Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by ampanai

  1. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 32 கொரோனா தொற்றாளர்கள் எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொரனா உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட 32 பேர், நேற்று முன்தினம் (20) கொண்டு வரப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார சேவைகள் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் மாலை கொரோனா உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் 26 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மேலும் 6 பேரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது. திங்கட்கிழமை மாலை கொண்டுவரப்பட்டவர்களில் 15 பெண்கள் 8 ஆண்கள் 3 சிறுவர்கள் அடங்குவதாவும் இவர்களில் இருவருக்கு இன்னும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரியவருகின்றது. இவர்கள், கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது. இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸார் ஆகியோரின் பலத்த பாதுகாப்புடன் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர். காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/காத்தான்குடி-ஆதார-வைத்தியசாலையில்-32-கொரோனா-தொற்றாளர்கள்/73-249046
  2. பேருவளையில் 11 பேருக்கு கொரோனா தொற்று பேருவளை பகுதியிலிருந்து புணானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 219 பேரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று (22) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் தெரிவித்தார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 17 பேர், கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனரென அவர் தெரிவித்தார். பேருவளை பகுதியிலுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 47 பேர், இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, களுத்துறை மாவட்டத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-11-பேருக்கு-கொரோனா-தொற்று/175-249071
  3. கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 322ஆக அதிகரிப்பு கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக 11 பேர் இன்று (22) இனங்காணப்பட்டிருந்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்-எண்ணிக்கை-322ஆக-அதிகரிப்பு/175-249067
  4. கொழும்பு எமக்கு நல்ல படிப்பினை ; யாழில் சமூகத்தொற்று இல்லையென கூற முடியாது - வைத்தியர் காண்டீபன் 6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் கலாநிதி த. காண்டீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் சமூக மட்டத்தில் தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயேயே கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கொரோனா தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என வடக்கு சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளன. கொழும்பில் நேற்று ,நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ள தொற்றுகள் அனைத்தும் நோய் அறிகுறி இல்லாது ஏற்பட்ட தொற்றாகவே நாம் பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் இன்றுவரை 360 பேர் வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பரிசோதனையானது மூன்று நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் வரை யாரும் யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று இன்னும் ஏற்படவில்லை என்பதை கூற முடியாது. எனவே நாங்கள் வடக்கிலுள்ள சுகாதார திணைக்களத்தினரிடம் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றோம். யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகருடன் தொடர்பு பட்ட நபர்களுக்கே கொரோனாபரிசோதனையை இன்றுவரை மேற்கொண்டுள்ளோம். ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பரிசோதனையை மேற்கொண்டு விட்டு நாம் சமூகத்தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது. எனினும் யாழ்ப்பாணத்தை பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள். அவர்கள் தொடர்பில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக உள்ளது.எனவே வடக்கில் கொரோனாபரிசோதனையை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து அந்த பரிசோதனை முடிவின் பின்னரே நாம் சமூகத்தொற்று உள்ளதா இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/80519
  5. கொழும்பைச் சேர்ந்த 99 பேர் பலாலி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி இராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் இன்று புதன்கிழமை காலை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இவர்கள் அனைவரும் பலாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விரைவில் கொரோனா தொற்று பரிசோதனைகளும் நடைபெறவுள்ளது. இந்த பரிசோதனையை யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை பலாலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இதனால் ஏற்கவனே யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்திய போது அவர்கள் முறையாக கவனிக்க, தங்க வைக்கப்படாததன் காரணமாக கொரோனா தொற்று பலருக்கு ஏற்பட்டதாக அரச வைத்திய சங்கத்தின் வடக்கு மாகாண கிளையினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் கொழும்பை சேர்ந்த 99 பேர் திடீரென பலாலியில் தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/80504
  6. தற்போதைய அசாதாரண நிலைக்கு முன்னர் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் துவிச்சக்கர வண்டி ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்களை சுகதேகியாக உறுதிப்படுத்திக் கொண்டார்கள். Dr Shanmugarasa ற்கு அப்போது அவரது துணைவியார் சமூக இடைவெளியுடன் கூடிய உந்துதலை வழங்கியதால் விரைவாக ஓடி முடித்தார். அவர் கொரோனா தடுப்பில் தற்போது ஒரு மிக முக்கியமான கடமை செய்து கொண்டிருக்கின்றார்.
  7. கட்டுநாயக்கவில் பணியாற்றிய பெண்ணிடமிருந்து ஒருவருக்கு தொற்று வரக்காபொல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்குள்ளான பெண் தங்கியிருந்த வீட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வரக்காபொல பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர் நேற்று (21) இரவு ஐ.டீ.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய குறித்த பண் தங்கியிருந்து வீட்டார் தனிமைப்படுதத்லுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவர் பீ.சீ.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கட்டுநாயக்கவில்-பணியாற்றிய-பெண்ணிடமிருந்து-ஒருவருக்கு-தொற்று/175-249038
  8. கொரோனா தொற்றால் பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 100 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ள காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறல-பனனபபடடய-தனயர-வததயசலககப-படட/175-249036
  9. குணமடைந்தவர் எண்ணிக்கை நூறானது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, தற்போது வரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை நூறானது. இதுவரை 309 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 202 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/குணமடைந்தவர்-எண்ணிக்கை-நூறானது/175-249013
  10. கிராமப் புறங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:14 - 0 - 6 -ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், கொரோனா வைரஸ் தொற்று; தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ தெரிவித்தார். இந்த விழிப்பூட்டல் நடவடிக்கை, நேற்று (19) ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற கிராமங்களில் இடம்பெற்றது. இதன் ஓர் அங்கமாக, கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் சமுக சேவையாளர்களுக்கும், கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பிலும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக மரண வீடுகளிலும் நிவாரணங்கள் பெறும்போதும் மிகவும் எச்சரிக்கையுடன் பொலிஸாரினதும் சுகாதாரப் பிரிவினரதும் ஆலோசனைக்கமைவாக பொதுமக்கள் செயற்படவேண்டியது அவசியம் எனவும் அறிவுரை வழங்கப்படுகின்றது. விழிப்பூட்டலில் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிராமப்-புறங்களில்-கொரோனா-வைரஸ்-தொற்று-தொடர்பான-விழிப்புணர்வு/73-248972
  11. மீன் வியாபாரியே 304ஆவது கொரோனா தொற்றாளராகப் பதிவு இலங்கையில் இன்று 304ஆவதாக உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மீன் வியாபாரி என பிலியந்தல சுகாதார சேவை வைத்திய அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார். பிலியந்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் இவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குரிய அடையாளம் காணப்பட்டதையடுத்து, இன்று மாலை கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இவர் இன்று பகல் சென்ற குறித்த பிரதேசத்திலுள்ள சட்டத்தரணி, கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் வீடுகளிலுள்ள 11 பேரை சுயதனிமைக்குட்படுத்தியுள்ளதாகவும் இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மீன்-வியாபாரியே-304ஆவது-கொரோனா-தொற்றாளராகப்-பதிவு/175-248996
  12. ’அடுத்த 2 வாரங்கள் மிகுந்த அவதானம் தேவை’ கொவிட் 19 வைரஸ் குறித்து அடுத்த இரண்டு வாரங்கள் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்நாயகம் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காவிட்டால், நோய் தொற்று ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவருக்கு, நோய் அறிகுறிகள் தென்படாத நேரங்களில், அது ஏனையவருக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/80383
  13. யாழில் ஊடரங்கு தளர்வையடுத்து சமூக இடைவெளியை பேணுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டத்தை அடுத்து வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டதுடன், பொது போக்குவரத்தும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்துள்ளனர். இவ்வாறு வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்களை சமூக இடைவெளி பேணவேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவம் அறிவுறுத்தி வருகின்றன. குறிப்பாக பஸ்களில் பயணம் செய்பவர்களும், வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொது மக்களும் சமூக இடைவெளி பேணுமாறு படைத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றார்கள். https://www.virakesari.lk/article/80349
  14. ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா கொரோனா தொற்றாளர்களாக நேற்று (19) இனங்காணப்பட்ட 17 பேரில் 10 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சென்று மார்ச் மாதம் 12 ஆம் திகதி நாடு திரும்பிய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணின் குடும்ப உறவினர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒர-கடமபததல-10-பரகக-கரன/175-248908
  15. திரு எஸ் கே நாதன் அவர்கள் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பை வழங்கினார். வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடத்திற்கு தேவையான Video Laryngoscope இரண்டினை அண்மையில் வழங்கினர்.இவற்றின் பெறுமதி 3.5 மில்லியன் ரூபாய்கள். இது தவிர கொரேனா தடுப்புக்கான தற்காப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கும் இதனோடு தொடர்புடைய செயற்பாடுகளுக்கும் அன்பளிப்பை வழங்கினார். திரு. நாதன் வடபகுதியில் கடந்த பல வருடங்களாக பல உதவித் திட்டங்களை செய்து வருவது யாவரும் அறிந்ததே. குறிப்பாக இக்காலப்பகுதியில் பல்லாயிரம் குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருவதை யாவரும் நன்கு அறிவார்கள். அவருடைய சேவையை பாராட்டுவதில் யாழ் வைத்தியசாலை சமூகமும் பெருமை படுகின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.