Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  10942
 • Joined

 • Last visited

 • Days Won

  7

ampanai last won the day on February 15 2020

ampanai had the most liked content!

2 Followers

Profile Information

 • Interests
  https://preview.tinyurl.com/yyzuoomz

Recent Profile Visitors

8462 profile views

ampanai's Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Posting Machine Rare
 • Week One Done

Recent Badges

724

Reputation

 1. உலகெங்கும் தமிழை தனது குரல் வளத்தால் வளர்த்தவருக்கு எனது நன்றிகள். நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்புக்கள் தமிழை வளர்க்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
 2. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். இந்தத் தேர்தலின் வெற்றிக்காக தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வரும் ஜோ பிடன், தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் அவர் கவனம் செலுத்தினார். இந் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த போட்டியில் இருந்தனர். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை இதன்மூலம் கமலா ஹரிஸ் பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/87891 தாய் வழி சொந்தங்களுடன் கமலா கமலா ஹாரிஸ் பெற்றோர்
 3. சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது. குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகளில் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. ஏற்கனவே Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்
 4. கோவிட்டின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பலருக்கும் சிக்கலைகளை உருவாக்க பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலையில்... மத்திய வாங்கிகள் பணத்தை அச்சடிக்க, அதனால் தங்கம், வெள்ளி மற்றும் பிட்ககொயின் பெறுமதிகள் கூடுகின்றன. ஆனால், பல நாடுகளின் பங்கு சந்தைகள், குறிப்பாக அமெரிக்காவின், தொடர்ந்தும் அதிகரிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக வளர்ச்சியையும் இலாபத்தையும் ஈட்டி வருகின்றன. குறிப்பாக ஆப்பிள், அமேசான், மைக்ரோசொப்ட் மற்றும் அல்பபாட் எனப்படும் கூகிள் ஒரு த்ரிலயனையும் தாண்டி, அதிலும் ஆப்பிள் இரண்டு த்ரிலியன்களை நோக்கி வேக படை போடுகின்றது. ஆக, பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுவான் என கூறுவது போன்று வழிகளை தேடி முன்னேற முடியும் என்பதை மீண்டும் உலகம் காட்டி நிற்கின்றது.
 5. கோவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளாவி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி வரும் மாதங்களில் தன் கோரதாண்டவத்தை இலங்கைத்தீவிலும் வெளிப்படுத்தும். அதற்கு முன் ஒரு தேர்தலை நடாத்தி தற்போதைய கொடுங்கோல் ஆட்சி தன்னை மேலும் நிலைப்படுத்தி வலுப்படுத்திவிடும். அதன் பின்னரே பொருளாதாரப்பழு மக்கள் கைகளில் வந்து சேரும். ஏற்கனவே திட்டமிட்ட முறையில் கடந்த 11 ஆண்டுகளாக வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுவிட்ட தேசிய இனமான ஈழத்தமிழினமே அதன் தாக்கத்தை அதிகம் சுமக்க மாற்றானாக தள்ளப்படும்.. அதற்கான அவர்களின் தீர்வு என்ன? என வாக்குகளிற்காக உங்கள் கதவுகளைத் தட்டுபவர்களை ஒருதரம் கேட்டுவிடுங்களேன்! ( முகநூல் )
 6. தாகா; நேபாளத்தை தொடர்ந்து, வங்கதேசத்தையும் தன் வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி யில் சீனா இறங்கியுள்ளது. வர்த்தக துறையில், வங்க தேசத்துக்கு பல வரிச்சலுகைகளை சீனா அறிவித்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, சில சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்த சீனா, அந்த நாட்டை, சிறிது சிறிதாக தங்களுக்கு ஆதரவாக திருப்பியுள்ளது. இதையடுத்து, சீனாவின் பார்வை, மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி திரும்பி உள்ளது.வங்கதேசத்திலிருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 97 சதவீத பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி, வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும், 8,526 பொருட்களுக்கு சீனாவில் வரி விதிக்கப்படாது.இது குறித்து, சீன வரி ஆணையத்திடமிருந்து தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேலையில், சீனாவின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.ஆனால், சீன அதிபருடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த மாதம் நடத்திய பேச்சின் அடிப்படையில் இந்த வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக, வங்கதேச அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2561573
 7. ஐயா கலாம் அவர்கள் கனவு காண் என்றார், இங்கே இது அறிவியல் சம்பந்தம் இல்லாதது என்றாலும், இந்த கனவை காணும் மக்களில் நானும் ஒருவன். பல பலம் கொண்ட நாடுகள் கூட சிதறுண்டன, உதாரணம் சோவியத்யூனியன்.
 8. கோவிட்டார் காரணமாக வெளிவாய்புக்கள் மேற்குலக நாடுகளிலும் ஒரு கடினமான நிலையில் உள்ளது. ஆனாலும் அடிமட்ட வேலைக்கு ஆட்கள் தேவையாக இருக்கும். இருந்தாலும், அகதிகளை மேற்குலகம் வரவேற்கும் நிலையில் இல்லை என்றே நம்புகிறேன். நல்ல கருத்து. ஆனால், இராணுவமே எங்கும் வியாபித்து இருக்கும் நிலையில் முதலிடுவது என்பதற்கு தயக்கம் இருக்கும்.
 9. -ஹரிகரன் இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது. இந்திய சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம். இந்திய சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பகுதி. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்ஷய் சின் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் நோக்கி ஓடுகிறது 80 கி.மீ நீளமுள்ள கல்வான் நதி. அதற்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருவதால் தான் பிரச்சினை. "கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு ... கடந்த செவ்வாய்க்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில், நடந்த மோதல்களில், கேணல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்திருக்கிறது. அதுபோல, சீனாவின் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று, சீன அரசு ஊடகமான குளோபல் ரைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், சீனத் தரப்பில் 43 பேர் வரை கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய- சீனப் படைகள் நடத்திய சண்டை ஒன்றில், ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும். அண்மைக்காலமாக இந்திய - சீனா எல்லையில் நிலவி வந்த முறுகல் நிலையின் உச்சமாகவே இந்த மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது துப்பாக்கிகளைக் கொண்டு நடந்த மோதல்கள் இல்லை என்பது தான் முக்கியமான விடயம். கல்வான் பள்ளத்தாக்கில், இரண்டு தரப்பு படைகளும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. ஆயுதங்கள் இன்றி சீன காவலரணுக்கு அருகே சென்ற இந்திய இராணுவத்தின் 16 ஆவது பிகார் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த படையினரே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். கற்களாலும், முட்கம்பிகள், இரும்பு ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டைகளாலும் இந்தியப் படையினரைத் தாக்கியிருக்கின்றனர் சீனப் படையினர். இந்தியப் படையினரும் அதுபோலவே தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். கைகலப்பு சண்டையாகவே இது நடந்திருக்கிறது. "ஆணியடிக்கப்பட்ட இரும்புக் ..." இந்தச் சண்டையை இந்திய இராணுவத்தினர் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சீனப் படையினரின் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க கல்வான் ஆற்றில் குதித்திருக்கின்றனர். அப்போது லடாக் பூச்சியத்தை விட குறைவான- உறைநிலை வெப்பத்தில் இருந்தது. இதனால் காயமடைந்த இந்தியப் படையினரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா தமது பக்க இழப்புக்களை ஒப்புக் கொண்டிருப்பினும், சண்டை பற்றிய முழு விபரங்களையும் இன்னமும் வெளியிடவில்லை. சீனா சண்டை பற்றிய முழு விபரங்களை மாத்திரமன்றி, அதில் ஏற்பட்ட இழப்புகளையும் கூட வெளிப்படுத்தவில்லை. இது இரண்டு நாடுகளும் பல விடயங்களை மறைப்பதற்கு முனைகின்றன, என்பதை எடுத்துக் காட்டுகிறது. சில விடயங்கள் வெளியே வருவதை இரண்டு நாடுகளும் விரும்பவில்லை. அந்த விடயத்தில் இரண்டு நாடுகளும் ஒருமித்த கருத்தில் இருக்கின்றன. பழங்காலப் போர்களில் வாள்கள், ஈட்டிகள், வில், அம்பு, கதாயுதம் போன்றவற்றைக் கொண்டு போரிடுகின்ற முறை இருந்தது. அத்துடன், மல்யுத்தம் செய்யும் வழக்கமும் இருந்தது. தற்கால போர்ப் பயிற்சிகளில் மல்யுத்தம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளும் கூட, கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆயுதங்கள் தீர்ந்து போனால், ஆயுதங்களில்லாமல் வேவு பார்க்கச் செல்வது போன்ற சந்தர்ப்பங்களில், எதிரிகளுடன் சண்டையிடுவதற்கு இத்தகைய தற்காப்பு கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அவ்வாறான ஒரு சண்டையைத் தான் இந்திய- சீன நாடுகளின் இராணுவங்கள் நடத்தியிருக்கின்றன. இந்த மோதல்களை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில், விரிசல்கள் ஏற்படும் ஆபத்தும் தோன்றியிருக்கிறது. இதுவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போராக வெடிக்கப் போகிறது என்ற அச்சமூட்டும் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும், மிகவும் சக்திவாய்ந்த போர்த்தளபாடங்களைக் கொண்டுள்ள நாடுகள். நவீன குறுந்தூர துப்பாக்கிகள் தொடக்கம், நெருந்தூர ஏவுகணைகள் வரை பயன்படுத்தி சண்டையிடக் கூடிய வல்லமை பெற்ற நாடுகளாக இருக்கின்றன. தேவைப்பட்டால் அணுவாயுதங்களைக் கூடப் பயன்படுத்தக் கூடிய நிலையில் தான், இந்த நாடுகள் இருக்கின்றன. ஆனாலும், இரண்டு நாட்டுப் படைகளும் எந்த நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், சண்டையிட்டிருக்கின்றன. ஆதி மனிதன் போரிட்டதைப் போலத் தான், இரண்டு நாடுகளின் படைகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. இரு தரப்புகளுக்கும் இடையில் பதற்ற நிலை மோசமாக இருந்தாலும், துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை மீறவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். திட்டமிட்ட தாக்குதலாகவே இது நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தான், முள்ளுக்கம்பிகள் சுற்றப்பட்ட பொல்லுகளை சீனப் படையினர் பயன்படுத்தியிருக்கிறார்கள். திட்டமிட்ட ஒரு தாக்குதலில் கூட, துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவர்கள் எத்தனிக்கவில்லை. அதேவேளை இந்த மோசமான தாக்குதலுக்குப் பின்னர், இந்தியப் படைகளும் கூட, துப்பாக்கிகளால் சுட்டுக் கொள்ள முற்படவில்லை. இது தான், இங்கு முக்கியமான விடயம். இந்தியாவும், சீனாவும் அடிக்கடி முட்டிக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும், இரண்டு நாடுகளுமே ஒன்றுடன் ஒன்று போரிடத் தயாராக இல்லை. "இந்தியா - சீனா - பலம் யாருக்கு? - சீனாவுடன் போரிட்டால், இந்தியா கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்கும். ஏனென்றால் சீனாவிடம் உள்ள படை வலிமை அதிகம். சீனா அதி நவீன ஆயுத தளபாடங்களையும் அதிகளவில் கொண்டிருக்கிறது, இதனால், சீனாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் இறங்குவதை இந்தியா எப்போதும் விரும்புவதில்லை. 1962 போரில் கூட இந்தியா படுதோல்வியைத் தான் சந்தித்தது. மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக இல்லை. அதேவேளை, சீனாவுக்கும் அதே பிரச்சினை தான் இருக்கிறது. இந்தியாவுடன் போரில் இறங்கினால், சீனா தனது கனவுகள் பலவற்றைத் தொலைக்க வேண்டியிருக்கும். இப்போதைய நிலையில், உலகின் முதல் நிலை வல்லரசாக வேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு. பொருளாதார ரீதியாகவும், படைபல ரீதியாகவும் அந்த நிலையை எட்ட வேண்டும் என்று விரும்புகிறது சீனா. உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்காக, சீனா பல்வேறு உத்திகளைக் கொண்டு தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறது. இப்போது கொரோனா வைரசினால் பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் சீனா பெரும் பின்னடைவைச சந்தித்திருக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் சீனா இறங்கினால் அது பெரும் அழிவுகளை ஏற்படுத்தும். இந்தியாவிடமும் நவீன ஆயுதங்கள், இருக்கின்றன. எனவே போர் என்பது மிக தீவிரமானதாகவே இருக்கும். இராணுவ ரீதியாக இந்தியா வெற்றி பெற முடியாது போனாலும், சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர பலத்தை இந்தியாவினால் சிதைக்க முடியும். இது உலக வல்லாதிக்க சக்தியாக மாறுகின்ற சீனாவின் கனவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே இந்திய சீன எல்லையில் வெடித்திருக்கின்ற சண்டைகளை பெரும் போராக மாறும் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது. அவ்வாறான ஒரு போர் வெடித்தால் கூட அது நீண்ட நாட்களுக்குத் தொடராது, இவ்வாறான ஒரு களச் சூழலில், இந்தியாவுடனும், சீனாவுடனும் நெருங்கிய உறவை பேண முனையும் இலங்கைக்கு இந்த மோதல்கள் சோதனையாகவே இருக்கும். ஏனென்றால், எந்தப் பக்கமும் நியாயம் கூற முடியாது. யாருக்காகவும் வாய் திறக்கவும் முடியாது. அவ்வாறு திறந்தால் மறுதரப்பின் உதவிகள் ஒத்துழைப்புகளை இழக்க நேரிடும். எனவே இலங்கை இப்போதைய நிலையில் யாருக்காகவும் பரிந்து பேசாமல் இருக்கவே முனையும். அதேவேளை, இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் என்றும், அது இலங்கைத் தீவையும் பிளவுபடுத்தும் என்றும் பகல் கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதைய நிலையில், இந்தியாவோ சீனாவோ ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள தயாரில்லை. அந்த நிலை நீடிக்கும் வரை, இவ்வாறான ஒரு நிலை இலங்கைக்கு ஏற்படாது. ஆனால், பொருளாதார வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுவது, இலங்கைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். https://www.virakesari.lk/article/84341
 10. கோவிட்19ன் தாக்கம் உலக நிறுவனங்களை முடக்கி விட்டுள்ளது. சரியும் வேலைவாய்ப்புக்கள்,குறையும் நிறுவன இலாபங்கள், தடுமாறும் வங்கிகள் என அடுக்கி செல்லலாம். ஆனால், நாம் எந்த துறைகள் இந்த காலத்தில் வளர்ந்து வருகின்றன எனவும் பார்க்கவேண்டும். குறிப்பாக இரண்டு துறைகள் : தொழில்நுட்பம் அடுத்து மருத்துவம். தொழில்நுட்ப வளர்ச்சியானது அடுத்த பத்து வருட வளர்ச்சியை வரும் இரண்டு வருடங்களில் காணலாம் என்கிறார்கள். அதேபோன்று, மருத்துவ துறையும் அசாதாரண வளர்ச்சியை காணும் என்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்ய மற்றும் கற்க, இவை சம்பத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வைத்தியரை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அத்துடன், "கிளவுட்" என்ற எங்கோ ஒரு இடத்தில் இருந்து சேவைகளை வழங்கும் தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியை கண்டுள்ளன. மருத்துவ துறைக்கு அதிகளவு முதலீடுகள் செய்யப்படுகின்றன. மருந்துகளை கண்டுபிடித்து அவற்றுக்கான அங்கீகாரம் பெறுவது என்பது அதிக செலவீனம் கூடிய முதலீடாக இருந்தாலும், அதன் முக்கியத்தை கோவிட்டார் உணர்த்தியுள்ளார்.
 11. தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றால் அதை ஆதாரத்துடன் ஐ.நா. சபையில் முறையிடுவதே காந்தி தேசத்தின் சரியான நகர்வாக இருண்டிருக்கவேண்டும். அதை விட்டு அமைதி காக்கும் படைகள் சீனாவுடன் மோதி இருக்க கூடாது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.