Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by ampanai

  1. ’மட்டக்களப்பில் எவருக்கும் தொற்று இல்லை’

    கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

    மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை என்றும் தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட 62 பேருக்கு தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய கலாநிதி எம்.அச்சுதன் தெரிவித்தார்.

    சுகாதார பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    மட்டக்களப்பில் எதுவித கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாதவாறு தடுப்பு நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    “உலகளாவிய ரீதியில் கொவிட்19 வைரஸ் தாக்கம் அதிகரித்துவருகின்ற நிலையில், இலங்கையில் இந்தத் வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஜனாதிபதி தலைமையில் தேசிய மட்டத்தில் செயலணி உருவாக்கப்பட்டு, இதற்கு தேவையான மிகவும் காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டு, எங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. அவற்றை மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் உன்னிப்பாக நடைமுறைப்படுத்திக் கொண்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடடககளபபல-எவரககம-தறற-இலல/73-249666

  2. 02.05.2020. 9.00 pm ( சனிக்கிழமை)
    .........................

    இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

    .........................

    இன்று 52 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

    * போதனா வைத்தியசாலை - 5 பேர்.

    * போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.`

    * பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 3 பேர்.

    * பொது வைத்தியசாலை மன்னர் - 2 பேர்.

    * பொது வைத்தியசாலை வவுனியா - 3 பேர்.

    * விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் - 36 பேர்.

     

    படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  3. 01.05.2020. 8.45 pm. (வெள்ளிக்கிழமை)

    .........................

    முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இன்று போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி ( 40 வயது ஆண்)

    .........................

    இன்று 39 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

    * போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்.
    ( இவர்களில் 9 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட வர்கள்)

    * போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.

    * வவுனியா பொது வைத்தியசாலை - ஒருவர்.

    * முல்லைத்தீவு கேப்பாபிளவு தனிமைப்படுத்தல் நிலையம் - ஒருவர் ( 80 வயது முதியவர் இன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இறப்பு உறுதி செய்யப்பட்டவர்)

    * பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் - 4 பேர் ( அரியாலை போதகரோடு கூடிய அளவில் தொடர்பை கொண்ட 20 பேரில் ஏற்கனவே 16 பேர் தொற்று உள்ளவர்களாக உறுதிப் படுத்தப்பட்டு விசேட சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் )

    * வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர்.

    * பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்த நிலையம் , கிளிநொச்சி - 5 பேர்.

  4. 30. 04.2020. 6.30 pm. (வியாழக்கிழமை)

    .........................

    முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி.
    ( மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று என் 13 ஏப்ரல் உறுதிப்படுத்தபட்டது.)

    ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.

    .........................

    இன்று 76 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
    பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

    * போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்.

    * போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

    * ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.

    * வவுனியா பொது வைத்தியசாலை - 3 பேர்.

    * முல்லைத்தீவு பொது வைத்தியசாலை - ஒருவர்.

    * முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.

    * முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் - 54 பேர்.
    (வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் )

  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்கவும்

    அப்துல்சலாம் யாசீம், கதிரவன், வடமலை ராஜ்குமார்

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

    கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் ஒரு கட்டமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

    திருகோணமலை மாவட்டத்தில்  கிண்ணியா, நிலாவெளி, கப்பற்றுறை வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்துளை பெற்றுக் கொள்ளுமாறும், அவர் தெரிவித்தார். 

    இதேவேளை, இஞ்சி, வெள்ளைப் பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    http://www.tamilmirror.lk/திருகோணமலை/நோய்-எதிர்ப்பு-சக்தியை-அதிகரிக்கும்-மருந்துகளை-பாவிக்கவும்/75-249508

  6. நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

    நாளை (30) இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

    கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம், மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நள-மதல-நடளவய-ரதயல-ஊரடஙக/150-249485

  7. 28. 04.2020. 5.30 pm. (செவ்வாய்க்கிழமை)

    78 பேருக்கும் கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.

    கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து 78 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
    பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

    * போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

    * போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்

    * வவுனியா பொது வைத்தியசாலை - 4 பேர்.

    * யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள்(சாரதி மற்றும் உதவியாளர்) - 30 பேர்

    * வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) - 10 பேர்

    * மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் - 13 பேர்.

  8. https://covid19.gov.lk/tamil/

     

    இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்


    COVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது, உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும் குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

  9. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபருக்கு 600 ரூபா தண்டம்

    ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

    யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

    ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்டமை, தண்டனைச் சட்டக்கோவை 264 ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் அந்த நபர் மீது முன்வைத்து குற்றப்பத்திரம் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.
     

    சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று (28.04.2020) செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

    சந்தேக நபர், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனால் அவரை குற்றவாளியாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபாய் தண்டப் பணமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபாய் தண்டப்பணமும் விதித்து உத்தரவிட்டது.

    இதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264 ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொள்ளும் நபர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரத்து 500 ரூபாயை விஞ்சாத தண்டம் அல்லது சிறை மற்றும் தண்டப்பணம் அறவீடு ஆகிய தண்டனைகளை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    https://www.virakesari.lk/article/80947

  10. கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவித்தல்

    நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவித்தலை, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார். 

    இதற்கமைவாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    காய்ச்சல், இரத்தம் வெளியேறல், கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் பிரச்சினை, வலிப்பு, பார்வை குறைபாடு, மார்பு, வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைவு, உடல் வீக்கம் உள்ளிட்ட, ஏனைய அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், வைத்தியசாலைகளில் சன நெரிசலைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கிளினிக் செல்ல வேண்டுமாயின், கர்ப்பிணிகள் அது குறித்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    http://www.tamilmirror.lk/செய்திகள்/கர்ப்பிணிகளுக்கு-விசேட-அறிவித்தல்/175-249407

  11. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது. 

    அந்தவகையில் இன்று (27) மட்டும் 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

    http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறற-588-ஆக-உயரவ-ஒர-நளல-65பரகக-தறற/150-249365

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.