Jump to content

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10942
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by ampanai

  1. பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொரோனா தொற்றுடைய நபர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் இன்று (19) வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று தீவிரத் தன்மை குறைவடைந்து வந்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பொதுமக்களுக்கு-எச்சரிக்கை/175-248885
  2. இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்வு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (19.04.2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுவரை 269 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 166 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 122 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள். அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். https://www.virakesari.lk/article/80315
  3. சிகை_அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள் நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும். கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். அறிவுறுத்தல்கள்: 1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் #சமூக_இடைவெளியைப் பேணவும். 2. முடி திருத்துநர்கள் கட்டாயமாக #முகக்_கவசம் அணிந்திருத்தல் வேண்டும். 3. முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் #கைகளை சரியான முறையில் #ஓடும்_நீரில் #சவர்க்காரம் கொண்டு #கழுவ வேண்டும். 4. மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள். 5. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் #ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி #தொற்று_நீக்கம் செய்யவும். தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். 6. #போர்வை, #துவாய், #பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்தபின் எறியவும். துவாய்கள், போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும். இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடமாகாணம்.
  4. எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயம் : எச்சரிக்கும் நிபுணர்கள்..! கொரோனா தொற்றினால், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் எந்த அளவுக்கு உதவுகிறது. அதேபோல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் இந்த முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மிக பாரதூரமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்திய முகக்கவசங்களை பொதுமக்கள் சாதாரண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இவ்வாறு தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபயாம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, கொரோனா தொற்றினால் பாதித்த ஒருவர் வீசும் ஒரு முகக்கவசத்தால் 10 பேருக்கு கொரோனா பரவும் என்றால், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், ஒவ்வொரு கொரோனா நோயாளி பயன்படுத்திய முகக்கவசங்களும் எத்தனை பேருக்கு கொரோனாவைப் பரப்பும் என்று கணக்கிட்டால் அது நிச்சயம் நிலைமையை மேலும் விபரீதமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஒருவருக்கு கொரோனா இல்லை, பாதுகாப்புக்காகத்தான் முகக்கவசம் அணிகிறார். அவர் தூக்கி எறியும் முகக்கவசத்தால் எப்படி கொரோனா பரவும் என்று கேட்கலாம்.. அதாவது, அவர் அருகில் நின்றவர் இருமியோ அல்லது தும்மியோ இருந்தால், இந்த நீர்த்திவலை மூலம் முகக்கவசத்தில் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கலாம். அதைத் தூக்கி எறிந்தால் கொரோனா பரவும். அவ்வாறு இல்லாமல், சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான். எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/80308
  5. களுத்துறையில் 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவு களுத்துறை மாவட்டத்தில் நேற்று (18) வரை 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் 14 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/களுத்துறையில்-50-கொரோனா-தொற்றாளர்கள்-பதிவு/175-248855
  6. இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 250ஐத் தாண்டியுள்ளது Editorial / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 12:10 - 0 - 27 இலங்கையில் மேலும் ஆறு பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இப்புதிய தொற்றுக்களானவை வெலிசறையிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 254ஆக உயர்ந்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-COVID-19-தொற்றுக்குள்ளானோரின்-எண்ணிக்கை-250ஐத்-தாண்டியுள்ளது/175-248825
  7. ‘வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’ கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை படிப்படியாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இக்காலப்பகுதியில் நமது சேவை நிலையங்களிற்கு சமூகமளித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பேஸ்புக் வலைத்தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். நாம் பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகளின் மூலமே இந்த முடிவை எடுத்ததோடு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும். இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைக்கு அமைய செயற்படுவதன் மூலமே இந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என பதிவிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/வெளியில்-நடமாடுவதை-தவிர்த்துக்கொள்ள-வேண்டும்/175-248819
  8. வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளிலேயே இருப்பார்கள்.
  9. கொழும்பில் 49 பேருக்கு கொரோனா தொற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவடடத்தில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கல்முனை, காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்தளவானோரே பாதிக்கப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியர் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கொழும்பில்-49-பேருக்கு-கொரோனா-தொற்று/175-248784
  10. 18.04.2020. 7 am ......................... வவுனியா மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு ( Contact Screening) கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில்மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. Dr. Thangamuthu Sathiyamoorthy
  11. கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் குணமடைந்தனர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்று (17) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றிலிருந்து-77-பேர்-குணமடைந்தனர்/175-248770
  12. மேலும் மூவருக்கு கொரோனா தொற்று Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 05:12 - இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 241ஆக அதிகரித்துள்ளது. புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், 7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூவருக்கு-கொரோனா-தொற்று/175-248760
  13. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ், எப்போதுதான் முடிவுக்கு வரும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
  14. 24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை Editorial / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 08:28 கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பூரண குணமடைந்த ஐந்து பேர் நேற்று (16) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக காணப்படுகின்றது. இதுவரை இலங்கையில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது 163 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/24-மண-நரததல-கவட19-தறறளர-இலல/150-248715
  15. யாழ்ப்பாணத்தில் இயங்கும் PCR இயந்திரம் கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.
  16. பேருவளையில் 65 பேருக்கு இன்று பீ.சி.ஆர் சோதனை கொவிட் 19 வைரஸ் தொற்றினால், பேருவளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, சீனக் கொட்டுவ, பன்னில பிரதேசங்களைச் சேர்ந்த 65 பேருக்கு இன்று (16) பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலாவது தொற்றாளரின் மனைவி, குழந்தை, மனைவியின் தாய், தந்தை உள்ளிட்ட நால்வரும் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 219 பேர், புணானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 17 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-65-பேருக்கு-இன்று-பீ-சி-ஆர்-சோதனை/175-248710
  17. 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் இருந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். குறித்த சிறுமி ஏற்கெனவே குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண சடங்கில் பங்கேற்க சென்றவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/9-வயது-சிறுமிக்கு-கொரோனா-தொற்று/175-248708
  18. இலவசமாக முகக் கவசங்கள் வழங்கி வைப்பு Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 03:28 எம்.எம்.அஹமட் அனாம் கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பு, கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் வாழைச்சேனை பொது மைதானத்திலும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திலும் இயங்கி வரும் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும், இன்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், வர்த்தக சங்கத்தினர், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின்; நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் என பலர் கலந்துகொண்டனர். அத்தோடு கொரோனா நோயில் இருந்து மக்களையும் பிரதேசத்தையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதுத் தொடர்பிலான சுவரொட்டிகளும் பொது இடங்களில் ஒட்டப்பட்டன. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/இலவசமாக-முகக்-கவசங்கள்-வழங்கி-வைப்பு/73-248697
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.