Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by ampanai

  1. 10.05.2020. 7.30 pm. (ஞாயிற்றுக்கிழமை) ......................... இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. ......................... இன்று 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆயவு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்: * போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர் * பொது வைத்தியசாலை வவுனியா - 3 பேர். * பாதுகாப்பு பிரிவினர் கோப்பாய் - 2 * பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் - 19 பேர் * பாதுகாப்பு பிரிவினர் பலாலி -ஒருவர்
  2. மேலும் மூவருக்கு தொற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூவருக்கு-தொற்று/175-249994
  3. இலங்கை முழுவதும் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்...!
  4. கொரோனாவை முற்றாக அழித்துவிடவில்லை ! சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு https://virakesari.lk/article/81554 இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்தது 400 பேர் கடற்படையினர்
  5. கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது. கொரோன தொற்றிலிருந்து நேற்றைய தினம் (07) 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய 232 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறளர-எணணகக-உயரவ/175-249934
  6. 07.05.2020 - 10.00 மணி வரையிலான இலங்கையின் நாளாந்த நிலைமை..!
  7. கொவிட்-19 பாதுகாப்பு உடை: மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்
  8. தாதிக்கு கொரோனா தொற்றில்லை.! கொரோனா தொற்றென நேற்று அடையாளம் காணப்பட்ட மூவருக்கும் தொற்றில்லையாம் ! கொரோனா; தொற்று என நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொலன்னாவ , ராஜகிரிய பகுதிகளை சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தொற்று இல்லையென்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக அவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/81486
  9. இலங்கையில் கொரோனாவால் 9ஆவது மரணம் பதிவானது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 'ஐடிஎச்'இல் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 197 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-கரனவல-9ஆவத-மரணம-பதவனத/150-249760
  10. இலங்கையில் கொரோனாவால் 08ஆவது மரணம் பதிவானது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 08 மரணம் இன்று (04) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 72 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநாகல் பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 519பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-கரனவல-08ஆவத-மரணம-பதவனத/150-249735
  11. யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம் | (தி.சோபிதன்) யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி இன்று வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் மதியம் வெளியாகும். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/81333
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.