Jump to content

கந்தப்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  11883
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by கந்தப்பு

 1. 91ல் தமிழக ஆட்சியினைக் கைப்பற்றுகிறார் ஜெயலலிதா அம்மையார். தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்படுகின்றன. அகதிமுகாம்களில் இருந்து ஈழ அகதிகள் சிலர் காணாமல் போகிறார்கள். அவர்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். 96ல் கலைஞர் ஆட்சியினைக் கைப்பற்றுகிறார். ஈழ அகதிகளுக்கான பல்கலைக்கழக அனுமதியினை வழங்குகிறார். தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 இடங்களை ஈழ அகதிகளுக்கு வழங்குகிறார். அதாவது பொறியியல்துறைக்கு 20 இடங்களும், மருத்துவதுறைக்கு 10 இடங்களுமாக கோட்டா முறையில் 30 ஈழ அகதிகளுக்கு இலவசக்கல்வியினை வழங்குகிறார். ஈழத்தில் பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைகளை வெற்றிகரமாக செய்து முடித்து திரும்பிய இந்தியப்படைகளினை வரவேற்க செல்லாமல் தவிர்த்தவர் கலைஞர். ஆனால் அவரின் இறுதிக்காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியவற்றை புத்திர பாசத்தினால் செய்யாமல் தவிர்த்தார். செய்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பார். கலைஞரின் பராசக்தி திரைப்படத்தினை பலமுறை பார்த்து இரசித்திருக்கிறேன். அவரின் நாவல்கள் பலவற்றினை வாசித்திருக்கிறேன். 'வான் கோழி' பிடித்தநாவல். எனக்குப்பிடித்த கலைஞரின் பேட்டிகளில் சில 1) 90களில் ஒரு பத்திரிகையாளர் கலைஞரினைப் பார்த்து ஒருவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் சொல்லும் படி கேட்டிருந்தார். அவரின் பதில் - ஜெயலலிதா ஒரு சிறந்தநடிகை. மேலோட்டமாகப்பார்த்தால் நடிகை ஜெயலலிதாவைப்பற்றிச் சொல்வதாகத் தோன்றும். ஆனால் அரசியல்வாதி ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். 2) இன்னுமொரு பத்திரிகையாளர் 'திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கலைஞரைப்பார்த்து கேட்டிருந்தார். கலைஞரின் பதில் 'சுத்தம்' உடன் 'அ' சேர்த்தால் 'அசுத்தம்' என்று வரும் 'நீதி' உடன் 'அ' சேர்த்தால் 'அநீதி' வரும். 'திமுக'வுடன் 'அ' சேர்த்தால் 'அதிமுக' வரும். தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.
 2. தமிழக இளசுகள் பறவாயில்லை. ஈழத்து இளசுளில் சில, தங்கள் இனத்தினை, ஒரு இலட்சம் பேர்களைக் கொன்று அழித்தவர்களின் அணியை ஆதரிக்க சிங்கக் கொடிகளுடன், சிங்கக்கொடி போட்ட டில்மா ஆடைகளை அணிந்து சென்று இலண்டன் லோட்சிலும், ஓவலிலும், அவுஸ்திரெலியா எஸ் எஸ் சியிலும், எம் சி சி களிலும் முன்பாக நுளைவுச் சீட்டுக்கு அழைகிறார்களே. ஈழத்துக்காக தன்னுடயுரைத் தியாகம் செய்தவன் முத்துக்குமார் என்ற இளைஞன். ஈழத்துக்காக மெரினாவில் கூடியவர்களும் பல தமிழகத்து இளைஞர்கள்.
 3. யாழில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவரை ஏடைபோட முடியாது . சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களில் யாழில் இருப்பார்கள். ஒரு பெயரில் எழுதும்போது ஒரு கருத்தையும், மறுபெயரில் எழுதும்போது அக்கருத்துக்கு எதிரான கருத்தையும் எழுதினால்.. உ+ம் புலி எதிர்ப்பு, ஆதரவு. இவர் புலி எதிர்ப்பாளரா? ஆதரவானவரா?. யாழ் உறவுகள் என்றாலும் முன்பின் முகம் அறியாதவர்களை நண்பர்களாக இணைப்பது அவ்வளவு நல்லதாகச் தெரியவில்லை.
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி
 5. யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையால் ஒரு கேளிக்கை நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி கார்த்திகை மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது எமது தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் வாரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக்காட்டி பாடசாலை அதிபர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழையமாணவர் தாய் சங்கம், ஏனைய நாடுகளில் இயங்கும் பழையமாணவர் சங்க நிர்வாகிகள், உலகமெங்கும் வாழும் பழையமாணவர்கள், மற்றும் பிரித்தானிய பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தும், பிரித்தானிய பழையமாணவர் சங்கம் இந்நிகழ்வை நடத்தியே தீர்வது என்று அனைவரின் எதிர்ப்பையும் மீறி முடிவு எடுத்துள்ளது. மார்கழி 9 மற்றும் 16 திகதிகளில் அதே மண்டபம் கிடைக்க கூடிய வாய்ப்பு இருந்தும் அவர்கள் மாற்றுவதற்கு தயார் இல்லை. மேலும் இந்தவருட பழைய மாணவர்கள் ஒன்று கூடல் கடந்த ஆனி மாதமளவில் பிரித்தானிய நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாது மேற்படி நிர்வாக சபை குறிப்பிட்டது போல் இது ஒரு இலாபநோக்கம் அல்லாத மற்றும் பாடசாலையுடன் தொடர்பில்லாத களியாட்ட நிகழ்வு. மேற்குறிப்பிட்ட காரணங்களில் இருந்து அறியக்கூடிய விடயம் யாதெனில், இது ஒரு நன்கு திட்டமிட்ட செயல். நிர்வாக குழுவில் இடம்பெற்று இருக்கும் ஒரு சிலர் தங்கள் தனிப்படட இலாபத்துக்காக அல்லது வேறு சிலரின் நோக்கத்தை நிறைவேற்ற இந்த நிகழ்வை பயன்படுத்துகிறார்கள். வருடத்தில் 52 கிழமைகள் உள்ளன. ஏன் இந்த வாரத்தில் தான் இக்களியாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்ய வேண்டும்? எனவே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட திகதி எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது. பழைய மாணவர் அமைப்புக்கள் பாடசாலை வளர்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டன அன்றி அவைகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் பாடசாலையின் புனிதத்தன்மையான பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவதற்காக இல்லை. இதை அந்த பழைய மாணவர் அமைப்பை பிழையான வழியில் இயக்கிக்கொண்டிருக்கும் வயதில் பெரியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிக பணம் கொடுத்த அமைப்பு, ஆகவே நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் யாரும் கேட்க முடியாது என்று நினைப்பது மிகவும் தவறான விடயம். உங்களது நடவடிக்கையானது எங்களது பாடசாலையின் பெயருக்கும் அதில் கல்வி கற்ற எங்களுக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். இனியாவது மனத்தை மாற்றி நல்ல முடிவாக எடுக்கவும். இல்லையெனில் இதனை அனைவரும் ஒன்று இணைந்து தடுக்காது விட்டால், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் புற்றீசல்கள் போல் பெருகும்.
 6. நல்லவிடயம். ஆளும்கட்சி மாறி அடுத்த தேர்தலில்பின் வேறு ஒருகட்சி ஆளும்கட்சியானால் சென்னை மெட்ரோ ரயிலில் ஊழல் என்று எதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள் என்று சந்தேகம் இருக்கிறது.
 7. யாழ்கள உறவு ஜெயபாலன் அவர்கள் மீண்டும் நோர்வேக்கு திரும்பிவந்தது மகிழ்ச்சி. இனிமேல் தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு செல்லவேண்டாம்.
 8. கவிஞர் ஜெயபாலன் அவர்கள் மூஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைக்க விரும்பினார். தமிழர்களும் முஸ்லீம்களும் பிரிந்து இருப்பதையே சிங்களம் விரும்புகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு நன்மைதானே. இதனால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.
 9. யாழ்கள உறுப்பினரும் கவிஞருமான ஜெயபாலன் அவர்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும். அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்ற மெல்பேர்னைச் சேர்ந்த ஒருவர் முன்பு சிங்களதேசத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவுஸ்திரெலியா அரசின் அழுத்தத்தினாலும் ,மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தத்தினாலும் அவரை வேண்டாவெறுப்பாக சிங்களம் விடுதலை செய்திருக்கிறது. யாழில் இச்செய்தி சென்ற வருடம் வந்தது. அதே போல நோர்வே குடியுரிமைபெற்ற ஜெயபாலன் அவர்களின் விடுதலைக்கு நோர்வேயினூடாக சிங்களத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உலகில் எத்தனையோ அழகான அமைதியான நாடுகள் இருக்கின்றன. தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு பயணிப்பதினைத் தவிருங்கள்.
 10. மாவீரர்களுக்கு வீரவணக்கம். தாயகத்தில் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் சிங்கள அரசினால் அழித்து இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் தான் சிங்களத்தினால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளில் மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் அமைத்தால் நல்லது என நினைக்கிறேன்.
 11. புத்தனுக்கும் ,கோமகன்,பிரியா, குமாரசாமிக்கும் பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
 12. வீரவணக்கம் 2008ல் யாழில் வந்த இணைப்பு http://www.yarl.com/forum3/index.php?showtopic=33018
 13. ஒருமாத கால புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்ததைவிட வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்த நேரம்தான் அதிகம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கியதுமே, தி.மு.க. மீதான இமேஜ் சரியத் தொடங்கியது. இலவசங்களாலும், பணத்தாலும் மக்களின் மனதை மாற்றி விடலாம் என தி.மு.க. நினைத்தது. அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள் மக்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஈழத் தமிழர் பிரச்னை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலம் அது. ஈழ ஆதரவாளர்களும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வேலை செய்தனர். அதையும் தாண்டி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை கரு ணாநிதி தனக்கு சாதகமாக நினைத்திருக்கக் கூடும். ஆனால், மத்தியில் ஆட்சி என்பது வேறு, மாநில ஆட்சி என்பது வேறு என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வை த்துள்ளார்கள் என்பதைத்தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்று முடிவானதுமே, தி.மு.க.வின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்திருந்தது அதற்கு ஒரு காரணம். ஜெயலலிதாவா, கருணாநிதியா என ஜம்ப் ஆகிக் கொண்டிருந்த ராமதாஸ் கருணாநிதியுடன் இணைய, தி.மு.க.வுக்கு வட மாவட்டங்களில் பலம் கிடைத்தது போல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால் அது தோற்றம் மட்டுமே என்பதை தேர்தல் பிரசாரத்தின் போது காண முடிந்தது. ‘‘முதல்முறையாக நாங்கள் இணைகிறோம், எங்கள் கனவு நனவாகி விட்டது’’ என்றெல்லாம் ராமதாஸும், திருமாவளவனும் கட்டியணைத்து போஸ் தந்தார்கள். ஆனால், தலைவர்களிடம் இருந்த நெருக்கம் தொண்டர்களிடம் இல் லாமல் போனது. வட மாவட்டங்களில் வன்னியர்களால் தலித்துகள் தாக்கப்படும் சம்பவங்களும், தலித்துகள் வன்கொடுமைச் சட்டத்தில் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள் என வன்னியர்களும் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்றவே இல்லை. இளைஞர் காங்கிரஸ் நடைபயணம், காங்கிரஸ் தலைவர்களின் தி.மு.க.விற்கு எதிரான பேச்சு என காங்கிரஸ் தொண்டர்களிடையே தி.மு.க.விற்கு எதிரான மனநிலையே தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்புவரை இருந்தது. திடீரென காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி என அறிவிக்க, தொண்டர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினரும், தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ்காரர்களும் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார்கள். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வேறு நிறுத்தப்பட்டனர். நானா, நீயா என போட்டி போட்டு மாறி, மாறி தோற்கடிக்கும் வேலையை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியினர் சரியாகவே செய்தார்கள். பா.ம.க. - காங்கிரஸ் மோதல், விடுதலைச் சிறுத்தைகள் - காங்கிரஸ் மோதல் என கூட்டணிக்குள் குழப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால் இது எதுவும் வெளியில் தெரியாதவாறு, அதன் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டது. அனைவரும் மேடையில் ஒன்றாகப் பேசி, தங்கள் கைவசம் இருக்கும் மீடியாக்கள் மூலம் ஒற்றுமையை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க.வில் நிலைமை நேர் எதிராக இருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மேடையில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை, ஜெயலலிதா பெயரை விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் நோக்கம், தலைவர்களைப் போலவே, தி.மு.க.வை வீழ்த்துவதாக இருந்தது. இந்த நோக்கத்தில் அவர்கள் ஒன்றுபட்டு தேர்தல் வேலை செய்தார்கள். இந்த எல்லா அரசியலையும் தாண்டி ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்வெட்டுதான் தி.மு.க. அரசின் மீது தீராத கோபத்தை வரவழைத்தது. காலை ஆறுமணிக்கே தொலைந் துபோகும் மின்சாரத்தின் முன் கிரைண்டர், கலர் டி.வி. எல்லாம் எடுபடவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த மின்தடையால் ஏராளமான சிறுதொழில்களும், விவசாயமும் கிட்டத்தட்ட அழிந்து போனது என்பதுதான் உண்மை. அதிரடியாய் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், ‘‘மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது, எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு தி.நகரே சாட்சி’’ என்றெல்லாம் கருணாநிதி பேசி மக்களை வெறுப்பேற்றினார். கடந்த தேர்தல்களில் தங்களுக்கு வெற்றியைத் தந்ததாக தி.மு.க. நம்பிக் கொண்டிருக்கும் திருமங்கலம் ஃபார்முலாவும் இந்தமுறை கவிழ்த்து விட்டது. தேர்தல் கமிஷனின் எல்லாக் கெடுபிடிகளையும் மீறி, கடைசி நாட்களில் தி.மு.க. பணப்பட்டுவாடா செய்தது. ‘‘ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொள்ளையடித்ததை உங்களுக்குத் தருவார்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’’ என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து கொண்டிருக்க, இந்தப் பணம் பெ ரும்பாலும் பொதுமக்களுக்கு போய்ச் சேரவேயில்லை என்பதுதான் உண்மை. கட்சி கொடுத்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கிக் கொண்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாக சொல்லப்பட்ட தேர்தல் அறிக்கை நலத்திட்டங்கள் முழுக்க மக்களை போய்ச் சேரவேயில்லை. கலர் டி.வி., இலவச சிலிண்டர் எல்லாவற்றையும் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பூஜ்யங்களை எண்ண முடியாத அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஊழல் பணத் தில்தான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது, கனிமொழி, தயாளு மீது வழக்கு, ராஜாத்தி அம்மாள் நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சு, பேரனுக்கு பதவி கொடுக்க தயாளு அம்மாள் 600 கோடி வாங்கினார் என கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் மக்களை எரிச்சலடையச் செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி மகன்களும், பேரன்களும் சினிமா, டி.வி., பத்திரிகை என எல்லாத் தொழில்களிலும் கால் பதிக்க, அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு சினிமா கூட வெளிவர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆட்சி மாறினால் உடனே அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சினிமா துறையினர் கூட கருணாநிதி கு டும்பத்தின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இந்தக் குடும்ப ஆதிக்கம் தி.மு.க.வின் அமைச்சர்கள் மட்டத்திலும் பரவ ஆரம்பித்தது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளைக் களமிறக்க கட்சிக்காக வேலை செய்த தொண்டர்கள் குமுற ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் மீது தொடர்ந்து கூறப்பட்ட நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து கொலைக் குற்றப் புகார்களால் தி.மு.க.வின் இமேஜ் கடுமையாகச் சரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்தார்கள். கருணாநிதியின் உதவியாளர் தனி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்தார். குடும்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகார மையமாகச் செயல்பட்டது கட்சியினரிடையே கோபத்தையே ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு புதிய விஷயங்களை கவனிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கே வாக்களித்த வரலாறுடைய அரசு ஊழியர்கள் இந் தமுறை பெருமளவில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க.வின் உண்மையான கட்சித் தொண்டர்கள், ‘‘கட்சி வளர வேண்டுமானால் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும். அதற்கு இந்த முறை தி.மு.க. தோற்க வேண்டும். அதிலிருந்தாவது கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்கள். கட்சியில் பல ஆண்டுகளாக வேலை செய்பவர்களை விட, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட, சீனியர் தி.மு.க.வினர் எரிச்சலடைந்தனர். தி.மு.க.வின் பலவீனங்கள் அ.தி.மு.க.வுக்கு பலமாகி விட்டது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் உழைப்பு இந்தத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம். வெற்றி பெறும் தொகுதிகளாக தேர்வு செய்தது, மக்களுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்டது, தி.மு.க.வின் பலவீனங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது என பல காரணங்களை அடுக்கலாம். பெரிய ஊடக பலம் இல்லாததால் இந்த வேலைகள் வெளித்தெரியாமல் போயின. இதைத்தவிர, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இலவச ஆடு, பசுமை வீடு போன்ற திட்டங்கள் கிராம மக்களை அதிகம் ஈர்த்துள்ளன என்பதும் உ ண்மை. விஜயகாந்துக்கு எதிராக தி.மு.க.வால் களமிறக்கப்பட்ட வடிவேலு, அ.தி.மு.க.வை தாக்கி ஒரு வார்த்தையும் பேசவில்லை. எம்.ஜி.ஆர். பாடல்கள் வேறு பாடி ஓட் டுக்கேட்க, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்ததுதான் பெரும் நகைச்சுவை. சீமான் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பெரிய அளவில் வேலை செய்ய, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமானது. நாட்டை விட, வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் பலனை கருணாநிதி இப்போது உணர்ந்திருப்பார். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ‘‘இது அ.தி.மு.க.வின் வெற்றி அல்ல. தி.மு.க.விற்கு எதிரான கோபம் மட்டுமே’’ என்பதைத்தான். மக்களின் மௌனப் புரட்சியே இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்குவதற்கு முன்பாக அறிவாலயத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். முடிவுகள் வரத்தொடங்கிய சிறிது நேரத்திற்கெ ல்லாம், ஒரு போலீஸார் கூட அங்கு இல்லை. கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் மட்டும் இ ருந்தனர். பின்னர் ஆயிரம்விளக்கு உசேன் மட்டும் வந்து சேர்ந்தார். சளித் தொல்லை காரணமாக முதல்வர் யாரையும் பார்க்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தார். அங்கு பாதுகாப்புக்குப் போடப்பட்டிருந்த போலீஸாரும் சிறிது நேரத்தில் காணாமல் போயினர். வடிவேலு வீட்டுக்கு காவல்! 1967-ம் ஆண்டு அண்ணாதான் பிரசார பலமாக இருந்தார். அண்ணாவை முன்னிலைப்படுத்தியே தி.மு.க. பிரசாரம் செய்தது. மக்கள் அலைகடலென திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டார்கள். இந்தத் தேர்தலுக்கு அதே தி.மு.க., நடிகர் வடிவேலுவை நம்பியே களத்தில் இறங்கியது. விஜயகாந்தை திட்டுவது, எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடி தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்பது, தேர்தலுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அறிவிப்பது...என பிஸியாகவே இருந்தார் வடிவேலு. தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்ததால், வடிவேலுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. வடிவேலு வீட்டருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களைச் சந்தித்தார். நடிகர் வடிவேலுவைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார். சட்டசபையில் எதிர்க்க ட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம் என்று முடித்துக்கொண்டார். - குமுதம் ரிப்போட்டர்
 14. உண்மைதான். வன்னி அவலம் நடைபெற்ற போது பல காணொளிகள் திரு.வேல்முருகன் அவர்களைப் பார்த்தேன்.
 15. காசு வாங்கியவர்கள் எல்லாம் தங்களுக்குத்தான் ஓட்டு போட்டிருப்பார்கள் என நம்புகிறது ஆளுங்கட்சி.ஆனால் பல இடங்களில் காசையும் வாங்கிக்கொண்டு,ஓட்டையும் மாற்றிப்போட்டிருக்கிறார்கள்.ஏன் இப்படி என்று கேட்டால் பின்ன என்னங்க..?ஓட்டுக்கு குறைந்தது ஆயிரமாவது கொடுப்பாங்கன்னு மக்கள் நினைச்சிருந்தாங்க..ஆனா 200 தான் கொடுத்தாங்க..அதுவும் சில இடங்களில் 100 தான்.சில இடங்களில் மேலே இருந்து வந்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கி,அதுலியும் ஊழல் பண்ணிட்டாங்க..அதனால பணம் கொடுத்த பார்ட்டிகள் மேல மக்கள் கடுப்பாகி மாத்தி குத்தி இருக்காங்க..ஆக,சொந்த காசுலியே சூனியம் வெச்சிகிட்டாங்க..என்று சொல்கிறார் விருது நகர்காரர் ஒருவர்.(அதானே இவனுக இவ்வளவு மூட்டை மூட்டையா கொள்ளையடிச்சிட்டு நமக்கு 100 ரூபாய் கொடுக்குறானுக..பிச்சைக்காசு 100 ரூபாயை எத்தனை தடவை அசால்ட்ட டாஸ்மாக் ல தூக்கி வீசியிருக்கோம்..ஒரு நாள் டாஸ்மாக் செலவுகு ஆகுமாடா.. உங்க காசு...அப்பவும் 200 கொடுத்துட்டு ஜெயிக்கணும்னு அல்ப ஆசை....இருங்கடே அந்தம்மா வந்து கதற கதற ...ஒவ்வொருத்தனையா...ஆப்படிக்க போகுது...). கிராமப்புறங்களை..பொறுத்தவரை சாதனை திட்டங்களால் தி.மு.க அணிக்கு வாக்குகள் விழுந்து இருப்பதை ஊகிக்க முடிகிறது.ஆனால் அ.தி.மு.கவின் இந்த இழப்பை தே.மு.தி.க வின் செல்வாக்கு சரிகட்டுவதால் திட்டங்களும் தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என திட்டமாக சொல்ல முடியவில்லை... மதுரை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறும்போது.பெண்களில் அதிகம் பேர் இந்தமுறை ஓட்டுப்போடுவதை பார்க்க முடிகிறது..அவர்கள்,கரண்ட் கட்டையும்,விலைவாசி உய்ர்வையும் சரி பண்ண முடியாதவங்க..மறுபடி வந்து என்ன சாதிக்க போறாங்களாம்..?என பேசிக்கொள்வதும் பார்க்க முடிந்தது என்றார்... சென்னையில் பெரும்பணக்காரர்களும் ,பெரிய பதவிகளில் இருப்பவர்களும்,படித்தவர்களும் இந்த முறை அதிக அளவில் ஓட்டுபோடுவதை பார்க்க முடிந்தது...இவர்கள்,2000 ரூபாயில் டிவியும்...ஒரு ரூபாய்க்கு அரிசியும் கொடுத்துட்டு இவங்க அடிச்ச கொள்ளை வியாபாரத்தை பார்த்தீங்களா என ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பேசுகிறார்கள்...
 16. தி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..? திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை பயன்படுத்தி இடைத்தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலைலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்..என்று தி.மு.க ஆசை ஆசையாக இருந்தது..ஆனால் தேர்தல் கமிசன் இப்படி டங்குவாரை அத்துவிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை...சகாயம் கலெக்டர் மதுரையில் அஞ்சா நெஞ்சரை துரத்தி துரத்தி வளைத்து வளைத்து..நெருக்கடி கொடுத்து உச்சா போக வைத்தார்....நிம்மதியா ஒண்ணுக்கு கூட போக முடியலை...கேமிராவோட வந்துடுறானுக..என்னும் கலங்கடிக்கும் கட்சிகாரர்களே கலங்கி போனார்கள்....ஆனாலும் கடைசி நேரத்தில் தி.மு.க போட்ட வெறியாட்டம் இருக்கிறதே அது உச்சக்கட்டம்.... ஆமாம்..வடிவேலு ஒரு பக்கம் அழுது கொண்டு எல்லாம் வாக்கு சேகரிக்க,குஷ்பூ இன்னொரு பக்கம் என்னை மாதிரியே புள்ளை வேணுமா...என வாக்கு சேகரிக்க...(இது மாதிரி 4 புருஷன் கட்டுற புள்ள எவனும் கேட்க மாட்டான்)...இன்னொரு பக்கம் குப்பை வண்டி,போஸ்ட் மேன் வேசம்,கல்லூரி மாணவர்கள் வடிவில்,விடியற்காலை நாலு மணிக்கு கதவு தட்டி பண விநியோகம் என பண சுனாமி சுழன்றடித்தது.... மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட,பாசூரில் ஒரு சேரிக்கு அதாவது கவுண்டர் தெரு என்றால் அந்த தெரு முக்கியஸ்தருக்கு அந்த வீதி மக்கள் பிரித்து கொள்ள மொத்தமாக 50,000 கொடுத்தார்களாம்..இது போல ஒவ்வொரு தெருவுக்கும் 50,000.இது போக கட்டப்பட்டு கொண்டிருக்கும் குல தெய்வம் கோவில் வகையறா மக்களை சந்தித்து நன்கொடையாக 50,000..என அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள்..இதனால் அந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் கை சின்னத்துக்கே வாக்களித்து உள்ளனர்...இதை நான் அந்த கிராமத்தில் பலரிடமும் விசாரித்து தெரிந்துகொண்டேன்..என் சித்தப்பாவிடமும் கேட்டேன்..அவரும் ஆமாம்..எல்லாம் உள்ளூர் காரங்க...நன்கொடை அள்ளிகொடுத்து குரூப் குரூப்பா வளைக்கிறாங்க..சாமி கோவிலுக்கு கொடுத்துட்டானுக..அதனால நன்றி செலுத்த வேண்டாமா என்றார். அடேங்கப்பா..எப்படி திட்டம் போட்ருக்காங்க...ஆனாலும் அ.தி.மு.க காரங்களும் அதை தடுக்க முடியலை..காரணம்..ஒரு ஜாதி தலைவருக்கு பெரிய தொகையை மொத்தமா கொடுத்து நீங்களே பிரிச்சுக்குங்க..என்பதும்..குலதெய்வ பங்காளி குடும்பத்தினரை சந்தித்து பெரிய தொகையை நன்கொடையாக கொடுப்பதும் அவர்கள் தடுக்க முடியாத ஒன்று... மொடக்குறிச்சி தொகுதி தமிழ்கத்திலேயே பெரிய சட்டமன்ற தொகுதி....ஒரு முறை தங்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரி 1000 சுயேச்சை வேட்பாளர்கள் சட்டமன்ற தேர்தலில் நின்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த தொகுதி..தேர்தல் கமிஷன் அந்த அதிரடியை சமாளிக்க முடியாமல் விக்கித்து போனது.. மொடக்குறிச்சி தொகுதி..விவசாயம் அதிகம்..கொங்குவேலாளர்கள் அதிகம்..அதி.மு.க வெர்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதி.....இங்கே எந்த கட்சி ஜெயிக்குதோ அதுதான் கோட்டையில் கொடியேற்றும் என்று சொல்வார்கள் இந்த பகுதி மக்கள் பெருமையாக. பார்க்கலாம்...பண விநியோகம் தொகுதி முழுவதும் நடைபெறவில்லை என்றுதான் சொல்கிறார்கள்...தேர்தல் கமிஷன் இன்னும் அசால்டா இருந்தா இன்னும் எத்தனை கோடி வெளியே வந்திருக்குமோ....ஒழுங்கா மக்கள் நலதிட்டங்கள் செஞ்சிருந்தா ஏன் இப்படி திருடன் மாதிரி பன விநியோகம் செய்யணும்..மக்களுக்கே இவ்வளவு கொடுத்தா இவனுக எவ்வளவு திருடியிருப்பானுக...? திருமங்கலம் பாணி என்ரால் அரசு இயந்திரத்தை முழுவதுமாக தொகுதிக்குள் முகாமிட செய்து,கறி விருந்து குவார்ட்டர் கொடுத்து <ஓட்டுக்கு 5000 கொடுத்து,வெற்றி பெறுவது..இந்த ஃபார்முலா முழுவதும் இல்லாமல் கால்வாசிதான் இந்த தேர்தலில் செயல்படுத்த முடிந்தது..அரசு இயந்திரம் முழுவதும் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் இருந்தது...சாதாரண கான்ஸ்டபிள் கூட தி.மு.க மந்திரிகளை மதிக்க வில்லை..கறி விருந்து அல்ல டீ கூட வாங்கி தர முடியவில்லை..பண விநியோகத்தை தே.மு.தி.க..,அ.தி.மு.க இரண்டு கட்சியினரும் இணைந்து நின்ரதால் பெருமளவு தடுக்க முடிந்தது...பணம் வாங்கினாலும் தி.மு.க வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்ர மனோபாவத்தில் பலரும் இந்த முறை இருந்தனர்.... ஆக,திருமங்கலம், ஃபார்முலா இந்த தேர்தலில் தோல்வி. http://sathish777.blogspot.com/2011/04/blog-post_14.html
 17. வேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன் Defeat congress என்ற வலைபூவை நடத்திவரும் திரு. சிவக்குமார் அவர்கள் வேலூரில் தனது பரப்புரை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். நேற்று வேலைகளை முடித்த பிறகு மாலையில் வேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சதீஷ் என்பவருக்குத் தொலைபேசினேன் 'வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கிறோம். மண்டி தெரு என்ற இடத்தில்' என்றார். பழைய பேருந்து நிலையம் நிறுத்தத்தில் இறங்கி வெளியில் வந்து கடைத்தெருவிற்குள் நடந்தேன். பிரதான வீதியிலேயே சத்தம் கேட்டது. ஒரு டாடா ஏஸ் வண்டியில் ஒலி அமைப்பு வைத்து, பக்கவாட்டில் தட்டிகளைக் கட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். சதீஷ் பிரதான பேச்சாளர். துண்டறிக்கை வினியோகிக்க நான்கைந்து பேர். துண்டறிக்கை வினியோகித்துக் கொண்டிருந்த கண்ணனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் கையிலும் துண்டறிக்கை நகல்களைக் கொடுத்து வினியோகிக்கச் சொன்னார். சதீஷ் ஓய்வெடுக்கும் போது கண்ணன் ஒலிபெருக்கியைக் கையில் எடுக்கிறார். இடை இடையே 'கோஷம்' என்ற பெயரில் ஒருவர் சொல்ல, நான்கைந்து பேர் சொன்னதைத் திருப்பிச் சொல்வதைச் செய்தார்கள். 'காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்' 'காங்கிரசைத் தோற்கடிப்போம்' 'ஞானசேகரனைத் தோற்கடிப்போம்' 'நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள்' 'நாங்கள் யாருக்கும் ஓட்டு கேட்டு உங்களிடம் வரவில்லை. எங்களுக்கு வாக்களித்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று பொய் வாக்குறுதி அளிக்க வரவில்லை. காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்கிறோம்' 'ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொலை செய்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்' 'கேட்டாரா, கேட்டாரா ஞானசேகரன் கேட்டாரா - பாலாற்றுப் பிரச்சனையைக் கேட்டாரா - குடிநீர் பிரச்சனையைக் கேட்டாரா - அவர் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம் - தமிழர்களின் உயிரை மட்டும் 'ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்.' 'தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் காங்கிரசுக் கட்சி, காங்கிரசு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்' 'நம்முடைய விரலால் நம் கண்ணையே குத்துவது போல, நமது வரிப்பணத்தைக் கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும் அளித்துத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்' கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் 'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, 15வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. உங்களது வாக்குகளைக் கேட்க எல்லாக் கட்சியினரும் வருவார்கள். நாங்கள் கேட்பதெல்லாம், காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்பதுதான். 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்று குவித்தார்கள். நாம் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம். ஊடகங்களாலும், காவல்துறையாலும், உளவுத் துறையாலும் நம்மை செயலிழக்க வைத்திருந்தார்கள். இப்போது நம் கையில் ஒரு ஆயுதம் கிடைத்திருக்கிறது. வாக்குச் சீட்டு என்ற ஆயுதம். அதைப் பயன்படுத்தி காங்கிரசைத் தமிழ்நாட்டில் வேரறுப்போம்' 'ஈழத்து மக்களுக்காக நாம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்திப் போராட வேண்டாம். வரலாறு நம் கையில் ஒரு வலுவான ஆயுதத்தைத் தந்திருக்கிறது. வாக்குச் சீட்டு. அதைப் பயன்படுத்தி காங்கிரசை விரட்டியடிப்போம்' '20 ஆண்டுகளாக நான்கு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம். ஞானசேகரன் என்ன செய்தால் பாலாற்றுப் பிரச்சனையைத் தீர்த்தாரா? பாலாற்றில் தண்ணீர் வரத்தே இல்லை. அதைப்பற்றி காங்கிரசு ஆளும் ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் வரச் செய்தாரா? 'மணற்கொள்ளையை எதிர்த்தாரா? இல்லை இல்லை! அதற்குத் துணை போனார்?' 'அரசியலுக்கு வரும் போது சாதாரண நடுத்தரக் குடும்பத்தனராக வந்த ஞானசேகரன் இருபது ஆண்டுகளில் இரண்டாயிரம் கோடிசொத்து சேர்த்திருக்கிறாரே! இதெல்லாம் எங்கிருந்து வந்தது? நமது வரிப்பணம்தான்' 'நாங்கள் யாருக்கும் வோட்டு கேட்டு வரவில்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். காங்கிரசுக் கட்சிக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். ஞானசேகரனுக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக் கூடிய யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்' இப்படி முழக்கங்களுடனும், கோஷங்களுடனும் வண்டி மக்கள் நடமாட்டம் நிறைந்த தெருக்கள் வழியே நகர்ந்தது. அகலமான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வண்டியை நிறுத்தக் கூடிய இடங்களில் 10 நிமிடங்கள் நின்று கோஷம் எழுப்பினார்கள். வண்டியின் இரு பக்கங்களிலும் ஈழப்படுகொலையின் நிழல்படங்களை ஃபிளெக்சு தட்டிகளாகக் கட்டியிருந்தார்கள். துண்டறிக்கையில், ============= தமிழக வாக்காள பெருமக்களே! மக்கள் எதிரி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? >> 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை. இந்தியா - இலங்கை கூட்டு சதி. கொலைவெறி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? >> 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில். அடிப்படை மனிதாபிமான உதவிகளை கூடச் செய்யத் தடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு? >> 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை. சிங்கள படைக்கு ஆயுதம் கொடுத்து காட்டிக் கொடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு? >> தமிழர்களின் பாரம்பரிய நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தமிழர்கள் அனுமதி இல்லாமல் தாரை வார்த்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? >> 70,000க்கும் மேற்பட்ட காஷ்மீர் மக்களை கொன்று குவித்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? >> பாபர் மசூதியை இடித்த சங்கப் பரிவாரக் கும்பலின் கள்ளக் கூட்டாளி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? >> காங்கிரசுக் கொள்கை காந்தியம்(?), காந்தியின் கொள்கை மதுவிலக்கு. மதுவில் தள்ளாடுது வேலூர். தமிழர்களே! என்ன செய்வதாய் உத்தேசம்? >> ஆரம்பப் பள்ளியில் ஏழைக் குழந்தைகள், ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. மறுபக்கம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடு ஸ்பெக்ட்ரம் ஊழல். கூட்டுக்களவாணி காங்கிரசு கும்பலுக்கா உங்கள் வாக்கு? >> 60 ஆயிரம் கோடி காமன்வெல்த் ஊழல். ஊழலின் ஊற்று காங்கிரசுக்கா உங்கள் வாக்கு? தொடர்புக்கு : காங்கிரசு எதிர்ப்பு முன்னணி - தமிழ்நாடு 9444204740/9042274271 குறிப்பு: இந்த முன்னணியில் இணைந்து வேலை செய்ய ஆர்வமுள்ள தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். ஊர் கூடி தேர் இழுப்போம் தமிழர்களே. ============= உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனம் எதையும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். வேலூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் வண்டி ஓட்டுனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். உள்ளூர் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு பேர். அகலமான கடை வீதியின் (மண்டி வீதி) இரண்டு பக்கங்களிலும் இருக்கும் கடைகளில் துண்டறிக்கையைக் கொடுக்க ஆரம்பித்தேன். தெருவில் ஒலிபெருக்கியில் பேசுவதைக் கேட்டதும், எட்டிப் பார்க்கிறார்கள். என்னவென்று ஒரு கேள்வியுடன் நிற்கிறார்கள். அப்போது துண்டறிக்கையைக் கொடுத்ததும் ஆர்வமாக வாங்கிக் கொள்கிறார்கள். 'நீங்க இந்த மாதிரி பிரச்சாரம் செய்தா தொந்தரவு எதுவும் வராதா? எதிர்க் கட்சி ஆளுங்க உங்களை மிரட்ட மாட்டாங்களா' 'நம்ம கருத்துக்களைச் சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அதைத்தானே செய்கிறோம்' 'நீங்க எந்தக் கூட்டணி? எந்தக் கட்சி?' 'எந்தக் கட்சியும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகளால் மனம் நொந்து கோபத்தில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த களம் இறங்கியிருக்கிறார்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ள பிரச்சாரம் செய்கிறீர்கள்' 'மொதல்ல கை கொடுங்க! நல்ல உருப்படியான பணியைச் செய்கிறீர்கள்.' 'நீங்களும் சேர்ந்து கொள்ளலாம். உங்க நண்பர்கள் உறவினர்களிடம் செய்தியைக் கொண்டு செல்லுங்கள்' 'ஏற்கனவே செய்துகிட்டுத்தான் இருக்கிறோம்' 'ஏய், இது நம்மக் கட்சி, ரெட்ட இல' 'நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தச் சின்னத்துக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், காங்கிரசுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்கத்தான் நாங்கள் வருகிறோம்' நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளை வினியோகித்தோம். சாலையின் இரண்டு புறம் இருக்கும் கடைகள், நடந்து செல்பவர்கள், கடந்து செல்லும் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் என்று கொடுத்தோம். எந்த இடத்திலுமே கொடுக்கப்பட்ட துண்டறிக்கை தரையில் வீசப்பட்டதைப் பார்க்கவில்லை. வாங்கியவர்கள் எல்லாம் கவனமாகப் படித்துப் பார்த்தார்கள். இந்தப் பகுதியில், சிஎம்சியில் சிகிச்சைக்காக வந்திருக்கும் வெளிமாநில மக்களும் காணப்படுவார்கள். 'தமிழ் நஹீ மாலூம். யே கோன்சா பார்ட்டி கா?' 'கிசீ பார்ட்டி கா நஹீ. காங்கிரஸ் பார்ட்டி கோ வோட் ந தேனே கா' மிகவும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மணி நேரத்தில் கடந்து செல்வார்கள். வண்டி மெதுவாக நகர்ந்து பக்கவாட்டுத் தெருக்கள் பக்கம் வந்தது. சாட் வண்டி ஒன்றின் முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுத்தேன். 'காங்கிரசு தமிழ்நாட்டில எதுக்கு? திமுக 25 வருஷம் முன்பாகவே காங்கிரசை விரட்டி அடிக்க வைச்சாங்க. இந்தக் கருணாநிதிதான் கூட்டணி வச்சு உயிர் கொடுத்திருக்கிறாரு' 'ஆமா 1967ல் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் சங்கு ஊதியாச்சு. ஆனால் அதற்குப் பிறகு, கருணாநிதியும் எம்ஜிஆரும் மாறி மாறி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்' பக்கவாட்டுத் தெருக்கள் குறுகலானவை. வண்டி போகும் பின்னால் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன. அதனால் நிற்கவே செய்யாமல், நகர்ந்து கொண்டே போனோம். எதிரில் வருபவர்கள், என்ன சத்தம் என்று பார்த்துக் கொண்டே நிற்பவர்கள் கையில் 'ஐயா வணக்கம்', 'சார்' என்று சொல்லி துண்டறிக்கையை கொடுத்தோம். கொஞ்சம் வட இந்திய முகமாக தெரிந்தால் கொடுக்கவில்லை. நான்கைந்து தெருக்களைத் தாண்டி சிஎம்சி பிரதான நுழைவாயில் இருக்கும் சாலைக்கு வந்தது. இங்கு பேருந்துகளும் வாகனங்களும் நெருக்கமாகப் போகும் இடம். சாலையின் எதிர் பக்கத்துக்குப் போய் துண்டறிக்கை கொடுக்க வாய்ப்பில்லை. மெதுவாக நகர்ந்து சாலை சந்திப்பைக் கடந்து கோட்டையின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தினோம். 'நீங்க சத்தம் போடுங்கடா பாடுங்களா! ஒன்னும் கிழிக்க முடியாது' என்று ஒருத்தன் திட்டுறான். என்று சொல்லியபடி ஒருவர் தாமதமாக வந்தார். 'திட்டுறவங்க திட்டட்டும். நாம நம்ம கோஷத்தைப் போடுவோம்' அங்கிருந்து வேலூர் பைபாஸ் வந்தோம். துண்டறிக்கை கையிருப்பு தீர்ந்து விட்டிருந்தது. 40-50 மட்டுமே மிஞ்சியிருந்தது. 'பர்வீன் டிராவல்ஸ் எங்க இருக்கு? அதில் அனுப்பியிருக்காங்களாம். போய் வாங்கிக் கொள்ளலாம்' என்று விசாரித்தார்கள். இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் நண்பர் ஒருவரின் வீட்டில் கன்னிகாபுரத்தில் தங்கியிருக்கிறார்கள். 'காலையில் வண்டியை சீஸ் பண்ணி ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிட்டான். அனுமதிச் சீட்டின் ஒரிஜினல் வண்டியில் இருக்கணுமாம். நம்மிடம் ஜெராக்ஸ் காப்பிதான் இருந்தது.' 'வேறு தொகுதிகளிலும் இது போன்று பிரச்சாரம் செய்ய ஏதாவது சுயேச்சை வேட்பாளரின் அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்' மிகவும் தெளிவாக, தேவையில்லாத விஷயங்களை இழுக்காமல் தமிழர் விரோதம் என்ற ஒரே முழக்கத்தை வைத்து பிரச்சாரத்தை வடிவமைத்திருந்தார்கள். 2ம் தேதி ஆரம்பித்தார்களாம். 11ம் தேதி வரை பிரச்சாரம் தொடரும். இன்னும் 6 நாட்கள். 'தமிழ் அமைப்புகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்' 'என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்' புறநகர்ச்சாலையில் நகர்ந்தோம். துண்டறிக்கைகளை மக்கள் கூடும் இடங்களில் வினியோகிக்கலாம் என்று சேர்த்து வைத்துக் கொண்டோம். புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் போது சிஎம்சி நோக்கிப் போகும் சாலையின் முனையில் நிறுத்தினார்கள். அது ஒரு பேருந்து நிறுத்தம். இங்கு வினியோகிக்கலாம். பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், கடந்து போகிறவர்கள், வந்து நிற்கும் பேருந்தில் இருப்பவர்கள் என்று வினியோகித்தோம். நிற்கும் பேருந்தின் முன் பகுதி சன்னல்களில் ஒருத்தரும், பின்பகுதி சன்னல் வழியாக இன்னொருவரும் துண்டறிக்கைகளைக் கொடுத்தோம். வண்டியின் ஒலிபெருக்கி மூலமாக பேச்சு கேட்கும் போது துண்டறிக்கை கொடுப்பது எளிதாக இருந்தது. எட்டரை மணி வாக்கில் முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள். http://2011tnelection.blogspot.com/2011/04/defeatcongress.html
 18. ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 ! ஜூனியர் விகடன் தேர்தல் முடிவுகள்! அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது. இந்த இதழ கருத்து கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணி 141: இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும், இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 92: திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும், இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், (141+92=233) இன்னும் ஒரு தொகுதி குறித்து அதில் விவரம் இல்லை. -தட்ஸ் தமிழ் !
 19. தேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி... இந்தத் தேர்தல் நிச்சயமாக நமக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. காலம் காலமாக காது கிழிய வைக்கும் பிரசாரங்களும், சுவர்களை சுண்ணாம்பால் நாறடிக்கும் விளம்பரங்களும் பார்த்த நமக்கு இந்த தேர்தல் நாம் ஒரு நேர்மையான தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. இணையத்தில், களத்தில் தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் எதிர்ப்பை மிகத்தீவிரமாக கையாண்டபோது காங்கிரசாரே அதனை எதிர்க்காத நிலையில் சில தி.மு.க உடன்பிறப்புகள் மட்டமாக நடந்துகொண்டனர். தலைவர்தான் சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார் என்றால் தொண்டர்களுமா? என வருத்தமாக இருக்கிறது. அண்ணாவால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் உணர்ச்சி மிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியின் சுயநலத்தால் எம்.ஜி.ஆர், வைகோ பிரிவு ௦௦முதல் தா.கி கொலை வரை போய் இப்போது ஒட்டுமொத்த கழகமும் ஒரு குடும்பத்தின் கரங்களில். இதனை கண் மூடித்தனமாக ஆதரிப்பவர்களின் அறிவாற்றலை எண்ணி வருத்தப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு குறைவானவர் இல்லை. கடந்த ஐந்தாண்டில் மக்கள் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர். மேலும் மொத்த கழகமும் சசிகலாவின் கையில். அங்கு மேல்மட்ட தலைவர்கள் வரைக்குமே மரியாதை கிடையாது. இப்படிப்பட்டவர்தான் தி.மு.க வுக்கு மாற்றாக நம் கண்முன் இருக்கிறாரர். இவர் வந்து என்ன செய்துவிடப்போகிறார் என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. ஆனால் ஆட்சியை மாற்றி கொடுத்தால்தான் ஆள்வோருக்கு கேரளா மாதிரி ஓரளவுக்காவது பயம் இருக்கும். இந்தமுறை ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. அதனை அவர் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. விஜயகாந்த் என்கிற ஒரு ஹீரோ இந்த தேர்தலில் காமெடியனாகிப்போனார். காமெடியன் வடிவேலு ஹீரோவாகிப்போனார். உண்மையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கினை காட்டியது. கொஞ்சம் அருவருப்பாக பேசினாலும் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வடிவேலு சலிக்காமல் பிரச்சாரம் செய்தது அவர் இந்த அளவுக்கு வளர எடுத்துக்கொண்ட உழைப்பை பார்க்க முடிந்தது. ஒரு எளிய மனிதராக சினிமாவுக்குள் நுழைந்து தமிழ்நாட்டு அரசியல்வரை முன்னேறியிருக்கும் வடிவேலுக்கு எனது பாராட்டும்,வாழ்த்தும்.. விஜயகாந்த்துக்கு இனி அரசியல் எதிர்காலம் இருக்காது. தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணம் பெரும்பான்மையானவை பொது மக்களின் பணம். ஆனால் எல்லா ஊர்களிலும் தி.மு.க கூட்டணியினர் நூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரைக்கும் தங்கள் கட்சிக்காரர்களின் ஒட்டு மாறிவிடக்கூடாது என கொடுத்து உள்ளார்கள். திருவாரூரில்(கலைஞர் தொகுதி) ஐநூறு ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தீவிர கெடுபிடி கருணாநிதியை கோபப்பட வைத்திருக்கிறது. அவருக்குதான் நேர்மையாய் இருப்பது பிடிக்காதே. முக்கியமாக ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் பிடியில் இருப்பதால் வெறுத்துப்போகும் அளவுக்கு தேர்தல் பிரசாரங்களை செய்தாலும். நாம் அனைவருக்கும் நன்றாக பொழுது போனது. அனைத்து அரசியல்வாதிகளுமே எவ்வளவு கேவலமான உத்திகளையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள் . எனப்பார்க்கும்போது மிக வேதனையாக இருந்தாலும் இனி இவர்களின் பருப்பு வேகாது என்பது மக்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. மாற்றி மாற்றி இரண்டு கழகங்களும் இலவசங்களை வாரி வழங்குவதாக அறிவித்து இருப்பதும், கடைசி மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை விட்டு காங்கிரஸ் தன் இருப்பை காட்டிக்கொண்டதும். சோனியா ஈழ மக்களை காப்பாற்றுவேன் எனப்பேசியதும். தி.மு.க காங்கிரசுக்கு 63 கொடுத்துவிட்டு, கோ.மு.ச வுக்கு ஏழு கொடுத்துவிட்டு தன் ஐந்தாண்டு சாதனைகளை பெருமையாக சொல்லி ஒட்டுகேட்பதும் மிகப்பெரிய நகைச்சுவை. இந்த தேர்தலில் நடந்த காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்கு சீமானுக்காக கூடிய கூட்டம். தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை காட்டுகிறது. வைகோ, விஜயகாந்த் தவற விட்ட மாற்று சக்தியாக அவர் இருப்பார். இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டில் சீமான் தன் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெல்லட்டும்... இறுதியாக எனது கணிப்பு: அ.தி.மு.க கூட்டணி:136 தி.மு.க கூட்டணி: 87 அ.தி.மு.க - 105 தி.மு.க - 60 தே.மு.தி.க - 17 காங்கிரஸ் - 12 இந்திய கம்யூனிஸ்ட்- 7 பா.ம.க - 12 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 வி.சி.க - 2 ம.ம.க - 2 கொ.மு.ச - 1 இழுபறி : 11 இந்த இழுபறி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தனி மனித செல்வாக்குள்ள காங்கிரஸ் வேட்பாளர்களால் அவர்களுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பை பொறுத்தது. எதுவாக இருந்தாலும் மே 13 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு தெரிந்துவிடும். தொடர்ந்து தேர்தல் பற்றிய பதிவுகளை போட்டதால் ஆயாசமாக இருக்கிறது. இனி வழக்கமான பதிவுகளை எழுதுவேன். http://krpsenthil.blogspot.com/2011/04/2011.html
 20. 63 தொகுதிகளில் சீறும் சீமான்! – ஜூனியர் விகடன் காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி, ‘காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள். ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, ‘நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது! ”இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். ‘இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து… பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் ‘தொடக்கம்’… காங்கிரஸுக்கு ‘அடக்கம்’! சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்… மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி! இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்! தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே… அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்… ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?! காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை… ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை. தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்… விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை… ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது! நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், ‘கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!” - ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்
 21. 2016, 2021, 2026ல் நடக்கும் தேர்தலிலும் ஆள் தமிழர் பிரச்சனைக்கு முன்னுரிமை என்று தான் சொல்லுவார். சூடு சுறணையற்ற தமிழர்கள் இவருக்கு வாக்களிப்பார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.