Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  10942
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by ampanai

 1. until

  மாமனிதருக்கு நினைவு அஞ்சலிகள். அவரின் கனவுகள் ஒருநாள் நனவாகும்.
 2. "Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. " புதிய பெயருடன் புதிய பொலிவுடன் புதுமைகளை எதிர்பார்க்கிறேன்
 3. “என்னுடைய கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் வரைக்கும் எனக்கு என்ன நடந்தாலும் பச்சை தண்ணி கூட குடிக்க சொல்லி வற்புறுத்தகூடாது” *********************************************** “அம்மா நான் வந்ததை யாரோ காட்டி குடுத்துட்டாங்க போல, ஆமி ரவுண்டப் பண்ணுது, உண்ட கையாள ஒரு வாய் சோறு சாப்புட எனக்கு குடுத்து வைக்கல அம்மா, என்னை மன்னிச்சுடு , நான் குப்பி கடிக்குரன் ” *********************************************** “இதுக்கு மேல என்னால ஓட ஏலாது , நீங்க உயிரோட இருந்தா தான் போராட்டத்தை கொண்டு செல்ல முடியும் . என்னை சுட்டு போட்டு நீங்க பத்திரமா போயிடுங்க” *********************************************** “இலக்குக்கு கிட்ட வந்துடன் , கொஞ்சத்தில கப்பல் வெடிச்சுடும், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” *********************************************** “எங்கட பாயின்ட் ல நான் மட்டும் தான் மிஞ்சி இருக்குறன், என்னை சுத்தி நூறுக்கு மேல ஆமி நிக்குது, கிட்டத்தட்ட 30 பேரை சுட்டுடன், ரைபிளில கடைசி ரவை இருக்குற வரைக்கும் ஒருத்தனையும் கிட்ட விடமாட்டன் , அதுக்கு பிறகு குப்பி கடிச்சுடுவன் ” *********************************************** “மச்சான் திடிரெண்டு நோக் கழண்டுட்டு, எல்லாரும் ஓடுங்கடா , சண்டைல போகாத உயிர் சோதனைல தான் போகுது எண்டுறது தான் எனக்கு ஒரே ஒரு கவலை, நான் வெடிக்க வைக்கிறன்” *********************************************** “எங்களை ஆமி சுத்தி வந்துட்டான் , என்னால அவங்கள பார்க்க முடியுது, இனி ஒண்டும் செய்ய ஏலாது , எங்களை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த வாசிப்புக்கு மோட்டரை போடுங்கோ ” *********************************************** இவை எல்லாம் வாழ்வின் அடுத்த நொடி மரணம் தான் என்று அறிந்த பின்பும், மாவீரர்களின் வாயால் ஒரு வார்த்தை புரளாமல் வெளி வந்து கேட்பவர் மனதை ரணமாய் சுட்ட பொழுதுகள். மாவீரர்களின் மகோன்னதமான வீரமும் அவர்களின் விலை போகாத குணமும் ஒருங்கே அமைந்த அவர்களின் மரணம் கூட புனிதமானது. அந்த புனிதத்தின் மேலான அவர்களின் இலட்சிய நெருப்பு எம் இனத்தின் என்றைக்கும் மறக்க கூடாத பொறுப்பு. சாவின் விளிம்பிலும் சத்தியம் தவறாத வீர புதல்வர்களே! விழி மூடி தூங்கும் வேங்கைகளே! உம் ஆற்றல் தாரும். வானம் வீழ்த்திய உம் வல்லமை கொடும். செங்களம் தன்னில் வெஞ்சமர் ஆடிய வீரம் கொடும். #மீள்_2018
 4. தாயக விடுதலை கனவை சுமந்து விடுதலை என்ற இலட்சியத்திற்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
 5. யாழ் கள உறவின் ஞாபகார்த்த நினைவஞ்சலிகள்.!
 6. நூறு கோடிகளை தேர்தலுக்காக செலவழிக்கும் சிங்கள தலைமைகள். நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் இவர்களுக்கு சம்பள உயர்வை மறுக்கின்றனர். காரணம் - இவர்கள் தமிழர்கள். இவர்கள் எப்படி அதி உச்ச அரசியல் தீர்வை தருவார்கள் என சம்பந்தர் கூறுவார்?
 7. பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் மலை­யக மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து வரு­கின்­றனர். எனினும் இழு­பறி நிலைக்­குள்­ளாகி வரும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் மீண்டும் ஒரு ஏமாற்­றத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­காது இதி­லுள்ள தெளி­வுத்­தன்­மை­களை மக்­க­ளி­டத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. பசறை, லுணு­கலை மற்றும் கோணக்­கலை ஆகிய பெருந்­தோட்ட புறங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் தாம் இவ்­வி­ட­யத்தில் குழப்­ப­ம­டைந்­தி­ருப்­ப­தா­கவும் எவ்­வாறு இத்­தொ­கை­யினை தரப்­போ­கின்­றனர் என்று புரி­யா­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள அதே­வேளை தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் தமது கோரிக்­கையை ஏற்று நிலைப்­பா­டு­களை பகி­ரங்­க­மாக அறி­விக்­கு­மாறு குறிப்­பி­டு­கின்­றனர். இது தொடர்பில் மேற்­படி பிர­தேச மக்­க­ளி­டத்தில் வின­வி­ய­போது அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் பெற்­றுத்­த­ரு­வ­தாக 2015 ஆம் ஆண்டு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. எனினும் அந்த தொகை இது­வ­ரையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிட்­ட­வில்லை. இறு­தி­யாக இடம்­பெற்ற கூட்டு ஒப்­பந்­தத்தின் போதும் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று மேலும் 50 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கப்­போ­வ­தா­கவும் கூறினர். அமைச்­ச­ர­வை­யிலும் இதற்­கான அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­ற­தா­கவே கூறப்­பட்­டது. ஆனாலும் இது­வ­ரையில் அந்த 50 ரூபா கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அது­மாத்­தி­ர­மன்றி தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு முற்­பணத் தொகையில் மேலும் 5000 ரூபா பெற்­றுத்­த­ரப்­போ­வ­தா­கவும் தெரி­வித்­தனர். பின்னர் அதுவும் கிடைக்­க­வில்லை. இவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­ப­டு­வது புதி­தான விட­ய­மல்ல. கால­கா­ல­மாக தோட்டத் தொழி­லா­ளர்கள் அனைத்து தரப்­பி­ன­ராலும் ஏமாற்­றப்­ப­டு­கின்­றனர் என்­பதை எவரும் மறுப்­ப­தற்­கில்லை. இவ்­வா­றான நிலையில் தற்­போது 1500 ரூபா என்றும் 1000 ரூபா என்றும் பிர­தான வேட்­பா­ளர்கள் கூறு­கின்­றனர். இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஆகிய இரு தரப்­புக்­க­ளுமே மேற்­படி வாக்­கு­று­தி­க­ளுக்கு துணை நிற்­கின்­றன. 1500 ரூபாவை பெற்றுத் தரு­வ­தாக கூறும் புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் அதனை எவ்­வாறு பெற்­றுத்­தரப் போகிறார். அண்­மைக்­கா­ல­மாக 50 ரூபா­வுக்கே அங்­கீ­காரம் கிடைக்­காத பட்­சத்தில் ஒட்­டு­மொத்த தொழி­லா­ளர்­க­ளுக்கும் 1500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுத்­த­ரு­வ­தாக இருப்பின் அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் இதுவும் ஒரு வகையில் தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்றும் வாக்­கு­று­தியா என்­பது புரி­ய­வில்லை. அதே­போன்று மறு­பு­றத்தில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்­த­பாய 1000 ரூபா பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறு­கிறார். ஆனாலும் கூட்டு ஒப்­பந்தம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தற்­போது 1000 ரூபாவை வழங்­கு­வது என்­பது சாத்­தி­ய­மற்­றது. அத்­தோடு அடுத்த கூட்டு ஒப்­பந்­தத்­தின்­போது 1000 ரூபா பெற்­றுத்­த­ரப்­படும் என்று கோத்­த­பாய கூறு­வா­ரானால் அது இயல்­பா­கவே இடம்­பெறும் 1000 ரூபா அதி­க­ரிப்­புக்கு பெயர் போட்­டுக்­கொண்­ட­தா­கவே ஆகி­விடும். ஏனெனில் அந்த கூட்டு ஒப்­பந்­தத்தின் போது தோட்டத் தோழி­லா­ளர்­களின் நாட் சம்­பளம் 1000 ரூபாவை எட்­டி­விடும் என்­பது திண்­ண­மாகும். ஆகவே கோத்­த­பாய ராஜபக் ஷ கூறு­கின்ற 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தேர்தல் முடி­வுற்­றதும் பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளிக்க வேண்டும். அப்­படி இல்­லாது போனால் இதுவும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர் என்பது புரிகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியாக மாத்திரமே பார்க்கப்படுகின்றனர். ஆகவே இம்முறையேனும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றாது உண்மையானதும் இயலுமானதுமான வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/68770
 8. ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன்
 9. பிரிவால் துயர் கொண்டிருக்கும் சக உறவு வாதவூரன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்ளுகின்றேன்.
 10. "ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு. நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம். கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். 10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்." WOW! தொடர்ந்தும் இதை உரக்க கூற வேண்டும். உணர்வை ஊட்டி வளர்த்த குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.
 11. கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகள்! - ஆய்வுசெய்ய வரும் தனி அதிகாரிகள் கீழடியில் தற்போது கிடைத்த விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்ய, அதற்கெனத் தனி ஆய்வாளர்களை நியமித்து ஆய்வு செய்ய உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில், கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன. அதற்குப்பின், அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இது, கடந்த ஜூன் 13 -ம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஜூன் 25 -ம் தேதி, மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு சுற்றுசுவர், 5 அடி உயரம் கொண்ட உறைகிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், மிகவும் தொன்மையான சுடுமண்னாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் கிடைத்தன. தற்போது, விலங்குகள் இருந்ததற்கான சான்றாக, சிறிய எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. இதனைத் தனி ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த எலும்புகள், மனிதன் வளர்த்த செல்லப் பிராணியாகவோ அல்லது மனிதன் வேட்டையாடிய விலங்குகளாகவோ இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும் முழு ஆய்வுக்குப் பிறகுதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். விலங்குகளின் எலும்புகளை ஆய்வுசெய்ய, சென்னையிலிருந்து சிறப்பு ஆய்வாளர்கள் திங்கள் அன்று வர உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. https://www.vikatan.com/news/tamilnadu/in-keezhadi-bones-of-animals-found
 12. உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்ற தொடர் விசாரணை இலங்கை என்ற நாட்டில் நீதியை தேடிய தொடர் பயணம் என்ற போர்வைக்குள் அரங்கேற்றும் பல உள்குத்துக்களை காட்டுகின்றது. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு விசாரணை என்பதெல்லாம் கூட அரசியல். இது தொடர் தமிழன அழிப்பில் தொடங்கி இன்று சகல அரசியல் விசாரணைகளிலும் புற்று நோயாக பரவிவிட்டது.
 13. இலங்கை தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற மமதைத்தனம் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. நாட்டின் வர்த்தக முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது பல்வேறு துறைகளிலும் பாதிப்பை விளைவித்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக் குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதாக இப்போது கதை விடப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து குறித்த குண்டுத்தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதமே நடத்தியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்தலாமென இந்தியா வின் புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்த தான தகவல்களும் உண்டு. நிலைமை இதுவாக இருக்கையில், ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்கு தல் நடத்துவதை விட்டு விடுமாறு இந்த நாட்டின் ஜனாதிபதி பெளவியமான வேண்டுதல் ஒன்றை முன்வைத்திருந்தார். இவையயல்லாம் நடந்துமுடிந்த நிலையில் இப்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக் கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என படைத்தரப்பு அதிகாரிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்பாகக் கூறிவருகின்றனர். ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்கு தலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளே நடத்தினர் என முதலில் தெரிவித்தவர்கள் இப்போது அதிரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனக் கூறிவருகின்றனர். இவ்வாறு கூறுவதன் பின்னணியில் இருக் கக்கூடிய காரணங்கள் என்ன என்பது ஆய்வுக்குரிய விடயம். இவற்றுக்கு மேலாக ஒட்டுமொத்தமாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் எனக் கேட்டிருந்த பெளத்த பிக்குகள், இப்போது வாய்பொத்தி மெளனமாக இருக்கின்றனரெனில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் தாக்குதலை நடத்தவில்லை என்று கூறுவதற்கும் பெளத்த பிக்குகளின் மெளனத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா என்று ஆராய்வதும் அவசியமாகிறது. http://valampurii.lk/valampurii/content.php?id=19157&ctype=news
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.