Jump to content

கந்தப்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11891
  • Joined

  • Last visited

  • Days Won

    9

கந்தப்பு last won the day on November 18 2014

கந்தப்பு had the most liked content!

Recent Profile Visitors

12581 profile views

கந்தப்பு's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

313

Reputation

  1. பாரி, நிலா அழகான தூயதமிழ்ப் பெயர்கள். பாரியின் பிறந்தநாள் அன்றே விபத்து நடந்திருக்கிறது. பாரவூர்தி சிவப்பு விளக்கு ஒளிர்ந்த போது வேகமாக வந்திருக்கிறது. மிக வேதனையான சம்பவம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
  2. என்ன உறுதிமொழி கொடுத்தனான். 🤔. வயது போயிட்டுது. ஞாபகம் வரவில்லை அமெரிக்கா என்ன சந்திர மண்டத்திலேயே இருக்குது தமிழரோட தமிழில் கதைக்கவேணும்
  3. வீட்டில உங்களுக்கு நல்ல கிள்ளு , அடி விழுகுது போல கிடக்குது. எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டிக் கொளவது நல்ல ராசதந்திரம் பாருங்கோ
  4. அப்புவை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி 😄 உங்களுக்குத் தெரியுது. ஆனால் வீட்டில தெரியவில்லையே 🥲
  5. 91ல் தமிழக ஆட்சியினைக் கைப்பற்றுகிறார் ஜெயலலிதா அம்மையார். தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்படுகின்றன. அகதிமுகாம்களில் இருந்து ஈழ அகதிகள் சிலர் காணாமல் போகிறார்கள். அவர்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். 96ல் கலைஞர் ஆட்சியினைக் கைப்பற்றுகிறார். ஈழ அகதிகளுக்கான பல்கலைக்கழக அனுமதியினை வழங்குகிறார். தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 இடங்களை ஈழ அகதிகளுக்கு வழங்குகிறார். அதாவது பொறியியல்துறைக்கு 20 இடங்களும், மருத்துவதுறைக்கு 10 இடங்களுமாக கோட்டா முறையில் 30 ஈழ அகதிகளுக்கு இலவசக்கல்வியினை வழங்குகிறார். ஈழத்தில் பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைகளை வெற்றிகரமாக செய்து முடித்து திரும்பிய இந்தியப்படைகளினை வரவேற்க செல்லாமல் தவிர்த்தவர் கலைஞர். ஆனால் அவரின் இறுதிக்காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியவற்றை புத்திர பாசத்தினால் செய்யாமல் தவிர்த்தார். செய்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பார். கலைஞரின் பராசக்தி திரைப்படத்தினை பலமுறை பார்த்து இரசித்திருக்கிறேன். அவரின் நாவல்கள் பலவற்றினை வாசித்திருக்கிறேன். 'வான் கோழி' பிடித்தநாவல். எனக்குப்பிடித்த கலைஞரின் பேட்டிகளில் சில 1) 90களில் ஒரு பத்திரிகையாளர் கலைஞரினைப் பார்த்து ஒருவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் சொல்லும் படி கேட்டிருந்தார். அவரின் பதில் - ஜெயலலிதா ஒரு சிறந்தநடிகை. மேலோட்டமாகப்பார்த்தால் நடிகை ஜெயலலிதாவைப்பற்றிச் சொல்வதாகத் தோன்றும். ஆனால் அரசியல்வாதி ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். 2) இன்னுமொரு பத்திரிகையாளர் 'திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கலைஞரைப்பார்த்து கேட்டிருந்தார். கலைஞரின் பதில் 'சுத்தம்' உடன் 'அ' சேர்த்தால் 'அசுத்தம்' என்று வரும் 'நீதி' உடன் 'அ' சேர்த்தால் 'அநீதி' வரும். 'திமுக'வுடன் 'அ' சேர்த்தால் 'அதிமுக' வரும். தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.
  6. தமிழக இளசுகள் பறவாயில்லை. ஈழத்து இளசுளில் சில, தங்கள் இனத்தினை, ஒரு இலட்சம் பேர்களைக் கொன்று அழித்தவர்களின் அணியை ஆதரிக்க சிங்கக் கொடிகளுடன், சிங்கக்கொடி போட்ட டில்மா ஆடைகளை அணிந்து சென்று இலண்டன் லோட்சிலும், ஓவலிலும், அவுஸ்திரெலியா எஸ் எஸ் சியிலும், எம் சி சி களிலும் முன்பாக நுளைவுச் சீட்டுக்கு அழைகிறார்களே. ஈழத்துக்காக தன்னுடயுரைத் தியாகம் செய்தவன் முத்துக்குமார் என்ற இளைஞன். ஈழத்துக்காக மெரினாவில் கூடியவர்களும் பல தமிழகத்து இளைஞர்கள்.
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி
  8. யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையால் ஒரு கேளிக்கை நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி கார்த்திகை மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது எமது தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் வாரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக்காட்டி பாடசாலை அதிபர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழையமாணவர் தாய் சங்கம், ஏனைய நாடுகளில் இயங்கும் பழையமாணவர் சங்க நிர்வாகிகள், உலகமெங்கும் வாழும் பழையமாணவர்கள், மற்றும் பிரித்தானிய பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தும், பிரித்தானிய பழையமாணவர் சங்கம் இந்நிகழ்வை நடத்தியே தீர்வது என்று அனைவரின் எதிர்ப்பையும் மீறி முடிவு எடுத்துள்ளது. மார்கழி 9 மற்றும் 16 திகதிகளில் அதே மண்டபம் கிடைக்க கூடிய வாய்ப்பு இருந்தும் அவர்கள் மாற்றுவதற்கு தயார் இல்லை. மேலும் இந்தவருட பழைய மாணவர்கள் ஒன்று கூடல் கடந்த ஆனி மாதமளவில் பிரித்தானிய நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாது மேற்படி நிர்வாக சபை குறிப்பிட்டது போல் இது ஒரு இலாபநோக்கம் அல்லாத மற்றும் பாடசாலையுடன் தொடர்பில்லாத களியாட்ட நிகழ்வு. மேற்குறிப்பிட்ட காரணங்களில் இருந்து அறியக்கூடிய விடயம் யாதெனில், இது ஒரு நன்கு திட்டமிட்ட செயல். நிர்வாக குழுவில் இடம்பெற்று இருக்கும் ஒரு சிலர் தங்கள் தனிப்படட இலாபத்துக்காக அல்லது வேறு சிலரின் நோக்கத்தை நிறைவேற்ற இந்த நிகழ்வை பயன்படுத்துகிறார்கள். வருடத்தில் 52 கிழமைகள் உள்ளன. ஏன் இந்த வாரத்தில் தான் இக்களியாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்ய வேண்டும்? எனவே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட திகதி எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது. பழைய மாணவர் அமைப்புக்கள் பாடசாலை வளர்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டன அன்றி அவைகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் பாடசாலையின் புனிதத்தன்மையான பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவதற்காக இல்லை. இதை அந்த பழைய மாணவர் அமைப்பை பிழையான வழியில் இயக்கிக்கொண்டிருக்கும் வயதில் பெரியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிக பணம் கொடுத்த அமைப்பு, ஆகவே நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் யாரும் கேட்க முடியாது என்று நினைப்பது மிகவும் தவறான விடயம். உங்களது நடவடிக்கையானது எங்களது பாடசாலையின் பெயருக்கும் அதில் கல்வி கற்ற எங்களுக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். இனியாவது மனத்தை மாற்றி நல்ல முடிவாக எடுக்கவும். இல்லையெனில் இதனை அனைவரும் ஒன்று இணைந்து தடுக்காது விட்டால், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் புற்றீசல்கள் போல் பெருகும்.
  9. நல்லவிடயம். ஆளும்கட்சி மாறி அடுத்த தேர்தலில்பின் வேறு ஒருகட்சி ஆளும்கட்சியானால் சென்னை மெட்ரோ ரயிலில் ஊழல் என்று எதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள் என்று சந்தேகம் இருக்கிறது.
  10. யாழ்கள உறவு ஜெயபாலன் அவர்கள் மீண்டும் நோர்வேக்கு திரும்பிவந்தது மகிழ்ச்சி. இனிமேல் தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு செல்லவேண்டாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.