• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

லக்கிலுக்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,410
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About லக்கிலுக்

 • Rank
  Advanced Member

Recent Profile Visitors

1,210 profile views
 1. அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது. அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து வைத்ததை யார் கண்டார்களோ, இல்லையோ அவன் கண்டுகொண்டான். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அவன் தங்கையோ விவஸ்தைகெட்ட தனமாக, “ஆமாம் அண்ணி. இவனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு குடுகுடுப்பைகாரனுங்க கூட சொல்லியிருக்கானுங்க. பையன் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. உஷாரா பார்த்துக்கங்க” என்றாள். மையம் கொண்ட புயல் வலுவடைந்து முதலிரவில் பலத்த காற்றோடு வீசியது! முதன்முதலாக மனைவியோடு சினிமாவுக்கு போனான். “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிபேசக் கூடாதா?” என்று நாயகி நாயகனை திரையில் கொஞ்ச மெய்மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தலையில் ஒரு கொட்டு விழுந்தது. “நான் பக்கத்துலே இருக்கும்போது அவளையே ஏன் முறைச்சிப் பாக்குறே? இங்கே பாரு.” “எவளை? நான் யாரையும் பாக்கலையே?” அக்கம்பக்கத்தில் யாராவது கவனித்து விட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டான். “அதான் ஸ்க்ரீன்லே அவளை மட்டுமே மொறைச்சி பார்த்துக்கிட்டிருக்கியே?” வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை கதாநாயகி வந்தபோது தலையை குனிந்துகொண்டோ அல்லது புதுமனைவியை பார்த்தோ சமாளித்தான். படம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போதும் பிரச்சினை. “ஹலோ! ஒழுங்கா வண்டியை ஓட்டு!” “ஒழுங்காத்தானே ஓட்டுறேன்!” ”பின்னாடி நான் உட்கார்ந்துக்கிட்டிருக்கப்
 2. முன்னபோனா முட்டுது பின்னவந்தா உதைக்குது மிஸ்டுகால் பார்த்து ரிங்குனா அப்பா இருக்கார் அப்புறம் பண்ணு சாயங்காலம் பாக்கலாமா சாரி அம்மாவோடு கோயிலுக்கு போறேன் நேத்து ஏன் பார்க்க வரலை நேரமில்லையா? நெனைவு இல்லையா? சிகரெட்டு புடிப்பியா தண்ணி அடிப்பியா செருப்பால அடிப்பேன் தறுதலை ப்ளூகலர் ட்ரெஸ் நல்லாருக்கா? ஏய் அந்த ப்ளாக் சுரிதாரை சைட் அடிக்காதே! புது ரிசப்ஷனிஸ்ட் என்னைவிட அழகா? கண்ணை நோண்டிடுவேன் முண்டக்கண்ணா சம்பளம் வந்திடுச்சா மாயாஜால் போலாமா எம்ஜிஎம் போலாமா எனக்கு சத்யம் கூட ஓக்கேதான் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க செம ஸ்மார்ட் டேக் ஹோம் 80கே எனக்கு டபுள் ஓகே ம்ம்ம்ம்.... ஏற்கனவே கல்யாணம் ஆனவன் இன்னொருத்தியை காதலிப்பதை விட ஒரு கழுதையை காதலிக்கலாம் எச்சூஸ்மீ.. கீழ்ப்பாக்கம் எந்த பக்கம்?
 3. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'. லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை அப்படியே உல்டா அடிக்கிறார். நடை, உடை, சிரிப்பு, அழுகை, காதல் எல்லாவற்றிலும் ரஜினிதான் தெரிகிறார். அது போதாதென்று 'ஒரு கூடை சன்லைட்' பாணியில் ஒரு பாட்டு + நடனம். தர்மதுரை ‘மாசி மாசம்' பாடலின் ரீமிக்ஸ். இதுவரை ரஜினியை இமிடேட் செய்தவர்களில் இவருக்கு தான் நெ.1 இடம். மாருதியின் ஓவியங்களில் வரும் அழகுப்பெண்களை போல இருந்த ஸ்நேகா பாண்டியில் முற்றும் துறந்த துறவியாகிவிட்டிருக்கிறார். இவரது திடீர் தாராளமயமாக்கலால் இதுவரை தமிழர்கள் காணாத செழிப்பான, வனப்பான பிரதேசங்களை தரிசித்து மெய்ஞானம் அடையமுடிகிறது. அதிலும் தண்ணி அடித்துவிட்டு குத்துப்பாட்டுக்கு ஆடும்போது அவரது மாராப்பு அடிக்கடி விலகுவதும், அதை லாரன்ஸ் மூடிக்கொண்டே இருப்பதும் நல்ல சுவாரஸ்யம். 'பாண்டி' என்ற பெயரைக் கேட்டதுமே உப்புமா படமாகத்தான் இருக்கும், இருந்தாலும் நமீதா இருப்பதால் பார்த்தே தீரவேண்டிய ஒரு கட்டாயத்தால் பார்த்தால் இன்ப அதிர்ச்சி. ஸ்பெஷல் ஊத்தப்பம் மாதிரி ஜில்பான்ஸாக இருக்கிறது படம். ஆனால் நமீதா பற்றி சொல்லிக்கொள்கிற மாதிரி படத்தில் எதுவும் இல்லை என்பது ஒரு பெரிய வரலாற்று சோகம். இடைவேளை வரை படம் புலிப்பாய்ச்சலாக ஓடுகிறது. இடைவேளைக்கு பிறகு செண்டிமெண்ட் அல்வாவை இயக்குனர் ராசுமதுரவன் கிண்டி கிளறியிருப்பதால் எருமைமாடு மாதிரி மெதுவாக நகர்கிறது. குறிப்பாக சரண்யா இழவுக்காட்சி மெகாசீரியல் மாதிரி மகாநீளம். மெகாசீரியலில் மூழ்கி முத்தெடுக்கும் இல்லத்தரசிகள் பாண்டி படம் பார்க்க தியேட்டர் பக்கம் தாராளமாக வரலாம். முன்பொரு காலத்தில் பாரதிராஜா படங்களில் ராஜா என்றொரு நடிகர் வருவாரே நினைவிருக்கிறதா? அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய கதாபாத்திரங்களை இப்போது ஸ்ரீமன் செய்துவருகிறார் போலிருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகள் பலவும் தேவையற்ற இடைச்செருகல்கள் தானென்றாலும் கிச்சுகிச்சு மூட்டுவதென்னவோ உண்மை. ஜாலியான படத்தில் ஒரே ஒரு சீரியஸான கேரக்டர் என்றால் அது நாசர் மட்டுமே. படத்துக்கு ஒரு வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கவேண்டுமென்றே நாசரை இவ்வளவு சீரியஸாக்கி இருக்கிறார்கள். ‘மாசிமாசம்' ரீமிக்ஸ் பாடல் குறித்து நேற்று என் கோபத்தை பதிவிட்டிருந்தேன். படம் பார்த்தபோது பெரிய, அகன்ற திரையில் ஸ்நேகாவை கண்டவுடன், மேனகையை கண்ட விஸ்வாமித்ரனின் கோபம் அகன்றதுபோல என்னுடைய கோபமும் மறைந்துவிட்டது. ஸ்நேகாவுக்காக மொக்கை ரீமிக்ஸை மன்னிக்கலாம். படம் முழுக்க குத்துப்பாட்டுக்கள் அள்ளித் தெளித்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. க்ளைமேக்ஸுக்கு முன்பாக ராசாவின் மனசிலே ராஜ்கிரண் சுடுகாட்டில் பாடும் அம்மா பாட்டு ரேஞ்சுக்கு ஒரு பாடல். லாரன்ஸும் சுடுகாட்டு மண்ணை நெஞ்சில் வாரி அடித்துக்கொண்டு அழுகிறார். கொடுமை! அரைத்த மாவையே திரும்ப நைசாக அரைத்திருக்கிறார்கள் என்றாலும் மல்லிப்பூ மாதிரி இட்லி ரெடி. நான் அவனில்லை, அஞ்சாதேவைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்குக்கு ஹாட்ரிக் வெற்றி!
 4. தயா! மோகன் அண்ணா வாழ்க்கையில் நான் தங்களைப் போல எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. நான் நேரில் கண்ட அவரது கடந்த இருபது ஆண்டு வாழ்க்கையை எனக்கு தெரிந்த எளிய மொழியில் பதிவு செய்திருக்கிறேன். அவரது விஷயத்தில் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது பதிவின் கடைசியில் வந்த ஒரு பத்திக்கு தான்!
 5. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம். ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண்டு குட்டியூண்டு மனிதர்களும் அவர்கள். அந்த இனிப்புக்கடையின் ஆறாம் எண் அறையில் பெட்டி பெட்டியாக, விதம்விதமாக அடுக்கிவைக்கப்பட்ட அல்வாதுண்டுகள் தான் அவர்களது வாழ்க்கை. தினமும் ஆறாம் எண் அறைக்கு வந்து அல்வாக்களை வயிறுமுட்டும் வரையில் தின்று அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிகிறது. “அல்வா துண்டுகள் சாப்பிடுவது எப்போதும் அலாதி இன்பமே!” ஒரு நாள் திடீரென ஆறாம் எண் அறை காலியாகிக் கிடக்கிறது. நால்வரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இனி ஜீவனத்துக்கு என்ன செய்வது என்று தலைமீது கை வைத்து உட்கார்ந்துவிடுகிறார்கள். வாசு - அரி இரு எலிகளும் இனிப்புக்கடையின் வேறு அறை எதிலாவது அல்வாத்துண்டுகள் கிடைக்கும், தேடிப்பார்த்து சாப்பிடலாம் என்று தங்கள் தேடலை ஆரம்பிக்கின்றன. அச்சுபிச்சுவும், விவேக்கும் இந்த அறையிலேயே யாராவது இனிமேல் வந்து அல்வாத்துண்டுகளை அடுக்குவார்கள், அப்போது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று அறையிலேயே தவம் கிடக்கிறார்கள். “எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!” பல அறைகளில் இடைவிடாது தேடி ஒன்பதாவது என் அறையில் வேறுரக அல்வாத்துண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை வாசுவும், அரியும் காண்கிறார்கள். தங்கள் தேடுதலுக்கு பலன் கிடைத்தது குறித்து மகிழ்கிறார்கள். இங்கே அல்வாத்துண்டு காலி ஆனாலும் கூட அடுத்த தேடலுக்கு மனதளவில் ஆயத்தமாகிறார்கள். மாறாக ஆறாம் எண் அறையில் தங்கிவிட்ட அச்சுபிச்சு - விவேக் கோஷ்டி பட்டினியில் வாடுகிறது. புதிய அல்வாத்துண்டுகளை தேடுவதற்கு எந்த முனைப்பும் காட்டாமல் சோம்பேறித்தனமாக நாட்களை கடத்துகிறது. “நீ மாறவில்லையெனில் சுவடுகளே இல்லாமல் அழிந்துப் போவாய்!” நீண்டநாட்களாக உணவில்லாமல் வாழும் அவலநிலை அச்சுபிச்சுவையும், விவேக்கையும் சூழ, புதிய அல்வாத்துண்டுகளை தேடுவோம் என்று விவேக் ஆலோசனை கூறுகிறான். புதிய அல்வாத்துண்டை தேட தான் தயாரில்லை, புதியதாக கிடைத்தாலும் அது ஏற்கனவே கிடைத்த அல்வாத்துண்டுக்கு இணையாகாது என்று கூறி அச்சுபிச்சு அந்த ஆலோசனையை நிராகரிக்கிறான். வேறுவழியில்லாமல் தனியாக தன் தேடுதலை தொடங்குகிறான் விவேக். பலமணி நேர அயராத தேடுதலுக்குப் பின்னரும் அவனால் அல்வாத்துண்டுகளை கண்டறிய இயலாததால் மனக்கிலேசம் அடைகிறான். எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறான். “நீ பயப்படவில்லையெனில் என்னவெல்லாம் செய்திருப்பாய்?” இருப்பினும் தன்னால் எப்படியாவது அல்வாத்துண்டுகளை கண்டறிந்து வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை தனக்கு தானே வளர்த்துக் கொள்கிறான். இதுவரை அவன் தேடாத புதிய இடங்களை தேடுகிறான். எந்தவொரு வாய்ப்பையும் அவன் தவறவிடுவதாக இல்லை. கண்ணில் பட்ட வழியிலெல்லாம் பயணிக்கிறான். பலநாட்களாக சோம்பேறித்தனமாக, உல்லாசமாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அயராத தேடுதலில், உழைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை கண்டறிகிறான். “பயத்தை தகர்த்து! முன்னேறுதலில் நீ சுதந்திரமாக உணர்வாய்!” ஒருவாறாக ஏற்கனவே வாசுவும், அரியும் கண்டறிந்த அல்வாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்பதாவது எண் அறையை கண்டறிகிறான் விவேக். வாசுவும், அரியும் இவனை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். பலநாள் பசி தந்த களைப்பும், ஓயாத உழைப்பு தந்த சோர்வும் காரணமாக ஏராளமாக உண்கிறான் விவேக். ஆறாம் எண் அறையில் அல்வாத்துண்டுகள் காலியான போதே தன் தேடுதலை ஆரம்பித்திருந்தால் இவ்வளவு அலைச்சல் ஏற்பட்டிருக்கிறாது என்பதை நினைத்துப் பார்க்கிறான். “எவ்வளவு சீக்கிரமாக பழசை உதறுகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக புதுசு கிடைக்கும்!” தன் நண்பன் அச்சுபிச்சுவும் இந்த அறைக்கு வந்தால் நன்றாக இருக்கும், அவன் வருவானா என்று ஏங்குகிறான் விவேக். இந்த அறையில் இருக்கும் அல்வாத்துண்டுகளும் ஒருநாள் திடீரென காணாமல் போகும். அப்போது தன் அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகவேண்டும் என்று மனதளவில் உறுதிகொள்கிறான். எதுவுமே நிலையானதல்ல, மாற்றங்கள் வருவதும், அதனால் விளையும் விளைவுகளை எதிர்கொள்வதும் தான் வாழ்க்கை என்பதை உணர்கிறான். “சிறிய மாற்றங்களை முதலிலேயே கண்டுபிடித்து விடுவது, பின்னால் வருகிற பெரிய மாற்றங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் உதவும்” என்ற அறிவுரையோடு முடிகிறது இந்த நாற்பத்தியெட்டு பக்க புத்தகம். நூல் வெளியீடு : அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600017. விலை : ரூ.15. இந்நூலின் மூலம் ஆங்கிலத்தில் பல லட்சம் பிரதிகள் விற்ற 'WHO MOVED MY CHEESE' என்ற புத்தகம். கே.ஆர். மணி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இப்புத்தகத்தில் அல்வாத்துண்டு என்பது வாய்ப்புகளை உருவகப்படுத்துகிறது. எலி, சிறிய மனிதர்கள் என நான்கே நான்கு கதாபாத்திரங்களை வைத்து மிக எளிய மொழியில் கனமான விஷயங்களை சொல்ல பயன்படுத்தும் உத்தி புதிது. இவ்வகை எழுத்துக்களை 'நெம்புகோல் எழுத்துக்கள்' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். வாசிக்க குழந்தைகளுக்கான இலக்கியம் போல தோற்றமளித்தாலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வாய்ப்புகள் குறித்த அவசியத்தை பெரியவர்களுக்கு போதிக்கிறது. குளமாய் தேங்கிக் கிடக்கும் நீர் கோடை வந்தால் வற்றிவிடும், ஆறாய் ஓடும் நீரோ கடலில் கலந்து சாகாவரம் பெறும். நாம் குளத்து நீராய் வாழப்போகிறோமா, இல்லை ஆற்றுநீராய் வாழப்போகிறோமா? என்று முடிவெடுக்கும் உரிமை நம்மிடமே இருக்கிறது. தொடர்ச்சியாக இயங்கி, அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஆற்றுநீரைப் போல நம்மை தயார்செய்து வைப்பதின் மூலம் மட்டுமே நம் காலத்துக்கு பிறகும், நம்மைப் பற்றிய நினைவலைகளை மட்டுமாவது உலகில் வாழவைக்க முடியும் என்பது நிதர்சனம். மாற்றங்களுக்கு தயாரில்லாத மனிதனும், சமூகமும் வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, எதிர்காலத்தில் தனக்கென ஏராள வாய்ப்புகளை தன்முனைப்போடு ஏற்படுத்துகிறவனே வரலாற்றில் இடம்பெறுகிறான்.
 6. எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார். எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் படுறேன்!” என்று புலம்பிக்கொண்டே வெட்டுவார். முடிவெட்டி முடித்ததும் கண்ணாடியைப் பார்த்து நொந்துவிடுவேன். அம்மா “ஷாட்டா வெட்டுங்க” என்று தான் கன்னியப்பனிடம் சொல்லியிருப்பார். கன்னியப்பனோ கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிடுவார். மீண்டும் முடி வளர்ந்து ஒரு நிலைக்கு வர கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிடும். ஒருநாள் திடீரென்று அந்த கன்னியப்பன் இறந்துப் போனார். கன்னியப்பனுக்கு நான்கு மகன்கள் என்பதாக நினைவு. கன்னியப்பனின் இரண்டாவது மகன் தான் மோகன் அண்ணா. மற்ற மகன்கள் வேறு வேறு தொழில்களுக்கு மாறிவிட மோகன் அண்ணா மட்டும் அப்பாவின் தொழிலை தொடர்ந்தார். கன்னியப்பன் வீடு வீடாக சென்று நாவிதம் செய்து பெரியதாக சொத்து எதுவும் சேர்த்துவிடவில்லை. சம்பாதித்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் குடித்தே அழித்தார். மோகன் அண்ணா இளைஞராக இருந்ததால் கொஞ்சம் புத்திக் கூர்மையோடு செயல்பட்டார். கூட்ரோடில் ஒரு கடை வாடகைக்கு பிடித்து சுழலும் நாற்காலி போட்டார். கண்ணாடிக்கதவு போட்டு பச்சைக்கலர் ட்யூப் லைட்டை பொருத்தி நவீன மோஸ்தரில் ஒரு கடையை உருவாக்கினார். கன்னியப்பன் போல ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் முடிவெட்டாமல் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை தன் வேலைக்கு கூலியாக வாங்கினார் மோகன். ஊர் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கே சென்று முடிவெட்டி விட்டு வருவார். மடிப்பாக்கத்தில் முதன்முதலாக சலூன்கடை வைத்தது மோகன் அண்ணா தான் என்று நினைக்கிறேன். சலூன்கடை வைத்திருந்தது மட்டுமல்லாமல் மோகன் அண்ணாவுக்கு வேறு பணிகளும் இருந்தது. ஊரில் யார் இறந்தாலும் மரண அறிவிப்பினை ஊர்முழுக்க சொல்வது மோகன் அண்ணாவுக்கு சாதிரீதியாக கொடுக்கப்பட்ட பணி. அவர் தந்தை செய்துவந்த இந்தப் பணியை மோகன் அண்ணாவும் எந்த முகசுளிப்புமின்றி தொடர்ந்து செய்துவந்தார். கூடுதல் வருமானம் இதில் கிடைத்ததும் கூட அவர் இந்த பணியை விரும்பி செய்ய காரணமாக இருந்திருக்கலாம். இழவு விழுந்த வீட்டில் செய்யவேண்டிய கருமாந்திரப் பணிகள் அனைத்தையும் மோகன் அண்ணா செய்யவேண்டியிருந்தது. தாசரி அழைத்துவருவதிலிருந்து பாடை கட்டுபவன், பறைமோளம் அடிப்பவன், பல்லாக்கு அலங்காரம் செய்பவன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து சுடுகாட்டில் பிணம் எரியும்வரை மோகன் அண்ணாவின் கடமைகள் தொடரும். பதினாறாவது நாள் காரியத்துக்கான ஏற்பாடுகளும் கூட மோகன் அண்ணாவின் மேற்பார்வையில் தான் நடக்கும். காரியத்துக்கு என்றிருக்கும் அய்யரை கூட்டிவருவதிலிருந்து குளத்தங்கரை மண்டபத்தை புக் செய்வது எல்லாமே மோகன் அண்ணாவே செய்வார். யார் வீட்டுப் பக்கமாவது மோகன் அண்ணாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், எங்கேயோ எழவு விழுந்திருக்கிறது என்று. அய்யர் வீடுகளின் மரணம் ஏற்பட்டால் மோகன் அண்ணாவின் சாங்கியரீதியான வேலைகள் எதுவும் தேவைப்படாது என்றாலும் இறந்தவர் கொஞ்சம் ஊரில் பிரபலமான அய்யராக இருந்தால் எல்லோருக்கும் போய் துக்கச்செய்தி சொல்லுவார். இதற்காக அவர் காசு எதுவும் அய்யர் வீடுகளில் வாங்கமாட்டார். அவரவர் விருப்பப்பட்டு குவார்ட்டரோ, ஹாஃபோ வாங்கிக் கொடுத்தால் அது போதுமானது. சுபகாரியங்களின் போதும் மோகன் அண்ணாவின் தேவை மடிப்பாக்கம் வாசிகளுக்கு தேவைப்பட்டது. அதிகாலையில் மணமகனுக்கு எண்ணெய் நலங்கு வைப்பது போன்ற சடங்குகள் எல்லாம் மோகன் அண்ணாவுக்கு தான் எப்படி முறைப்படி செய்வது என்று தெரியும். கல்யாணத்தில் வண்ணாத்திக்கு துணி கொடுப்பது போன்ற சடங்குகள் கூட உண்டு. மடிப்பாக்கத்தில் யாருக்கு வண்ணான் - வண்ணாத்தியை எல்லாம் தெரியும்? மோகன் அண்ணா தான் எங்கேயோ போய், யாரையோ கூட்டி வருவார். ஊரில் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டு மரணவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க அவரால் அவர் தொடங்கிய சலூன் கடையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கடையை மூடிவிட்டு சாவு செய்தி சொல்லும் வேலையில் பிஸியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மற்ற முடிவெட்டும் நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மோகன் அண்ணாவுக்கு குடிப்பழக்கமும் உச்சநிலைக்கு போயிருந்ததால் தொழில்நேரத்தில் குடித்துவிட்டு சொதப்பவும் ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவரால் சலூன் தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. கடையை இழுத்து மூடிவிட்டு தெரிந்தவர்களுக்கு மட்டும் அவரது அப்பாவைப் போல வீட்டுக்கு போய் சவரம் செய்ய ஆரம்பித்தார். நல்லவேளையாக அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொந்தவீடு வாங்கியிருந்தார். இதன்பிறகு முழுக்க முழுக்க எங்காவது எழவு விழுந்தால் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது, சுபகாரியங்களில் வருமானம் ரொம்ப கம்மி. எப்போதாவது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு தெரிந்த இடங்களை காட்டிவிட்டு மிகக்குறைவான கமிஷன் வாங்குவார். குடிக்க கையில் காசில்லாத நேரத்தில் அவரது தொழில்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு டிவிஎஸ்50யில் ஊரை ரவுண்டடிப்பார். “என்ன நாயக்கரய்யா தாடி விட்டிருக்கீங்க? திருப்பதி போறீங்களா?” என்று எதிர்படுபவரை கேட்பார். “அட அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நேரமில்லே” என்று சொன்னால் உடனே கிடைக்கும் இடத்தில் உட்காரவைத்து ஷேவிங் செய்துவிடுவார். கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வார். ஒரு ‘கட்டிங்'குக்கு தேவையான துட்டு கிடைத்ததும் நேராக மதுக்கடைக்கு வண்டியை விடுவது அவர் வழக்கமாக இருந்தது. மோகன் அண்ணாவுக்கு அதிர்ஷ்டவசமாக பிறந்தது ரெண்டுமே பையன்கள். பையன்கள் சுமாராக படித்து, வளர்ந்து ஏதோ வேலை, வெட்டிக்கு போய் சம்பாதிக்கிறார்கள். அப்பா, தாத்தா செய்த தொழிலை தொடர அவர்களுக்கு விருப்பமில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் அண்ணா செத்துப் போய் விட்டார். யார்யாரோ செத்தப் போதெல்லாம் ஊருக்கே செய்தி சொன்ன அவர் செத்துப் போனதை அக்கம்பக்கத்துக்கு சொல்லக்கூட ஆளில்லை. எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கமாக போனபோது தான் எனக்கே தெரிந்தது. மோகன் அண்ணாவுக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள் வயதிருக்கலாம். கொஞ்சம் ஒல்லியாக இருப்பார். எவ்வளவு தண்ணி அடித்திருந்தாலும் அண்ணன் சுறுசுறுப்பாக கில்லி மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார். எனக்குத் தெரிந்து அவர் வாழ்நாளில் ஒரு லட்சம் லிட்டராவது மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். “இவ்ளோ தண்ணியடிக்கிறீங்களே? ஒடம்புக்கு ஏதாவது ஆயிடாது?” என்று கேட்டால் “தண்ணியால நான் சாவமாட்டேன்டா” என்பார். இப்போது கூட அவர் செத்ததற்கு மஞ்சக்காமாலையை தான் காரணமாக சொல்கிறார்கள். மோகன் அண்ணா மரித்துப் போனதற்காக ஊரே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, “இனிமே யாராவது செத்தா இழவு வேலையை எல்லாம் யாரு பார்க்குறது?” என்று.
 7. கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார்நியா மூன்றாண்டுகளுக்கு முன்பாக Chronicles of Narnia என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து வசூலில் சக்கைபோடு போட்டது. இப்போது வெளிவந்திருப்பது இரண்டாம் பாகம் Narnia - Prince Caspian. தமிழில் மொழிமாற்றி சென்னையில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலேயே இத்திரைப்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆங்கிலப் படத்தை காண்கிறோம் என்ற உணர்வு வராத அளவுக்கு மிகத்தரமான மொழிமாற்றம். முதல் பாகம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் இருந்தது. மாறாக இரண்டாம் பாகம் அட்வெஞ்சர் படமாக எல்லாத்தரப்பையும் ஈர்க்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது. கொடுமைக்கார சித்தப்பாவான மிஸ்ரா எதிர்காலத்தில் நாட்டுக்கு அரசனாக வேண்டிய இளவரசன் கேஸ்பியனை கொல்ல முயல்கிறார். ஒரு புரொபசர் மூலமாக தப்பிக்கும் கேஸ்பியன் நார்நியன்களின் துணையோடு தன் சித்தப்பாவை வெல்கிறார் என்ற கொய்யாமர இலையில் எழுதிவிடக்கூடிய சிறிய கதை. இதற்கு பரபரப்பான திரைக்கதை, வசனம் மற்றும் நிஜமா கனவா என்று அறிய இயலா கிராபிக்ஸ் உத்தியின் துணைகொண்டு சுவாரஸ்யமான இரண்டேகால் மணிநேர திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சங்கு ஊதியதுமே நிகழ்காலத்தில் லண்டன் ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் லூசி குழுவினர் நார்நியாவுக்குள் புகுவது பக்காவான காதுல பூ ரக காட்சி என்றாலும் அக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் அபாரம். பிரின்ஸ் கேஸ்பியன் அழகாக இருக்கிறார், அவர் அழகுக்கு அவர் ஒரு சப்பை ஃபிகரை ஜூட் விடுவது கடுப்பு. நார்நியாவின் அரசனான சிங்கம் அஸ்லான் தோன்றும் ஓபனிங் காட்சிகளில் தியேட்டரில் விஜய் படம் லெவலுக்கு விசில் பறக்கிறது. விசில் அடிக்கும் இளசுகள் பலரும் முதல் பாகம் வந்தபோது குழந்தைப் பருவத்தில் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. இன்னமும் அவர்களால் அஸ்லானையும், அவரது சாகசங்களையும் மறக்கமுடியவில்லை. எலிப்படை செய்யும் அட்டகாசங்களும் எலித்தளபதியின் வீரவசனங்களும் கலக்கல். பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமேக்ஸ் போர்க்காட்சிக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி வியக்க வைக்கிறது. இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு முன்பாக நார்நியாவின் முதல் பாகத்தை பத்துநாட்களுக்கு முன்புதான் சன் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பியிருக்கிறார்கள். உலகளவில் பிரபலமான எல்லாத் தொலைக்காட்சிகளிலும் முதல் பாகம் இப்போது அடிக்கடி ஒளிபரப்பபட்டு வருகிறது. இரண்டுநாட்களுக்கு முன்பாக கூட செட்மேக்ஸில் நார்நியா ஒளிப்பரப்பானது. முதல்பாகத்தை தொலைக்காட்சியில் பார்த்த எல்லா குழந்தைகளுமே இரண்டாம் பாகத்தை தியேட்டரில் காண பெற்றோரிடம் அடம் பிடிக்கப் போகிறார்கள். நீங்கள் தமிழராக இருந்தால் இப்படத்தை தமிழில் திரையிட்ட திரையரங்குகளில் காணுங்கள். ஒரிஜினல் தமிழ்ப்படங்களுக்கு கூட இவ்வளவு அழகுத்தமிழில் வசனங்கள் எழுதுவதில்லை. இதுபோன்ற படங்களுக்கான மொழிமாற்றத்துக்கு உழைக்கும் கலைஞர்களின் பெயர்களை டைட்டிலில் போடுவதில்லை. இதுபோல ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடும்போது டப்பிங் கலைஞர்களின் பெயரையும், வசனகர்த்தா பெயரையும் தனியாக டைட்டிலில் போடுவது தான் அக்கலைஞர்களுக்கு செய்யக்கூடிய நியாயமும் கூட. குழந்தைகளோடு பெற்றோர் கட்டாயம் காணவேண்டிய படமிது! குருவி பார்த்து வெறுப்பானவர்கள் கூல் ஆகவும் இப்படத்தைப் பார்க்கலாம்!!
 8. டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம். வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும். இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை. ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது. ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம். ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது. மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிற
 9. தோழர் மதன் மட்டுறுத்தினராக இருந்த காலத்தில் என்னோடு மிக பரிவாக அன்போடு நாகரிகமாக நடந்துகொண்டார். அவர் இப்போது மட்டுறுத்தினர் இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மீண்டும் அவரை மட்டுறுத்துனராக நியமிக்க வேண்டுமென்று கள உரிமையாளரை கேட்டுக் கொள்கிறேன்.
 10. தவறு என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டு தேர்வு, கீர்வு என்று தப்பிச் செல்வது மிக எளிது நண்பரே! மந்திரங்களுக்கு ஆதாரநூலையும் இட்டிருக்கிறோம்!!!
 11. செல்வமுத்து அவர்களே! இந்துமதத்தின் இதிகாசங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று பொட்டென்று உண்மையை போட்டு உடைத்ததற்கு நன்றி. இந்துமதம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் இந்துமதத்தை தான் நாத்திகர்கள் எதிர்த்து கருத்து சொல்லமுடியும். கிறிஸ்தவம் மதம், முஸ்லிம் மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் வசிக்கும் நாத்திகர்கள் அந்தந்த மதங்களைப் பற்றி பேசுவார்கள்.
 12. ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா: பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன். விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும். இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான். மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ! பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக. மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக. விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும். ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
 13. சோழியன் அவர்களே! உங்கள் கருத்து கோக்குமாக்காக இருக்கிறதே? கடவுளே இப்படியென்றால் மனிதன் எம்மாத்திரம் என்று சொல்லுவது தான் உலக வழக்கு. நீங்கள் மாற்றி சிந்திக்கிறீர்களே?
 14. சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த படவிழா பக்கம் இதுபோல ஒதுங்க வேண்டியிருந்தது. அன்று திரையிடப்பட்டிருந்த படம் "WE FEED THE WORLD". உலகமயமாக்கல், பொருளாதார சீர்த்திருத்தங்கள், நவீன விவசாயமுறைகள் ஆகியவை இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழ்தவர்களையும் அச்சுறுத்துகிறது என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதிவுசெய்த ஆவணப்படம் இது. 'உலகம் சுற்றும் வாலிபன்' ஸ்டைலில் நாம் உண்ணும் உணவு எங்கெல்லாம் தயாராகிறது என்று தேடிப்புறப்பட்டு உலகெல்லாம் பயணிக்கும் படம் இது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோமானியா, ஸ்விட்சர்லாந்து, பிரேஸில், ஆஸ்திரியா நாடுகளில் இப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. தனது தந்தை காலத்தில் இருந்ததைப் போன்ற நிலை இன்று இல்லை என்று ஐரோப்பிய விவசாயி ஒருவர் புலம்பிக் கொண்டே சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். வியன்னாவில் விற்கப்படாமல் குப்பையில் கொட்டப்படும் ரொட்டிகளால் வீணாகும் கோதுமையை பற்றி கவலைப்படும் படம், அதே நேரத்தில் பசிக்கொடுமையால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பலியாகும் முரண்பாடையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தியா (நிஜமாத்தான்!) போன்ற நாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி பெரிய அளவில் நடைபெறுவதால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு வணிகர் சொல்லுகிறார். உலகின் மிகப்பெரிய தானிய விதை உற்பத்தி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் எதிர்கால சமுதாயத்துக்கு உண்மையான தக்காளி, ஆப்பிள் போன்றவற்றின் சுவையோ, வடிவமோ நினைவுக்கு இருக்கப் போவதில்லை. ரசாயன முறையில் உருவாக்கப்படும் விதைகளில் விளைச்சலாகும் காய்கறிகள் அவற்றின் இயற்கையான குணத்தில் இருக்காது என்கிறார். அரசுகள் தங்களை தந்திரமாக ஏமாற்றுவதாக ஐரோப்பிய விவசாயிகள் குமுறுகிறார்கள். முதல் வருடம் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தானிய விதையை வாங்க அரசு மானியம் அளிக்கிறதாம். பெரிய நிறுவனங்களிடமிருந்து வாங்கும் விதைகளை வைத்து விவசாயம் செய்தால், அடுத்தாண்டும் அதே நிறுவனத்திடமிருந்து தான் விதைகளை வாங்க வேண்டும். (விதை நெல் போன்று இந்நிறுவனங்கள் விற்கும் விதைகளை சேமித்து வைக்க முடியாதாம்) அரசாங்கங்கள் உஷாராக அடுத்தாண்டிலிருந்து மானியத்தை நிறுத்திவிடுகிறார்களாம். அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேறுவழியில்லாமல் விவசாயிகள் அடிமைகளாக வேண்டியிருக்கிறது. இவ்வாறாக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிவருடி, விவசாயிகள் நலனை புறந்தள்ளுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு பதில் தரும் விதமாக“நிறுவனம் என்பது வெறும் நிறுவனம். அதற்கு மனசாட்சியெல்லாம் கிடையாது” என்கிறார் ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிகாரி. மீன்பிடித் தொழில் செய்யும் சிறிய மீனவர்கள் EU என்றழைக்கப்படும் ஒன்றிணைந்த ஐரோப்பிய பொருளாதாரத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். பிரான்ஸில் 40 ஆண்டுகளாக மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர் சொல்லுகிறார். “நான் சிறுவயதிலிருந்தே கடலில் பயணித்து என் அறிவை பெருக்கி வைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் மீன் பிடிக்க செல்லும்போது ஒரு லெட்ஜரில் எவ்வளவு தூரத்தில், எத்தனை மீட்டர் ஆழத்தில் மீன் பிடிக்கிறேன். என்ன மீனெல்லாம் பிடித்தேன். எவ்வளவு மீன் பிடித்தேன் என்றெல்லாம் எழுத வேண்டுமாம். நான் கடினப்பட்டு சேர்த்த அறிவை எவனோ ஒருவனுக்கு இலவசமாக நான் ஏன் சொல்லித் தரவேண்டும்?” அதுவுமில்லாம் சிறு மீன்பிடி படகு வைத்திருப்பவர்கள் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்குள்ளாகவே தாங்கள் பிடிக்கும் மீன்களை விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். மாறாக இத்தொழிலும் கால்பதித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை பதப்படுத்தி ஓராண்டு கழித்தும் கூட விற்கிறார்கள். இதனால் நுகர்வோருக்கு மீனின் உண்மையான சுவையே மறந்துப் போகும் என்கிறார்கள் ஐரோப்பிய மீனவர்கள். பிரேசில் நாட்டில் வனம் தரும் காடுகளையும், விவசாய நிலங்களையும் அழித்து பெரிய பெரிய நிறுவனங்கள் ‘சோயா' பயிரிடுகின்றனவாம். இதனால் அந்நாட்டில் உணவுப் பொருளுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஏழை பிரேசில் குடும்பத்தில் நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வாக அந்நாட்டை சேர்ந்த ஒருவர் சொல்லும்போது அடிவயிறெல்லாம் கலங்குகிறது. குழந்தைகள் பசிக்காக அழுமாம். அந்த குழந்தையை சமாதானப்படுத்த வேண்டி ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி சில கற்களை போட்டு அடுப்பில் வைத்து விடுவாளாம் தாய். பசி பசியென்று அழும் குழந்தைக்கு சமையல் நடக்கிறது பார். சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்று சமாதானப்படுத்துவாளாம். தண்ணீரில் போடப்பட்ட வெறும் கல் எங்கிருந்து உணவாகப் போகிறது. பசிக்களைப்பில் பசி பசியென்று கதறும் குழந்தை ஒன்றும் சாப்பிடாமல் அப்படியே உறங்கிவிடுமாம். கேட்கும்போதே கண்கள் கலங்குகிறதல்லவா? பிரேஸில் போன்ற நாடுகளில் உணவுக்கான விளைநிலங்களை அழித்து கால்நடைத் தீவனமான சோயா பயிரிடப்படுகிறது அல்லவா? அந்த சோயா ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருக்கும் உணவுக்கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணவுக்கோழி தயார் செய்யும் தொழிற்சாலை எப்படி இயங்குகிறது என்று சுமார் பத்து நிமிடங்களுக்கு காட்டுகிறார்கள். அந்த காட்சியை காணும் எவருமே வாழ்க்கையில் 'சிக்கன் 65' சாப்பிட ஒரு கணம் யோசிப்பார்கள். கடைசியாக உலகின் நெ.1 உணவு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான பீட்டர் பிராபெக்கின் பேட்டியோடு நிறைவடைகிறது திரைப்படம். “தண்ணீர் என்பது மனிதனின் உரிமை என்று சில அறிவுகெட்டவர்கள் சொல்கிறார்கள். அதை விற்கக்கூடாதாம். உலகில் இருக்கும் ஒவ்வொன்றும் மனிதனின் உரிமைதான். எல்லாமே மனிதனின் உரிமை என்று எடுத்துக் கொண்டால் நாங்களெல்லாம் எப்படி வர்த்தகம் செய்வது? எங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கதியென்ன?” என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்கிறார். கடைசியாக தண்ணீர் என்பதும் விற்கக்கூடிய உணவுப்பொருள் வகையில் சேர்த்து தொலைத்துவிட்டார்கள். அது சரி! இப்படம் குறித்த மற்ற தகவல்களை இங்கே சுட்டி பார்த்துக் கொள்ளலாம்! ட்ரைலரும் உண்டு!