Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by ampanai

  1. வதந்தியை நம்ப வேண்டாம் ! நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை ( ஆர்.யசி ) நாட்டின் ஏற்றிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் மிகத் தாராளமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதன் காரணத்தையும் மக்கள் மத்தியில் அனாவசிய அச்சம் ஏற்பட்டுள்ள காரணியையும் கருத்தில் கொண்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது. " இதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று நிலவவில்லை. போதுமான அளவு எரிபொருள் சகல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் காலத்தில் தட்டுப்பாடு நிலவாத வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. புரளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி எவரேனும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடைய செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/77735
  2. 11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக, 11 நாடுகளைச் சேர்ந்த சுற்லுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு, அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கமைய, இந்த தடை உத்தரவு நாளை (14) நள்ளிரவு முதல் அமுலாகுமென, விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/11-நடகளகக-தட-வதததத-இலஙக/175-246841
  3. வைரஸ் தாக்கிய இருவருடன் இருந்த 65 பேர் கண்டுபிடிப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகியுள்ள இருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 65 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவர்களில் 13பேர், ஏற்கெனவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். கொரோனா தாக்கத்துக்கு இலக்காகியிருந்த முதலாவது நபர் (சுற்றுலா வழிகாட்டி) நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டவர் என்பதோடு, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/வரஸ-தககய-இரவரடன-இரநத-65-பர-கணடபடபப/175-246835
  4. நன்றி சகோதரி. இவ்வளவு நாளும் எனது பார்வை இதற்கு மாறாக இருந்தது.
  5. கொரோனா வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை (ஆர்.விதுஷா) இலங்கை பிரஜையொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவஅதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆகவே ,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அந்த சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரிதஅளுத்கேயின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டிருந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , உலகசுகாதரஸ்தாபனம் கொரோனா (கொவிட்-19 )வைரசினைஉலகளாவிய ரீதியில் பரவலடையும் வைரஸ்என்றுஅறிவித்துள்ளது.. இதுவரையில், 114நாடுகளைசேர்ந்தஒரு இலட்சத்திற்கும்அதிகமானோர்இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காயிரம்பேர் மரணித்துள்ளதுடன்,மரணிப்பவர்களின் வீதம் நாளாந்தம்அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில்பரவலடைந்த சீனாவின் வூஹான் மாநிலம்தொடக்கம் ஏனையமாகாணங்களிலும் , தற்போது வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும் , இத்தாலி மற்றும் ஈரான், தென்கொரியா , ஆகியநாடுகளில்கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது. இதற்கமைய இலங்கை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளாகியஇலங்கை பிரஜையொருவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் , நோய்த்தொற்றுபரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம்காணப்படுகின்றன. இவ்விடயம்தொடர்பில் , அரச வைத்திய அதகாரிகள் சங்கம்தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செவ்வாக்கிழமை இவ்விடயம்தொடர்பிலான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் முன்னெடுத்திருந்தோம் . அந்த சந்திப்பின் போதுஜனாதிபதியிடம்தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிககவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பு நவடிக்கைளைமுன்னெடுத்து செல்ல வேண்டும். நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைதனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளைஅனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். ஊடக நிறுவனபிரதானிகளுடனானவிசேட சந்திப்பினைஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதற்கு மேலதிகமாக ஒருவேளை அவசரகால நிலைமை அறிவிக்கப்படுமாயின் அக்காலகட்டத்திற்கு தேவையான மருந்து மற்றும் சுகாதார வசதிகளை , களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும்வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருபவர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தல் மற்றும் நோய்க்காரணிகளை கண்டுபிடிக்கும் இயந்திர வசதிகளை பொதுமக்கள்இலகுவில் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தொம். நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்கும் , மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு , அரசாங்கமருத்துவசங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது. https://www.virakesari.lk/article/77685
  6. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள், பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன. இத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிவரை விடுமுறை அறிவித்துள்ளது. இன்று கொழும்பு ஆனந்தா கல்லூரி, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு சென்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது. இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையான மத்தேகொடையைச் சேர்ந்த நபரின் பிள்ளைகள் இருவர் ஆனந்தா கல்லூரியில் கற்பதாகவும், அவர்களுக்கும் அத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. எனினும் முதலில், குறித்த கொரோன நோயாளரின் மகன்மார் அங்கு கல்வி கற்கின்றனரா என ஆனந்தா கல்லூரியின் அதிபரிடம் வினவியது. இதற்கு பதிலளித்த ஆனந்தா கல்லூரியின் அதிபர் இரு மகன்மார் அக் கல்லூரியில் கல்வி பயில்வதாக பரவிய தகவல் பொய்யானது எனவும், ஒரு மகன் மட்டும் 12 ஆம் தரத்தில் கல்வி பயில்வதாக கூறினார். குறித்த 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த செவ்வாயன்றே இறுதியாக வருகை தந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னனியிலேயே குறித்த மாணவனுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறி, வதந்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் நோயாளியின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால், அது சார்ந்து பரவிய வதந்திகளையடுத்தும் இன்று காலை காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பாடசாலைக்கு சென்று விடயங்களை உரிய முறையில் அங்கிருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர். எவ்வாறாயினும் ஆனந்தா கல்லூரியில் கொரோனா வதந்திகளால் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் பாரிய பதற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அக் கல்லூரி அதிபர் கூறினார். எனினும் சில பெற்றோர் பிள்ளைகளை அச்சம் காரணமாக பாடசாலைக்கு அனுப்பாத சம்பவங்கள் பதிவானதாகவும், சிலர் மாணவர்களை மீள அழைத்துச் சென்றதாகவும் கூரிய அவர், விடயங்களை சுகாதார, கல்வி அமைச்சுக்களுக்கு அறிவித்ததாக சுட்டிக்காட்டினார். இதனிடையே கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர் சுற்றுலா சென்று தங்கியிருந்த இடங்களில் ஒன்றான திக்வெல்லை சுற்றுலா விடுதி ஒன்றில் சேவையாற்றுவோரின் பிள்ளைகள் குறித்த பகுதி பாடசாலைகளில் கற்பதை மையப்படுத்தி திக்வெல்லையிலும், அதனை ஒத்த சம்பவங்கள் தம்புள்ளையிலும் பாதிவாகியிருந்த.a இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/77684
  7. நன்றி தெளிவுபடுத்தியமைக்கு. ஆனால், தேநீர் இல்லை கோப்பியுடன் (அடிக்கடி) குடித்தால் கெடுதியானதாக இருக்குமா? ,peanut பட்டர் - ஒப்பீட்டளவில் கனடாவில் மலிவாக கிடைக்ககூடியது.
  8. 2:41 இல் இருந்து Azhagiya Laila ULLATHAI ALLI THAA வுடன் கேட்டேன், இன்னும் இனிமையாக இருந்தது
  9. நன்றி. இது கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது . இல்லாவிட்டால், இந்த நிலைமைக்குத்தான் அடியேன் போயிருக்கவேண்டும் 🙂
  10. இது மந்திரம். ஆனால், என்ன செய்வது, கடைப்பிடிப்பது தான் மகா கடினம். இந்த ஸ்வீட்னர் சீனியை விட கூடாது என்கிறார்கள் சிலர். அது பற்றி தங்கள் கருத்து என்ன?
  11. நன்று. உங்களின் (கொலஸ்டரோலை பற்றிய) ஆக்கத்தைதை வாசிப்பதற்கு முன்னர் நான் ஆட்டுக்கறி சாப்பாடு ஒன்றை சாப்பிட்டு வாறன் 🙂 LDL HDL இறைவா !
  12. நன்றி, அப்படித்தான் இருக்கும். தகப்பன் கூறியது சில மாதங்களுக்கு ஒரு முறை இந்த 'தைரொயிட்' அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று. "நோயற்ற வாழ்வே நிறைவான செல்வம்"
  13. ' தைரொய்ட் கான்சர் ; இல்லை என்று நம்புகின்றேன். அப்பா, அவ்வளவாக இதைப்பற்றி கதைப்பதில்லை. நானும், கேட்பதில்லை. தெரிந்தவரையில் அந்த சிறுவனுக்கு மூளையில் / தலையில் தான் புற்றுநோய்.
  14. நன்றிகள் சகோதரி. பயனுள்ள ஆக்கம், தொடரட்டும். ஒரு கேள்வி: நண்பரின் மகனுக்கு புற்றுநோய் உள்ளது. அவரின் வயது 17. சிலகாலமாக அதற்கு வைத்தியமாக 'கீமோ' செய்யப்படுகின்றது. அண்மையில், 'தைரொயிட்' வளர்ந்து வருகின்றது என கூறி ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இது மீண்டும் மீண்டும் நடக்ககூடிய சத்திரசிகிச்சை என்கிறார்கள். இது சரிதானா? இந்த சத்திரசிகிச்சையை தவிர்க்க முடியாதா?
  15. நீங்கள் எங்கள் வீடு வந்து அங்கு உங்களுக்கு நடந்த கதையை கூறியதும், அதுவே அந்த பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருந்த எனது வாழ்க்கையையும் மாற்றியது. வீர வணக்கங்கள் !
  16. கீழடி 6ம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு Image caption கோப்புப் படம் கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்துவரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவையும் கிடைத்து வருகின்றன. "கீழடி தொல்லியல் தொகுதியில் இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக கொந்தகை இருந்திருக்கிறது. இந்தப் பகுதியில் மேல்மட்டத்தைச் சுத்தம்செய்து ஆய்வைத் துவங்கிய நிலையில் சில முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அவை இன்னும் முழுமையாகத் தோண்டி எடுக்கப்படவில்லை" என மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார். இங்கு கிடைக்கும் முதுமக்கள் தாழிகள் இரண்டு விதங்களில் இருக்கலாம் என தொல்லியல் துறை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே ஓரிடத்தில் ஈமச்சடங்குகள் செய்யப்பட்ட மனிதர்களின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு முதுமக்கள் தாழியில் வைத்து திரும்பவும் புதைக்கப்படுவது. இவை இரண்டாம் நிலை முதுமக்கள் தாழி புதைப்புகள் எனப்படுகின்றன. இது தவிர, ஒருவர் இறந்தவுடனே அவருடைய சடலத்துடன் அவருக்கான பொருட்களை உள்ளே வைத்து புதைக்கப்படுவதும் இப்பகுதியில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழியை வெளியே எடுத்துப் பார்க்கும்போதுதான், அவை எந்த வகையிலானவை என்பது தெரியவரும். தாழிகளில் உள்ள எலும்புகளின் நிலை, தாழியின் உள்ளே உள்ள பொருட்களை வைத்து இது முடிவுசெய்யப்படும். இங்கிருந்து கிடைக்கும் எலும்புகளை டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது. இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. கீழடி பகுதியில் வாழ்ந்தவர்கள் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்த முன்வந்தது. 2018-19ல் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை நடத்தியது. இதில் 5820 தொல்பொருட்களும் பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் வெளிப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய 56 பானை ஓடுகளும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட 1001 பானை ஓடுகளும் கிடைத்தன. அதற்குப் பிறகு 47 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் சரியான இடங்களைத் தேர்வுசெய்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதிலும் செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. படத்தின் காப்புரிமை Getty Images இந்த நிலையில், நான்காம்கட்ட அகழாய்வின் முடிவுகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த கரிமத்தை பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கவனத்தை ஏற்படுத்தியது. தற்போது நடந்துவரும் ஆறாம்கட்ட ஆய்வில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் தொல்லியல் கள ஆய்வை மாநில அரசு நடத்தவுள்ளது. https://www.bbc.com/tamil/india-51643966
  17. until

    மாமனிதருக்கு நினைவு அஞ்சலிகள். அவரின் கனவுகள் ஒருநாள் நனவாகும்.
  18. "Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. " புதிய பெயருடன் புதிய பொலிவுடன் புதுமைகளை எதிர்பார்க்கிறேன் 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.