ampanai

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,252
 • Joined

 • Last visited

 • Days Won

  2

ampanai last won the day on August 18

ampanai had the most liked content!

Community Reputation

183 Excellent

About ampanai

 • Rank
  Advanced Member

Profile Information

 • Interests
  https://preview.tinyurl.com/yyzuoomz

Recent Profile Visitors

1,457 profile views
 1. ஆர்.ஜெயஸ்ரீராம் 1990 ஆண்டு காலப் பகுதியில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் வைத்து, வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு கோரல் நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோயில் முன்றலில், இன்று (23) நடைபெற்றது. பிரதேசத்தின் சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமதப் பெரியார்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர். 1990 ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரமான யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் தஞ்சமடைந்தனர். அவ்வேளையில் ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், திடிர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட 99 பேரை கைதுசெய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இராணுவ முகமாகக் கருதப்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/நினைவேந்தல்/73-237264
 2. 6 தீவிரவாதிகள் ஊடுருவல்... கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற மத்திய உள்துறையின் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை நடந்து வருகிறது.இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் கோவைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய உளவுத்துறை அறிக்கையில் இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்ற தீவிரவாதியும் கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் லஸ்கர்-இ.தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற வெளியான தகவலையடுத்து கோவை முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதற்கு கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.கோவையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்படி உள்ளூர் போலீசார், அதிவிரைவுப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் நுழைவு பகுதிகளான 12 செக்போஸ்ட்கள் மற்றும் கோவை மாவட்ட நுழைவு பகுதிகளில் 27 செக்போஸ்ட்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.இதற்கிடையே கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520685
 3. ’உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை உதவி திட்டங்கள் கிடைக்கும்’ -எஸ்.நிதர்ஷன் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எம்மால் கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும், உங்கள் நீதிப் பயணத்தை நீங்கள் தொடர முடியும் என, காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். யாழ்ப்பான மாவட்டச் செயலகத்தில் காணாமல் அகக்ப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இந்த அலுவலகத்தை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு” உனவும் தெரிவித்தார். “ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப்படுத்த மட்டும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது. “எமது அலுவலகத்தால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் வலிகளை போக்க முடியாது. அதற்காக நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் நாம் செய்யவில்லை. எமது பணியகத்தின் பிரதான பணியாக காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே. இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், காணமல் போவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பது சிக்கலான விடயம் அத்துடன் நீண்ட காலம் எடுக்கலாம். “உங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை உங்களின் அன்றாட வாழ்க்கைக்கே சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். அது கூட உங்களுக்கு போதாது என்பதை நாம் உணர்கின்றோம். காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் வெறுமனே காணமல் போனோருக்கு மட்டுமல்ல அவர்களை தேடும் உறவுகளுக்கக்கவுமே. அதனால் தான் சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களாகிய நீங்கள் எம்மூடாக நீதியை வழங்க வேண்டும் என எதிர்பாக்கிண்றீர்கள். நாமும் நீதிக்காக உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராகவே இருக்கின்றோம். “சிலரால் எமது செயற்பாட்டை விளங்கிக் கொள்ள சிரமப்படலாம். இந்த அலுவலகம் வேண்டாம் என எதிர்க்கும் உறவுகள் சிலர் எம்மை இரகசியமாக சந்தித்து எம்மிடம் பெயரிடப்பட்ட ஐந்து கோவைகளை தந்தனர். அதில் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை முதலில் கூறவேண்டும். அதுவரை இந்த அலுவலகத்தைத் திறக்கக்கூடாது என்றனர். அப்போது நாம் உங்கள் கோரிக்கையை மட்டும் நாம் விசாரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட தரப்புகள் அனைவரதும் கோவைகளையும் விசாரிப்போம் என கூறினோம். “உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாயை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை பெற தற்காலிக சான்றிதழ் தேவையாக உள்ளது. இதனை பெறுவதால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். “இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும் உங்கள் நீதிப் பயணத்தினை நீங்கள் தொடர முடியும். எமது அலுவலகம் எந்த சந்தர்ப்பங்களிலும் ஏதாவது பிழை விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் துணிந்து சுட்டிக்காட்ட முடியும். நாங்கள் மட்டும் செயற்பட வேண்டும் என கருதவில்லை. பாதிக்கப்பட்ட நீங்களும் எம்முடன் இணைந்து பயணியுங்கள் அப்போது தான் நாம் விரைவாக உங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்” எனவும், அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உங்களுக்கான-நீதி-கிடைக்கும்-வரை-உதவி-திட்டங்கள்-கிடைக்கும்/175-237282
 4. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பிப் அனுப்பப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க சென்றுள்ளனர். ’காஷ்மீருக்கு வர வேண்டாம்’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்ததிலிருந்து அங்கு தொலைத்தொடர்பு சேவைகளும், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத்த்திலிருந்தும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்களை காத்து இயல்புநிலையை திரும்ப கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். மூத்த அரசியல் தலைவர்கள் இயல்புநிலை திரும்புவதை தடுக்கக் கூடாது என்றும், அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ரீநகருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தனது டிவிட்டரில் பக்க்த்தில் தெரிவித்துள்ளது. அமைதியை நிலைநாட்டுவதற்கும், உயிரிழப்புகள் நேரமால் இருப்பதற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அபாஸ் நக்வி இது அரசியல் சுற்றுலா என தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி அசாத், அங்கு இயல்புநிலை உள்ளது என்றால் ஏன் தலைவர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது? இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் ஏன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்புள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அது குறித்து பல விமர்சன்ங்களையும், கேள்விகளையும் எழுப்பி வந்தார் ராகுல் காந்தி, எனவே அங்கு நிலைமை இயல்பாகதான் உள்ளது என்றும், காஷ்மீருக்கு வருகைதருமாறும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்தார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக். நான் ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வருமாறு அழைக்கிறேன். அவரின் வருகைக்கு நானே ஏற்பாடு செய்கிறேன். அவர் இங்கு வந்து நிலைமையை பார்க்கட்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். அந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் அங்கு வருவதாக டிவிட்டரில் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-49459962
 5. இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர (நா.தனுஜா) கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல. எனவே இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது. அதுபோன்று இதுவொரு உள்நாட்டு ஆயுதப்போர் என்பதால் இதனை மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாக மாத்திரம் அணுக முடியுமே தவிர,மனித உரிமைச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும் என அவர் இதன்போது தெரவித்தார். https://www.virakesari.lk/article/63306
 6. பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது. தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்திற்கொள்வோம். இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து, அவற்றுக்கு அமைவாகவே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. https://www.virakesari.lk/article/63297
 7. ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓ.எம்.பி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1மணிவரையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வவுனியாவில் தொடர்ந்து 917ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். ஓ.எம்.பி ஒரு போலி அமைப்பு. இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னோடி நிமல்கா பெர்னாண்டோவும் சுமந்திரனும் ஆவார். சுமந்திரன் முன்னணி புலம்பெயர்ந்தோர் குழுக்களான , எல்லியஸ் ஜெய்ராஜாவின் யு.எஸ்.ரி பக் (USTPAC) , பாதர் இம்மானுவேலின் ஜி.ரி .எஃப் (GTF ) டாண்டன் துரைராஜா வின் தமிழ் கனேடிய காங்கிரஸ் ஆகியவை நிமல்கா மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஆதரித்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிமல்கா காணாமல் போனார். ஆனால் அவர் சிங்களவர்களின் நிகழ்ச்சி நிரலை, அதாவது உள்ளூர் விசாரணைக்கு ஊக்குவிக்க பணிபுரிந்தார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்க நடிகை ஜோலி ஏஞ்சலினா பார்க்க விரும்பி நிமல்காவை கேட்டுக் கொண்டார். நிமல்கா போர்க் குற்றவாளிகளின் ஆமி கொமாண்டரின் மனைவிகளை ஜோலி ஏஞ்சலினாவுக்கு அழைத்துச் சென்றார். ஆட்சி மாற்றம் விதிமுறை முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு முன், கடைசியாக OMP ஐ சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறார்கள் . OMP என்பது நிமல்கா மற்றும் சுமந்திரனின் சாதனம் ஆகும், இது UNHRC ஐ உள்ளூர் விசாரணையை நம்ப வைக்கும் சாதனம் . நிமல்கா OMP யை எப்படியாவது தமிழர்களுக்கு தேவை என்று காட்ட வேலை செய்ய தனது கடைசி தரம் முயற்சிக்கிறார். தெற்கில் இன்னும் சில நிலங்களை சீனாவுக்கு அடமானம் வைப்பதன் மூலமும், காணாமல் போன ஒவ்வொருவரின் பெற்றோருக்கும் 5000 ரூபாயைக் கொடுத்து வழக்கை மூடுவதே நிலம்ல்கா யோசனை. காணாமல் போனவர்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கண்டறிய எங்கள் சாதனம். நமது அரசியல் எதிர்காலம் மற்றும் எங்கள் வாழ்வாதாரம் காணாமல் போனவர்ககளில் தங்கியுள்ளது. காணாமல் போனவர்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பேசவில்லை. இது பற்றி கதைத்தால் கொழும்பில் அது அவர்களை காயப்படுத்துகிறது. அவர்களின் லஞ்சம் ரணிலால் நிறுத்தப்படும். OMP ஒரு நெருக்கடி. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு இலங்கை உள்ளூர் விசாரணையைப் பெற நம்பகமான OMB ஐ உருவாக்குவதாக நிமல்க்காவும் சுமந்திரனும் உறுதியளித்துள்ளனர். OMP குழப்பம் என்பதால், நிமல்கா, சுமந்திரான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் OMP என்ன செய்வது என்பது UNHRC இல் சில நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதாகும். எனவே, நாம் அனைவரும், இந்த போலி OMP உருவாக்கத்தை எதிர்ப்போம். எங்கள் எதிர்கால சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழரும் OMP ஐ நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போராட்டத்தின் இறுதியில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/63317
 8. பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் மற்றும் அவருக்கு உதவியதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520678
 9. காணாமல் போனோர் அலுவலகத்தை யாருக்காக திறந்தீர்கள்; உறவுகள் போர் கொடி? காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் பாரிய போராட்டத்தினையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தனர். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள், சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை. நாம் குறித்த அலுவலகத்தினை எதிர்த்து போராடிய போதிலும் நீங்கள் யாருடைய அனுமதியும் இன்றி திறந்துள்ளீர்கள். இது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திறக்கப்பட்டதா? அல்லது வேறு யாருக்காகவும் திறக்கப்பட்டதா? பட்டப்பகலில் திறக்க வேண்டிய அலுவலகத்தினை அதிகாலையில் திறக்கவேண்டிய தேவை என்ன?. எங்கள் உறவுகளுக்கு நீதியைத்தேடி தரப்போகின்றீர்களா இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை திறந்தீர்களா என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரை பார்த்து கேட்கின்றோம். நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்திற்காகவோ சுகபோகத்திற்காகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றது. எனினும் நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தினை மிகவும் கொச்சைப்படுத்தாதீர்கள். இந்நிலையிலேயே நாம் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரியளவிலான போராட்டமொன்றினை முன்னெடுக்கின்றோம். வவுனியா பன்றிக்கெய்த குளத்தில் இருந்து எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளோம். இதற்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் பொது அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/63315
 10. சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து உலக தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. சவேந்திர சில்வாவின் நியமனம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் விடயம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த நியமனம் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் முடிவிற்கு வந்துவிட்டதற்கான சமிக்ஞையே என உ உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது எனவும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. சவேந்திரசில்வாவின் நியமனத்திற்கு பல நாடுகளும் நபர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தமைக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லாட்சி போன்றவற்றை மதிக்கும் நாடுகள் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் தங்கள்நிலைப்பாட்டை வலுவாக உரத்த குரலில் தெரிவிக்கவேண்டும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் வெறுமனே இராஜதந்திர ரீதியில் அறிக்கைகளை விடுவதை விடுத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இலங்கையின் பங்குபெற்றலை நிறுத்தவேண்டும்,நாடுகள் இலங்கையுடனான இராணுவஒத்துழைப்பை இடைநிறுத்தவேண்டும்,சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களிற்கு எதிராக பயண சிறப்புரிமைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/63307
 11. பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் சில இணையத்தளங்களுக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (24) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், ஆதராமற்ற உண்மைக்கு புறம்பான குறித்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களுக்கு குற்ற புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளேன். இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்குமான வழக்கு தொடர்தலின் முதற்கட்டமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன். இது தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இதனுடன் தொடர்புடையவர்களை இன்டர்போல் ஊடாக கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இணையத்தளங்களை நடாத்தும் நபர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கும் அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்கதிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை புலம்பெயர் நாடுகளில் இருந்து நடத்தும் பண முதலைகள் இராணுவ புலனாய்வுத்துறையினரின் கோரிக்கையில் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருகின்றனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதளுக்கெதிராக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/63324
 12. -எஸ்.நிதர்ஷன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான ஷபோந்திர சில்வாவுக்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்துக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். அத்துடன், தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகம் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்துக்கு எதிரான போர் பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன. அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட ஷபோந்திர சில்வாவுக்கு மைதிரி - ரணில் அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார். “இலங்கை அரசாங்கத்தின் இந்த மிலேச்சகரமான செயற்பாட்டை செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கு பற்றி கண்டனம் தெரிவிப்பேன். அது மட்டுமல்லாது ஐ.நா ஆணையாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து சர்வதேசம் இனியும் இலங்கையை நம்பக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளேன்” எனவும் அவர் கூறினார். மேலும், ஐ.நாவால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ( கலப்புப்பொறிமுறை) க்கான கால நீடிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தவுள்ளேன். இனியும் இலங்கை அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்காது ஐ.நா.பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விடையத்தைக் கொண்டு சென்று இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கால-நீடிப்பை-ஐ-நா-முடிவுக்கு-கொண்டு-வர-வேண்டும்/71-237270
 13. செவ்வாய்க்கிரகத்துக்குச் செல்லும் ரோவரில் உங்களின் பெயரையும் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது மற்றொரு ரோவரை அனுப்பவிருக்கிறது. அதில் அந்நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. அதற்கான அழைப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது நாசா. NASA ✔@NASA When our #Mars2020 rover lands on the Red Planet in 2021, it will carry a microchip etched with the names of millions of people from planet Earth. Is yours on it? Don't miss out: get your boarding pass and fly your name on our #Mars2020 rover! Book now: https://go.nasa.gov/2z7FENu அந்தப் பதிவில் நாசா "2020 ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செல்லவிருக்கின்ற எங்களின் ரோவர், மில்லியன் கணக்கான மக்களின் பெயர்களையும் மைக்ரோ சிப் வடிவில் கொண்டுசெல்ல இருக்கிறது. எனவே, உங்களின் பெயர் அதில் இடம்பெற இப்போதே பதிவுசெய்து உங்கள் பெயரை செவ்வாய்க்கிரகத்துக்கு ரோவரில் பறக்க விடுங்கள்" எனத் தெரிவித்துள்ளது. இதில் பெயரைப் பதிவு செய்வதற்கு நம்முடைய பெயர், நாடு, அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும். பெயர்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2019. செவ்வாய்க்கிரகத்துக்குக் கொண்டுசெல்ல, நாசாவுக்கு பெயர்களை அனுப்ப https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற லிங்கை க்ளிக் செய்து, பக்கம் திறந்ததும், உங்கள் முதல் பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிடவும். பிறகு, பட்டியலிலிருந்து நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் தங்கள் அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சலை குறிப்பிடுங்கள். அனைத்துத் தகவல்களையும் பூர்த்திசெய்த பிறகு, 'Send My Name to Mars' என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும். உங்கள் பெயர் நாசாவுக்கு அனுப்பப்படும். Mars 2020 நீங்கள் உங்கள் பெயரை அனுப்பியதும், வேறொரு இணையப்பக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு உங்களின் மாதிரி போர்டிங் பாஸ் காட்டப்படும். உங்களின் சுய விவரங்களோடு அது இருக்கும். அதைத் தரவிறக்கவோ, அச்சிடவோ செய்யலாம். எதிர்காலத்தில் எலான் மஸ்க் போன்றவர்கள் நிலவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினால் மனிதர்கள் அங்கு சென்று வசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதுவரைக்கும் செவ்வாயில் நம் 'பெயர்சொல்லும்படி' ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இதுபோன்ற முயற்சிகள்தான் ஒரே வழி. https://www.vikatan.com/science/astronomy/how-to-add-your-name-in-nasas-mars-2020-rover
 14. கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில வகையான பவளப்பாறைகள் அழிவை சந்தித்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் புளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையில் நீரின் வெப்பம் கண்காணிக்கப்பட்டது. மேலும், சூரியன் தோன்றி மறைவதற்கு ஏற்ப பிரத்யேக விளக்குகள் அமைத்து ஒளி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, அந்த ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு வந்த விரல் வடிவிலான ‘பில்லர்’ பவளப்பாறைகள் இனப்பெருக்கம் மூலம் மேலும் பல பவளப்பாறைகளை முளைக்கச் செய்துள்ளது. தங்களது ஆய்வு முயற்சி வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சியடைந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், “அழிவின் விளிம்பில் உள்ள கடல் உயிரினமான பவளப்பாறைகளை பாதுகாக்க முடியும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/63263
 15. ஐஎஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி? ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவர் அமைப்பின் தலைமைப்பொறுப்பை முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ_சைனின் இரணுவத்தை சேர்ந்த அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமறைவாகயிருந்து ஐஎஸ் அமைப்பினை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பக்தாதி ஐஎஸ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார் என ஐஎஸ் அமைப்பின் ஊடகமான அமாக் தெரிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பின் தலைவர் தனது அதிகாரங்களை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளமை அவர் 2017 இல் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்ற சந்தேகங்களை அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்துல்லா குர்தாஸ் சதாம் ஹ{சைனின் இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் 2003 இல் பஸ்ராவில் இவரும் அல்பக்தாதியும் அமெரிக்க படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை இவர் பக்தாதிக்கு நெருக்கமானவராக மாறினார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஸ்ராவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையே அல்பக்தாதி அங்கிருந்த பலரை தீவிரவாதிகளாக மாற்றினார் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன் பின்னர் அப்துல்லா குர்தாஸ் ஐஎஸ் அமைப்பி;ன் தலைவருக்கு நெருக்கமானவராக மாறினார் என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் பேராசிரியர் என அழைக்கப்படும் இந்த நபர் அமைப்பின் ஈவிரக்கமற்ற கொள்கை வகுப்பாளர் எனவும் தெரிவித்துள்ளன. ஐஎஸ் அமைப்பின் பிரதிதலைவராகயிருந்து 2016 இல் அமெரிக்காவின் ஹெலிக்கொப்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அபு அல் அப்ரியின் நெருக்கமான சகாவாகவும் அப்துல்லா குர்தாஸ் காணப்பட்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பை மீள கட்டியெழுப்புவதற்காக அல் பக்தாதி அப்துல்லா குர்தாஸை தெரிவு செய்துள்ளார் என ஐஎஸ் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அல்பக்தாதி தனது பதவியை விட்டுக்கொடுக்கவில்லை விநியோகம் மற்றும் நடமாட்ட விவகாரங்களிற்கு பொறுப்பாக அப்துல்லா குர்தாஸினை அவர் நியமித்துள்ளார் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நியமனத்திற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் அமைப்பின் பலவீனங்களை கண்டறிவதற்காக பக்தாதி அப்துல்லா குர்தாஸினை நியமித்திருக்கலாம் ,எதிர்காலத்தில் அவரை தலைவராக மாற்றும் திட்டத்துடனும் இந்த நியமனத்தை அல்பக்தாதி மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/63260