Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by ampanai

  1. கொரோனா தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு

    வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான்

    மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை, சுகாதார நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன.

    பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வளிமுறைகள் பற்றி இதன்போது தெளிவுபடுத்தப்படுவதுடன், தமது பிள்ளைகளுக்கு அவதானமாக பின்பற்ற அறிவூட்டுமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

    இதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைகளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதனின் வழிகாட்டுதலில், புளியந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில், இவ்வாறான பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள், நேற்று (02) நடைபெற்றன.

    http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கொரோனா-தொடர்பில்-பெற்றோருக்கு-விழிப்புணர்வு/73-251315

     

  2. இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,692ஆக அதிகரித்துள்ளது.

    இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 845 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறளரகளன-எணணகக-மலம-அதகரபப/175-251338

  3. "முக கவசங்களை கழுத்தில் அணியலாமா?"

    கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் முகக் கவசங்களை முகத்தில் அணிய வேண்டுமே தவிர, கழுத்தில் அணியக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
     

    மக்கள் நெருக்கமாக இருப்பதால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கிறது. மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்துவதால் நோய் தொற்றாளர்களை அதிக அளவில் கண்டறிய முடிகிறது. நோய் தொற்று அதிகமானாலும் உயிரிழப்பை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சமுதாய பங்களிப்பு அவசியம்.

    வெளியில் செல்லும் பொழுது முக கவசங்களை கட்டாயம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இன்றைய திகதியில் பலர் முக கவசங்களை அணிந்து செல்கிறார்கள். ஆனால் மற்றவர்களுடன் பேசும்பொழுது முக கவசத்தை முகத்திலிருந்து நீக்கிவிட்டு, கழுத்தில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

    இது தவறு. மற்றவர்களுடன் பேசும் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை கண்டிப்பாக மூடியிருக்கும் வகையில் கவசத்தை அணிய வேண்டும். அத்துடன் இருமும் போதும், தும்மும் போதும் கைகளை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு முக கவசம் அணிவது புதுவித அனுபவமாக இருப்பதால், அதனை மருத்துவ ஊழியர்கள் பரிசோதிக்கும் தருணத்தில் மட்டும் முகத்தில் அணிகிறார்கள். ஏனைய தருணத்தில் அதனை கழுத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. இவ்வாறு அணிவதால் எவ்வித பயனும் இல்லை.

    அதே தருணத்தில் கொரோனா தொற்றினை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் இதுவரை முழுமையான அளவில் கண்டறிய படாததால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    அதே தருணத்தில் தற்பொழுது இந்தியாவில் நானோ தொழில் நுட்பத்துடன் கூடிய முக கவசத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய முக கவசம் மக்களை விட. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
     

    டொக்டர் சுப்பிரமணியம்.

    https://www.virakesari.lk/article/83304

  4. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளதென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

    இன்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையைச்  சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

    http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன-தறற/175-251133

  5. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் இன்று (29) இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

    இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது. 

    வைரஸ் தொற்றிலிருந்து 754 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 794 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

    http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-1558ஆக-உயரவ/150-251076

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.