை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. 5 வயதுக்குக் குறைவான 3 குழந்தைகள்; 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 3 பேர், 11 முதல் 20 வயதுக்குட்பட்ட 8 பேர், 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர், 31 முதல் 40 வயதுக்குட்பட்ட இருவர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் என்று இராணுவத்தினர் வெறியாடிக் கொன்றனர். இந்தப் படுகொலை தொடர்பாக 9 படையினர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாகியும் திருகோணமலை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு காத்திருக்கிறது. இந்தப் படுகொலை தொடர்பான சாட்சியங்களும் படுகொலைக்கான ஆயுதங்களும் கடந்த ஆண்டு கொழும்பு இரசாயன பகுப்பாய்வுக் கூடத்தில் நடந்த தீ விபத்தில் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் மூலம்- புதினம்.கொம்
 12. சிறி வாழ்த்துக்கள்..... மேலதிகத் தகவல்களுடனான தெளிவான பதில்களுக்கு சிறப்பு நன்றிகள்....
 13. ஒரு மரணமும் சில மனிதர்களும்: மரணத்துள் வாழ்ந்தோ(போ)ரின் மனிதக் கதைகள் -வாசகனின் மனப்பதிவு கே.ரி.பி.ஷாந்தன் "நாம் மூக்கும் முழியுமாக வாழவே பிறந்தோம்..." (நன்றி:-வ.ஐ.ச.ஜெயபாலன்) ஆனால்இபல தசாப்தங்களாக "மரணத்துள் வாழ்வோம்" (நன்றி:- சண்முகம் சிவலிங்கம்)என்பதாகவே ஈழத்தமிழரது நடைமுறை வாழ்வு நீண்டு செல்வதைப் பல்வேறு தளங்களினு}டாகவும் சமூகவியல் பார்வையோடு "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் எமக்கு தாட்சாயிணி சிறப்பு அறிமுகம் ஆகிறார். "எழுத வேண்டும் என்று துறுதுறுத்த வயதில் எழுத ஆரம்பித்துஇஇன்று வரை எழுதப்பட்ட சிறுகதைகளில் தெரிந்தெடுத்த பன்னிரு கதைகளின் தொகுப்பு இது.இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் எம்மால் கடந்துவரப்பட்ட காலத்தின் ஒவ்வொரு பிரதிபலிப்புக்களாகவே எஞ்சி நிற்கின்றன" என்ற நு}லாசிரியரின் "என்னுரை" வாசகர்களை ஆசுவாசப்படுத்திவிடுகிறது. "இச் சிறுகதைகளைப் பற்றி அவை பேசுவதற்க்கு மேலாக என்னால் பேசிவிட முடியாது" என்ற தாட்சாயிணியின் "என்னுரை" வரிகள் முற்குறிப்பாக அமைந்து எம்மை மிகுந்த ஆவலுடன் கதைகளினுள்ளே சேர்த்துவிடுகின்றன. "ஒரு மரணமும் சில மனிதர்களும்" தொகுப்பின் தலைப்பாய் அமைந்த சிறுகதை இத்தலைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது கனகச்சிதப் பொருத்தம்.உறவுகளின் மீள் தரிசனம் பரிணாமம் அங்கலாய்ப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்து சிறுகதை நகர்கிறது.ஆங்காங்கு சமூக அக்கறைகளும் கதையோட்டத்தோடு ஒத்திசைந்து கதையாடல்களாக வருகின்றன.{எ-கா:-"சிம்ரன் மாதிரியோ...?" எதிலோ தோற்றுவிட்டது மாதிரி அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றிற்று)பல்வேறு உறவுகள் வந்து போனாலும் நயனியும் அம்மம்மாவும் மனதுள் நிறைந்து நிற்கிறார்கள்.மிக யதார்த்தமான கதையோட்டத்தை பிரசார நெடிகள் கலவாது கொண்டுசென்றமை சிறப்பு.சிறுகதையின் முடிவுப் பகுதி சிலருக்கு செயற்கைத்தன்மை சாயல் கொண்டாலும் சாயல்கள் கொள்ளாத சத்தியச் சூழலே அது என்பதாகி எமது உள்ளங்களை ஊடுருவி விடுகிறது.வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாத நயனியின் சாவு எம்மையும் மீறி கண்களைக் கசிய வைத்துஇ எழுத்தாளர் வென்றுவிடுகிறார். "பெண் எழுத்து"(பெண்ணால் அவள் நிலை கொண்டு எழுதப்படுவது என்ற எடுகோள்)என்ற தன்மையில் தாட்சாயிணி பல கதைகளிலும் தனித்துவமாகத் தெரிந்தாலும் "சோதனைகள்"இல் மிகச்சிறப்பான கணிப்பைப் பெற்றுவிடுகிறார்.சமூகத்தினத
 14. "நீட்டி முழங்குவது" வாதம் என்றால் ....????? எதிரணியின் சிலர் வாதங்களையும், தொகுப்புரை(?)யையும் பார்க்கும் போது, பள்ளி நாள்களில் "புள்ளி" அதிகம் வாங்க சிலர் "நீட்டி நீட்டி" எழுதி, "சுத்தி சுத்தி ....கொல்லைக்குள்ள.." என்ற "வங்குரோத்து" நிலை தான் நினைப்புக்கு வருகிறது.... ஆனால் ஆசிரியர் என்ற பதவிநிலைகளால் "பாரபட்சம்" காட்டிய அத் தகையானவர்களாக, இங்கு கள நடுவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்ப்பு...
 15. தல வாழ்த்துக்கள்.... சிறி சுட்டிக்காட்டலுக்கு நன்றிகள்.... 42 & 43 வது கேள்விகளுக்கான பதில்களை அன்பு உறவுகள் முயற்சி செய்யுங்கள்..