• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ashwana

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    8
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About ashwana

  • Rank
    புதிய உறுப்பினர்
  1. வணக்கம் தூயவன் ! எல்லா இணைப்புக்களும் வேலை செய்கின்றன. நன்றி
  2. உருளைக்கிழங்கு மீன் குழம்பு மீன் அரைக் கிலோ உருளைக்கிழங்கு அரைக் கிலோ வெங்காயம் 50 கிராம் காய்ந்தமிளகாய் 3 மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி தக்காளி 2 பச்சைமிளகாய் 2 கறிவேப்பிலை சிறிது புளி சிறிய அளவு எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும். உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள், சீரகம் மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் தேங்காய் விழுதினையும், பச்சைமிளகாயையும் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வேகவிடவும். புளியை சிறிது நீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்ததும் மீன் துண்டங்களைப் போட்டு, புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். கால அளவு 40 நிமிடங்கள் பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு நன்றி அன்புடன் அஷ்வ :P
  3. http://www.geocities.com/tamiljokes/ http://www.geocities.com/Baja/Cliffs/5959/ http://www.koodal.com/jokes/default.asp http://www.webtamilan.com/joke.htm http://tamilworld.com/jokes/ எல்லோரும் பார்த்து மகிழவும். நன்றி வணக்கம் அஷ்வனா
  4. நான் அறிமுகம் பகுதியில் சமையல் பற்றி கூறியுளேன் நான் தவறு செய்து இருந்தால் என்னை மன்னிக்கவும். :oops: :roll: இப்படிக்கு அஷ்வனா :?:
  5. சமையல் செய்து உண்டு சந்தோசமாய் இருக்கவும். ( என்னையும் நினைக்கவும்) ஓ கே நன்றி
  6. கோழி வறுத்த கறி தேவையான பொருட்கள் கோழிக்கறி ஒன்றரை கிலோ இஞ்சி விழுது 7 தேக்கரண்டி பூண்டு விழுது 5 தேக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் 120 மி.லி. வெங்காயம் ஒரு கப் தக்காளி அரை கப் மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி கிராம்பு 2 பட்டை சிறுதுண்டு புளி சிறுநெல்லிக்காய் அளவு மிளகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை சிறிது கறிவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு செய்முறை கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக் கொண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். கறித்துண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெய்யைத் தனியே வடித்து வைக்கவும். வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். புளியை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். மிளகினைப் பொடி செய்து கொள்ளவும். தனியே எடுத்து வைத்த எண்ணெய்யை சூடாக்கி, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, தீயைச் சற்று கூட்டி எண்ணெய் விடும் வரை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மல்லித்தூள், ஏலப்பொடி, பட்டைப் பொடி, கிராம்பு பொடி அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இரண்டு மேசைக்கரண்டி புளிக்கரைசலை விட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு மசாலாவில் ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து தீயின் அளவைச் சற்று கூட்டி கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயின் அளவை மிதமாக வைத்து, நன்கு கிளறவும். ஈரம் போய், மசாலா கறியில் படிந்து இறங்கியவுடன் எலுமிச்சை சாறு தெளித்து, மிளகுத்தூள் தூவி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். கால அளவு 45 நிமிடங்கள் பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு :P அன்புடன் அஷ்வனா
  7. வணக்கம் என் பெயர் அஷ்வனா நான் புதுமுகமாய் இணைந்துள்ளேன் நன்றி
  8. வணக்கம் என் பெயர் அஷ்வனா நான் புதுமுகமாய் இணைந்துள்ளேன் நன்