Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  10942
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by ampanai

 1. சீனாவுடனான பொருளாதார வழித்தட திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) பொருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார். இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர், ஆனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களின் முதலீடு பாகிஸ்தானுக்கு நன்மையே தரும் என்றார்.
 2. வணக்கம் கடஞ்சா, உங்கள் விரிவான பதிலுக்கு, தேடலுக்கு நன்றிகள். வாரஇறுதியில் நீங்கள் பகிர்ந்த இணைப்புக்களை வாசிக்க உள்ளேன். இந்த உலகத்திற்குள் நாங்களும் எங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லவேண்டும். மீண்டும் உங்களின் நேரத்திற்கும் இவை சம்பந்தமான கருத்துக்களுக்கும் நன்றிகள்.
 3. கடஞ்சா, இந்த எம்.சி.சி. இனை இதுவரை பெற்ற நாடுகள் பற்றி தெரியுமா? அந்தந்த நாடுகளில் என்னமாதிரியான அரசியல் ஆதரவு/எதிர்ப்புக்கள் இருந்தன? அங்கும் சீனாவின் தாக்கங்கள் இருந்தனவா? நன்றி
 4. இருபது வருசத்திற்குப்பின்னரும் தேடலில் இதுவே கிடைக்கலாம், உண்மையும் ஆகிவிடும்
 5. நிலத்தாலும் நீராலும் அமெரிக்கா தவிர்ந்த கண்டங்களை இணைக்கும் திட்டம்.
 6. மொட்டு விரிந்ததால் மட்டுமே அமெரிக்கா இதை கையில் எடுக்கும் நிலை வந்துள்ளது/வரும். அன்னம் பறந்திருந்தால், அமெரிக்கா இதை கையில் எடுக்கும் தேவை அநேகமாக வந்திருக்காது. இந்தியாவை பொறுத்தவரையில் மனித உரிமைகளை, போர் குற்றங்களை தானாக கையில் எடுக்காது. ஆனால், அமெரிக்கா எடுத்தால் ஆதரிக்கும். இந்தியா வடக்கிலும் கிழக்கிலும் முதலீடுகளை இந்த ஐந்து வருடத்திற்க்கு செய்ய சிங்களம் விடுமா என்பதையும் காலம் தான் சொல்லும். பலாலி விமான நிலைய அபிவிருத்திகளை கூட ரணில் அரசு அவசரமாய் செய்து முடித்தது. இந்தியாவிற்கு சஜித் தோற்றால் அது முடியாமல் போய்விடும் என தெரிந்திக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
 7. 1962 conflict with China significantly damaged India's standing at world stage: S Jaishankar Nov 14, 2019, 08.35 PM IST India's position at world stage seemed assured but the 1962 conflict with China significantly damaged the country's standing, External Affairs Minister S Jaishankar said on Thursday. "If the world is different (today), we need to think, talk and engage accordingly. Falling back is unlikely to help," he said, adding "purposeful pursuit of national interest is shifting global dynamics." https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1962-conflict-with-china-significantly-damaged-indias-standing-at-world-stage-s-jaishankar/articleshow/72059047.cms
 8. Status Of Force Agreement SOFA : The other irritant in US-Lanka relations could be the US anxiety to get Colombo to move forward on the Millennium Challenge Corporation’s projects which have already been approved by the Lankan cabinet. While Gotabaya might take the US$ 480 million MCC project forward by getting it parliamentary approval, he would be most reluctant to sign the Status of Forces Agreement (SOFA), which, in its new avatar, would turn Lanka into a US military base.But given the American fear that the Chinese might use Hambantota harbor as a naval base sooner or later, exploiting the 99 year lease they enjoy, the Americans are unlikely to give up on SOFA. மகிந்த ஆட்சி போன்று கோத்தாவும் சீனாவுடன் அதிகரித்த உறவை பேணுவார் என இந்தியாவும் அமெரிக்காவும் எண்ணி காய்களை நகர்த்தவேண்டிய நிலை.
 9. நாம் இந்த விடயத்தில் எதை முயற்சித்தோம் என தெரியவில்லை. முயற்சிக்கும் அளவிகிற்கு எம்மிடம் அரசியல் தலைமையும் இல்லை என்றே நம்புகின்றேன். ஆனால், எமக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை அடையக்கூடிய தலைமையை உருவாக்கவேண்டும்.
 10. #1 : தென்கிழக்கு ஆசிய கடல் எல்லையை பொறுத்தவரையிலும் பிரிக்கப்பட முடியாத இறைமை என்னும் அடிப்படையில் சீனாவின் தொடர்ச்சியான ஆதிக்கமே 80% ஆன கடல் பிராந்தியம் சீனாவுக்கு சொந்தமானது #2: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்ததாக பொருளாதார வல்லரசாகவும், ஆசியாவின் இராணுவ வல்லரசாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவமும் பெற்றது சீனா #3: இந்தியாவின் விஷயத்தில், சீனா எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள் 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா தொடர்ச்சியாக தனது எல்லை மீள்நிர்ணயத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது
 11. இந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.
 12. யாழ் கள உறவின் ஞாபகார்த்த நினைவஞ்சலிகள்.!
 13. நூறு கோடிகளை தேர்தலுக்காக செலவழிக்கும் சிங்கள தலைமைகள். நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் இவர்களுக்கு சம்பள உயர்வை மறுக்கின்றனர். காரணம் - இவர்கள் தமிழர்கள். இவர்கள் எப்படி அதி உச்ச அரசியல் தீர்வை தருவார்கள் என சம்பந்தர் கூறுவார்?
 14. பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் மலை­யக மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து வரு­கின்­றனர். எனினும் இழு­பறி நிலைக்­குள்­ளாகி வரும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் மீண்டும் ஒரு ஏமாற்­றத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­காது இதி­லுள்ள தெளி­வுத்­தன்­மை­களை மக்­க­ளி­டத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. பசறை, லுணு­கலை மற்றும் கோணக்­கலை ஆகிய பெருந்­தோட்ட புறங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் தாம் இவ்­வி­ட­யத்தில் குழப்­ப­ம­டைந்­தி­ருப்­ப­தா­கவும் எவ்­வாறு இத்­தொ­கை­யினை தரப்­போ­கின்­றனர் என்று புரி­யா­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள அதே­வேளை தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் தமது கோரிக்­கையை ஏற்று நிலைப்­பா­டு­களை பகி­ரங்­க­மாக அறி­விக்­கு­மாறு குறிப்­பி­டு­கின்­றனர். இது தொடர்பில் மேற்­படி பிர­தேச மக்­க­ளி­டத்தில் வின­வி­ய­போது அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் பெற்­றுத்­த­ரு­வ­தாக 2015 ஆம் ஆண்டு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. எனினும் அந்த தொகை இது­வ­ரையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிட்­ட­வில்லை. இறு­தி­யாக இடம்­பெற்ற கூட்டு ஒப்­பந்­தத்தின் போதும் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று மேலும் 50 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கப்­போ­வ­தா­கவும் கூறினர். அமைச்­ச­ர­வை­யிலும் இதற்­கான அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­ற­தா­கவே கூறப்­பட்­டது. ஆனாலும் இது­வ­ரையில் அந்த 50 ரூபா கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அது­மாத்­தி­ர­மன்றி தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு முற்­பணத் தொகையில் மேலும் 5000 ரூபா பெற்­றுத்­த­ரப்­போ­வ­தா­கவும் தெரி­வித்­தனர். பின்னர் அதுவும் கிடைக்­க­வில்லை. இவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­ப­டு­வது புதி­தான விட­ய­மல்ல. கால­கா­ல­மாக தோட்டத் தொழி­லா­ளர்கள் அனைத்து தரப்­பி­ன­ராலும் ஏமாற்­றப்­ப­டு­கின்­றனர் என்­பதை எவரும் மறுப்­ப­தற்­கில்லை. இவ்­வா­றான நிலையில் தற்­போது 1500 ரூபா என்றும் 1000 ரூபா என்றும் பிர­தான வேட்­பா­ளர்கள் கூறு­கின்­றனர். இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஆகிய இரு தரப்­புக்­க­ளுமே மேற்­படி வாக்­கு­று­தி­க­ளுக்கு துணை நிற்­கின்­றன. 1500 ரூபாவை பெற்றுத் தரு­வ­தாக கூறும் புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் அதனை எவ்­வாறு பெற்­றுத்­தரப் போகிறார். அண்­மைக்­கா­ல­மாக 50 ரூபா­வுக்கே அங்­கீ­காரம் கிடைக்­காத பட்­சத்தில் ஒட்­டு­மொத்த தொழி­லா­ளர்­க­ளுக்கும் 1500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுத்­த­ரு­வ­தாக இருப்பின் அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் இதுவும் ஒரு வகையில் தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்றும் வாக்­கு­று­தியா என்­பது புரி­ய­வில்லை. அதே­போன்று மறு­பு­றத்தில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்­த­பாய 1000 ரூபா பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறு­கிறார். ஆனாலும் கூட்டு ஒப்­பந்தம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தற்­போது 1000 ரூபாவை வழங்­கு­வது என்­பது சாத்­தி­ய­மற்­றது. அத்­தோடு அடுத்த கூட்டு ஒப்­பந்­தத்­தின்­போது 1000 ரூபா பெற்­றுத்­த­ரப்­படும் என்று கோத்­த­பாய கூறு­வா­ரானால் அது இயல்­பா­கவே இடம்­பெறும் 1000 ரூபா அதி­க­ரிப்­புக்கு பெயர் போட்­டுக்­கொண்­ட­தா­கவே ஆகி­விடும். ஏனெனில் அந்த கூட்டு ஒப்­பந்­தத்தின் போது தோட்டத் தோழி­லா­ளர்­களின் நாட் சம்­பளம் 1000 ரூபாவை எட்­டி­விடும் என்­பது திண்­ண­மாகும். ஆகவே கோத்­த­பாய ராஜபக் ஷ கூறு­கின்ற 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தேர்தல் முடி­வுற்­றதும் பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளிக்க வேண்டும். அப்­படி இல்­லாது போனால் இதுவும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர் என்பது புரிகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியாக மாத்திரமே பார்க்கப்படுகின்றனர். ஆகவே இம்முறையேனும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றாது உண்மையானதும் இயலுமானதுமான வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/68770
 15. ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன்
 16. பிரிவால் துயர் கொண்டிருக்கும் சக உறவு வாதவூரன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்ளுகின்றேன்.
 17. "ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு. நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம். கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். 10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்." WOW! தொடர்ந்தும் இதை உரக்க கூற வேண்டும். உணர்வை ஊட்டி வளர்த்த குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.