Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by ampanai

  1. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 538 பேர் குணமடைந்துள்ளதுடன், 415 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-அதிகரிப்பு/175-250363

  2. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

    தொற்றாளர்களாக நேற்றைய தினம் 22 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். 

    கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 428 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-அதிகரிப்பு/175-250338

  3. ‘கிழக்கில் கொரோனா தொற்று இல்லை’

    சகா

    கிழக்கு மாகாணத்தில், அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் ஏற்படவில்லைனெவும் எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லையெனவும் தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் அழகையா லதாகரன், கிழக்கு மாகாண மக்கள், சுகாதார கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு வேண்டினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாகவது, “ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் இருவரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு, குணமாகி வீடு சென்றுள்ளனர். அதன்பிறகு யாரும் இனங்காணப்படவில்லை.

    “எனினும், ஒலுவில் துறைமுகக் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் சிலர் இனங்காணப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

    “மேலும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இதுவரை சிகிச்சைபெற்றுவந்த 62 பேரில் 61 பேர் பூரண சுகமடைந்து, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

    “இவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே அதாவது கொழும்பு, கம்பஹா, களுததுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்” என்றார்.

    http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கில்-கொரோனா-தொற்று-இல்லை/73-250329

  4. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 10 பேர் நேற்று (15) இரவு 11.30 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர். 

    இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது. 

    477 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 449 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறளரகளன-எணணகக-அதகரபப/175-250319

  5. தொற்றுநோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

    கொவிட் -19 வைரஸ் தொற்றுப்பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கூட எந்தவித அடையாளமும் காட்டாது தமது உடலில் வைரஸை காவிக்கொண்டு திரியும் மக்கள் நாட்டில் உள்ளனர் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர கூறினார். நாட்டில் ஏதோ ஒரு மூலையில் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்படுவார் என்ற சூழலே நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.


    கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் குறித்த வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

    உலகில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் முதற்கொண்டு இந்த காரணிகளை கூறி வருகின்றனர்.

    நாட்டில் வைரஸ் தொற்றாளர்களை தடுப்பதில் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப்போய் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் சமூக பரவலாக இது மாற்றமடைவது தடுக்கப்பட்டது.

    ஆகவே சமூகத்தில் பரவலாக நோயாளர்களை கண்டறிய முடியாது. ஆனால் சமூக பரவல் இல்லை என்ற காரணத்தினால் மக்கள் சகஜமாக நடமாட முடியாது.

    மக்களின் உடலில் இன்னமும் கொரோனா வைரஸ் காவப்பட்டுக்கொண்டே உள்ளது. எந்தவித அடையாளமும் காட்டாது தமது உடலில் வைரஸை காவிக்கொண்டு திரியும் மக்கள் நாட்டில் உள்ளனர்.

    அவ்வாறான நிலையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் செயற்பாடுகளில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். மக்களிடம் இன்னமும் வைரஸ் உள்ளது என்பதை மனதில் வைத்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து செயற்பட வேண்டும்.

    கொழுப்பு கம்பஹா மாவட்டங்கள் தவிருந்து ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் ஊரடங்கு தளர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் இன்னமும் வைரஸ் தொற்றுப்பரவல் குறித்த அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

    இந்த மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கூட மக்களின் அன்றாட செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுக்க தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலக வேலைகள் என அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    சுகாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட எப்போதாவது, எங்கோ ஒரு பகுதியில் கொவிட் -19 தொற்றுநோயாளர் கண்டுபிடிக்கப்படுவார். அவ்வாறு அடையாளம் காணக்கூடிய அறிகுறிகள் தென்பட்டுக்கொண்டே உள்ளது என்றார்.

    https://www.virakesari.lk/article/81901

  6. கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

    கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் இன்றைய தினம் (11) இதுவரை இனங்காணப்பட்வில்லையென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

    கொரோனா வைரஸ் தொற்றால் 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்கள்-பதிவாகவில்லை/175-250110

  7. இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரிப்பு: 321 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

    கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு ! ஏனைய 23 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு ! - சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள் மக்களே !

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.