ampanai

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,263
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by ampanai

 1. கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (24) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது; எனது தனிப்பட்ட விடயமாகவும், நல்லிணக்க விடயமாகவும் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். இலங்கையின் அரசியல்களம் மற்றும் இந்திய, தமிழக விவகாரங்கள் குறித்து எங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். முக்கியமான அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தவுள்ள ஜனாதிபதி தேர்தல், நாட்டின் தற்போதைய அரசியல் போக்கு குறித்தும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 2015ஆம் ஆண்டு எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை இலங்கை சிறுபான்மை சமூகத்தின் விடயத்தில் எவ்வளவு தூரம் உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல விடயங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், முன்னைய அரசாங்கம் கொடுத்த நெருக்கடிகள் தற்போது நீங்கியுள்ளது. அபகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொடுத்தல், புதிய சட்டவாக்கங்கள், அதிலே சிறுபான்மை சமூகங்களுக்கு அநியாயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற விடயங்களில் எங்கள் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு இயன்ற சில விடயங்களை செய்துள்ளது. இன்று முற்றுப்பெறாமல் இருக்கும் சர்ச்சைகள், விமர்சனங்கள் இல்லாமலும் இல்லை. இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னணியில் அவசரகாலச் சட்டம் அவசியமாக தேவைப்பட்டது. விசாரணையை துரிதப்படுத்துவதற்கும், குற்றவாளிகளை இனம்காண்பதற்கும் சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பயங்கரவாத தடை குறித்த விடயங்களிலும் அவசரகாலச் சட்டம் தேவையற்றது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் விவகாரம் போன்ற விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரம் அவசரகாலச் சட்டம் நீடித்தால் இலங்கைக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இப்படியான விடயங்களை கருத்திற்கொண்டுதான் தேவைக்கதிகமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமல் அதனை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார். முன்னதாக சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் அலுவலகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தலைமை நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தார்கள். இதில் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர்கள் நிஜாம்தீன், காயல் மகபூப், மாவட்ட தலைவர் ஜெய்லாபுதீன், ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி, ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://www.thinakaran.lk/2019/08/25/அரசியல்/39231/சிறுபான்மை-விடயத்தில்-அரசாங்கம்-அக்கறை-காட்டுகிது
 2. இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமனறத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை உள்நோக்கம் கொண்டே கொண்டு வரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலைகளை நடத்துவதில் தற்போதய அரசில் பிரச்சினை நிலவுகின்றது. ஆனால் அதனை நடாத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகின்றார். ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் போட்டித்தன்மை நிகழ்கின்றது. இந்நிலையில் ஓர் பக்கம் சார்ந்து கூட்ட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமனறத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பாக தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்திருக்க முடியும் ஆனால் அது முக்கியமல்ல. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில் இருக்கின்றோமா? என ஜானாதிபது உச்ச நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரியுளளார். எனினும் நீதிமனறத்தினால் அரசுக்கு அறிவுரை மட்டுமே கூற முடியும். இதனை செய் அதனை செய் என கூற இயலாது. எனவே ஜனாதிபதி இவ்வாறான நிலையிலும் நீதிமன்றில் ஏன் வியாக்கியானத்தை கோரினார் என்று எனக்கு தெரியவில்லை. ஓர் சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் மாகாண சபை தேர்தலை இப்போது நடாத்த முடியும் என கூறினால் கூட அதனை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியும். இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கூட்ட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வருகின்றார் எனில் தனிப்பட்ட உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது இந்த வருடத்திலோ நடைபெற வாய்ப்புக்கள் இல்லை என்பதே எனது கருத்து என்றார். (பருத்தித்துறை விசேட நிரூபர் - நிதர்ஷன் வினோத்) https://www.thinakaran.lk/2019/08/25/அரசியல்/39250/சுமந்திரனின்-தனிநபர்-பிரேரணை-உள்நோக்கம்-கொண்டது
 3. 'காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்' - பாகிஸ்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இந்த பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் அறிக்கை இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் சர்ச்சைக்குரிய நிலைமையை மாற்ற முற்படும் இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டமை குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image captionஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் முழுமையாக முடக்கப்பட்டு, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதையும், இந்த நடவடிக்கை ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதையும் ஜனாதிபதிக்கு விளக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள பாகிஸ்தான், ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் என கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. சார்க் அமைப்பை மீண்டும் செயல்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தையை நடத்த இலங்கையின் மத்தியஸ்தம் குறித்தும் ஜனாதிபதி கூறியிருந்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பிராந்தியத்தின் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியதாக பாகிஸ்தான் உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-49449445 ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பதில் பாகிஸ்தான் உயர் ஆணையரின் கோரிக்கைக்கு அமையவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் உயர் ஆணையரின் கருத்துகளை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் மிக நெருங்கிய நட்புறவை பேணி வருவதாக கூறியுள்ளார். பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-49449445
 4. அரசியல் நோக்கங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தங்களுடன் இணைந்து ஒரே நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்வதற்காக கைகோர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வட,கிழக்கு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பு - தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தங்களிடம் நிலையான தீர்வு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் அனைத்து அபிவிருத்திப் பணிகளும், வடக்கு, கிழக்கிற்கும் வழங்கப்படும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. நாட்டிற்கு பாதுகாப்பு என்பது எந்தளவு முக்கியமானது என்பதை குறித்து நாட்டின் ஆட்சியாளருக்கு போதிய அறிவு இருக்க வேண்டும். இந்த நிலையில், நாட்டின் புலனாய்வுத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பதங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், ஊடக சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு வெளியிடும் சுதந்திரம் என்பன தங்களின் கீழ் இல்லாதுபோய்விடுமா என்ற அச்சம் உள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறதே என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துள்ள அவர், தங்களது அரசாங்கத்தின் கீழ் தாங்கள் எப்போதும், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிப்பதாகவும், ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222892/கோட்டாபய-வடகிழக்கு-இளைஞர்-யுவதிகளிடம்-முன்வைத்துள்ள-கோரிக்கை?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf
 5. வாஷிங்டன்: தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது. ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520894
 6. ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றார். அது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியை மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களை ஒரு குழுவாக அமைத்து பாராளுமன்ற உறுப்பினர் இருவரையும் விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையிலே அவரால் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறாக நான் காணி அபகரிக்கவும் இல்லை. காணியை களவாக பிடிக்கவும் இல்லை. அதற்குரிய சகல ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றது. அந்த காணிக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. அது எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான காணி. அந்த காணியிலே எனது கணவர் 40 வருடங்களாக வயல் செய்கின்றார், தோட்டம் செய்கின்றார். ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது. இதனுடைய விசாரணைகளின் முடிவில் அரசாங்க அதிபர் எழுத்து மூலமாக எனக்கு அறிவித்திருக்கிறார். இது கையகப்படுத்தப்பட்ட காணி அல்ல பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்த போர்வையிலேயே நான் இந்த காணியை கையகப்படுத்தவில்லை. எனது கணவருக்கு அது சொந்தமான காணி என்பதை எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார். விசாரணைகளின் முடிவில் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/63371
 7. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள்-ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள், அத்துமீறிய குடியேற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. http://valampurii.lk/valampurii/content.php?id=19316&ctype=news
 8. தமிழ் மக்கள் ஒன்றுபட்டாலே இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும்-முன்னணியும் எம்முடன் இணைவார்கள் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியீடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக் னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பலரும் பிரயத்தனத்துடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையினை ஏற்கும் எந்த கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். கொள்கைகள் என்பது வருங்கால தமிழ் மக்கள் பற்றிய தொன்றாகும். ஆகையால் அதனை எவ்வாறு அமை க்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வா றான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுக தமிழ் பேரணியில் பேசவுள்ளோம். இதேவேளை கொள்கைரீதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்முடன் சேர்ந்தவர்கள். சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விடுபட்டு நிற்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவர்களும் எம்முடன் வந்து இணைவார்கள் என நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். http://valampurii.lk/valampurii/content.php?id=19314&ctype=news
 9. தொல்பொருள், வனஜீவராசிகள் திணைக்களத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்-ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துரைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் எடுத்துரைக்கப்பட்டதாக தமிழரசு கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இதனுடன் காணிகள் விடுவிக் கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாமை காரணமாக இந்த பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சித்தார்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://valampurii.lk/valampurii/content.php?id=19315&ctype=news
 10. பௌத்த பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது என கூட்டமைப்பினரிடம் மனந்திறந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. தொல்பொருள் திணைக்களம், வனஜீவ ராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீரா வியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது. இதை கேட்டுக் கொண்டிருந்த மைத்திரி, “பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டு மல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்கு பிரச்சினைகளை தந்து கொண்டிருக்கிறார்கள்“ என்றார். http://valampurii.lk/valampurii/content.php?id=19318&ctype=news
 11. ஆர்.ஜெயஸ்ரீராம் 1990 ஆண்டு காலப் பகுதியில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் வைத்து, வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு கோரல் நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோயில் முன்றலில், இன்று (23) நடைபெற்றது. பிரதேசத்தின் சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமதப் பெரியார்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர். 1990 ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரமான யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் தஞ்சமடைந்தனர். அவ்வேளையில் ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், திடிர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட 99 பேரை கைதுசெய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இராணுவ முகமாகக் கருதப்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/நினைவேந்தல்/73-237264
 12. 6 தீவிரவாதிகள் ஊடுருவல்... கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற மத்திய உள்துறையின் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை நடந்து வருகிறது.இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் கோவைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய உளவுத்துறை அறிக்கையில் இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்ற தீவிரவாதியும் கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் லஸ்கர்-இ.தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற வெளியான தகவலையடுத்து கோவை முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதற்கு கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.கோவையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்படி உள்ளூர் போலீசார், அதிவிரைவுப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் நுழைவு பகுதிகளான 12 செக்போஸ்ட்கள் மற்றும் கோவை மாவட்ட நுழைவு பகுதிகளில் 27 செக்போஸ்ட்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.இதற்கிடையே கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520685
 13. ’உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை உதவி திட்டங்கள் கிடைக்கும்’ -எஸ்.நிதர்ஷன் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எம்மால் கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும், உங்கள் நீதிப் பயணத்தை நீங்கள் தொடர முடியும் என, காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். யாழ்ப்பான மாவட்டச் செயலகத்தில் காணாமல் அகக்ப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இந்த அலுவலகத்தை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு” உனவும் தெரிவித்தார். “ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப்படுத்த மட்டும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது. “எமது அலுவலகத்தால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் வலிகளை போக்க முடியாது. அதற்காக நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் நாம் செய்யவில்லை. எமது பணியகத்தின் பிரதான பணியாக காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே. இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், காணமல் போவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பது சிக்கலான விடயம் அத்துடன் நீண்ட காலம் எடுக்கலாம். “உங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை உங்களின் அன்றாட வாழ்க்கைக்கே சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். அது கூட உங்களுக்கு போதாது என்பதை நாம் உணர்கின்றோம். காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் வெறுமனே காணமல் போனோருக்கு மட்டுமல்ல அவர்களை தேடும் உறவுகளுக்கக்கவுமே. அதனால் தான் சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களாகிய நீங்கள் எம்மூடாக நீதியை வழங்க வேண்டும் என எதிர்பாக்கிண்றீர்கள். நாமும் நீதிக்காக உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராகவே இருக்கின்றோம். “சிலரால் எமது செயற்பாட்டை விளங்கிக் கொள்ள சிரமப்படலாம். இந்த அலுவலகம் வேண்டாம் என எதிர்க்கும் உறவுகள் சிலர் எம்மை இரகசியமாக சந்தித்து எம்மிடம் பெயரிடப்பட்ட ஐந்து கோவைகளை தந்தனர். அதில் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை முதலில் கூறவேண்டும். அதுவரை இந்த அலுவலகத்தைத் திறக்கக்கூடாது என்றனர். அப்போது நாம் உங்கள் கோரிக்கையை மட்டும் நாம் விசாரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட தரப்புகள் அனைவரதும் கோவைகளையும் விசாரிப்போம் என கூறினோம். “உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாயை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை பெற தற்காலிக சான்றிதழ் தேவையாக உள்ளது. இதனை பெறுவதால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். “இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும் உங்கள் நீதிப் பயணத்தினை நீங்கள் தொடர முடியும். எமது அலுவலகம் எந்த சந்தர்ப்பங்களிலும் ஏதாவது பிழை விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் துணிந்து சுட்டிக்காட்ட முடியும். நாங்கள் மட்டும் செயற்பட வேண்டும் என கருதவில்லை. பாதிக்கப்பட்ட நீங்களும் எம்முடன் இணைந்து பயணியுங்கள் அப்போது தான் நாம் விரைவாக உங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்” எனவும், அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உங்களுக்கான-நீதி-கிடைக்கும்-வரை-உதவி-திட்டங்கள்-கிடைக்கும்/175-237282
 14. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பிப் அனுப்பப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க சென்றுள்ளனர். ’காஷ்மீருக்கு வர வேண்டாம்’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்ததிலிருந்து அங்கு தொலைத்தொடர்பு சேவைகளும், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத்த்திலிருந்தும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்களை காத்து இயல்புநிலையை திரும்ப கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். மூத்த அரசியல் தலைவர்கள் இயல்புநிலை திரும்புவதை தடுக்கக் கூடாது என்றும், அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ரீநகருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தனது டிவிட்டரில் பக்க்த்தில் தெரிவித்துள்ளது. அமைதியை நிலைநாட்டுவதற்கும், உயிரிழப்புகள் நேரமால் இருப்பதற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அபாஸ் நக்வி இது அரசியல் சுற்றுலா என தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி அசாத், அங்கு இயல்புநிலை உள்ளது என்றால் ஏன் தலைவர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது? இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் ஏன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்புள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அது குறித்து பல விமர்சன்ங்களையும், கேள்விகளையும் எழுப்பி வந்தார் ராகுல் காந்தி, எனவே அங்கு நிலைமை இயல்பாகதான் உள்ளது என்றும், காஷ்மீருக்கு வருகைதருமாறும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்தார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக். நான் ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வருமாறு அழைக்கிறேன். அவரின் வருகைக்கு நானே ஏற்பாடு செய்கிறேன். அவர் இங்கு வந்து நிலைமையை பார்க்கட்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். அந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் அங்கு வருவதாக டிவிட்டரில் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-49459962
 15. இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர (நா.தனுஜா) கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல. எனவே இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது. அதுபோன்று இதுவொரு உள்நாட்டு ஆயுதப்போர் என்பதால் இதனை மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாக மாத்திரம் அணுக முடியுமே தவிர,மனித உரிமைச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும் என அவர் இதன்போது தெரவித்தார். https://www.virakesari.lk/article/63306
 16. பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது. தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்திற்கொள்வோம். இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து, அவற்றுக்கு அமைவாகவே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. https://www.virakesari.lk/article/63297
 17. ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓ.எம்.பி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1மணிவரையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வவுனியாவில் தொடர்ந்து 917ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். ஓ.எம்.பி ஒரு போலி அமைப்பு. இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னோடி நிமல்கா பெர்னாண்டோவும் சுமந்திரனும் ஆவார். சுமந்திரன் முன்னணி புலம்பெயர்ந்தோர் குழுக்களான , எல்லியஸ் ஜெய்ராஜாவின் யு.எஸ்.ரி பக் (USTPAC) , பாதர் இம்மானுவேலின் ஜி.ரி .எஃப் (GTF ) டாண்டன் துரைராஜா வின் தமிழ் கனேடிய காங்கிரஸ் ஆகியவை நிமல்கா மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஆதரித்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிமல்கா காணாமல் போனார். ஆனால் அவர் சிங்களவர்களின் நிகழ்ச்சி நிரலை, அதாவது உள்ளூர் விசாரணைக்கு ஊக்குவிக்க பணிபுரிந்தார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்க நடிகை ஜோலி ஏஞ்சலினா பார்க்க விரும்பி நிமல்காவை கேட்டுக் கொண்டார். நிமல்கா போர்க் குற்றவாளிகளின் ஆமி கொமாண்டரின் மனைவிகளை ஜோலி ஏஞ்சலினாவுக்கு அழைத்துச் சென்றார். ஆட்சி மாற்றம் விதிமுறை முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு முன், கடைசியாக OMP ஐ சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறார்கள் . OMP என்பது நிமல்கா மற்றும் சுமந்திரனின் சாதனம் ஆகும், இது UNHRC ஐ உள்ளூர் விசாரணையை நம்ப வைக்கும் சாதனம் . நிமல்கா OMP யை எப்படியாவது தமிழர்களுக்கு தேவை என்று காட்ட வேலை செய்ய தனது கடைசி தரம் முயற்சிக்கிறார். தெற்கில் இன்னும் சில நிலங்களை சீனாவுக்கு அடமானம் வைப்பதன் மூலமும், காணாமல் போன ஒவ்வொருவரின் பெற்றோருக்கும் 5000 ரூபாயைக் கொடுத்து வழக்கை மூடுவதே நிலம்ல்கா யோசனை. காணாமல் போனவர்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கண்டறிய எங்கள் சாதனம். நமது அரசியல் எதிர்காலம் மற்றும் எங்கள் வாழ்வாதாரம் காணாமல் போனவர்ககளில் தங்கியுள்ளது. காணாமல் போனவர்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பேசவில்லை. இது பற்றி கதைத்தால் கொழும்பில் அது அவர்களை காயப்படுத்துகிறது. அவர்களின் லஞ்சம் ரணிலால் நிறுத்தப்படும். OMP ஒரு நெருக்கடி. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு இலங்கை உள்ளூர் விசாரணையைப் பெற நம்பகமான OMB ஐ உருவாக்குவதாக நிமல்க்காவும் சுமந்திரனும் உறுதியளித்துள்ளனர். OMP குழப்பம் என்பதால், நிமல்கா, சுமந்திரான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் OMP என்ன செய்வது என்பது UNHRC இல் சில நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதாகும். எனவே, நாம் அனைவரும், இந்த போலி OMP உருவாக்கத்தை எதிர்ப்போம். எங்கள் எதிர்கால சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழரும் OMP ஐ நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போராட்டத்தின் இறுதியில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/63317
 18. பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் மற்றும் அவருக்கு உதவியதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520678
 19. காணாமல் போனோர் அலுவலகத்தை யாருக்காக திறந்தீர்கள்; உறவுகள் போர் கொடி? காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் பாரிய போராட்டத்தினையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தனர். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள், சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை. நாம் குறித்த அலுவலகத்தினை எதிர்த்து போராடிய போதிலும் நீங்கள் யாருடைய அனுமதியும் இன்றி திறந்துள்ளீர்கள். இது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திறக்கப்பட்டதா? அல்லது வேறு யாருக்காகவும் திறக்கப்பட்டதா? பட்டப்பகலில் திறக்க வேண்டிய அலுவலகத்தினை அதிகாலையில் திறக்கவேண்டிய தேவை என்ன?. எங்கள் உறவுகளுக்கு நீதியைத்தேடி தரப்போகின்றீர்களா இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை திறந்தீர்களா என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரை பார்த்து கேட்கின்றோம். நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்திற்காகவோ சுகபோகத்திற்காகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றது. எனினும் நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தினை மிகவும் கொச்சைப்படுத்தாதீர்கள். இந்நிலையிலேயே நாம் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரியளவிலான போராட்டமொன்றினை முன்னெடுக்கின்றோம். வவுனியா பன்றிக்கெய்த குளத்தில் இருந்து எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளோம். இதற்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் பொது அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/63315
 20. சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து உலக தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. சவேந்திர சில்வாவின் நியமனம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் விடயம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த நியமனம் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் முடிவிற்கு வந்துவிட்டதற்கான சமிக்ஞையே என உ உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது எனவும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. சவேந்திரசில்வாவின் நியமனத்திற்கு பல நாடுகளும் நபர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தமைக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லாட்சி போன்றவற்றை மதிக்கும் நாடுகள் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் தங்கள்நிலைப்பாட்டை வலுவாக உரத்த குரலில் தெரிவிக்கவேண்டும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் வெறுமனே இராஜதந்திர ரீதியில் அறிக்கைகளை விடுவதை விடுத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இலங்கையின் பங்குபெற்றலை நிறுத்தவேண்டும்,நாடுகள் இலங்கையுடனான இராணுவஒத்துழைப்பை இடைநிறுத்தவேண்டும்,சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களிற்கு எதிராக பயண சிறப்புரிமைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/63307
 21. பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் சில இணையத்தளங்களுக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (24) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், ஆதராமற்ற உண்மைக்கு புறம்பான குறித்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களுக்கு குற்ற புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளேன். இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்குமான வழக்கு தொடர்தலின் முதற்கட்டமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன். இது தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இதனுடன் தொடர்புடையவர்களை இன்டர்போல் ஊடாக கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இணையத்தளங்களை நடாத்தும் நபர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கும் அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்கதிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை புலம்பெயர் நாடுகளில் இருந்து நடத்தும் பண முதலைகள் இராணுவ புலனாய்வுத்துறையினரின் கோரிக்கையில் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருகின்றனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதளுக்கெதிராக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/63324
 22. -எஸ்.நிதர்ஷன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான ஷபோந்திர சில்வாவுக்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்துக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். அத்துடன், தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகம் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்துக்கு எதிரான போர் பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன. அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட ஷபோந்திர சில்வாவுக்கு மைதிரி - ரணில் அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார். “இலங்கை அரசாங்கத்தின் இந்த மிலேச்சகரமான செயற்பாட்டை செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கு பற்றி கண்டனம் தெரிவிப்பேன். அது மட்டுமல்லாது ஐ.நா ஆணையாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து சர்வதேசம் இனியும் இலங்கையை நம்பக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளேன்” எனவும் அவர் கூறினார். மேலும், ஐ.நாவால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ( கலப்புப்பொறிமுறை) க்கான கால நீடிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தவுள்ளேன். இனியும் இலங்கை அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்காது ஐ.நா.பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விடையத்தைக் கொண்டு சென்று இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கால-நீடிப்பை-ஐ-நா-முடிவுக்கு-கொண்டு-வர-வேண்டும்/71-237270
 23. செவ்வாய்க்கிரகத்துக்குச் செல்லும் ரோவரில் உங்களின் பெயரையும் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது மற்றொரு ரோவரை அனுப்பவிருக்கிறது. அதில் அந்நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. அதற்கான அழைப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது நாசா. NASA ✔@NASA When our #Mars2020 rover lands on the Red Planet in 2021, it will carry a microchip etched with the names of millions of people from planet Earth. Is yours on it? Don't miss out: get your boarding pass and fly your name on our #Mars2020 rover! Book now: https://go.nasa.gov/2z7FENu அந்தப் பதிவில் நாசா "2020 ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செல்லவிருக்கின்ற எங்களின் ரோவர், மில்லியன் கணக்கான மக்களின் பெயர்களையும் மைக்ரோ சிப் வடிவில் கொண்டுசெல்ல இருக்கிறது. எனவே, உங்களின் பெயர் அதில் இடம்பெற இப்போதே பதிவுசெய்து உங்கள் பெயரை செவ்வாய்க்கிரகத்துக்கு ரோவரில் பறக்க விடுங்கள்" எனத் தெரிவித்துள்ளது. இதில் பெயரைப் பதிவு செய்வதற்கு நம்முடைய பெயர், நாடு, அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும். பெயர்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2019. செவ்வாய்க்கிரகத்துக்குக் கொண்டுசெல்ல, நாசாவுக்கு பெயர்களை அனுப்ப https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற லிங்கை க்ளிக் செய்து, பக்கம் திறந்ததும், உங்கள் முதல் பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிடவும். பிறகு, பட்டியலிலிருந்து நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் தங்கள் அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சலை குறிப்பிடுங்கள். அனைத்துத் தகவல்களையும் பூர்த்திசெய்த பிறகு, 'Send My Name to Mars' என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும். உங்கள் பெயர் நாசாவுக்கு அனுப்பப்படும். Mars 2020 நீங்கள் உங்கள் பெயரை அனுப்பியதும், வேறொரு இணையப்பக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு உங்களின் மாதிரி போர்டிங் பாஸ் காட்டப்படும். உங்களின் சுய விவரங்களோடு அது இருக்கும். அதைத் தரவிறக்கவோ, அச்சிடவோ செய்யலாம். எதிர்காலத்தில் எலான் மஸ்க் போன்றவர்கள் நிலவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினால் மனிதர்கள் அங்கு சென்று வசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதுவரைக்கும் செவ்வாயில் நம் 'பெயர்சொல்லும்படி' ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இதுபோன்ற முயற்சிகள்தான் ஒரே வழி. https://www.vikatan.com/science/astronomy/how-to-add-your-name-in-nasas-mars-2020-rover
 24. கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில வகையான பவளப்பாறைகள் அழிவை சந்தித்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் புளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையில் நீரின் வெப்பம் கண்காணிக்கப்பட்டது. மேலும், சூரியன் தோன்றி மறைவதற்கு ஏற்ப பிரத்யேக விளக்குகள் அமைத்து ஒளி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, அந்த ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு வந்த விரல் வடிவிலான ‘பில்லர்’ பவளப்பாறைகள் இனப்பெருக்கம் மூலம் மேலும் பல பவளப்பாறைகளை முளைக்கச் செய்துள்ளது. தங்களது ஆய்வு முயற்சி வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சியடைந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், “அழிவின் விளிம்பில் உள்ள கடல் உயிரினமான பவளப்பாறைகளை பாதுகாக்க முடியும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/63263